Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேனும் விஷமும்
------------------------------
நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்'  என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள்.
 
நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள், இராணுவம் வரிசையில் நின்றிருந்தார்கள். இராணுவ வரிசைக்கு நடுவில் பயத்தில் உதறி உதறி வீடு போய்ச் சேர்ந்தது அப்படியே நினைவில் இருக்கின்றது. இராணுவத்தின் மீதான பயமும், வெறுப்பும் ஆரம்பித்த இடம் இந்தச் சந்தி.
 
அயலூரில் நடந்த ஒரு உதைபந்தாட்ட போட்டியில் எங்கள் அணியினரை அயல் ஊரவர்கள் அடித்து விட்டார்கள் என்று ஒரு நாள் திடுமென பலர் இந்தச் சந்தியில் கூடினர். நின்றவர்கள்  சில வாகனங்களில் ஏறினர். ஒருவரின் கைக்குள் வெள்ளியாக மினுங்கும் ஒரு பொருள் இருந்தது. போகும் வழியில் யாரோ இவர்களை தடுத்து நிற்பாட்டியிருக்க வேண்டும், அன்று அறிந்தவரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.    
 
அதே இடத்தில் தான் சந்தி வாசிகசாலை, இன்னமும் இருக்கின்றது. ஊர் முழுக்க வாசிகசாலைகள் இருந்தாலும், இந்த வாசிகசாலையில் மட்டுமே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' சஞ்சிகை போட்டார்கள் என்று நினைக்கின்றேன். அந்த வயதுகளில் தெரிந்து வாசிக்கும் அறிவோ அல்லது பக்குவமோ இருக்கவில்லை. எந்தக் கல் என்றாலும் சுற்றி வந்து ஒரு கும்பிடு போடுவது போல, எல்லாம் ஒரே வாசிப்பே. தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா பிரபல சஞ்சிகைகளும் அன்று இந்த வாசிகசாலையில் போடப்பட்டன.
 
ஜீவாவின் அயராத முயற்சியைப் பற்றிப் பின்னர் தெரிய வந்தது. இன்று ஈழ திரை படைப்பாளிகளுக்கும், தமிழ்நாட்டு திரை படைப்பாளிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டியும் இவ்வாறானதே. இதில் போட்டியே இல்லை, போட்டியே போட முடியாது என்பது தான் அன்றைய நிலையும், இன்றைய நிலையும்.
 
பின்னர் ஒரு நாளில் கமலம் கொலை வழக்கில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவருக்கு இந்தச் சந்தியில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கடைசியாக அவருக்கு சிகரெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அருகிலிருந்தவர்கள் சுடவில்லை, சந்தியின் இன்னொரு பக்கத்திலிருந்து வேறொருவர் சுட்டார். நாங்கள் பலர் பார்த்துக் கொண்டு நின்றோம்.
 
அரசாங்கம் ஒரு நவீன சந்தையை இந்தச் சந்தியில் கட்டிக் கொடுத்தது. பின்னர் அந்த அரசாங்கமே ஒரு நாள் புதிய சந்தையின் மீது குண்டும் போட்டது. நவீன சந்தையின் கூரையும், மேல் தளமும் இடிந்து போனது. கீழ் தளத்தில் சில கடைகள் அதன் பின்னரும் இயங்கின. 
 
எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு தனியார் கல்வி நிலையம் நடத்தி வந்தார். அதற்கு புதிய இடம் தயார் செய்வதற்காக சந்தையின் உடைந்த கூரையிலிருந்து நாங்கள் மரங்கள், வளைகளை எடுத்தோம். அதை ஒருவர் நகரசபைக்கு சொல்லிக் கொடுத்தார். நகரசபை விசாரணை, வாருங்கள் என்றது. நகரசபையில் வேலையில் இருந்த இன்னொருவர் எங்களைக் காப்பாற்றி விட்டார். இதுதான் சமூகம் என்றால் நாலு பேர்கள் என்பது.
 
சந்தியின் நடுவே ஒரு பெரிய அரசமரம் நின்றது. ஒரு இயக்கத்தை இன்னொரு இயக்கம் தடை செய்த போது, இங்கே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய தளபதி ஒருவர் அரசமரத்தின் அருகே அவரது வாகனத்தை நிற்பாட்டி, வாகனத்தின் மேல் ஏறி இருந்தார். இரண்டு இயக்கங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த இடம் இந்தச் சந்தி. அது அந்தக் கூட்டத்திலும் தெரிந்தது. கூடியிருந்த கூட்டம் ஏறி இருந்த தளபதியின் கருத்துகளை ஆமோதிக்கவில்லை. கூட்டம் சத்தம் போட்டது, மனைவிமார்களும், சொந்தங்களும் அழுதனர், ஆனாலும் காணாமல் போன அண்ணன்மார்கள் என்றும் திரும்பவில்லை.
 
உயிர்களின் வாழும் விருப்பம் நிகரற்றது. அழிவுகளின் நடுவேயும் எல்லா உயிர்களும் வாழ முயன்று கொண்டேயிருக்கும். பெரும் பூகம்பத்தின் பின்னும் வாழ்க்கைகள் இருக்கும், அதே பாதைகளில் பயணிக்கும். அழகான பெண் பிள்ளைகளின் பின்னால் இந்தச் சந்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், எவை நடந்தாலும், என்ன இழப்புகளின் பின்னரும், அவை முடிய முடிய, போய்க் கொண்டே இருந்தார்கள். சந்தியின் ஒரு ஓரத்தில் நாங்கள் சிலர் ஒட்டுகளில் இருப்போம். 'இப்படியே இருந்து எப்படியடா உருப்படப் போகிறீர்கள்' என்று அக்கறையுள்ள அண்ணன் ஒருவர் ஒரு தடவை கேட்டார்.
 
நல்லூரில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பொழுது, இந்தச் சந்தியிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். தலைவர் கூட ஒரு இரவு வந்து பார்த்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். மற்றைய இரவுகளில் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம்.
 
அநேகமான நண்பர்கள், தெரிந்தவர்கள்  இந்தச் சந்தியிலிருந்து தான் கடைசியாக கொழும்புவிற்கு வாகனத்தில் ஏறினர். போனவர்களில் பலர் ஒரு முறை கூட இந்தச் சந்திக்கு திரும்பி வரவேயில்லை. வர முடியாத சூழலும் கூட. நான் பல வருடங்களின் பின் அந்தச் சந்திக்கு போன பொழுது, அந்த அரசமரம் இல்லை, இப்பொழுது அதே இடத்தில் புதிதாக ஒரு அரசமரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. 
 
பழைய நினைவுகள் என்பது தேன் தடவிய விஷம் என்று சமீபத்தில் வாசித்திருந்தேன். அது எப்படி விஷமாகும் என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. ஒரு முப்பது வினாடிகள் வந்த காட்சியால் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.

நானும் ஒருகாலம் சந்தியில் நின்று வம்பளத்தேன்.

உண்மை தான் தேனும் விசமும் சேர்ந்தே உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் ஒருகாலம் சந்தியில் நின்று வம்பளத்தேன்.

உண்மை தான் தேனும் விசமும் சேர்ந்தே உள்ளன.

நாங்கள் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே விசயங்களையே அங்கே செய்து விட்டு, இப்ப ஒவ்வொரு கரைகளில் ஒதுங்கியிருக்கின்றோம்....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இது வலந்தலை சந்தியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

இது வலந்தலை சந்தியா?

இல்லை. இது வல்வெட்டித்துறை சந்தி.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒருநாளும் சந்தியில் நின்று வம்பளந்ததில்லை, எல்லாம் பாடசாலை மைதானத்திற்குள்தான்.....உற்றாரோ உறவினரோ யாரும் வந்து கல்லால எறிந்து திரத்திரவரை சமா நடக்கும்........" தேன் தடவிய விஷம்" நல்லா இருக்கு......!  😂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நாங்கள் ஒருநாளும் சந்தியில் நின்று வம்பளந்ததில்லை, எல்லாம் பாடசாலை மைதானத்திற்குள்தான்.....உற்றாரோ உறவினரோ யாரும் வந்து கல்லால எறிந்து திரத்திரவரை சமா நடக்கும்........" தேன் தடவிய விஷம்" நல்லா இருக்கு......!  😂 

😀...

'தேன் தடவிய விஷம்' என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகப் பொருத்தம்....

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரசோதரன் said:

இல்லை. இது வல்வெட்டித்துறை சந்தி.

நன்றி. உங்கள் எழுத்தும், சிந்தனையும் அபாரம். வேலைபளுவின் மத்தியிலும் சுண்டி இழுக்கிறது.

குவாலிட்டி மட்டும் அல்ல குவாண்டிட்யும் பிரமிக்க வைக்கிறது.

ஒருமுறை @Justinஜெயமோகனை தமிழின் prolific writer என அழைத்தார்.

அதே போல் நீங்கள் யாழின் புரோலிபிக் எழுத்தாளர்.

எப்படி சச்சின் ரன் அடிப்பதை மட்டுமே குறியாக கொண்டு விளையாடுவாரோ அப்படி அற்புதமாக, அசுர வேகத்தில் எழுதுகிறீர்கள்.

இதே போல் எப்போதும் தொடரவும்🙏.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

🙏... மிக்க நன்றி, கோஷான்.

இங்கு நீங்கள் பலர் மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள். சிலருக்கு நகைச்சுவை நன்றாக வருகின்றது. ஜஸ்டின் போன்ற சிலர் ஒரு கலைக்களஞ்சியம் அளவிற்கு தகவல்களை அறிந்து வைத்திருக்கின்றனர். கவிஞர்கள், ஓவியர்கள், செய்தியாளர்கள், சிந்தனையாளர்கள்..........எல்லாவற்றிற்கும் மேலாக பலர் நட்புடன் ஆதரவளிப்பவர்கள்...

இந்த வெள்ளியிலிருந்து அடுத்த மூன்று வாரங்களுக்கு களத்திற்கு நான் வருவது குறைவாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஊருக்கு போகின்றேன். அதன் பின்னர், விட்ட இடத்திலிருந்து ஒடி உள்ளே வந்து விடுவேன்....😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

நன்றி. பிரயாணம் சுகமாக அமைய வாழ்த்து. 

ஊரால் வந்ததும் ஒரு பயணகட்டுரையுடன் ஆரம்பியுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

நன்றி. பிரயாணம் சுகமாக அமைய வாழ்த்து. 

ஊரால் வந்ததும் ஒரு பயணகட்டுரையுடன் ஆரம்பியுங்கள்.

👍...

நன்றி. 

இந்தப் பயண அனுபவத்தை எழுதலாம் என்று தான் நினைக்கின்றேன். 'இதயம் பேசுகிறது' மணியன் தான் அன்று பயணக் கட்டுரைகளில் ஒரே ஒரு நட்சத்திரம். ஆனால் அவரின் பாணி இன்று தேய்வழக்காகி விட்டது. இங்கு பலர், நீங்கள் உட்பட, பயணக் கட்டுரைகளில் அசத்துகிறீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

👍...

நன்றி. 

இந்தப் பயண அனுபவத்தை எழுதலாம் என்று தான் நினைக்கின்றேன். 'இதயம் பேசுகிறது' மணியன் தான் அன்று பயணக் கட்டுரைகளில் ஒரே ஒரு நட்சத்திரம். ஆனால் அவரின் பாணி இன்று தேய்வழக்காகி விட்டது. இங்கு பலர், நீங்கள் உட்பட, பயணக் கட்டுரைகளில் அசத்துகிறீர்கள்.  

நன்றி.

இதயம் பேசுகிறது மணியனின் கட்டுரைகளை அரைவாசி விளங்காமலே (வயது) படம்பார்த்தபடி வாசித்துள்ளேன்.

பின்னாளில் ப்ரியா கல்யாணராமனும் நன்றாக விகடனில் எழுதினார்.

நான் ஏதோ அவசர கோலத்தில் துணுக்கு தோராணம் போல எழுதி, பின்னர் படங்களை வைத்து ஒப்பேற்றி விட்டேன்.

உங்களால் மணியன் பாணியில் தொடர் போல எழுத முடியும். அப்படி முயற்சியுங்கள். 

டிப்ஸ்: அங்கேயே எழுத அல்லது குறிப்பெடுக்க ஆரம்பிக்கவும்.

இங்கே வந்தால் பாதி நியாபகத்தில் இராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நன்றி.

இதயம் பேசுகிறது மணியனின் கட்டுரைகளை அரைவாசி விளங்காமலே (வயது) படம்பார்த்தபடி வாசித்துள்ளேன்.

பின்னாளில் ப்ரியா கல்யாணராமனும் நன்றாக விகடனில் எழுதினார்.

நான் ஏதோ அவசர கோலத்தில் துணுக்கு தோராணம் போல எழுதி, பின்னர் படங்களை வைத்து ஒப்பேற்றி விட்டேன்.

உங்களால் மணியன் பாணியில் தொடர் போல எழுத முடியும். அப்படி முயற்சியுங்கள். 

டிப்ஸ்: அங்கேயே எழுத அல்லது குறிப்பெடுக்க ஆரம்பிக்கவும்.

இங்கே வந்தால் பாதி நியாபகத்தில் இராது.

'அவன் சும்மாவே ஆடுவான், இதில நீங்கள் சலங்கை வேற கட்டி விடுகிறீர்கள்....' என்று ஒரு வழக்கு இருக்கின்றது......🤣 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.