Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

                                    ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

                                                                                 -       சுப. சோமசுந்தரம்

அவ்வப்போது ஈடுபடும் இலக்கிய வாசிப்பில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தற்செயல் நிகழ்வாக இரு வேறு இலக்கியக் கூறுகள் கண்ணில் பட்டுத் தெறித்தன. ஒன்று, ஒரே பார்வையில் இரு பொருள் கொண்ட காதலவர் நோக்கு. இன்னொன்று, ஒரே பாடலில் ஈரணிகள் அமைந்து தரும் இன்பம். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாய்த் தெரிந்தன. ஒவ்வொன்றையும் தனித்தனியே எழுதலாமே என்ற நியாயமான எண்ணம் தோன்றியது உண்மை. ஒரே கட்டுரையில் இரு கூறுகளை வைப்பதும் தலைப்புக்குப் பொருந்தி வருமே என்று உடனே அநியாயமான எண்ணம் தலை தூக்கியதால், அநியாயத்துக்கு எழுதிய கட்டுரை இது எனக் கொள்ளலாம்.

                         பார்வை ஒன்று பொருள் இரண்டு

         எந்த ஒரு பொருளையும் இயன்றவரை வள்ளுவப் பெருந்தகையிடம் தொடங்குவது மங்களகரமாய் அமையும் என்ற நல்ல நம்பிக்கையோ அல்லது மூடநம்பிக்கையோ மனதில் படிந்து விட்டது போலும். வள்ளுவன் காட்டும் தலைவன் தன் தலைவியின் உளக்குறிப்பை அவள் பார்வையில் அறிகிறான்.

"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து"

       (குறள் 1091; அதிகாரம் : குறிப்பறிதல்; காமத்துப்பால்)

பொருள் : இவளது மையுண்ட கண்ணில் (உண் கண்) -  பார்வையில் - இரு பொருள்கள் (இருநோக்கு) உள்ளன. ஒன்று - என் உள்ளத்தில் காதல் - நோய் தருவது; மற்றொன்று, அந்நோய்க்கு மருந்தாவது.

             காதல் கொண்டோர் தமக்குள் காதல் பார்வையை பரிமாறிக் கொண்டாலும், ஏனையோர்க்கு அக்காதலை மறைத்த பொதுப்பார்வை காதலர்க்கே உரித்தானது.

"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள"

            (குறள் 1099; அதிகாரம்: குறிப்பறிதல்; காமத்துப்பால்)

(ஏது - குற்றம்; ஏதிலார் போல - குற்றமற்றவர் போல - இங்கு ஏதும் அறியாதார் போல எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்)

            சீவக சிந்தாமணியின் நாயகன் சீவகன் பல்லவ நாட்டிலிருந்து ஏகி தக்க நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை அடைகிறான். அங்கு சுபத்திரன் என்னும் வணிகன் தன் மகள் கேமசரிக்குச் சீவகன் உற்ற தலைவனாகலாம் என்ற எண்ணத்தில் சீவகனைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைக்கிறான். சீவகன் அவ்வில்லத்தின் வாயிலை அடைந்த மாலைப்பொழுதில் மனையின் முற்றத்தில் பெற்றோர், உற்றார் சூழ கேமசரி யாழோடு வீற்றிருக்கிறாள். சீவகனைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். தனக்கு மட்டும் காதற் பொருளை உணர்த்தி ஏனையோர்க்குக் கள்ளமில்லாத பொதுப்பொருள் உணர்த்திய அவளது பார்வைக்கு இவ்வுலகையே விலையாய்த் தரலாம் என்று பாவையவளின் பார்வை நலம் பாராட்டுகிறான் சீவகன் :

"காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் 

தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு

ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு

ஓத நீரமுதும் உலகும் விற்குமே"

         (சீவக சிந்தாமணி பாடல் 1485; கேமசரியார் இலம்பகம்)

(பொருள் கொள்ள வசதியாக சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன).

பொருள் : தான் மனதில் என் மீது கொண்ட - காதலைக் (காதன்மை - காதல் தன்மை) கண்ணில் அடக்கி அந்தக் கண் எனும் தூதினால் தான் எண்ணிய - காதல் - பொருளை (துணி பொருள்துணிந்த பொருள்) உணர்த்தி, தான் தன் சுற்றத்தார்க்குக் (தமர்க்கு) கள்ளமில்லாத பார்வை மட்டும் தெரியுமாறு (ஏதின்மை பட) - அக்காதற் பொருளை - மறைத்திட்ட (கரந்திட்ட) வாள் போன்ற அவளது கூரிய பார்வைக்கு (வாட்கண் நோக்கு), பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதையும் (ஓத நீர் அமுதும்) இந்த உலகத்தையும் விலையாய்த் தருதல் தகும் (உலகும் விற்குமே).

                        பாடல் ஒன்று அணி இரண்டு

        இங்கும் தொடங்கி வைக்க வள்ளுவனைத்தானே அழைக்க வேண்டும் !

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து"

           (குறள் 90; அதிகாரம் : விருந்தோம்பல்)

பொருள் : அனிச்ச மலரானது நாம் முகர்ந்து பார்த்த (நோக்க) அளவில் - நம் மூச்சுக்காற்றின் வெம்மையால் - வாடிவிடும் (குழையும்). அதுபோல - அவர்கள் வரவினால் - மகிழ்ச்சியைக் காட்டாத நம் பார்வையைக் (முகம் திரிந்து நோக்க) கண்டு விருந்தினர் மனம் வாடிப் போகும் (குழையும் விருந்து).

            மேற்கொண்ட பொருள் கோளினால் குறள் எடுத்துக்காட்டுவமை அணியின்பாற் பட்டது ('அதுபோல' என்று உவம உருபை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளதால்). 

         இக்குறளைச் சிறியதொரு விலகலுடன் பொருள் கொள்வாரும் உண்டு. அஃதாவது, "அருகில் எடுத்து முகர்ந்து பார்த்த அளவில் அனிச்சம்பூ வாடிப் போகும். ஆனால் விருந்தினரோ, சற்றுப் பழகிய பின் என்றில்லாமல், முகம் மாறி நோக்குவதாலேயே வாடிப்போவர்" என்பதாம். இப்பொருள் கோளின்படி குறள் வேற்றுமை அணியின்பாற் பட்டது. வாடிப்போதலில் ஒற்றுமையைக் கூறி, முகர்தலும் நோக்குதலும் என்ற அளவீட்டின் படி வேற்றுமைப் படுத்துவதால் வேற்றுமை அணியானது. இரு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையைக் கூறிப் பின் வேற்றுமைப்படுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாம். மேற்கண்ட குறளில் வெவ்வேறு வகையில் பொருள் கொண்டமையால் இரு வேறு அணிகள் அமைந்து நின்றன. மாறாக, ஒரு பொருளுக்கே இரு வேறு அணிகள் அமையவும் காணலாம்.

              சீவக சிந்தாமணியில் முற்சொன்னவாறு பல்லவ நாட்டிலிருந்து தக்க நாடு செல்லும் சீவகன் மலை சூழ்ந்த கானகத்தின் வழியே செல்கிறான். சுனைகளாகிய கண்களையும் சுனைகளைச் சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளையும் கொண்ட மலையாகிய மங்கை கானகத்தின் வழியே வரும் சீவகனின் துன்பம் கண்டு இரங்கி அழுவது போல மலையருவி வீழ்வதாய்த் திருத்தக்க தேவர் (சீவக சிந்தாமணி ஆக்கியோர்) பாடுகிறார். சுனைகளாகிய கண்கள், குவளையாகிய விழிகள் என்றெல்லாம் உருவகித்ததால் அங்கு உருவகவணி ஆளுமை கொண்டது. அம்மலைசூழ் கானகத்தில் இயற்கையான நிகழ்வில் புலவர் தம் (கதைக்கான) குறிப்பை ஏற்றியதால் தற்குறிப்பேற்ற அணியானது.

"சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியாவனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கிஇனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடிநனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்"

          (சீவக சிந்தாமணி பாடல் 1417; கேமசரியார் இலம்பகம்)

பொருள்

சுனைகள் கண்களாகசுனைகளாகிய கண்களைக் கொண்டு

சூழ்ந்த குவளை விழியா -  (சுனைகளைச்) சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளைக் கொண்டு;

வனையலாகா உருவ நோக்கி -  (சிற்பியால்) வடிக்க இயலாத (சீவகனின் பொலிவான) உருவம் நோக்கி

மைந்தர்க்கு - வீரனாகிய சீவகனுக்கு

இரங்கி - இரக்கமுற்று;

இனைவ போலும் - அழுவது போன்ற

வரையின் அருவி - மலையின் அருவியில்;

இனிது ஆடி - இனிமையாய் நீராடி

நனைகொள் போது - தேனில் நனைந்த மலர்களை;

வேய்ந்து - தூவி

நாதற் பாடுகின்றான்அருகனாகிய நாதனைப் போற்றிப் பாடுகின்றான்.

        வஞ்சப்புகழ்ச்சி அணியை நம்மில்  பெரும்பாலானோர் அறிவோம். அறியாதவர்களும் அதனை அன்றாட வாழ்க்கையில் அனாயசமாகப் பயன்படுத்துவர். அவ்வணியில் இரண்டு வகை உண்டு - புகழ்வது போல் இகழ்தல், இகழ்வது போல் புகழ்தல் என்பன. ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு பாடல்களில் எடுத்தாளப்படுவதுண்டு. இரண்டும் ஒரே பாடலில் அமைந்து இன்பம் பயப்பது அருகி வருவது. அவ்வாறான புறநானூற்றுப் பாடலொன்றில் புலவரான கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (!), பாடல் பெறும் சோழன் கடுமான் கிள்ளியை இகழ்வது போல் புகழவும், அவர்தம் பகைவரைப் புகழ்வது போல் இகழவும் காணலாம்.

"நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்

படை விலக்கி எதிர் நிற்றலின்,

வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு,

கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!

அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின்,

ஊறுஅறியா மெய் யாக்கை யொடு,

கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!

அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்;

ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்

கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!

நின்னை வியக்குமிவ் வுலகம்; ·து

என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே"

         (புறநானூறு பாடல் 167)

பொருள் : போர்க்களத்தைக் கண்டவிடத்து (அமர்காணின்) நீயே நேரில் களம் புகுந்து (நீயே அமர் கடந்து), பகைவர்தம் படை விலக்கி அவர் எதிர் நிற்கிறாய்; ஆதலின் வாளினால் வாய்த்த (வாஅள் வாய்த்த) ஆழமான வடுக்களால் ஆன (வடு ஆழ்) மேனியுடன் (யாக்கையோடு) - புகழினால்கேட்பதற்கு இனிமையானவனாய்த் திகழ்கிறாய் (கேள்விக்கு இனியை); பார்ப்பதற்கு - வடுக்கள் பட்டதால்இனியனாய் இல்லை (கட்கு - கண்ணுக்கு - இன்னாயே). அவரே - அப்பகைவரேஉன்னைக் கண்டதும் புறமுதுகிடுவதால் (நிற்காணின்  புறங்கொடுத்தலின்), குறையற்ற (ஊறு அறியா) தத்தம் மேனிப் பொலிவுடன் (மெய்யாக்கையொடு) கண்ணுக்கு இனிமையானவர்; புகழற்றுகேட்பதற்கு இனிமையற்றோர் (செவிக்கு இன்னாரே). அதனால் நீயும் ஒரு வகையில் இனிமையானவன்; அவரும் ஒருவகையில் இனிமையானோர். இருவருக்கும் பொருந்தாத தன்மை எவை உண்டு ? (ஒவ்வா யாவுள மற்றே ?) வெல்லும் போர் புரியும் வீரக்கழல் புனைந்த (வெல்போர்க் கழல் புனை) சீரிய திருவடிகளையும் (திருந்தடி), விரைந்து செல்லும் குதிரையையும் உடைய (கடுமான்) கிள்ளியே ! உன்னையே புகழும் (வியக்கும்) இவ்வுலகம். அதன் காரணம் என்ன, பெருமைக்குரியவனே (என்னோ பெரும) ! எனக்குச் சொல்வாயாக (உரைத்திசின் எமக்கே) !

              சான்றோர் கேண்மையால் வாசிப்பில் இன்பம் கொண்டு எதையெதையோ வாசிக்க, எதையெதையோ பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறதே ! தோன்றியதோடு நில்லாமல், சிறியளவு ஆட்டமாயிருப்பினும் ஆடியகால் நில்லாது என்பதற்கு இயைய, எழுதுகோலைக் கை தேடுகிறதே ! சரி விடுங்கள், அமர்காணின் தினவெடுக்கும் தோள்கள் இல்லாவிடினும் எழுத அரிப்பெடுக்கும் கையாவது வாய்க்கப் பெற்றதே!

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பான ஒப்புநோக்குதல் ........!  👍

இணைப்புக்கு நன்றி சுப.சோமசுந்தரம்........!   

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மிகவும் சிறப்பு......👏

பல தடவைகள் வாசித்தேன், இவை என் ஞாபகத்தில் தங்க வேண்டும் என்பதற்காக....🙏

Edited by ரசோதரன்
  • Thanks 1
Posted

தமிழ் இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கோர்த்த கருத்துகள். கட்டுரையின் தலைப்பு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஆனால் (ஒரு) கூடை நிறைய மாங்கனிகளைக் கோடையில் பெற்ற நிறைவு.

  • Thanks 1
Posted

சோமசுந்தரனார் அவர்கள் இன்பத்துப்பாலின் சிறந்த கவிநயங்களை கூர்நோக்கால் சிறப்புறக் காட்டி, நம்மையெல்லாம் மகிழ்விக்கும்போது, பேரின்பத்துப்பாலில் அதற்கிணையான கவித்துவப் படைப்பு ஒன்று அரைகுறையாக நினைவில் விக்க, அது எதுவென நினைவுகூர, ஓரிரு நாட்கள் ஆயின.  

சோமசுந்தரனார் போன்ற இலக்கியச் சுவைஞரின் கட்டுரைக்கு, பொருத்தமான  பின்னூட்டம் எழுத, மீளவாசிப்பும், மறுவாசிப்பும் தேவைப்படுகிறது. அன்னார் சிறப்புறக் காட்டிய 
"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" - குறள் 1091
"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள" - குறள் 1099
ஆகிய இரு குறள்களிலிருந்து பிறந்த கவிதையே 
"காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் 
தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு
ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு
ஓத நீரமுதும் உலகும் விற்குமே" 
என்னும் சீவக சிந்தாமணி பாடல்.  

(இச் சுவைக்கு இணையான கவித்துவம் கொண்டதோர் படைப்பு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - "உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் விழைதருவேனை விடுதிகண்டாய்" என்று தொடங்கும்  46வது பாடல். இப்பாடலின் பேரின்பத்துக் கவித்துவத்தை  விளக்கப் புகுந்தேன். அதுவே ஒரு பெரிய கட்டுரையாக விரிந்ததால், ஒருவார காலத்துக்குள் செப்பனிட்டு, தனியாகப் பதிவிடுகின்றேன். அக்கட்டுரை, சோமசுந்தரனாருக்கு சமர்ப்பணம். நிற்க. )

சோம சுந்தரனாரின் இலக்கியக் கட்டுரை, எனது கட்டுரைக்கு ஊக்கியாக அமைந்ததுபோல், திருத்தக்கத்தேவரின் சீவகசிந்தாமணி காப்பியம், சேக்கிழாரின் பெரியபுராணம் காப்பியத்துக்கு ஊக்கியாக அமைந்த வரலாறை இங்கு பதிவு செய்து, எனது பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன். 

சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத்தேவரின் கவியின்பத்தில் மயங்கி, எந்நேரமும், சீவசிந்தாமணி இலக்கியச்சுவையின்பத்தில் மூழ்கிக் கிடந்தான் குலோத்துங்கச் சோழன் மாமன்னன் அநபாயன். எங்கே சோழநாட்டை  மீண்டும் சமணம்  ஆட்கொண்டுவிடுமோ என்ற பேரச்சத்தில் மூழ்கியிருந்த சோழநாட்டு முதலமைச்சர் அருண்மொழித்தேவர், அநபாயன் மன்னனுக்கு சைவ அருளாளர்கள் 63 நாயன்மார்கள் குறித்து கவித்துவமாக எடுத்துரைக்க, அவர்கள் வரலாற்றை காவியமாகப் படைக்க முதலமைச்சர் அருண்மொழித்தேவரையே வேண்டினான் சோழ மன்னன். திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் பிறந்த வரலாறு இதுதான். 

சீவகசிந்தாமணிக்கும், கம்பராமாயணத்துக்கும் இணையான கவித்துவம் கொண்ட திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் இயற்றிய அருண்மொழித் தேவருக்கு "சேக்கிழார்" என்ற திருநாமம் சூட்டினான் சோழன். 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

👍....

சேக்கிழார் பற்றிய இந்த விடயத்தை சிறு வயதில் சைவசமய பாடத்தில் படித்தது இப்பொழுது ஞாபகம் வருகின்றது. முற்றாகவே மறந்து இருந்தேன்....🙏

** 'சேக்கிழார் இயற்றிய கம்பராமாயணம்' என்று தேர்தல் மேடைகளில் பேசப்படுவது என்றும் மறக்காது....😀 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.