Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   06 FEB, 2024 | 10:33 AM

image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் கடும் கரிசனைகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்ற சூழ்நிலையில்; புதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்தயாப்பா அபயவர்த்தன சமீபத்தில் அந்த சட்டமூலத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார்.

புதிய சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது எதிர்காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில்துறை வல்லுனர்கள் உட்பட பல தரப்பினர் கரிசனைகளை வெளியிட்டுள்ள போதிலும் அரசாங்கம் புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

புதிய சட்டம் தடைசெய்யப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டவர்கள் அல்லது அந்த அறிக்கைகளை வெளியிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட  தளத்தின் உரிமையாளர்கள் இணையசேவைவழங்குநர்கள்  போன்றவர்களிற்கு எதிராக உத்தரவுகளை வழங்கக்கூடிய அதிகாரம் படைத்த ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட அறிக்கை வெளியான பகுதிக்கான இணையசேவையை நிறுத்துமாறு இணையசேவை வழங்குநர்கள் அல்லது இணைய இடைஅமைப்புகளிற்கு உத்தரவிடும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவிற்குள்ளது.

இதேவேளை  அரசாங்கத்தின் புதிய சட்டம் குறித்த கரிசனைகளும் விமர்சனங்களும் கண்டனங்களும் தொடர்ந்து வெளியாகும் நிலையில் புதிய திருத்தங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் இரண்டுவாரங்களில் இவற்றை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கூகுள் டுவிட்டர் யாகு மெட்டா அமேசன் போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கலந்துரையாடலை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் புதிய திருத்தங்களை உள்வாங்கும் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175683

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அவசர அவசரமாக அரசாங்கம் நிறைவேற்றியதற்கான காரணம் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கேள்வி - உடனடியாக நீக்க கோரிக்கை

Published By: RAJEEBAN   07 FEB, 2024 | 04:26 PM

image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அவசரஅவசரமாக அரசாங்கம் நிறைவேற்றியதற்கான காரணம் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சந்தேகம்; -உடனடியாக நீக்க கோரிக்கை

இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு  சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில்காணப்பபட்ட இரகசியதன்மையையும் அதனை அவசரஅவசரமாக  நிறைவேற்றியதையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அரசாங்கத்தின் நோக்கம்  குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

அரசாங்கம் அரசமைப்பு கொள்கைகளை புறக்கணித்துள்ளமை குறித்தும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனை வெளியிட்டுள்ளது.

சட்டத்தை அவசரஅவசரமாக நிறைவேற்றுவதற்கான நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம் இந்த சட்டம் கருத்து சுதந்திரம் சட்டத்தின் ஆட்சிக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் முழுமையாக கருத்தில்எடுக்க தவறியமையும் குறித்தும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கவலை வெளியிடடுள்ளது.

நீதிமன்றத்தின் பரிந்துரைகளை தெரிவுசெய்து நடைமுறைப்படுத்தியதன் காரணமாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அரசமைப்பிற்கு உகந்ததா என்ற கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகின்றது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால்உருவாக்கப்படவுள்ள ஆணைக்குழுவிற்கான பரந்துபட்ட அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தீங்கிழைக்கும் மற்றும் விருப்பம் போன்ற முக்கிய சொற்களின் தெளிவின்மை மற்றும் சுயாதீன நிபுணர்களின் செயற்பாடுகள் குறித்தும் கரிசனை வெளியிட்டுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் செயல்முறை மற்றும் சாரத்தினை அரசாங்கம் மீளாய்வுசெய்யவேண்டும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கம் உடனடியாகநீக்கவேண்டும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து கரிசனைகளிற்கு உண்மையான சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175813

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் - இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

12 FEB, 2024 | 09:33 AM
image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள அதேவேளை இன்று அந்த திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழில்நுட்பநிறுவனங்களின் அழுத்தங்களை தொடர்ந்தே அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என தொழில்நுட்பநிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/176154

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ் நிலை பாதுகாப்புச் சட்டம்: முதலாவது நபர் கைது!

adminFebruary 11, 2024
 

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட நபரிம் கைது செய்யப்பட்ட போது அவரிடம் 400,000 ரூபாய் இருந்தது என்றார்.

சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் தீங்கிழைக்கும் வகையில் அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இணையத்தில் அரசியல்வாதிகளை அவதூறாகப் பேசுபவர். அரசியல்வாதி ஒருவர் தனக்கு பணம் கொடுத்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். ஐக்கிய அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்காக கோட்டைக்குச் சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் தங்களையும், அரசாங்கத்தின் செயல்களையும், பதில் காவற்துறை மா அதிபர் அனைவரையும் அவதூறாகப் பேசுகின்றார்’எனவும்,  இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவே ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை (நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்) அரசாங்கம் கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க கூட அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மாத்திரமே இணைய பாதுகாப்பு சட்டம் பிரச்சினையாக இருக்கும் என டிரான் அலஸ்  தெரிவித்தார்.

 

https://globaltamilnews.net/2024/200500/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி

Published By: RAJEEBAN   13 FEB, 2024 | 05:09 PM

image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை  மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துலகுணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து குறித்த தொழில்துறை நிபுணர்களிடமிருந்து யோசனைகளை பெற்றுள்ளதாக  பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைகளை அடிப்படையாகவைத்து நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான நகல்சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/176299

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பாதுகாப்புக்காக எல்லாம் அரசாங்கம் அவசரத்துடன் இந்த சடடம் கொண்டு வரவில்லை.

 இலங்கை இந்தியாவிட்கிடையிலான அந்த கொடுக்கல் வாங்கல் UPI யை நடைமுறைய் படுத்துவதில் சிக்கல் ஏட்பட்டிருக்கிறது. சேவை வழங்கும் நிறுவனங்களின் வடபுறத்திலினால்தான் இந்த மாற்றங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை காப்பு சட்டம் : அவதானம் செலுத்துமாறு சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

samantha-power-1.jpg

நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்து இலங்கை மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தம் காரணமாக சர்வதேச சமூக வலைத்தள நிறுவனங்கள் குற்றவியல் வழக்குகளுக்கு உட்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/291788

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை காப்பு திருத்தச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்

Published By: VISHNU    15 FEB, 2024 | 06:14 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு விரைவில் அதனை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சமூக வலைத்தளங்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்காக 2017இல் இருந்த அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர அன்று நடவடிக்கை எடுத்துவந்தது. குறித்த சட்டம் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து இதற்குத் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அதனைப் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கும் பொறுப்பை அன்று ஊடக அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பின்னர் சமூகவலைத்தளங்களின் தலைமையகத்துடனும் இது தொடர்பாகக் கலந்துரையாடச் சிங்கப்பூருக்கும் எமது தரப்பினர் சென்றிருந்ததுடன் அவர்களும் இங்குவந்து இதுதொடர்பாக கலந்துரையாடியபோது, சட்ட ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் சுய கட்டுப்பாட்டுக்குச் செல்வதற்கு அப்போது இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததால், 2023வரை அதன் பிரகாரமே செயற்பட்டு வந்தது. 

என்றாலும் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக 2023 வரை  5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன.

அதனைக் கருத்திற்கொண்டே  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்தது, பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தது. இலங்கை வரலாற்றில் இந்த சட்டமூலத்திற்கு எதிராகவே உயர் நீதிமன்றத்தில் சுமார் 45க்கும் மேற்பட்ட மேன்முறையீடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன் பிரகாரம்  குறித்த சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் மற்றும் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய  சட்டமூலம் தயாரிக்கப்பட்டபோதும் சில திருத்தங்களை  சட்டப்பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்தின் குழுநிலையின்போதும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

என்றாலும் அந்த திருத்தங்கள் அனைத்தையும் கடந்த வாரம் பொது மககள் பாதுகாப்பு அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது, அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருந்தது .தற்போது அது சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அங்கு சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் அது சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும். அவர் குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்ற சான்றிதழை வழங்கிய பின்னர் அமைச்சரவை மீண்டும் அதனை அனுமதிக்க வேண்டும். அமைச்சரவை அனுமதித்த பின்னர் எந்த வேளையும் வர்த்தமானியில் பிரசுரிக்க முடியும். வர்த்தமானி வெளியிடப்பட்டு 7 தினங்களுக்கு பின்னர் எந்த வேளையும் அதனை பாராளுமன்றத்துக்கு முதலாம் வாசிப்புக்கு சமர்ப்பிக்க முடியும். அவ்வாறு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து 2வாரங்களுக்குள் அதுதொடர்பில்  உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம்.

எனவே இவ்வாறான சட்டங்களை கொண்டுவரும்போது பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் பொது மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலுமே இதனை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. சமூகவலைத்தளங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். அதனால் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களுடன் மீண்டும்  விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/176473

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.