Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இலையுதிர் காலம் எங்கும் உள்ளது தான். நாட்டுக்கு நாடு இது எந்த மாதங்கள் என்பதில் தான் ஒரு மாறுதல் இருக்கும். கொட்டோ கொட்டென்று கொட்டும், அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
 
கொட்டுவதும், பின்னர் துளிர்ப்பதுமாக மரங்கள் இருக்கும். உயிர்களும் போவதும், பின்னர் புதியன வருவதுமாக தெருக்களும் இருக்கின்றன. 
 
**
 
இலை என்றால் உதிரும்
--------------------------------------
என்ன அழகு என்று
 
தினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க
 
இலைகள் கொட்ட ஆரம்பித்தன
 
வாசல்களும் தெருக்களும் 
விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன
 
என்றாலும் 
என் வீட்டில் அதிகம் என்றே தோன்றியது
 
அயல் வீட்டு சருகுகளும் 
என் வாசலிலேயே ஒதுங்குவது போன்றும் இருந்தது
 
 
நின்று கூட்டியால் 
 
நின்று நின்று கூட்டி 
 
அள்ளி அள்ளி குவிக்க 
 
அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது
 
 
அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக
 
தெருவெல்லாம் சருகாக கிடக்க
 
என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது
 
 
'அப்பாடா, முடிந்தது' என்று
 
அண்ணாந்து வானம் பார்த்து நிற்க
 
மெல்லிய காற்று ஒன்று 
 
முகம் வருடிச் சென்றது
 
 
காற்று வந்து கொண்டேயிருந்தது
 
இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன
 
 
பொழுது சாய
 
மனமும் சாய 
 
இனி
இன்னொரு நாள் 
கூட்டி அள்ளுவோம் என்று 
 
சலிப்புடன் அன்று முடிந்தது
 
 
கனவில் ஒருவர் வந்தார் 
 
 
அரைக்கண் மூடி 
நீண்ட காது தொங்க இருந்தார் 
 
இதுவரை இலையே விழாத 
 
பெருமரம் ஒன்றிலிருந்து 
 
ஒரு இலை எடுத்து வா என்றார் 
 
 
எடுத்து வந்தால் 
 
என் மரத்திலிருந்து இலை விழாமல் 
 
இனிமேல் பார்க்கின்றேன் என்றார் 
 
 
நீங்கள் ஓடித் தப்பி விட்டு
அதைக் கொண்டு வா
இதைக் கொண்டு வா
என்கின்றீர்கள், பெருமானே.
  • Like 6
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்றாட நிகழ்வை , கால மாற்றத்தை  கவி வரியாக சொல்ல முயன்று இருக்கிறீர்கள் .இடை வெளியை சற்று கவனியுங்கள். முயற்சிக்கு பாராட்டு .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இலை என்றால் உதிரும்
--------------------------------------
என்ன அழகு என்றுதினம் 
மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க 
இலைகள் கொட்ட ஆரம்பித்தன 
வாசல்களும் தெருக்களும்விழுந்த 
இலைகளால் நிரம்பி வழிந்தன
 
என்றாலும் என் வீட்டில் அதிகம் 
என்றே தோன்றியது 
அயல் வீட்டு சருகுகளும்என் வாசலிலேயே
 ஒதுங்குவது போன்றும் இருந்தது 
 
நின்று கூட்டியால் நின்று நின்று கூட்டி  
அள்ளி அள்ளி குவிக்க அன்றைய பொழுது
 முடிந்து கொண்டிருந்தது 
அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக 
தெருவெல்லாம் சருகாக கிடக்க 
என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது
 
 
'அப்பாடா, முடிந்தது' என்று 
அண்ணாந்து வானம் பார்த்து நிற்க 
மெல்லிய காற்று ஒன்று முகம் வருடிச் சென்றது 
காற்று வந்து கொண்டேயிருந்தது 
இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன
 
 
பொழுது சாயமனமும் சாய  
இனிஇன்னொரு நாள் 
கூட்டி அள்ளுவோம் என்று 
சலிப்புடன் அன்று முடிந்தது
 
 
கனவில் ஒருவர் வந்தார் அரைக்கண் மூடி

நீண்ட காது தொங்க இருந்தார்  
இதுவரை இலையே விழாத பெருமரம் ஒன்றிலிருந்து 
ஒரு இலை எடுத்து வா என்றார்  
எடுத்து வந்தால் என் மரத்திலிருந்து இலை விழாமல்  
இனிமேல் பார்க்கின்றேன் என்றார்  

நீங்கள் ஓடித் தப்பி விட்டு
அதைக் கொண்டு வா
இதைக் கொண்டு வா
என்கின்றீர்கள், பெருமானே.
 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:
நின்று கூட்டியால் 
 
நின்று நின்று கூட்டி 
 
அள்ளி அள்ளி குவிக்க 
 
அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது

 Home Depot வுக்கு போய் ஒரு புளோவர் (Blower)வாங்குங்க.

உங்க குறையை அவர் தீர்ப்பார்.

எமது வீட்டிலும் இதே பிரச்சனை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:
இதைக் கொண்டு வா
என்கின்றீர்கள், பெருமானே.

புத்தரும், யேசுவும் சொன்னார்கள் சரி. பெருமானும்  இப்பொழுது சொல்ல ஆரம்பித்துவிட்டாரா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, நிலாமதி said:

இலை என்றால் உதிரும்

ரீச்சரம்மா வீட்டிலே பேரப்பிள்ளைகள் விளையாடிய பின்பு கூட்டிஅள்ளி வைத்து பழகிவிட்டீர்கள் போல இருக்கிறது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை ஏன் பிரச்சினையாக நினைக்கிறீர்கள்......பனியைத் தள்ளுவதிலும் பார்க்க இலைகளை அள்ளுவது சுலபம் அல்லவா .....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, suvy said:

பனியைத் தள்ளுவதிலும் பார்க்க இலைகளை அள்ளுவது சுலபம் அல்லவா .....!  😂

IMG-5999.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, Kavi arunasalam said:

புத்தரும், யேசுவும் சொன்னார்கள் சரி. பெருமானும்  இப்பொழுது சொல்ல ஆரம்பித்துவிட்டாரா?

பெருமான் என்று புத்த பெருமானையே சொல்லியிருந்தேன்..........

52 minutes ago, suvy said:

இதை ஏன் பிரச்சினையாக நினைக்கிறீர்கள்......பனியைத் தள்ளுவதிலும் பார்க்க இலைகளை அள்ளுவது சுலபம் அல்லவா .....!  😂

இலைகளை அள்ளுவது மிகவும் சுலபம். அதுவும் அந்த இழுத்து அள்ளும் இயந்திரம் இருந்தால் இது ஒரு வேலையே இல்லை.
 
இதுவே உடலுக்கும் ஒரு பயிற்சி ஆகட்டும் என்று குப்பை வாரி போல ஒன்றை தூக்கினால், அப்படியே சில நேரங்களில் அதிக வேலையாகி விடும்.....😀
 
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் எவர் வெளியே வருவார்கள், இரண்டு கதை கதைப்போம் என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். அப்படியே நேரம் ஓடிவிடும். 
  • Haha 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.