Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரின் ஏக பிரதிநிதிகளாக புலிகளை ஏற்க மாட்டோம். - அரசு திட்டவட்டம்

Featured Replies

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த அமைதிப் பேச்சும் புலிகளோடு நாடாளுமன்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அனைத்து கட்சிகளை இணைத்துக் கொண்டே நடைபெறும்.

இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது இலங்கை அரசு.

அரசின் இந்த நிலைப்பாட்டை அரசின் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கெல நேற்று வெளியிட்டார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு தமிழ் தலைவர்களும் தீர்வு யோசனைகளை முன் வைத்திருக்கின்றனர். இதன் மூலம் புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், புலிகளுடன் மாத்திரம் பேச்சு நடத்துவது என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்றும் அவர் மேலும் சொன்னார்.

அமைதிப் பேச்சின் போது ஆனந்த சங்கரி போன்றோரின் யோசனைகள் கூட உள்வாங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேசியப் பாதுகப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேறகண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு :-

கடந்த ஒன்றரை வருடகாலமாக புலிகளுடன் பேச்சு நடத்த அரசு மேற் கொண்டு வந்த முயற்சிகள் பற்றியும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பற்றியும் ஜனாதிபதி ஐ.நா.பொதுச்சபையின் 62வது கூட்டத்த தொடரில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் விளக்கிக் கூறினார்.

இவை தொடர்பான பல முக்கியமான விடயங்களை அவர் அவ்வுரையில் குறிப்பட்டுள்ளார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும என்பது இந்த உலகமே ஏற்றுக் கொண்ட ஒன்று. இலங்கையிலும் அது தான் நடைபெறுகிறது.

புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் போது, அரசு மீது புலிகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்ககையின் போது மனித உரிமை தொடர்பில் அரசு மிகவும் விழிப்பாகவுள்ளது.

பயங்கரவாதத்தை முறியடிப்புச் செயற்பாட்டை மனித உரிமை மீறல் செயற்பாட்டாகக் காட்ட புலிகள் முயலுகின்றனர்.

இந்த நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியான தேர்தலின் ஊடாக மஹிந்தவை ஜனாதிபதியாககத் தெரிவு செய்தமை இந்நாட்டில் இறைமையையும் இந்நாட்டு மக்களின் உயிர்களையும் காப்பாற்றத்தான்.

இந்நாட்டு மக்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் போது அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஜனாதிபதிக்குண்டு. அதை அவர் சரிவர நிரைவேற்றி வருகின்றார்.

இப்போது தொடர்கின்ற இந்த இராணுவ நடவடிக்கை இப்பிரச்சினையின் இறுதித் தீர்வாக அமையாது. இந்நாட்டு மக்களை அடிமைப்படுத்தாத வகையில் நீதியான சமாதானம் ஒன்று எம்மால் முன்வைக்கப்படும்.

அமைதிப் பேச்சின் ஊடாக எட்டப்படும் அரசியல் தீர்வே நிச்சயம் இறுதித் தீர்வாக அமையும்.

புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான ஏற்றுக் கொண்டு அவர்களுடன் மாத்திரம் தான் பேச்சு நடத்த வேண்டும என்ற நிலைப்பாட்டில் அரசு இல்லை. தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் தமிழர்களின் வாக்குகளால ஜனாநாயக ரீதியில் தெரிவு செய்ப்பட்வர்கள்தான்.

அமைதிப் பேச்சின் போது தமிழ் முஸ்லிம் மக்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவம் செய்யும் ஏளைய அரசியல் கட்சிகளும் அப் பேச்சில் கலந்து கொள்ள செய்யப்படும்.

தமிழர்களின் அரசியல் தலைவர்கள் ஏற்கனவே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு தமது அரசியல் தீர்வு யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் புலிகள் தமிழர்களின் தனிபிரதிநிதிகள் அல்லர் என்பது தெளிவுபடுத்தப்பட்டுளது. என்றார் அவர்.

நன்றி : சுடர் ஒளி

ஆனந்தசங்கரியையும் டக்ளஸையும் மனதில் நிறுத்தி அண்ணன் ரம்பு இப்படிக் கதைக்கிறார் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-09-30

தமிழர்களின் பிரதிநிதிகள் யார்?

"தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த அமைதிப் பேச்சுக்களிலும் நாடாளுமன்றத்தில் தமிழ் முஸ்லிம் மக் களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அனைத்து அரசி யல் கட்சிகளையும் இணைத்துக்கொள்வோம்'' இப்படி அறி வித்திருக்கின்றது மஹிந்தரின் அரசு.

விடுதலைப் புலிகளைத் தமிழர் தரப்பின் ஏகப்பிரதிநிதி களாக அதிகாரபூர்வ பேராளர்களாக ஏற்றுக்கொண்டுதான் 2002ஆம் ஆண்டில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அமைதிப் பேச்சுக்கள் வரை அனைத்தையும் அப்போதைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு முன்னெடுத்தது. அதன் பின்னர் 2005 நவம்பரில் ஆட் சிக் கட்டில் ஏறிய மஹிந்த ராஜபக்ஷ அரசு கூட அந்த அடிப் படையில்தான் 2006 இல் "ஜெனிவா ஐ', "ஜெனிவா ஐஐ' பேச்சுக் களில் புலிகளோடு கலந்துகொண்டது.

அரச அதிகாரத்தில் இருந்தபோது ஈழத்தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோடு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஆராய் வதற்கு இணங்கிய ஐக்கிய தேசியக் கட்சி இப்போது சமஷ்டி விவகாரத்தைக் கைவிட்டுவிட்டதாகக் குத்துக்கரணம் அடிக் கின்றது.

புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு ஜெனிவா வரை பேச்சுக்குச் சென்ற மஹிந்த அரசு புலிகளின் ஏகப்பிரதி நிதித்துவத்தை நிராகரிக்கின்றது. புலிகளின் "பயங்கரவா த'த்தை நூறு வீதம் அடக்கிய பின்னர்தான் விரும்பிய திட் டத்தை தீர்வு விவகாரமாகத் தமிழர் மீது திணிப்பது குறித்துக் கனவு காண்கின்றது அது.

இவை எல்லாம் எவற்றின் வெளிப்பாடுகள்? பிரதிபலிப்புகள்?

கவிஞர் கண்ணதாசன் கூறி வைத்தமை போல் "உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்' என்ற மாதிரியான விவகாரம்தான் இது.

நேற்று இப்பத்தியில் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி இராணுவச் சமச்சீர் நிலையில் புலிகளின் பலம் வீழ்ந்துவிட்ட தாகக் கருதும் சிங்களம், புலிகளை நிழலாக நினைத்து மிதிக்க எண்ணுகிறது. பெரும்பான்மைச் சிங்களவர்களின் இரண்டு பிரதான கட்சிகளினதும் போக்கில் வெளிப்படுத்தப்படும் பேரினவாத மேலதிக்க மேலாண்மை திமிரின் பின்னணி இதுதான்.

நிழல் எது, நிஜம் எது என்பது நிரூபணமாகும் போது இந் தச் சிந்தனையில் சித்தாந்தப் போக்கில் நிச்சயம் சடுதியான மாற்றம் வரும் என்பதும் திண்ணம்.

பலமான நிலையில் இருந்துகொண்டு அந்தப் பலத்தில் உருவான பேரம் பேசும் வலுவோடுதான் பேச்சு மேசைக்குச் செல்லவேண்டும் என்பதில் புலிகளின் தலைமை உறுதியாக இருப்பதின் தாற்பரியத்தை நியாயத்தை சிங்களத்தின் தற் போதைய நிலைப்பாட்டிலிருந்து தமிழர்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

அடுத்தது தமிழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகள் யார் என்பது குறித்து சிங்களத்தின் பக்கத்தில் கேள்வி எழுப்பு பவர் யார் என்று நோக்கும் போது சிரிப்புத்தான் வருகின்றது.

ஐ.தே.கட்சியின் தலைவர் ரணிலின் காலில் ஒட்டிக் கொண்டு நின்று எம்.பியாகி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்காகத் தலைகீழாக நின்று பிரசாரம் செய்து ஜனாதி பதித் தேர்தலில் ரணில் தோற்றபின்னர் அடுத்த வாரம் "உத யன்' "சுடர்ஒளி'க்கு அளித்த விசேட பேட்டியில் ரணிலின் கையைப் பலப்படுத்தும் படி மன்றாடிய கெஹலிய ரம்புக் வெலதான் புலிகளின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதித்துவம் குறித்து இப்போது நியாயம் பிளக்கிறார்.

ஐ.தே.கட்சி பட்டியலில் போட்டியிட்டு, எம்.பியாகி இப் போது ஆளும் தரப்புக்குக் குத்துக்கரணம் அடித்து ஜனாதிபதி மஹிந்தருக்காக வக்காலத்து வாங்கும் ரம்புக்வெல, தமிழர் களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை.

2004ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலின் அடிப்படையில் தெரிவான அரசுதான் இப்போது ஆட்சிப்பீடத்தில் இருக்கின் றது.

ஈழத்தமிழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகள் புலி கள்தாம் என்பதையும் இனப்பிரச்சினைக்கான எந்தப் பேச்சு முயற்சியும் அவர்களோடுதான் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையும் சர்வதேசத்துக்கும் ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தும் ஒரு தேர்தலாகத்தான் அத்தேர்தலைத் தமி ழர் தாயகம் பயன்படுத்தியது. அந்த ஒரே கோரிக்கையை முன் வைத்துப் போட்டியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப் பினர்களுக்குத் தமிழர் தாயகத்தின் 90 வீதத்துக்கும் அதிக மான மக்கள் வாக்களித்தமையும் அதற்காகத்தான். தமிழர் தாயகத்திலிருந்து தெரிவான 23 நாடாளுமன்ற உறுப்பினர் களில் 22 பேர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினராக அமைந் தமையும் இந்தப் பின்புலத்தில்தான்.

இந்த நிலைப்பாட்டுக்கு முரண்பட்டு மாறாக நின்றபடி யால்தான் தமிழர் தாயகத்தில் சுமார் நான்கு தசாப்த காலம் மதிக்கப்பட்டு வந்த வீ.ஆனந்தசங்கரி போன்றோரை ஒரு சில ஆயிரம் வாக்குகளோடு தமிழர் தாயகம் நிராகரித்துத் தூக்கி வீசி அரசியல் அனாதைகளாக்கியது. இப்போது அரசுத் தலை வர் மஹிந்தரின் சால்வையில் தொங்கிக் கொண்டும் புதுடில் லிக்கு சாமரம் வீசிக்கொண்டும் ஐ.தே.கட்சியிடம் கெஞ்சி மன் றாடி அறிக்கை விட்டுக்கொண்டும் இருக்கும் இத்தகைய யோரை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பிரதிநித்துவப் படுத்த முயற்சிப்பது கடந்த பொதுத் தேர்தலில் தமிழர் தாய கம் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்திய தீர்ப் புக்கு முரணான முழுக் குளறுபடியாகும்.

மக்களின் உண்மையான பிரதிநிதிகள் குறித்து ரம்புக் வெல போன்றோர் பேசுவது வேடிக்கை. அதிலும் ஈழத்தமிழர் கள் தங்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகள் யார் என் பதை தென்னிலங்கைச் சிங்கள அரசே தனது சட்டதிட்டங் களுக்கு அமைய தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாக்குப் பெட்டிகளை வைத்து நடத்திய கடைசிப் பொதுத் தேர்தலில் உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்திய பின்னர், அத்தீர்ப்பை நிராகரித்து அதற்கு வேறுபட்ட விதத் தில் அமைச்சர் ரம்புக்வெல புதுக்கதை பேசுவது வேடிக்கை யிலும் வேடிக்கை.

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா சபையே ஒரு பெயரளவு சபையாத்தான் இயங்குகிறது. அது அமெரிக்க எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக உலகில் இன்று இயக்கப்படுகிறது. மற்றும் படி.. அமெரிக்கா நினைக்கிறதுதான் உலகத்தில நடக்க முடியும் என்பது அமெரிக்காவின் சர்வாதிகாரத்தின் நிலைப்பாடு.

சிங்களத் தலைவர்கள் தாம் இராணுவ ரீதியா மேலோங்கும் போது தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் மட்டம் தட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஜே ஆர் தொடங்கி இந்தக் கொக்கரிப்புகளுக்கு குறைவே இல்லை. தமிழர்கள் மத்தியிலும் சில புல்லுருவிகள் காலங்காலமா இருந்து கொண்டுதான் உள்ளனர். அந்தப் புல்லுருவிகள்... மக்களால் விரட்டி அடிக்கப்பட்டும் உள்ளனர். அவர்களுக்காக தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தாரைவார்க்கும் நிலை இன்றில்லை.

மிஸ்ரர் ரம்புக்வல.. சொல்லுற வடிவத்தில வந்து ஜனநாயகத்தைப் பார்த்தால் கூட மக்களின் வாக்குகளால் நிராகரிக்கப்பட்ட ஆனந்த சங்கரி எப்படி மக்களுக்கான திட்டங்களை முன்வைக்க முடியும்.

மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட.. தமிழர் கூட்டமைப்புத் தலைவர்களை கொலை செய்துவிட்டு.. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆனந்த சங்கரிக்கு ஜனநாயக சாயம் பூசுவது... துணை இராணுவக் குழுக்களை இயக்கிக் கொண்டு.. இராணுவ நிர்வாகத்தை நடத்திக் கொண்டு தேர்தல் நடத்துவது எல்லாம் ஜனநாயமாப் போச்சு.. சிறீலங்காவில். அதற்கு ஆமாப் போடுகிறது உலகில் ஜனநாயகம் காக்கும்.. அமெரிக்க உலக சர்வாதிகாரம்.

தமிழர்கள் ஆயிரம் தான் கத்தினாலும்.. சர்வதேச அரங்கில் அது எடுபடாதது போலவேதான் சிங்களம் தோற்றம் காட்ட முனைகிறது. தமிழர்கள் திருப்பி அடித்தால்.. சிறீலங்காவின் ஆக்கிரமிப்பை முறியடித்தால்.. தமிழர்களின் குரல் சர்வதேச அரங்கில் எதிரொலிப்பதை சிங்களப் பேரினவாதம் தடுக்கவே முடியாது.

சமீபகால இராணுவ வெற்றிகள் தான் சிங்களவர்களை இப்படி கர்ச்சிக்க வைக்கிறது.

"சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்தை புலிகள் கைவிட இராணுவ நடவடிக்கையும்.... இனப்பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சும் எங்கிறார் ரம்புக்வெல."

"ஆனால் நியோர்க்கில் அரசுத் தலைவரோ.. இலங்கையில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சனை. 54% தமிழர்கள் ஏனைய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். ஆகவே அங்கு இனப்பிரச்சனை என்பதே இல்லை. பயங்கரவாதத்தை முறியடிக்க இராணுவ நடவடிக்கை அவசியமாகிறது. பயங்கரவாதக் குழு ஒன்றுடனே மோதுகின்றோம் எங்கிறார். அதுமட்டுமன்றி இந்தப் பயங்கரவாதம் வெளிநாட்டுப் பணத்தில் வளர்வதால்.. வெளிநாட்டுப் பணம் பயங்கரவாதிகளை அடைவதைத் தடுக்க வேண்டும் எங்கிறார்."

"இலங்கையின் தமிழ் மக்களில் 54 சதவீதமானோர் நாட்டின் வடக்கு-கிழக்கு பிரதேசத்துக்கு வெளியே சிங்களவர்களுடனும் ஏனைய சமூகத்தவர்களுடனும் வாழ்கின்றனர். சில ஊடகங்கள் தவறாக தெரிவிப்பதைப்போல் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. இலங்கையின் படையினர் பயங்கரவாதக் குழுவொன்றுடன் மோதுகின்றனரே தவிர ஒரு சமூகத்துடன் அல்ல. - மகிந்த"

http://www.eelampage.com/?cn=33621

இப்படி சர்வதேச அரங்கிலேயே பொய்களை அவிழ்த்துவிட்டு.. தலை குனிந்து நிற்கிறது சிங்களப் பேரினவாதம். ஐநா சபைக்கு என்று தேர்ந்தெடுத்த பொய்களை அவிழ்க்கிறது.

தன்மீதான மனித உரிமை மீறல்கள் தனக்குப் பாதகமாக அமைந்திடுமோ என்ற அச்சத்தில்.. நிலையறியாமல் உளறித் தள்ளுகிறது.

சிங்களப் பேரினவாதிகளுக்கு இப்ப இருக்கும் பிரச்சனையே விடுதலைப்புலிகளின் இராணுவ பலம் தான். இன்றேல் என்றோ தமிழர்களின் இருப்பின் அடையாளத்தை அழித்து முழு இலங்கையையும் சிங்கள பெளத்த நாடாக்கி இருப்பர்.

தமிழர்களின் இராணுவ பலம் தான் "புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம்" சர்வதேச அரங்கு அறியக் கூடியதாக புலிகளுக்கு சமதரப்பு என்ற நிலையை வழங்கியது.

புலம்பெயர் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது எல்லாம்.. சிங்கள அரசு மட்ட பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் தமது பிரச்சாரங்களை கொண்டு செல்வது தான். சர்வதேசத்துக்கு தமிழர்களின் நிலைப்பாட்டு நியாயங்களை ஆதாரப்படுத்தி சொல்வதுதான்.

சிங்களவன் என்ன சொல்கிறான் என்று பார்த்து அதை விமர்சித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. சூசை அண்ணன் சொன்னது போல.. அவர்களின் அறிக்கைகளுக்கு பதிலறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தால் அது தான் முழு வேலையா இருக்கும்.

Edited by nedukkalapoovan

ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக புலிகளை ஏற்கமாட்டோம் என்று ரம்புக்வெல் போன்ற நரிகள் சொல்லச்சொல்ல

புலிகள் மட்டுமே ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பது மேலும் மேலும் உறுதியாகிறது.

தமிழர்கள் புலிகளின் பலத்தை மேலும் மேலும் வளர்க்க வேண்டிய அவசியமும் தெளிவாகிறது.

Edited by vettri-vel

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

'தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்' என்று த.தே.கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளமை வருமாறு:-

புதிய அரசு ஒன்றை உருவாக்குவதாற்காகவும, அதற்கான பொதுத் தேர்தலை நடத்துவதற்காகவும் தம்முடன் கூட்டாக இணைந்து செயற்படுமாறு ஐ.தே.கட்சி எமக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பைக் கூட்டமைப்பால் உடனே ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், ஐ.தே.க. தனது நிலைப்பாட்டை அண்மை காலமாகத் திடீர் திடீர் என மாற்றி வருகின்றது.

இலங்கையில் பயங்கரவாதம் இருக்கின்றது எனவும், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார். இந்தக் கூற்றை நாம் முற்றாக நிராகரரிக்கினறோம். விடுதலைப் புலிகள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர் என்று சொல்ல வேண்டியவர்கள் தமிழர்களே. தமது ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள்தான் என்பதைத் தமிழ் மக்கள் உறுதியாகப் பறைசாற்றியிருக்கும் நிலையில், மஹிந்தவின் கருத்து ஒன்றும் செய்து விடப்போவதிலை.

தமிழர் விடுதலைப் போராட்டத்தை நசுக்கவும் தனது சுயநல அரசியலுக்காகவும் எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்ற சொற்பதத்தைப் பிரயோகித்து நசுக்க நினைக்கின்றார் மஹிந்த. இராணுவ வழி முறையிலேயே தீர்வு காண முயற்சிக்கும் மஹிந்த அரசின் கொள்கைகளை வலுப்படுத்தவே இந்தப் பயங்கரவாதம் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. இதைப் போர்வையாக்க கொண்டு தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை மிதிக்க முற்படுகின்றது.

இதனடிப்படையில் யுத்தத்தை முன்னிலைப்படுத்தியுள்ள இந்த அரசின் வரவு செலவுத் திட்டதிற்கு எதிராக நாம் வாக்களிப்போம். நாம் தனித்தே இம்முடிவை எடுத்துள்ளளோம் என்றார் அவர்.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.