Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழையும் இறைவனும் (நாட்டிய நாடகம்) - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏழையும் இறைவனும்

வ.ஐ.ச.ஜெயபாலன்

1

தந்தன தான தனாதன தந்தன //

தந்தன னானானா .........//

தந்தன தான தனாதன தந்தன //

தந்தன தானானா - தன //

தந்தன தானா....னா //

அகதிகளாகி உலக உருண்டையில் //

அலைகிற செந்தமிழா //

கபோதிகளாக இருளின் புதல்வராய்

காணாமல் போவோமோ - நாம்

காணாமல் போவோமோ. //

( தந்தன...... )

அகிலத்தில் எங்கள் இளைய தலைமுறை //

அடியற்றுப் போகாமல் //

புகழ்மிகும் எங்கள் கலைகளில் வேரோடி //

பூத்திட வேண்டாமோ - நாம் //

பூத்திட வேண்டாமோ //

( தந்தன .... )

பாட்டியின் பாட்டி பாட்டனின் பாட்டன்

சொல்லிய கதை ஒன்றை

நாட்டியம் ஆடி * சபையினில் சொல்ல

நாமிங்கு வந்தோமே - இன்று

நாமிங்கு வந்தோமே

( தந்தன ..... )

ஏழையின் நிலமை உணரா அரசன்

பிரம்படி படுவானாம்

தோழமையோடு பிட்டுக்கு இறைவன்

மண்ணும் சுமப்பானாம்

( தந்தன...... )

2.

( புயல் மழையும் வைகை ஆறு பெருகுவதும்

மக்கள் அல்லோல கல்லோலமும் )

வைகை பெருகிறதே

பொங்கும் கடலெனவே

என் செய்வோம் இனி எது செய்வோம்

ஏனிந்த சோதனையோ.. ?

( வசனம் )

இத்தால் சகலரும் அறியத் தருவது

எங்கள் அரசனின் செய்தி இது

எத்தாலும் தட்டாமல் வைகைக்கு அணைகட்ட

எல்லோரும் சென்றிட வேண்டுவது

செத்தாலும் விடுப்பில்லை வைகை உடைத்திடில்

செகமே அழிந்திடும் - இயலாதவர்

சித்தாளை கொண்டேனும் தங்களின் பங்கை

செய்திட அரசனின் கட்டளையாம்

3.

( இராகம் : சுபபந்துவராளி )

துணையில்லா ஏழைகளின்

துன்பத்தை மன்னவன்

உணரவில்லை ஐஐயோ..

அணை கட்ட யாருமில்லை

ஆண்டவனே எனது துணை நீதான்

ஐயோ .. சிவாய நம ... ஓம் நமச்

சிவாய .. சிவாய நம ... ஓம் நமச்

சிவாய .. ஓம் நமச் சிவாய

4

சிவதாண்டவம்

பூமியில் நின்று துயரத்தில் வாடி

மானிடம் அழைக்குதையா - எம்மை

மானிடம் அழைக்குதையா

கோம குண்டத்தில் எழுகின்ற நெருப்பாய்

இதயத்தை எரிக்குதையா - எந்தன்

இதயத்தை எரிக்குதையா

சிவாய நம ஓம் நமச் சிவாய

சிவாய நம ஓம் நமச் சிவாய

5.

விருத்தம்

(இராகம் : நாட்டை)

தன்னுள் ளம் நொந்து சிவ சிவ என்று

தன்னுள்ளம் நொந்து சிவாய நம என்று

செம்மனச் செல்வி தவிக்கின்றாள்

பெண்ணவள் ஏழை துணையில்லா கிழவி

பிட்டினை சுமந்தே பிழைக்கின்றவள்

(இராகம் : அடானா )

கண்ணிலா மன்னன் செம்மனச் செல்வியை

கட்டுக அணையென பணித்தததனால்

( இராகம் : நாட்டை )

என்துதி பாடினாள் என்னையே தேடினாள்

இக்கணமே நான் புவி செல்வேன்

6.

( உரை நடை )

கூலியோ கூலி

கூலியோ கூலி

( இராகம் : நாட்டை )

ஆள் வேணுமோ கூலிக்கு ஆள் வேணுமோ

அய்யாமாரே அம்மாமாரே ஆய்ச்சிமாரே அப்புமாரே

ஆள் வேணுமோ கூலிக்கு ஆள் வேணுமோ

பெருகிற வைகைக் கரைகளை மலைபோல்

உயர்த்திட வேணுங்களா

தருகிற கூலிக்கு மாடாய் உழைத்து

தருக்கிட வேணுங்களா

( இராகம் : காம்போதி )

கடவுளே கடவுளே கண் திறந்தாயோ

கதியிலா ஏழை எனக்கு கருணை செய்தாயோ

வாடா

வாறேன் பாட்டி வந்திட்டேன் பாட்டி //

வந்தேனே// வந்தேனே// வந்தேனே// பாட்டி//

என்னகூலி// தருவாய் பாட்டி //

ஏழையை ஏமாற்ற// மாட்டாயா பாட்டி//

( வாறேன் பாட்டி.... )

மதுரை எனக்கு பெண்டாட்டி ஊரு//

வைகை என்// மீனாட்சி// குளிக்கின்ற// ஆறு//

இந்தக் கதைகள்// தெரியுமா பாட்டி//

எந்தக் கரையை நான்// கட்டணும் பாட்டி//

( வாறேன் பாட்டி... )

7.

யார் முகத்தில் விழித்தேனோ பராசக்தி - காலை //

யார் முகத்தில் விழித்தேனோ பராசக்தி//

போதும் பாட்டி போதும் பாட்டி கண்கலங்காதே //

போதும் பாட்டி போதும் பாட்டி கண்கலங்காதே //

பிட்டெனக்கு தந்தால் போதும் மண்சுமக்கின்றேன்//

உதிர்ந்த பிட்டு மட்டும் தந்தால் போதும் மண்சுமக் //

கின்றேன்.. மண்சுமக்கின்றேன்... //

8.

தக்கிட கிடதோம் ததகிட கிடதோம்

தக்கிட கிடதோம் ததகிட கிடதோம்

தா....... தீ........... தொம்... நம்...

பாண்டிய மன்னன் படையணி சூழ

கட்டிடும் அணையை கண்டிட வாறார்

பராக்... பராக்... பராக்....

இந்தப் பங்கு யாரது

ஓட்டைப் பல்லைப் போலவே

சிதைந்த அணையை பாரடா

சீற்றம் கொண்டேன் நானடா

கட்டி இழுத்து வாடா - கயவனை

கட்டி இழுத்து வாடா

9.

பரமனின் முதுகின் மீது!

பாண்டியன் பிரம்பை ஓங்க!

ஆதவன் கீழே வாழும்!

அனைத்துமே அடியை வாங்க!

அரசனும் ஐயோ என்றான்!

அமைச்சனும் ஐயோ என்றான்!

மக்களும் ஐயோ என்றான்!

மக்களும் ஐயோ என்றார்!

10.

தந்தன தான தனாதன தந்தன //

தந்தன னானானா .........//

தந்தன தான தனாதன தந்தன //

தந்தன தானானா - தன //

தந்தன தானா....னா //

அகதிகளாகி உலக உருண்டையில் //

அலைகிற செந்தமிழா //

கபோதிகளாக இருளின் புதல்வராய்

காணாமல் போவோமோ - நாம்

காணாமல் போவோமோ. //

( தந்தன...... )

அகிலத்தில் எங்கள் இளைய தலைமுறை //

அடியற்றுப் போகாமல் //

புகழ்மிகும் எங்கள் கலைகளில் வேரோடி //

பூத்திட வேண்டாமோ - நாம் //

பூத்திட வேண்டாமோ //

( தந்தன .... )

பாட்டியின் பாட்டி பாட்டனின் பாட்டன்

சொல்லிய கதை ஒன்றை

நாட்டியம் ஆடி * சபையினில் சொல்ல

நாமிங்கு வந்தோமே - இன்று

நாமிங்கு வந்தோமே

( தந்தன ..... )

ஏழையின் நிலமை உணரா அரசன்

பிரம்படி படுவானாம்

தோழமையோடு பிட்டுக்கு இறைவன்

மண்ணும் சுமப்பானாம்

11.

மானிடம் வென்றதென்று மங்களம் சொன்னோம்

வந்திருக்கும் யாவருக்கும் மங்களம் சொன்னோம்

எம் இனத்தின் விடுதலைக்காய் மங்களம் சொன்னோம்

உலக மக்கள் ஒற்றுமைக்கு மங்களம் சொன்னோம்

சின்ன வயதில் பிட்டுக்கு மண்சுமந்த கதை பாடசாலையில் படித்த ஞாபகம் நாட்டிய நாடகமாக படிக்கும்போது நன்றாக இருக்கின்றது மேடையில் அரங்கேற்றினால் இன்னும் அழகாகும்... நன்றி

ஏழையும்,இறைவனும் என்ற நாட்டிய நாடகம் மிகவும் நன்றாக இருந்தது வித்தியாசமான சிந்தனை மிகவும் ரசித்தேன்... :( .!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பாலா, நன்றி ஜமுனா. ஜமுனா உங்கள் கவிதை எடுத்து வைத்திருக்கிறேன் நீங்கள் அனுமதித்தால் உங்கள் சில கவிதைகளை எடுத்து அவற்றை நான் எழுதினால் அல்லது எடிற்பண்ணினால் என்ன உத்திகளை பயன் படுதியிருப்பேன் என்பதை செயல்விளக்கமாக எழுதலாம். நேரம் வாக்கிறபோதுதான்

தாரளமாக செய்யுங்கோ அண்ணா அதனால் நான் பல விசயங்களை அறிந்து கொள்ள முடியும். :wub: .!!அடுத்த கவிதைகளிள் தற்போது விட்ட பிழைகளை நிவர்த்தி செய்யமுடியும்!!என் கவிதையை உங்கள் கவிபாணியில் எழுதினா எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக இருகிறேன்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நேரமுள்ளபோது எழுதுகிறேன். உங்கள் கவிதைகளின் இணைப்பு தாருங்கள். நெடுநாட்களாக யாழ் மோகனனின் ஆர்வத்தால் இடையிடையே யாழில் எனது கவிதைகள் பிரசுரமானது. பின்னர் மோகன் இணையவன் போன்றோர்கள் நேரடியாக இணைக்குமாறு உற்சாகப் படுத்தினர். இன்று என்னுடைய் கவிதை வட்டதில் பல ஆர்வலர்கள் பங்குபெறுவது மேலும் பங்குகொள்ளும் ஈடுபாட்டைத் தருகிறது. சமரசங்கள் இல்லாமல் எழுதுகிற என்போன்றவர்களுக்கு யாழ் களம் புதிதாக புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. நன்றி யாழ் இணையம்

நீங்கள் நேரடியா இணைந்து கவிதையை தரும் போது பலவற்றை உங்கள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது ஆகவே தொடர்ந்து பல கவிதைகளையும் தங்கள் அநுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!! :rolleyes:

நன்றி!!

கவிதையின் இணைப்பு!!

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=348246

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நேரடியா இணைந்து கவிதையை தரும் போது பலவற்றை உங்கள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது ஆகவே தொடர்ந்து பல கவிதைகளையும் தங்கள் அநுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!! :mellow:

பின்னோக்கிச் சென்றபோது உங்கள் கருத்தைப் பார்த்தேன். தொடர்கிற உங்கள் அக்கறையான ஆதரவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஏழையும் இறைவனுமாய் ஆன நாட்டிய நாடகம் அழகு.

பாடலாய் பாடி இருந்திருந்தால் இன்னும் மனதினில் நன்றாய் பதிந்திருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்னோக்கிச் சென்றபோது உங்கள் கருத்தைப் பார்த்தேன். தொடர்கிற உங்கள் அக்கறையான ஆதரவுக்கு நன்றி.

செய்தியில் ஒரு கரம் கவிதைப் பூங்காட்டில் இன்னொரு கரமுமாய் ஒரு தேவதைபோல ஆறு கரங்களுடன் இயங்கும் கறுப்பிக்கு நன்றி. என் கவிதைக்கு நயம் எழுதவும் ஒரு கரம் இருப்பது மகிழ்ச்சி. பாடப் பட்ட நாட்டிய நாடகம்தான். ஒலிப்பதிவுகளை திண்ணையில் எப்படி இடுவது என்பது என் மர மண்டைக்குத் தெரியவில்லை.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜெயபாலன்

உங்கள் ஆழுமையான எண்ணோட்டமும் எழுத்தோட்டமும் அருமை பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரே,

உங்களது இந்த ஆக்கத்தில் (அதன் பெயர் என்னவாக இருந்தாலும்) நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் ? நவீன சிந்தனை உலகம் பிரச்சாரத்தையும், புழுகல்களையும் புறமொதுக்குகிறது என்பதை அறிந்த நீங்கள் உங்கள் தரத்திலிருந்து கீழிறங்குவதைக் காணச் சற்று வேதனையாக இருக்கிறது.

நாளைய உலகத்திற்காக எழுதுங்கள். நேற்றை விடயங்களைக் கூறுவதாயினும் நாளைய மனிதர்களையும் மறந்து விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

' ஏழையும் இறைவனும் " சிறுசிறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்தக்கூடியவளவு கச்சிதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!! :lol::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

' ஏழையும் இறைவனும் " சிறுசிறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்தக்கூடியவளவு கச்சிதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!! :lol::wub:

கவிதாயினி காவலூர்க் கண்மணிக்கும், பரதேசிக்கும் சுவிக்கும் நன்றிகள். சுவே "சிறுசிறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்தக்கூடியவளவு கச்சிதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!! " என்று குறிப்பிட்டிருந்தீர்கள். யருக்காவது ஆர்வம் இருந்தால் என்னுடைய படைப்புளை மறுபிரசுரம் செய்யவோ மேடை நிகழ்ச்சிகளாக நிகழ்த்தவோ அனுமதி பெறத் தேவையில்லை என்பதைச் சொல்லுங்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி போயற். நான் இதைத் தனிமடலில் விசாரிக்க நினைத்திருந்தேன். என்ன ஆச்சரியம்! நீங்களே சொல்லிவிட்டீர்கள்.மீன்டும் நன்றி. :):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.