Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம்

ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது.
இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. 

யுத்தத் தாங்கிகளையும், கனரக வாகனங்களையும் பாவித்தே இந்த மயானங்கள் இஸ்ரேலினால் அழிக்கப்பட்டிருக்கின்றன. 
காசாவினுள் இஸ்ரேலிய இராணுவம் புகுந்ததிலிருந்து மாயானங்களை அழிக்கும் கைங்கரியம் மிகவும் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டு வருவதை சி என் என் வைத்திருக்கும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. சர்வதேச சட்டங்களின்படி மதத் தலங்களை அழித்தல், மயானங்களை அழித்தல் ஆகியவை குற்றங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இக்குற்றம் போர்க்குற்றம் ஆவதற்கான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. 

மயானங்களை ஹமாஸ் அமைப்பு இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பதால் அவையும் தனது இராணுவத்தின் முறையான இலக்குகள்தான் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் நியாயப்படுத்தியிருக்கிறார். கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் இந்த மயானங்களில் புதைத்திருக்கலாம் என்பதனாலேயே அனைத்து மயானங்களும் தோண்டப்படுவதாகவும் அவர் கூறினார். அவ்வாறு தோண்டியெடுக்கப்படும் உடல்கள் இஸ்ரேலியர்களினுடையவை அல்ல என்று உறுதிப்படுத்துப்படுமிடத்து அவை மீளவும் அங்கேயே புதைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். 

ஆனால், சி என் என் பெற்றுக்கொண்ட ஏனைய விபரங்களின்படி, மயானங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் தரைமட்டமாக உழப்பட்டு, அங்கே இராணுவத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுவப்பட்டு யுத்தத்திற்காகப் பாவிக்கப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மயானங்களைச் சுற்றி பாரிய மதில்கள் அமைக்கப்பட்டு இராணுவ ஏவுதளங்களாக இவை மாற்றப்பட்டிருக்கின்றன. 

ஆனால், ஒரேயொரு மயானம் மட்டும் அப்படியே இருந்தது. அங்கே முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கொல்லப்பட்ட கிறீஸ்த்த‌வர்கள், யூதர்கள், மேற்குநாட்டவர்களின் கல்லறைகள் காணப்பட்டன. ஆகவே, அதனை இஸ்ரேலிய இராணுவம் அப்படியே விட்டு விட்டது. 


மரணித்தவர்களுக்கான மரியாதையினை தாம் வழங்குவதாகக் கூறிய பேச்சாளர், எதற்காக மயானங்களின் மீது தமது யுத்தத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது எதனையும் கூற மறுத்துவிட்டார். 

இவற்றைப் பார்க்கும்போது நினைவிற்கு வருவது ஒரு விடயம்தான்.

தாயகத்தில் எமது செல்வங்களின் கல்லறைகள் சிங்கள மிருகங்களால் உழப்பட்டு, மாவீரர்களின் திருமேனிகள் தூக்கி வெளியே எறியப்பட்டு, எமது கல்லறைகளின் மீது சிங்களப் பேய்கள் இராணுவத் தளங்களை அமைத்து இறுமாப்புடன் எம்மை இன்றுவரை ஆக்கிரமித்து வைத்திருப்பதுதான். 

1980 களில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் சொல்லிக்கொடுத்த மிருகத்தனத்தை சிங்களப் பேய்கள் எம்மீது கட்டவிழ்த்துவிட்டன. இன்றோ சிங்களப் பேய்கள் 2009 இல் இருந்து செய்து வருபவற்றை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் பாலஸ்த்தீனத்தில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீ என் என் இல் கடந்த சில நாட்களாக இதுதான் தலைப்பு செய்தி.

சீ என் என் இலேயே தலைப்பு செய்தியாக பிரசுரிக்கின்றார்கள் என்றால் இஸ்ரேல் எவ்வளவு மோசமான முறையில் செயற்படுகின்றது என்பதை கற்பனை செய்யலாம்.  

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்ற பொன்மொழி இஸ்ரேல் விடயத்தில் எப்போது காண்பிக்கப்படும் என அவதானிப்போம். 

Posted

அமெரிக்கா சிறிது  சிறிதாக இஸ்ரேலை கைவிடுவது போலுள்ளது. இரு மாநில கொள்கையை பைடன் ஆதரிக்க சொல்லி நத்தனியாகுவிடம் கேட்டும் நத்தனியாகு அதனை அரைகுறையாக ஆம்/ இல்லை என்ற நிலையில் உள்ளது காரணமாக இருக்கலாம்.
மற்ற காரணம் தோற்கிற குதிரையில் யாரும் பந்தயம் கட்டுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, nunavilan said:

அமெரிக்கா சிறிது  சிறிதாக இஸ்ரேலை கைவிடுவது போலுள்ளது. இரு மாநில கொள்கையை பைடன் ஆதரிக்க சொல்லி நத்தனியாகுவிடம் கேட்டும் நத்தனியாகு அதனை அரைகுறையாக ஆம்/ இல்லை என்ற நிலையில் உள்ளது காரணமாக இருக்கலாம்.
மற்ற காரணம் தோற்கிற குதிரையில் யாரும் பந்தயம் கட்டுவார்களா?

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலை கை விடும் என நான் நினைக்கவில்லை.மனிதாபிமானம் இல்லாமல் சுய மரியாதைக்காக ஆயுதங்களை கையிலெடுப்பவர்கள் இவர்கள். எனது கணிப்பில் நடிக்கின்றார்கள் அவ்வளவுதான். ஏனெனில் போகும் வரும் இடமெல்லாம் தோல்வியில் துவண்டு போயுள்ளனர் அதனால் தான் ஏதோ ஒரு மாற்று வழியை தேடுகின்றனர்.

இந்தா அடுத்த அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் எண்டு இப்பவே  புறு புறுக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.... அந்த மனிசனும் இந்தா 24 மணித்தியாலத்திலை பிரச்சனையளை முடிக்கிறன் எண்டு சவால் வேற விடுறார்....😂

காசா போரும் அமெரிக்க தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போகின்றது. எனவே இன்னும் பல நாடகங்கள் மேடையேறும்.:cool:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் சிங்களம் மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தது போன்றதொரு செயல். 

இறப்பிலும் மனிதருக்கு அமைதி இல்லையென்றாகிவிட்டது. 

☹️

  • Like 1
Posted
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலை கை விடும் என நான் நினைக்கவில்லை.மனிதாபிமானம் இல்லாமல் சுய மரியாதைக்காக ஆயுதங்களை கையிலெடுப்பவர்கள் இவர்கள். எனது கணிப்பில் நடிக்கின்றார்கள் அவ்வளவுதான். ஏனெனில் போகும் வரும் இடமெல்லாம் தோல்வியில் துவண்டு போயுள்ளனர் அதனால் தான் ஏதோ ஒரு மாற்று வழியை தேடுகின்றனர்.

இந்தா அடுத்த அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் எண்டு இப்பவே  புறு புறுக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.... அந்த மனிசனும் இந்தா 24 மணித்தியாலத்திலை பிரச்சனையளை முடிக்கிறன் எண்டு சவால் வேற விடுறார்....😂

காசா போரும் அமெரிக்க தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போகின்றது. எனவே இன்னும் பல நாடகங்கள் மேடையேறும்.:cool:

பைடன் அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டும் எனில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு தீர்வின் மூலமே இது சாத்தியம். மறு கரையில் நத்தனியாகு போரை விட்டால்  அவர் பதவி இழக்க வேண்டும். ஊழல் வழக்குகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.  நத்தனியாகுவின் வெற்றி அமெரிக்காவை போருக்குள் இழுத்து விட்டது. அவரின் தோல்வி கமாஸ், கிஸ்புல்லாவை ஒடுக்க முடியாமல் இருப்பது. பணய கைதிகளை மீட் க முடியாததும் ஒரு தோல்வி.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆர்.ஜே. பாலாஜி நடித்த  சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை.  ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும்  இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ  என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🍰
    • சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா December 15, 2024 12:45 pm ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை செயற்கைக்கோள் காட்சிகள், ஹ்மெய்மிம் தளத்தில், திறந்த நிலையில், ஏற்றத் தயாராகி வரும் நிலையில், குறைந்தது இரண்டு அன்டோனோவ் AN-124 விமானங்கள் இருப்பதைக் காட்டுகிறது. சனிக்கிழமை லிபியாவிற்கு குறைந்தது ஒரு சரக்கு விமானம் பறந்ததாக, சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யர்களுடன் தொடர்பு கொண்ட சிரிய இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள், மொஸ்கோ தனது படைகளை முன் வரிசைகளில் இருந்து பின்வாங்கி, சில கனரக உபகரணங்களையும் மூத்த சிரிய அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. ஆனால், நிலைமையின் தீவிரம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள், ரஷ்யா தனது இரண்டு முக்கிய தளங்களிலிருந்து வெளியேறவில்லை என்றும், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறின. சில உபகரணங்கள் மொஸ்கோவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடைக்கால நிர்வாகத்திற்கு நெருக்கமான மூத்த கிளர்ச்சி அதிகாரி ஒருவர், சிரியாவில் ரஷ்ய இராணுவ இருப்பு மற்றும் அசாத் அரசாங்கத்திற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான கடந்தகால ஒப்பந்தங்கள் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸிடம் கூறினார். “இது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான விஷயம், சிரிய மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். “எங்கள் படைகள் இப்போது லடாகியாவில் உள்ள ரஷ்ய தளங்களுக்கு அருகில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். தளங்கள் குறித்து சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் ரஷ்யா விவாதித்து வருவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ரஷ்யா அதன் தளங்களிலிருந்து விலகவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ரஷ்ய வட்டாரம் தெரிவித்துள்ளது.     https://oruvan.com/russia-to-withdraw-its-troops-from-syria/
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎂🎊
    • ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  15 DEC, 2024 | 09:49 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் உள்ளிட்டவர்களை இன்று (15 ) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201373 இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் - ஜனாதிபதியிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு Published By: VISHNU   15 DEC, 2024 | 10:01 PM இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201375
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.