Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும்.

ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்இன்னும் என்னென்னவோ செய்கிறோம்.

நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன்  இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள்.

Default-vector-illustration-of-lord-kann

ஆண்டவர்களில் மூன்றுபேர், படைத்தல், காத்தல், அழித்தல் என்று தங்களுக்கான பொறுப்புகளை தங்களுக்குள்ளேயே  பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இதில் படைப்பவன், படைத்தலுடன் தன் வேலையை நிறுத்திக் கொண்டான். காத்தல், அழித்தல் செய்பவர்கள் கொஞ்சம் குளப்படி. தேவையில்லாத விடயங்களையும் செய்யக் கூடியவர்கள். அப்படிச் செய்யும் தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்டவனின்திருவிளையாடல்கள்என்ற பதத்துக்குள் அடங்கிவிடும்.

அழித்தல் வேலை செய்த ஆண்டவனின் மாமனார் (பெண் கொடுத்தவர்), ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு மருமகனை அழைக்கவில்லை. அது மருமகனுக்குப் பொறுக்கவில்லை. கோவம் தலைக்கேறி ஒரு தாண்டவமும் ஆடி, தனது வேலையாளான வீரபத்திரனை அனுப்பியாகத்தை அழித்து மாமனாரையும் கொலை செய்வித்தான் . இந்தக் கொலையை செய்ய ஆளை அனுப்பியவன் ஆண்டவன் என்பதால்வதம்செய்வித்தான் என்று குறிப்பிட்டால்தான் சரியாக இருக்கும்.

Default-vector-illustration-of-lord-Shiv

அடுத்து காத்தல் செய்பவன். இவன் அழித்தல் செய்பவனை விட ஓவரான குழப்படிக்காரன். தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுக்காரன். பெண்களை மயக்கும் மாயவன். பெரும் தந்திரசாலி. ஒரு தடவை நரகன் என்ற அரசனுடன் (பின்னாளில் நரகாசுரன்) பிரச்சனையாகிப் போனது. நரகன் பலசாலி. அவனுடன் மோதினால் காத்தல் வேலை செய்யும் தான் கந்தல் ஆகிவிடுவேன் என்பதை  நன்கு அறிந்து வைத்திருந்தான். நரகன் நல்லவன், அறிஞன், வீரன் என்பதெலாம் காத்தல் ஆண்டவனுக்குத் தேவைப்படாத விடயங்கள். தந்திரத்தால் நரகனை அழிக்கத் திட்டம் போட்டான். ‘நரகன் ஆண்களுடனையே போர் செய்வான். எக்காலத்திலும் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டான்என்ற தகவல்  அவனுக்குக் கிடைத்தது. நரகனை போருக்கு அழைத்துத் தன் மனைவி சுபத்திரையிடம் ஆயுதம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தான். நரகன், பெண்களை மதிப்பவன். கொண்ட கொள்கையில் நிலையாய் நிற்பவன். போர்க்களத்தில் தன்னுடன் மோத வந்திருப்பது ஒரு பெண் என்பதால், தன் ஆயுதங்களை எடுக்காமல் அமைதியாக நின்றான். கணவன் சொல் கேட்டு சுபத்திரை அம்பு விட்டாள். நரகன் செத்துப் போனான். “நரகன் அழிந்துவிட்டான். இந்நாளை இனி வரும் காலங்களில் நன்னாளாகக் கொண்டாடுங்கள்என்று மக்களுக்கு ஆணையிட்டான்.

Default-vector-illustration-of-lord-Vish

காத்தல் வேலை செய்தாலும், தன்னுடைய மச்சான் செய்யும் அழித்தல் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது போலே, இரணியனை கொலை (வதம்)  செய்தான். பரசுராமன் என்று மாற்றுப் பெயரில் போய் தன் தாயையே கொன்றான். கெளரவர்களில் ஒருத்தனை  மட்டும் விட்டு விட்டு எல்லோரையும் அழித்தான்.. என்று அவனின் காத்தல் வேலை அழித்தலாகத் தொடர்ந்தது.

Default-vector-illustration-of-lord-kann

 

இதை எல்லாம் கேள்விப் பட்ட எங்களை ஆண்ட கந்தனுக்கும் கை துருதுருக்க அவனும் சூர பத்மனை கொலை (வதம்) செய்து, ஆண்டாண்டு காலமாக அதை நினைவு கூரவும் செய்திருக்கிறான்

இப்படிப் போகிறது எங்களை ஆண்டவர்கள் கதை.

அமைதி தேடி ஆண்டவர்களின் இருப்பிடத்துக்குப் போனால், ஆண்டவர்கள் எல்லாம் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறார்கள். கால்களில் யார் யாரையோ போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னிகளை ஒன்றுக்கு இரண்டாக அணைத்து வைத்துக் கொண்டு காட்சி தருகிறார்கள். ஆனாலும் நாங்கள் அங்கே போய்த்தான் அமைதியைத் தேடிக் கொள்கிறோம்.

ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.

  • Like 9
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண்டவனே கவலை கொள்ளும் செயல்களை செய்துவிட்டு, மனசாட்சி என்றதை மறைத்துவிட்டு ஆண்டவனுக்காகத்தான், ஆண்டவனது இருப்புக்காகத்தான் அதனை செய்தோம் என கொஞ்சமும் தயங்காமல் சொல்கிறோம். ஆண்டவனே மனிதர்களைப் பார்த்து பயம் கொள்ளும் அளவுக்கு எங்களது செயல்கள் உள்ளன. 

 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.

ஆண்டவன் தண்டனை கொடுத்த போது அது செய்யப்பட வேண்டியதாக நியாயமானதாக என்னால் செய்ய முடியாததை ஆண்டவர் செய்கிறார் என்று வரவேற்றோமா? இல்லையா?  எம் மனதில் எழும் எம்மால் முடியாத விடயங்களை ஆண்டவனை செய்ய வைத்து விட்டு கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அல்லாவுக்கு பிகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என்பதும் நான் மோடு அவர் எல்லாம் தெரிந்தவர் செய்திருக்கக் கூடாது என்பதெல்லாம் சுயநலத்தின் உச்சம் மட்டுமே. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னரெல்லாம் எங்களைக் காப்பாற்று என்று மக்கள் கோவில்களை நோக்கி ஓடினார்கள்.

இப்போ தெய்வங்களெல்லாம் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு உள்ளேயிருந்து மக்களே எங்களை காப்பாற்றுங்கள் என்று தூங்கிவிட்டார்கள்.

அவர்களது தேவை,சேவைகளை மக்களே கையிலெடுத்து விட்டார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புராணங்களின் போர்க்களங்களை ரணகளமாக்கி நீதிதேவன் முன் நிறுத்தும் கட்டுரை.......நல்லா இருக்கு.....!  😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுள்கள் ஆயுதம் ஏந்துவது ஒரு பெரிய உண்மையை மறைமுகமாகச் சொல்கின்றது! அண்மையில் குறிகாட்டுவானிலிருந்து நையினாதீவு போகும் பக்தர்களின் நிலை கண்டு மிகவும் வருத்தமாக இருந்தது. சிங்கள நோனாக்கள் விசேட வரிசையில் வள்ளங்களில் இராணுவத்தினரால் அனுப்பப் பட, எம்மவர்கள் மூன்று மணி நேரம் கடும் வெய்யிலில் காய்கின்றார்கள். புத்தன் ஆயுதம் ஏந்தாத கடவுள் எனினும் ஆயுத முனையில் தானே அவன் மதமும் வளர்கின்றது..! எனவே கடவுள்கள் ஒரு செய்தியைச் சொல்கின்றார்கள்..! நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்…! காந்த்தீய இந்தியாவுக்கும்…அணுகுண்டு தானே தேவைப் படுகின்றது..!

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, புங்கையூரன் said:

புத்தன் ஆயுதம் ஏந்தாத கடவுள் எனினும் ஆயுத முனையில் தானே அவன் மதமும் வளர்கின்றது..! எனவே கடவுள்கள் ஒரு செய்தியைச் சொல்கின்றார்கள்..! நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்…! காந்த்தீய இந்தியாவுக்கும்…அணுகுண்டு தானே

புங்கையூரான்,

புத்தர் கடவுள் இல்லை. ஒரு தத்துவவாதி.

அவர் ஒரு இந்துவாக இருந்தும், “கடவுள் இல்லை. ஆன்மா இல்லை. மறு பிறப்பு இல்லை” என்று போதித்த ஒரு தத்துவவாதி. பின்னாளில் அவரையே கடவுள் ஆக்கி வழிபடத் தொடங்கி விட்டார்கள்.

சிறிலங்காவை சிங்கள பெளத்தர்களுக்கே, புத்தர் எழுதித்தந்து விட்டார் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்

  • Like 3
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/2/2024 at 19:41, Kavi arunasalam said:

ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது.

ஆண்டவன் என்ற பெயரில் மக்களை ஆண்டவர்கள்தான் கொலைகளைச் செய்தார்கள். அவர்களை அவதார புருஷர்கள் என்று சூதர்களும் பாணர்களும் பாடிப்பாடியே ஆண்டவர்களாக ஆக்கினர். 

அழிவு இல்லாமல் ஆக்கம் இல்லை என்பதால் அழிவுகளும், பேரழிவுகளும் இந்தப் பூமியில் தொடரும். எல்லோரையும் இறுதியில் உண்ணும் புழுவும், அனலும் எப்போதும் விடாய்கொண்டே இருக்கின்றன!

  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.