Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"பலன் தரும் பழக்கங்கள்"
 
"நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்"
"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் "
ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல- "எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு" -நீ அதையே பெருவாய்.
 
"நம் செயல்களுக்கு நாமே காரணம்!"
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார்.
"ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்கிறது யஜுர் வேதம்.
 
"எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்."- திருக்குறள்
[ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.]
 
இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு வைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை. முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது. அது அவரை இந்த பிறப்பிலேயே பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும் என்பதே அவர் கருத்து. அது மட்டும் அல்ல ஔவையார் கருதும் அதுவே.
 
ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்துவதுடன் இப்ப பலன் தரும் இவைகளையும் செயுங்கள்.
 
 
-உனது வாக்கை காப்பாற்று
-எல்லோருக்கும் மதிப்பு கொடு
-நல்ல நண்பனாக இரு
-ஒருவரிடம் இருக்கும் நல்லதை எதிர் பார்
-மன்னிப்பை காட்டு
-அன்பாய் இரு
-நீ தவறு இழைக்கும் போது, மன்னிப்பு கேள்
-அன்பு வேண்டியவர்களுக்கு அன்பு செலுத்து
-பிள்ளைகளின் தேவையை முதல் செய்
-உன்னுடன் ஒருவர் கதைக்கும் போது கவனம் செலுத்து
-உன்னை தினம் காதலி
-உணர்வை காட்டு
-கொடும் சொல் பாவிக்காதே
-உனது அறிவை மற்றவர்களுடன் பகிர்
-உனக்கு தேவையற்றதை தானம் கொடு
-சிரிப்பை கூட்டு முகச்சுளிப்பை குறை
-நல்ல வழ்வை எதிர் பார்
-எப்பவும் நல்லதையே செய்
-உன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்
-உனது பிழைகளில் இருந்து பாடம் படி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, kandiah Thillaivinayagalingam said:
"பலன் தரும் பழக்கங்கள்"
 
"நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்"
"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் "
ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல- "எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு" -நீ அதையே பெருவாய்.
 
"நம் செயல்களுக்கு நாமே காரணம்!"
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார்.
"ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்கிறது யஜுர் வேதம்.

வணக்கம் ஐயா!
நான் அதிக தூரம் போக விரும்பவில்லை. என் இனத்திற்குள்ளேயே நிற்கின்றேன்.
தமிழைனம் யாம் என்ன பாவம் செய்தோம்? யாரை வருத்தி, நாட்டை, ஊரை, வீட்டை, வாழ வைக்கின்றோம்? தன் கையே தனக்கு உதவி என சுய முயற்சியில் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பெயரளவில் தமிழர்கள் சாதுவானவர்கள் என்ற நற்பெயரும் உலகளவில் உண்டு.

இருந்தாலும் ஈழத்தமிழர் அவலங்கள் சொல்லி மாளாது. இந்த அவலங்களுக்கு விதைத்த விதை சரியில்லையா? அல்லது நியூட்டனின் விதி கிட்டும் வரை காத்திருக்க வேண்டுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர் அவலங்கள் என்ற வகையிலே கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்ற அரசியல் நெருக்கடிகளே முக்கிய காரணங்கள் எனலாம். ஈழத்திலிருந்து கடந்த 35 ஆண்டுகளாக தமிழர் வெளியேற்றங்கள், இனக்கலவரங்கள், இராணுவ நெருக்கடிகள், கல்வித்தரப்படுத்தல்கள், போன்றன முக்கிய வரலாற்று அம்சமாக தமிழர் அவலங்களில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. அதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை 

இந்த அவலங்களுக்கு விதைத்த விதை சரியில்லையா? 

கட்டாயம் . பொன்னப்பாலம் ராமநாதன் காலத்தில், பிரித்தானியருக்கு கீழே இருந்த நேரம், முகம்மது அலி ஜின்னா மாதிரி ஒரு நல்ல வாய்ப்பு, தமிழ் தலைவர்கள் அதை உணரவில்லை. அவர்கள் விதைத்த விதை பிற்காலத்தில் சரியில்லாமல் போய்விட்டது. 

ஆமாம் சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றது கணாக்காலமாக பிற்காலத்தில் போய்விட்டது. 

நியூட்டனின் விதி கிட்டும் வரை காத்திருக்க வேண்டுமா?

ஒருமுறை வந்து, 
இருந்ததும் மறைந்து / தொலைந்து விட்டது

இனி வருமா வராதா 
நான் அறியேன் பராபரமே!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@kandiah Thillaivinayagalingam

தங்கள் பதிலுக்கு நன்றி ஐயா  🙏🏼

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, kandiah Thillaivinayagalingam said:

ஒருமுறை வந்து, 
இருந்ததும் மறைந்து / தொலைந்து விட்டது

இனி வருமா வராதா 
நான் அறியேன் பராபரமே!!

இது தான் எல்லோரது கேள்வியும் எதிர்பார்ப்பும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தான் எல்லோரது கேள்வியும் எதிர்பார்ப்பும்.

கேள்வி, எதிர்பார்ப்பை விட இனியொரு சந்தர்ப்பம் வராது என நினைக்கின்றேன். ஏனென்றால் உலக அரசியல் வேறு ஒரு புதிய பரிமாணத்தில் பயணிக்கின்றது. மனித உரிமை அரசியல் இன்றில்லை. இணக்க அரசியலும் இன்றில்லை. மாறாக வியாபர அரசியலும் அதிகார அரசியலுமே கண்முன்னே நிற்கின்றது.

மனிதாபிமானம் உலக அரசியலில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

மனிதாபிமானம் உலக அரசியலில் இல்லை.

உண்மை தான்.

புலிகளை சிறுவர்களை சேர்க்கிறார்கள் என்று அழுத கூட்டம்

பத்தாயிரம் பாலகர்கள் பலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட போது கண்களை மூடிவிட்டனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லா கருத்துக்களுக்கும் நன்றிகள் !!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.