Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    27 FEB, 2024 | 04:00 PM

image

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வாழைச்சேனை என்றதும் அங்கு அமைந்துள்ள கடதாசி தொழிற்சாலை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். என்றாலும் 1990 களில் இத்தொழிற்சாலை மூடப்பட்டதோடு அந்நினைவு பெரும்பாலானவர்களின் மனங்களில் இருந்து நீங்கிவிட்டது.

1947 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பதவி வகித்தார். அப்பதவி 1948 இல் ஜி.ஜி பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1951 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்கு பொன்னம்பலம் அடிக்கல் நாட்டினார். ஜேர்மன் நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

என்றாலும் 1952 இல் நடைபெற்ற பொதுத்தேர்லிலும் ஐ.தே.க வே ஆட்சிக்கு வந்தது. அந்த அரசிலும் பொன்னம்பலமே கைத்தொழில் அமைச்சரானார். அதனால் அவர் அடிக்கல் நாட்டி ஆரம்பித்த கடதாசி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் டட்லி சேனநாயக்காவின் ஆட்சியிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

1953 இல் இடம்பெற்ற ஹர்த்தாலைத் தொடர்ந்து சேர்.ஜோன்.கொத்தலாவல நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்ற போதிலும் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் அமைச்சு பதவி மாறவில்லை. அதன் பயனாக அவர் ஆரம்பித்த வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் 1956 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியாகும் போது நிறைவடையும் கட்டத்தை அடைந்தது. நீண்ட காலம் பலர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க பணிகளின் ஊடாக கிழக்கு கடதாசி ஒருங்கிணைப்பு சபை என 1956 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை அமைக்கப்பட்டமை தெரிந்ததே.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.57__1

என்றாலும் 2015 முதல் 2020 வரையும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் இத்தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டிருந்த போதிலும் அதன் தலைவர்கள் மாதாந்த சம்பளம் பெற்றனர். 2020 இல் தான் இத்தொழிற்சாலை அரசின் ஏற்பாட்டில் மீண்டும் திறக்கப்பட்டது.

இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நல்லதொரு காலம் உருவாகியுள்ளதாக கருதினோம். ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்து போயுள்ளது. அன்று இத்தொழிற்சாலைக்கு பொறுப்பான அமைச்சராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எம்.பி பதவி வகித்தார். நான் கொரிய முதலீட்டாளருடன் அவரைச் சந்தித்து இத்தொழிற்சாலையை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பார்வையிடச் சென்றோம்.

50 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மன் பொறியியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இத்தொழிற்சாலையில் உள்ள சிறந்த தொழில்நுட்ப பெறுமானங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் படி, மீண்டும் உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய நிலையில் இங்குள்ள உற்பத்தி இயந்திரங்கள் காணப்பட்டன. அவற்றைத் திருத்தவென நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அச்சமயம்  தொழிற்சாலையில் காணப்பட்ட நிலையை இட்டு நாம் அதிர்ச்சியடைந்தோம்.  மிகவும் சிறந்த நிலையில் காணப்பட்ட கார்ட்போர்ட் உற்பத்தி இயந்திரத்தின் மூன்று பிரிவுகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு 100 முதல் 150 ஜி.எஸ்.எம். வரையான காகிதாதிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் நான் பதவி வகிக்கும் போது 150 முதல் 550 ஜி.எஸ்.எம். வரையான காகிதாதிகள் உற்பத்தி செய்யப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.57.jp

இத்தொழிற்சாலையின் சில பிரிவுகளது உற்பத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட  பல இயந்திரங்கள் துண்டு துண்டாகக் கழற்றப்பட்டு வேறாக்கப்பட்டிருந்ததும்  சில இயந்திரப் பாகங்கள் தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டிருந்தமையும் காரணங்களாக விளங்கின. இத்தொழிற்சாலைக்கு பொறுப்பாக 2020 முதல் 2021 வரைப் பதவி வகித்த நிர்வாக அதிகாரி, இந்த இயந்திரத்தின் உதிரிப் பாகங்களைப் புதுப்பிப்பதற்காகக் கொண்டு செல்வதாகத் தெரிவித்ததாக ஊழியர்களே தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கீழ் மாடியிலுள்ள கடதாசி உற்பத்தி இயந்திரத்தைப் பார்வையிடச் சென்ற போது, அந்த இயந்திரமும் கூட துண்டு துண்டாகக் கழற்றி வேறாக்கப்பட்டிருந்தது. அதன் சில பாகங்கள் அங்கு காணப்படவே இல்லை. அது தொடர்பில் விசாரித்த போது உற்பத்தி முகாமையாளர், இந்த கார்ப்போர்ட் இயந்திரத்தை பொருத்துவதற்காகவே கழற்றி வேறாக்கியதாகவும்  அதன் பாகங்கள் காகிதாதி இயந்திரத்திற்கு பொருத்தமானதாக இல்லை என்பது தெரிந்தது. அதனால் அதனை திருத்தியமைக்க அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டார். வெளிநாட்டவர்கள் புதிய பாகங்களைக் கொண்டு வர முயற்சி செய்த போதிலும் அதற்கு நிதி இல்லை என நிதியமைச்சு குறிப்பிட்டதாகவும் அந்த முகாமையாளர் கூறினார்.

இவ்வாறான நிலையில் நான், ஏன் இந்த இயந்திரத்தைத் துண்டு துண்டாகக் கழற்றினீர்கள் என விசாரித்தேன். கடதாசி உற்பத்தி இயந்திரங்கள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற தமிழகத்தின் கோயம்புத்தூர் பொறியியலாளர்கள் மூன்று தடவைகள் இந்நாட்டுக்கு வருகை தந்த சமயம், ஜேர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த voith கடதாசி உற்பத்தி இயந்திரத்தின் ஆயுட்காலத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் வழங்கிய அனைத்து அறிக்கைகளும் என்னிடமுள்ளது. அவர்களது அறிக்கைப்படி, இந்த இயந்திரங்களை முழுமையாகப் புதுபித்த பின்னர் மேலும் 25 வருடங்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி செயற்படக்கூடிய இயந்திரங்கள் இவை என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் எடுத்துக்கூறினேன்.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.58.jp

14 வருடங்களுக்கு பின்னர் மீளக்கட்டியெழுப்பப்பட்ட இந்த இயந்திரத்தை இவ்வாறு துண்டு துண்டாகக் கழற்றி சேதப்படுத்தியுள்ளமை குறித்து நாம் கடும் கவலைக்கும் வேதனைக்கும் உள்ளானோம்.

இத்தொழிற்சாலையின் தற்போதைய தலைவர் பதவி வகிக்கும் காலப்பகுதியில் திருத்தியமைக்கும் இடத்தில் பல பொருட்கள் இல்லாதுள்ளன. அத்தோடு வாழைச்சேனை நீதிமன்றத்தினால் இத்தொழிற்சாலைக்கு விடுவிக்கப்பட்ட 115 மோட்டார் இயந்திரங்களும் தற்போது அங்கிருக்கின்றதா என்பதும் கேள்விக்குரிய விடயமாக உள்ளது.

இத்தொழிற்சாலையின் இந்து கோவிலுக்கு பின்பகுதியில் காணப்பட்ட பெறுமதி மிக்க தேக்கு மரங்கள் கூட வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அம்மரங்களின் அடிப்பாகங்கள் கூட பெகோ இயந்திரத்தைக் கொண்டு இருந்த அடையாளம் தெரியாதபடி அப்புறப்படுத்தப்பட்டு நிலம் சம தரையாக்கப்பட்டுள்ளன. இவற்றின் கிளைகள் தொழிற்சாலையின் நீராவி இயந்திரத்திற்கு (பொயிலர்) விறகாகப் பாவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தொழிற்சாலையின் இதயமே இந்த நீராவி இயந்திரமேயாகும்.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.59__1

இவற்றை திருத்தியமைப்பதற்கு 28 மில்லியன் ரூபாவுக்கு கேள்விமனு (டென்டர்) கோரப்பட்டிருந்த போதிலும் அதனை உள்நாட்டவரைக்கு கொண்டு நான் 11 மில்லியன் ரூபாவுக்கு திருத்தியமைத்தேன். இன்றும் அந்த நீராவி இயந்திரமே (பொயிலர்) இயங்குநிலையில் உள்ளது. இவை அனைத்தும் 2020 இல் இத்தொழிற்சாலைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச  எம்.பியினால் நியமிக்கப்பட்ட புதிய தலைவரின் பதவிக்காலத்தில் இடம்பெற்றவையாகும். அவரே தற்போதும் தலைவராகப் பதவி வகிக்கிறார். ஆனால் இத்தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்களும் அழிவுகளும் முன்பு பதவி வகித்த தலைவர்களின் காலத்தில் இடம்பெற்றவையாக அவர்  கூறிவருகிறார். 

மேலும் இத்தொழிற்சாலையின் வரலாற்று பின்புலத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில், இத்தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் ஊடாகவும் அறிந்து கொள்ளலாம்.  அவர் இத்தொழிற்சாலையின் முன்னேற்றத்தில் தீவிர அக்கரை கொண்டிருப்பவர் என்பதோடல்லாமல், அவ்வப்போது இத்தொழிற்சாலைக்கு வந்து செல்லக்கூடியவராகவும் இருந்தார். அத்தோடு இதன் அபிவிருத்திக்காக பாராளுமன்றத்தில் கூட அவர் குரல் எழுப்பியுள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

WhatsApp_Image_2024-02-26_at_10.35.59.jp

இவ்வாறான விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஒரு முக்கிய விடயத்திற்காக ஏற்பட்டுள்ளது. அதாவது கிழக்கு மாகாணத்தின் பாரிய அபிவிருத்திக்கு வித்திடும் வாழைச்சேனை சுற்றுலா ஒருங்கிணைப்பு அபிவிருத்தி கருத்திட்டம் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்காவை 2023 நவம்பர் 23 ஆம் திகதி சந்தித்து அளவலாவினேன். அச்சமயம் அவர் தெரிவித்த விடயங்கள் என்னை ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியதோடு அவற்றால் கடும் கவலையும் வேதனையும் அடைந்தேன்.

அதாவது வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் இயந்திரங்களும் அவற்றின் பாகங்களும் எனது பதவிக்காலத்தில் தான் இரும்புக் கணக்குக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அது தொடர்பில் முறைப்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் நான் உண்மையான அறிக்கைகளுடன் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அதனால் என் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து எனக்கு அறியத்தந்த இராஜாங்க அமைச்சருக்கு முதலில் தனிப்பட்ட முறையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கா நாடு தொடர்பிலும் நாட்டின் வளங்கள் குறித்தும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய ஒருவராவார். அந்த வகையில் இராஜாங்க அமைச்சருக்கு சகல விடயங்களையும் ஆவணங்களின் ஆதாரங்களுடன் நான் எடுத்துக்கூறினேன்.

எந்தவொரு நிறுவனத்திலும் பதவியொன்றை வகிக்கும் போது நிகழ்ச்சிநிரல், நடைமுறைச் சாத்தியமான முகாமைத்துவம் குறித்த ஒரளவாவது அறிவு தேவை என்பதை நாமறிவோம். அவை எதனையும் கொண்டிராதவர்கள் செயற்றிறன் மிக்க நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் தெரிவிப்பதை விடுத்து நாட்டுக்கோ, இனத்திற்கோ, நிறுவனத்திற்கோ, எதிர்கால சந்ததியினருக்கோ உற்பத்தி திறன் மிக்க சேவைகளைச் செய்ய மாட்டார்கள்.

அதனால் எனக்கு எதிராக எவர் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தாலும் இத்தொழிற்சாலையின் தகுதிகாண் அதிகாரியாகக் கடமையாற்றிய காலப்பகுதியில் நிறுவனத்தின் வளங்களைப் பாதுகாத்து (ஒரு அங்குலத்தைக் கூட எவருக்கும் விற்பனை செய்யாது மொபிட்டல் நிறுவனத்தின் கோபுரத்தை அமைப்பதற்கு காணியை வழங்கி மாதா மாதம் நிறுவனத்திற்கு  25 ஆயிரம் ரூபா படி வருமானம் கிடைக்கப்பெற வழி செய்யப்பட்டுள்ளது) உற்பத்தி கொள்ளளவை அதிகரித்ததன் ஊடாக வருமானம் அதிகரித்ததோடு நஷ்டத்தைக் குறைத்து இலாபம் பெறும் நிலைக்கு கொண்டு வரவென ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனினும் அண்மையில் நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றி கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதனால் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை அபிவிருத்தி செய்து அதற்குரிய காணியில் சுற்றுலா ஒருங்கிணைந்த அபிவிருத்தி கருத்திட்டத்தை முன்னெடுத்து 2000 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி ஜனாதிபதிக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்க முடியும் என நான் நம்புகிறேன்.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.55.jp

நாம் இத்திட்டத்தை கட்டியெழுப்புவதற்கு சாதாரண பட்டங்களையோ கலாநிதி பட்டங்களையோ கொண்டிராவிட்டாலும் சரியான நிகழ்ச்சி நிரல் மற்றும் நடைமுறைச்சாத்தியமான முகாமைத்துவம் இருக்குமாயின் சவால்களை பொறுப்பெடுப்பது சிரமமான காரியமாக இருக்காது என்பதே  எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.

இந்த அனைத்து விடயங்களையும் புரிந்து செயற்படுவது அவசியம். எவரொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அதன் உண்மைத்தன்மையப் புரிந்து கொள்வது மக்கள் அபிப்பிரராயத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு அறிவுபூர்வமான வழிமுறையாக அமையும். அதனால் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை இந்நாட்டின் பொருளதாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் மேம்படுத்துவதோடு நாட்டின் காகிதாதி உற்பத்தியின் கேந்திர நிலையமாகவும் உருவாக்க வேண்டும். இதற்கு கடதாசி தொழிற்சாலை மாத்திரமல்லாமல் இந்த அபிவிருத்தி கருத்திட்டத்தையும் இங்கு முன்னெடுப்பது அவசியம். அதற்காக தொடராக ஒத்துழைப்பது எமது பொறுப்பாகும்.

தேசமான்ய மங்கள சீ செனரத்,
முன்னாள் தகுதிகாண் அதிகாரி,
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை

https://www.virakesari.lk/article/177407

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.