Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாம் காப்ரால்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 16 ஏப்ரல் 2024

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணை தற்போது நடந்து வருகிறது.

அண்மையில் டிரம்ப் இரண்டு தனித்தனி நியூயார்க் சிவில் வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளை எதிர்கொண்டார். ஆனால் அவர் மீதான குற்றவியல் விசாரணைகள் சற்று வித்தியாசமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் மீது, 2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன.

இவ்வழக்கில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் `கிரிமினல்’ ரகம் அல்ல என்று வாதிட்ட அவர், தான் குற்றமற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.

எட்டு வாரங்கள் நடைபெறவிருக்கும் இவ்வழக்கின் விசாரணை, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பின் பரப்புரையில் விளைவுகளை ஏற்படுத்தும். பரப்புரையில் ஈடுபடுவதிலிருந்து அவர் அடிக்கடி விலகியிருக்க நேரிடும்.

 
டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸ்டார்மி டேனியல்ஸ்

டிரம்ப் எதிர்கொள்ளும் வழக்கு என்ன?

கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட டிரம்ப் உடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்க தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியுள்ளார்.

டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ என பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.

டிரம்புடனான தொடர்பு குறித்து மௌனமாக இருப்பதற்காக, டேனியல்ஸுக்கு 1,30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய்) செலுத்துமாறு தனக்கு டிரம்ப் உத்தரவிட்டதாக கோஹென் கூறுகிறார். சட்டச் செலவுகள் என்று பதிவு செய்து அந்த பணத்தை தனக்கு ட்ரம்ப் கொடுத்ததாகவும் கோஹென் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயலை 2016 தேர்தலில் "சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்தும்" முயற்சி என்று வழக்கறிஞர்கள் விவரித்துள்ளனர்.

வெளியே பேசாமல் இருப்பதற்கான பணம் (Hush Money) செலுத்துவது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம், டிரம்ப் ஆபாச நடிகைக்கு அளித்த பணத்தை, ‘சட்டச் செலவுகள்’ என்று குறிப்பிட்டு கோஹனுக்குச் செலுத்தியது தவறு என்று குற்றம்சாட்டுகிறது.

மொத்தத்தில், பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

 
டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மைக்கேல் கோஹன்

டிரம்பின் தேர்தல் பரப்புரை பாதிக்கப்படுமா?

எதிர்வரும் 2024 தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராகக் கருதப்படும் ட்ரம்ப், பகலில் நீதிமன்றத்தில் இருக்கவும், இரவில் பிரசாரம் செய்யவும் உறுதிபூண்டிருந்தார். சட்டப்படி அவர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்.

இருப்பினும், அவர் வரும் மே 17-ஆம் தேதி தனது மகனின் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழா நடக்கும் நாளில் விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். விசாரணை நாளுக்கு சில தினங்கள் முன்னர் இதுகுறித்து முடிவு எடுப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு ட்ரம்ப் இவ்வாறு நடந்து கொண்டதில்லை. சமீபத்தில் முடிவடைந்த இரண்டு சிவில் வழக்குகளிலும் அவர் அவ்வப்போது விசாரணைக்கு வந்துவிடுவார். அவர் விருப்பப்படி நீதிமன்றத்துக்கு வந்துப் போவார். ஆனால் இம்முறை நடக்கும் விசாரணையில், அவர் ஒரு குற்றவியல் பிரதிவாதி என்பதால், ட்ரம்ப் செயல்பாட்டில் மாற்றம் தெரிகிறது.

ட்ரம்ப் தனது குற்றவியல் விசாரணையில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். அவ்வாறு செய்யாவிட்டால், அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்படலாம்.

நீதிமன்றத்திற்கு வராமலிருப்பதை ஞாயப்படுத்த சில வரையறுக்கப்பட்ட காரணிகள் உள்ளன. மற்றொரு விசாரணைக்குச் செல்ல அல்லது ஒரு முக்கியமான நிகழ்வுக்குச் செல்ல ட்ரம்பை நீதிபதி அனுமதிக்க முடியும்.

ஆனால் விசாரணையில் ஆஜராகாமல் தவிர்ப்பது பெரிய குற்றமாகப் பார்க்கப்படும் என்று முன்னாள் வழக்கறிஞரும் வெஸ்ட் கோஸ்ட் ட்ரையல் வழக்கறிஞர்களின் தலைவருமான நேமா ரஹ்மானி கூறினார்.

மேலும், “ஜூரியாக இருக்கப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை. ஆனால் ஜூரியாக இருக்கும் போது, வழக்கில் ஒரு தரப்பினர் தங்கள் நேரத்தை மதிக்காமல் இருப்பதை கண்டால், அது தண்டனை பெறுவதற்கான உறுதியான வழி," என்றும் அவர் கூறினார்.

முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியை வென்றுவிட்ட நிலையில், தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளராக கருதப்படுகிறார். இனி அவர் கவலைப்பட வேண்டியது நவம்பர் மாதப் பொதுத் தேர்தல் பற்றி மட்டுமே.

ஆனால் தற்போது நடக்கும் ஆறு முதல் எட்டு வார விசாரணை அவரது பரப்புரைக்கு இடையூறாகவும், அதிபர் ஜோ பைடனை எதிர்கொள்வதில் சிக்கலாகவும் அமையும். மேலும், வழக்குச் செலவுகள் அவரது பரப்புரை நிதியையும் பாதிக்கும்.

 
டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விசாரணை எப்படி நடக்கும்?

கடந்த ஆண்டு, டிரம்புக்கு எதிரான வரி மோசடி விசாரணையை மேற்பார்வையிட்ட மான்ஹாட்டன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹுவான் மெர்சன், 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமர்வில் செயல்படுகிறார். ஆனால், ஒரு முன்னாள் அமெரிக்க அதிபரின் குற்றவியல் விசாரணை நீதிபதியாக அவர் இருப்பது இதுவே முதல் முறையாகும். இது அவரது வாழ்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருக்கும்.

முன்னதாக ட்ரம்ப், “நீதிபதி என்னை வெறுக்கிறார். எனவே அவர் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால், நீதிபதி மெர்சன் இந்த வாதத்தை நிராகரித்துவிட்டார்.

ட்ரம்ப் தனது பல்வேறு வழக்குகளுக்காக பல சட்ட வல்லுனர்கள் குழுவை அமர்த்தியுள்ளார். அவரை இங்கு பிரதிநிதித்துவப்படுத்துவது சூசன் நெசெல்ஸ் மற்றும் டோட் பிளான்ச் தலைமையிலான குழுவாகும்.

ட்ரம்ப் மீது குற்றம்சாட்டிய முதல் நபரான மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக், வழக்குத் தொடர எட்டு அனுபவமுள்ள வழக்குரைஞர்களைக் கொண்ட குழுவைக் கூட்டியுள்ளார். வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாதத்தை முன்வைக்க குறைந்தபட்சம் 15 முதல் 17 நாட்கள் தேவைப்படும் என்றும், சில நிபந்தனைகளில் இரு தரப்பினரும் உடன்படவில்லை என்றால் இன்னும் அதிக அவகாசம் தேவைப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் கோஹன் அரசு தரப்பு சாட்சியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கடந்த காலம் குறித்த தீவிரமான குறுக்கு விசாரணைகளை அவர் எதிர்கொள்ள நேரிடும்.

இதற்கிடையில், ட்ரம்ப் தன்மீதான குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’ என்றும் ‘அரசியல் நோக்கம் கொண்டவை’ என்றும் வாதிட்டார். ஆனால் இந்தக் கூற்றுகளை நிரூபிக்க அவர் எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை.

நீதிபதி மெர்சனின் விதிகளின்படி, புதன்கிழமைகள் அல்லது ஏப்ரல் 29 அன்று நீதிமன்றம் இயங்காது. ட்ரம்பின் சட்டக் குழுவின் சில உறுப்பினர்கள் அனுசரிக்கும் யூதர்களின் பாஸ்கா பண்டிகையை முன்னிட்டும் விசாரணை இடைநிறுத்தப்படலாம்.

 
டொனால்ட் ட்ரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸ், அமெரிக்கா, நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீதிபதிகள் எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

நியூயார்க் குற்றவியல் விசாரணைகளுக்கு ஆறு மாற்று நீதிபதிகள் உட்பட 12 நீதிபதிகள். விசாரணை தொடங்குவதற்கு முன்னர், நீதிபதிகளாகப் பொறுப்பேற்க உள்ளவர்கள், பலவிதமான கேள்விகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். ட்ரம்ப் பற்றிய செய்திகளை எங்கிருந்து தெரிந்துகொள்கிறார்கள், என்பது தொடங்கி, அவர்கள் முன்னர் டிரம்ப் பேரணியில் கலந்து கொண்டார்களா என்பது வரை பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ட்ரம்பின் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றைப் படித்தீர்களா அல்லது கோஹனின் பேச்சுகளில் ஏதாவது கேட்டிருக்கிறீர்களா என்றும் அவர்களிடம் கேட்கப்படுகிறது.

ரஹ்மானியின் கூற்றுப்படி, நீதிபதிகளின் தேர்வு விசாரணையின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளக்கூடும். ஏனெனில் "டொனால்ட் ட்ரம்ப் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரைப் பற்றி அனைவருக்குமே ஒரு கருத்து உள்ளது," என்கிறார்.

"யாரும் எந்தச் சார்புகளுமற்று நீதிமன்ற அறைக்குள் வருவதில்லை," என்றும் ரஹ்மானி கூறினார். எனவே, பாரபட்சமற்ற ஒரு நீதிபதிக் குழுவைத் தேர்வு செய்ய, வாதப் பிரதிவாதக் குழுக்கள் 500 நீதிபதிகளில் இருந்து சல்லரை போட்டுத் தேடலாம்.

நீதிபதி மெர்சன் கேள்விகள் கேட்பதற்கான நேரத்தை வரையறுக்கக்கூடும்.

ஸ்டார்மி டேனியல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் விசாரணை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுமா?

அமெரிக்காவில், நீதிமன்ற விசாரணைகளின்போது ஒளி-ஒலி பதிவுகள் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் நியூயார்க்கும் ஒன்றாகும்.

நீதிமன்ற அறைகளுக்குள் கேமராக்களை அனுமதிப்பது நீதிபதிகளின் சொந்த விருப்பம் சார்ந்தது. பெரும்பாலான நாட்களில் டிரம்பின் சிவில் மோசடி விசாரணையில் இருந்து ஒரு சில காணொளிகள் கிடைத்தன. ஆனால் ஆரம்பக்கட்ட விசாரணையின்போது நீதிபதி மெர்ச்சன் தனது நீதிமன்ற அறையில் கேமராக்களை அனுமதிக்கவில்லை. எனவே இந்த விசாரணையிலும் கேமராக்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புகள் குறைவு.

எனவே, இந்த வழக்கின்மீது பரவலான ஆர்வம் இருந்தபோதும் விசாரணையை நேரில் பார்க்க மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்குள் வெகுசில பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

எஞ்சியுள்ள மக்கள், ஊடகச் செய்திகள் மூலமாகவும், ஓவியங்கள் மூலமாகவும், டிரம்பின் சமூக வலைதளப் பதிவுகள் மூலமகவுமே இவ்வழக்கைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cyx6kk6gp3do

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்புடன் ஹோட்டல் அறையில் நடந்தது என்ன? : ஒன்றையும் மறைக்காமல் சொன்ன ஆபாச பட நடிகை : 'போதும்' என நிறுத்திய நீதிபதி

Published By: RAJEEBAN   08 MAY, 2024 | 12:20 PM

image
 

அமெரிக்காவின் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டெனியல்ஸ்  முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டமை குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையை மறைப்பதற்காக ஸ்டோர்மி டெனியல்ஸிற்கு பணம் வழங்கியமை தொடர்பான வழக்கு விசாரணை தொடர்கின்ற நிலையில் ஆபாசபட நடிகை டொனால்ட் டிரம்புடன் 2006 இல் உறவுகொண்ட தருணங்களை விபரித்துள்ளார்.

ஒரு பிரபலமான கோல்வ் போட்டியில் எப்படி இருவரும் சந்தித்தார்கள். டிரம்பின் லேக் தஹோ ஹோட்டல் அறைக்கு சென்றவேளை என்ன நடந்தது என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

உள்ளாடைகளுடன்  காணப்பட்ட டிரம்ப் எப்படி தனக்காக போஸ்கொடுத்தார் என்பதையும் ஆபாச பட நடிகை நீதிமன்றில் விபரித்துள்ளார்.

ஸ்டோமி டெனியல்ஸ் பல விபரங்களை வெளிப்படயாக விபரித்ததால்  நீதிபதி அவற்றை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

stormy_dannielssssssssss.jpg

டிரம்பின் ஹோட்டல் அறையில் என்ன காணப்பட்டது - டைல்கள் என்ன நிறத்தில் காணப்பட்டன எவ்வாறான மேசை காணப்பட்டது என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

இரவு உணவின் போது  என்ன விடயங்கள் பேசப்பட்டன, ஆபாசப்பட திரைப்படத்துறை பற்றி டிரம்ப் கேள்வி எழுப்பினார். பாலியல் உறவு பற்றி அவர் அவ்வேளை பேசவில்லை, இது என்னை கவர்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் கழிவறைக்கு சென்றேன் வெளியே வந்து பார்த்தவேளை ஹோட்டல் கட்டிலில் பொக்சர் டீசேர்ட்டுன் காணப்பட்டார். நான் அச்சத்தினால் அதிர்ந்துபோனேன், அங்கு வேறு எவரும் அரைகுறை ஆடையுடன் இருப்பார்கள் என நான் நினைத்துகூடபார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182959

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்புடன் இரவு உணவுக்குச் சென்ற போது நடந்தது என்ன? அமெரிக்க நீதிமன்றத்தில் நடிகை சாட்சியம்

டொனால்டு டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கைலா எப்ஸ்டீன் மற்றும் மேட்லைன் ஹால்பர்ட்
  • பதவி, பிபிசி செய்தியாளர்கள்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பாலியல் உறவு குற்றச்சாட்டு, அதுகுறித்து பேசாமல் மௌனம் காக்க டிரம்ப் சார்பில் அவரது பிரதிநிதியாக ஒருவர் பணம் கொடுத்தது ஆகியவை தொடர்பான போராட்டம் ஸ்டோர்மி டேனியல்ஸ் - டொனால்டு டிரம்ப் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

டிரம்புக்கு எதிரான குற்றவியல் விசாரணையில், முதன் முறையாக நீதிமன்றத்தில் அவரை நேரடியாக எதிர்கொள்ளும் நிலைப்பாட்டை டேனியல்ஸ் எடுத்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான அந்தரங்க விவரங்கள், இந்த வழக்கைச் சுற்றியுள்ள ரகசியங்கள் என பல விஷயங்கள் செவ்வாய் கிழமையன்று நீதிமன்றத்தில் கசிந்தன.

'நான் குற்றமற்றவன்' - டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னாள் திரை நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸ், தளர்வான கறுப்பு ஆடைகளை அணிந்து அமர்ந்திருந்தார். முன்னாள் அதிபரை அடையாளம் காட்டுமாறு கூறியபோது மட்டுமே அவர் டிரம்பை பார்த்தார். மற்ற நேரங்களில் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தார் ஸ்டார்மி டேனியல்ஸ்.

வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கும், டிரம்பின் சட்ட வல்லுநர் குழுவின் கடுமையான கேள்விகளுக்கும் காரணமாக இருந்த, டிரம்பு உடனான தன் பாலியல் தொடர்பை விவரிப்பதில் தான் அவர் அதிக நேரத்தைச் செலவிட்டார்.

டேனியல்ஸ் தரப்பு வாதங்களை முன்வைத்த போது, டிரம்ப் பெரும்பாலான நேரம் கோபமாக திட்டியவாறும், இல்லை எனும் வகையில் தலையை ஆட்டியவாறும் இருந்தார் . அவரது இந்த செய்கைகளைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி.

போலியான வணிகப் பதிவுகளை சமர்ப்பித்ததாக 34 குற்ற வழக்குகளை டிரம்ப் எதிர்கொண்டுள்ளார் . டிரம்புடனான தொடர்பு குறித்து பேசாமல் மௌனம் காப்பதற்காக, டேனியல்ஸுக்கு 1,30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய்) கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் தான் இந்த விசாரணையின் மையமாக உள்ளது.

தான் குற்றமற்றவர் என்று கூறியுள்ள டிரம்ப், டேனியலுடன் எந்த வகையிலும் பாலியல் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். இருப்பினும் தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க ஒரு தொகையை டேனியலுக்கு வழங்கியதை டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

பணத்தைப் பெற்ற டேனியல்ஸ் ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செவ்வாய்க் கிழமையன்று அவர் அளித்த சாட்சியம் விசாரணையின் மிகவும் முக்கியமான அங்கமாக மாறியுள்ளது.

 

டிரம்ப் முன்னிலையில் நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் சாட்சியம்

டொனால்டு டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,செவ்வாயன்று ஸ்டோர்மி டேனியல்ஸ் சாட்சியமளிப்பதை சித்தரிக்கும் நீதிமன்ற ஓவியம்.

டிரம்புடனான தனது தொடர்பு பற்றிய சில பரபரப்பான விவரங்களை வழங்கினார் டேனியல்ஸ். இதனால் முன்னாள் ஜனாதிபதியின் வழக்கறிஞர்கள் இந்த விசாரணையை ‘தவறான விசாரணை’ என்று அறிவிக்குமாறு கூறினார்கள்.

நீதிபதி ஜுவான் மெர்ச்சன், “சில அந்தரங்கமான விஷயங்களைச் சொல்லாமல் விட்டுவிடுவது நல்லது தான்" என்று ஒப்புக்கொண்டார் மற்றும் அத்தகைய தனிப்பட்ட விவரங்களைக் கேட்க வேண்டாம் என்று வழக்கறிஞர்களை எச்சரித்தார்.

அவர் முன்பு பகிர்ந்து கொண்ட விவரங்களில், அவர்கள் ஆணுறை பயன்படுத்தவில்லை என்ற அவரது கூற்று, தனது மனைவி குறித்து டிரம்ப் டேனியல்ஸிடம் கூறியதாகக் கூறப்படும் பதில்கள் ஆகியவை அடங்கும்.

இந்த விசாரணை ஏற்கனவே முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் ஹாலிவுட் வழக்கறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஒரு வழக்கறிஞர் டேனியல்ஸுக்கு பணம் செலுத்துவதற்கு தரகராக பணியமர்த்தப்பட்டார். எவ்வாறாயினும், செவ்வாய்க் கிழமையன்று அவர் அளித்த சாட்சியம் நீதிபதி மற்றும் டிரம்ப் தரப்புக்கு ஒரு படி அதிகமாகவே இருந்தது.

2006ஆம் ஆண்டில் இருந்ததாகக் கூறப்படும் டிரம்ப் உடனான பாலியல் தொடர்பு குறித்து டேனியல்ஸிடம் என்ன கேட்கலாம், என்ன கேட்கக்கூடாது என்பதற்கு அரசு தரப்புக்கு சில வரம்புகளை விதிக்க வேண்டும் என்று நீதிபதி மெர்ச்சனிடம் டிரம்ப் தரப்பு வலியுறுத்தியது.

ஆனால், பணம் செலுத்தப்பட்டதற்கான நோக்கத்தை நிறுவுவதற்கு டேனியல்ஸிடம் சில கேள்விகளை கேட்பது அவசியம் என்று அரசுத் தரப்பு வாதிட்டது. வரம்புகள் இருந்தபோதிலும், டேனியல்ஸின் வழக்கத்திற்கு மாறான நீண்ட பதில்களில் அந்தரங்கமான விவரங்கள் மேலும் வெளிப்பட்டன.

 

டிரம்பை சந்தித்தது எப்படி?

ஸ்டார்மி டேனியல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்

டேனியல்ஸ், டிரம்புடனான பாலியல் சந்திப்பு குறித்த விவரங்களைப் பகிர்வது இது முதல் முறையல்ல. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து, அவர் தனது அனுபவத்தை தேசிய தொலைக்காட்சியில் அவரது பெயர் கொண்ட ஆவணப்படம் முதல் அமெரிக்காவின் மிக பிரபலமான காட்சி ஊடக பத்திரிகையாளர் மற்றும் அவரது சொந்த புத்தகமான ஃபுல் டிஸ்க்ளோசர் (Full Disclosure) ஆகியவற்றிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் சில அடி தூரத்தில் டிரம்ப் அமர்ந்திருந்த போது, டேனியல்ஸ் இதைப் பகிர்வது இதுவே முதல் முறை.

காலை அமர்வில், டேனியல்ஸ் பதற்றமாகத் தோன்றினார், மிகவும் வேகமாக பேசினார். வழக்கறிஞர் சூசன் ஹாஃபிங்கர் மற்றும் நீதிபதி மெர்ச்சன் இருவரும் அவரை மெதுவாக பேசும்படி கேட்டுக் கொண்டனர்.

சில சமயங்களில், வழக்கறிஞரான ஹாஃபிங்கர் கேட்ட கேள்விகளிலிருந்து அவரது சாட்சியங்கள் விலகிவிட்டதாகவும் தோன்றியது.

2006ஆம் ஆண்டு நடந்ததை நீதிமன்றத்தில் டேனியல்ஸ் நினைவுகூர்ந்தார். நட்சத்திரங்கள் பங்கேற்ற கோல்ஃப் போட்டியின் போது டிரம்பை முதன்முதலில் சந்தித்ததாகவும், அவர் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்ததாகவும் டேனியல்ஸ் கூறினார். டிரம்புடன் இரவு உணவுக்குச் செல்ல தான் விரும்பவில்லை என்று டேனியல்ஸ் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால், “சாப்பிட்டால் என்ன தவறு” என்று கூறி டிரம்பின் அழைப்பை ஏற்குமாறு அவரது விளம்பரதாரர் ஊக்கப்படுத்தியதாக டேனியல்ஸ் கூறினார். அவரது இந்த கூற்று நீதிமன்றத்தில் இருந்த சிலர் சிரித்தனர்.

பின்னர் இரவு உணவிற்கு டிரம்பின் அறைக்கு தான் சென்றதை விவரித்தார். பட்டு பைஜாமா அணிந்திருந்த டிரம்ப் வாசலுக்கு வந்து தன்னை வரவேற்றதாகவும், அதன் பிறகு தான் குளியலறைக்குச் சென்று வந்தபோது, டிரம்ப் பாக்ஸர் ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் மட்டுமே அணிந்து படுக்கையில் படுத்திருந்ததைக் கண்டதாகவும் அவர் கூறினார்.

பின்னர் அவர்கள் உடலுறவு கொண்டதாகவும், அது முழு சம்மதத்தின் பேரில் நடந்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், அந்த சந்திப்பு தன்னை ஒரு குழப்ப நிலைக்குள் தள்ளியதாக நீதிமன்றத்தில் அவர் கூறினார்.

 

டிரம்ப் கூறியது என்ன?

டொனால்டு டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்பின் வழக்கறிஞர்கள் டேனியல்ஸை குறுக்கு விசாரணை செய்வதற்கு முன்பு, அரசு வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பல முறை எதிர்ப்பு தெரிவித்தனர்.

டேனியல்ஸின் சாட்சியத்தின் மீது நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் பறந்துவிட்டன என்றும், அரசு வழக்கறிஞர்கள் தான் அதற்கு காரணம் என்றும் வழக்கறிஞர் டோட் பிளான்ச் கூறினார்.

டிரம்பைப் பற்றிய அவரது விவரங்கள் ‘பாரபட்சமானவை’ என்றும், குறுக்கு விசாரணையின் போது அவற்றை சரிபார்க்க முடியும் என்று தாங்கள் நம்பவில்லை என்றும் அவர் கூறினார், "இது மீண்டும் விசாரிக்க இயலாத ஒரு சாட்சியமாகும்" என்று பிளான்ச் கூறினார்.

நீதிபதி மெர்ச்சன் இதை ஒரு தவறான விசாரணையாக கருதவில்லை என்றாலும், "சாட்சியைக் கட்டுப்படுத்துவது சற்று கடினமாக இருந்தது" என்று ஒப்புக்கொண்டார். தனது பதில்களை சுருக்கமாக கூறுவது குறித்து டேனியல்ஸிடம் ஹாஃபிங்கர் பேசுவார் என்றார்.

"நீங்கள் சொல்லும் விவரங்களின் அளவு தேவையற்றது," என்று அவர் கூறினார்.

டிரம்பின் வழக்கறிஞர் சூசன் நெச்செலஸ், டேனியல்ஸின் நோக்கங்களையும் கடந்த கால சம்பவங்கள் குறித்த சாட்சியங்களையும் சந்தேகத்திற்கு உட்படுத்தும் நோக்கில் ஒரு கடுமையான குறுக்கு விசாரணையை முன்னெடுத்தார். இரண்டு பெண்களும் சில சமயங்களில் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர்.

டிரம்பைப் பற்றிய டேனியல்ஸின் அறிக்கைகளை நெச்செலஸ் கொண்டு வந்ததால், அவரது வளர்ப்பை இது கேள்விக்குள்ளாக்கியது மற்றும் கடந்த காலத்தில் நடந்ததாக டேனியல்ஸ் கூறிய சில சம்பவங்கள் இட்டுக்கட்டியது என்று கூறியதால் விவாதங்கள் மேலும் மோசமாகின.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிமன்ற விசாரணை ‘சிறப்பாக நடக்கிறது’ என்று கூறினார்.

சாட்சியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு, இறுதியில் டேனியல்ஸின் சாட்சியம் தகுதியுடையதா என்று நீதிபதிகள் எடை போடுவார்கள்.

நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டதும், "திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்" என்று நீதிபதி மெர்ச்சன் தனது வழக்கமான அறிவுறுத்தலை மீண்டும் ஒருமுறை வழங்கினார்.

https://www.bbc.com/tamil/articles/cll472jq4jmo

  • கருத்துக்கள உறவுகள்

Bill Clinton போன்று Trump Lolita Express ல் பயணித்திருப்பாரானால் Stommy Daniels இத்தனைக்கும் கொல்லப்பட்டிருப்பார்.

😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

2006ஆம் ஆண்டு நடந்ததை நீதிமன்றத்தில் டேனியல்ஸ் நினைவுகூர்ந்தார்.

 சம்பவம் நடந்ததாக கூறப்படும் 2006 லிருந்து  ரம்பிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் வரைக்கும் அந்த பெண்மணி கோமாவில் இருந்தாரா?

1 hour ago, குமாரசாமி said:

 சம்பவம் நடந்ததாக கூறப்படும் 2006 லிருந்து  ரம்பிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் வரைக்கும் அந்த பெண்மணி கோமாவில் இருந்தாரா?

 

5 hours ago, ஏராளன் said:

பாலியல் உறவு குற்றச்சாட்டு, அதுகுறித்து பேசாமல் மௌனம் காக்க டிரம்ப் சார்பில் அவரது பிரதிநிதியாக ஒருவர் பணம் கொடுத்தது ஆகியவை தொடர்பான போராட்டம் ஸ்டோர்மி டேனியல்ஸ் - டொனால்டு டிரம்ப் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

🙂

தவிர, நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததோ அல்லது அவர் மௌனமாக இருக்கப் பணம் கொடுத்ததோ தவறில்லை. வழக்கின் மையக் பிரச்சனையும் அதுவல்ல.

செய்தியை வாசிக்கவும். 🙂

 

2 hours ago, Kapithan said:

Bill Clinton போன்று Trump Lolita Express ல் பயணித்திருப்பாரானால் Stommy Daniels இத்தனைக்கும் கொல்லப்பட்டிருப்பார்.

😂

பில் கிளிண்டன் வழக்கும் இந்த வழக்கும் மாறுபட்டவை 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, இணையவன் said:

 

🙂

தவிர, நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததோ அல்லது அவர் மௌனமாக இருக்கப் பணம் கொடுத்ததோ தவறில்லை. வழக்கின் மையக் பிரச்சனையும் அதுவல்ல.

செய்தியை வாசிக்கவும். 🙂

 

செய்தியை பல முறை வாசித்த பின்னர் தான் கருத்துக்கள் எழுதப்படுகின்றது.
பழைய காலத்து நடை முறைகளை இனியாவது தவிர்க்கவும். 😎

கொடுத்தவன் கொடுக்கா விட்டால் வெட்டுக்குத்து பகையாம்.....இது போல்தால் கதை போகின்றது:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

 

🙂

தவிர, நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததோ அல்லது அவர் மௌனமாக இருக்கப் பணம் கொடுத்ததோ தவறில்லை. வழக்கின் மையக் பிரச்சனையும் அதுவல்ல.

செய்தியை வாசிக்கவும். 🙂

 

பில் கிளிண்டன் வழக்கும் இந்த வழக்கும் மாறுபட்டவை 😁

அடிப்படையில் இரண்டும் பாலியல் விவகாரமே  😁

37 minutes ago, Kapithan said:

அடிப்படையில் இரண்டும் பாலியல் விவகாரமே  😁

அப்படியா ? 

மொனிக்கா தன்னைக் கிளிண்டன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகச் சொல்கிறார்.  டேனியல்ஸ் தனது முழு இணக்கத்துடன் ட்றம்புடன் உடலுறவு கொண்டதாகச் சொல்கிறார்.

உங்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிந்தால் இதற்குமேல் விவாதிக்க முடியாது.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

அப்படியா ? 

மொனிக்கா தன்னைக் கிளிண்டன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகச் சொல்கிறார்.  டேனியல்ஸ் தனது முழு இணக்கத்துடன் ட்றம்புடன் உடலுறவு கொண்டதாகச் சொல்கிறார்.

உங்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிந்தால் இதற்குமேல் விவாதிக்க முடியாது.

ஐயா இணை,

கொஞ்சமும் இரசனை இல்லாத ஆளாக இருக்கிறீர்களே இது நியாயமா? 

😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் தனது பாலியல் உறவுகள் குறித்த தகவல்கள் வெளிவருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் - அவரின் முன்னாள் சட்டத்தரணி

14 MAY, 2024 | 11:39 AM
image

2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவேளை தனது பாலியல் தொடர்புகள் குறித்த கதைகள் வெளியாவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார் என அவரது முன்னாள் சட்டத்தரணி மைக்கல் கோஹென் தெரிவித்துள்ளார்

டிரம்ப் ஆபாசபட நடிகைகள் உட்பட பல பெண்களுடன் தனக்கிருந்த தொடர்புகள் குறித்த கதைகள் வெளியாவதை தடுப்பதற்காக அந்த பெண்களை மௌமாக்குவதற்காக பணம் வழங்கியது தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போதே மைக்கல் கோஹேன் இதனை தெரிவித்துள்ளார்.

ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உடன்  தனக்கிருந்த தொடர்புகள் குறித்த  தகவல்கள் வெளியில் வருவதை தடுக்கவேண்டும் என டிரம்ப் தெரிவித்தார் என அவரின் முன்னாள் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த கதை வெளியில் தெரியவந்தால் பெண்வாக்காளர்களின் வாக்குகளை தான் இழக்கவேண்டியிருக்கும் என டிரம்ப் கவலையுடன் காணப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரென்மக்டொகெல் என்ற பிளேபோய் சஞ்சிகை மொடல் தனக்கும் டிரம்பிற்கும் இடையில் திருமணத்திற்கும் அப்பாற்பட்ட உறவு காணப்பட்டது என தெரிவிக்கின்றார் இது வெளியில் வராமலிருப்பதை உறுதி செய்யுங்கள் என டிரம்ப் அவ்வேளை தனது சட்டத்தரணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரென்மக்டொகெலிற்கு அவர் டிரம்ப் குறித்த இரகசியங்களை அம்பலப்படுத்துவதை தடுப்பதற்காக 150,000 வழங்கப்பட்டதாக டிரம்பின் முன்னாள் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நான் டிரம்பின் வழிகாட்டலின் கீழ் அவரின் நன்மைக்காக செயற்பட்டேன் என கொஹென் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் இதுவரை இந்த தகவல்களை நிராகரிக்காதமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183484

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு - தேர்தலில் போட்டியிட முடியுமா?

டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என வரலாற்றுபூர்வமான தீர்ப்பை நியூயார்க் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11 அன்று அறிவிக்கப்படும். அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றாலும் பெரும்பாலும் அபராதமே விதிக்கப்படும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த தீர்ப்பு அவமானகரமானது என்றும் மோசடியானது என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்கு ஒன்றில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை.

 

வரும் நவம்பரில் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் உள்ளார்.

‘யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல’ எனக்கூறி, இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரச்சார குழு நியாயப்படுத்தியுள்ளது.

“டிரம்ப்பை தோற்கடிப்பதற்கான ஒரே வழி அவரை வாக்குப்பதிவில் தோற்கடிப்பதுதான், நீதிமன்ற அறையில் அல்ல” என, பைடனின் பிரச்சாரக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அவருடைய பிரச்சாரக் குழு அவரை ‘அரசியல் கைதியாக’ சித்தரித்தது.

 

வழக்கு என்ன?

கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ எனப் பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.

இவ்வழக்கில் மொத்தமாக 34 புகார்களை டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டு வந்தார்.

இதுதொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்தார். மேலும், ஸ்டார்மி டேனியல்ஸுடன் உடலுறவு கொண்டதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்தார்.

இந்த வழக்கின் மையமாக உள்ள ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சியங்களை ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கின் 12 நடுவர்கள் இரண்டு நாட்கள் விவாதித்து ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர்.

டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியுமா?

குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டாலும், டிரம்ப் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக நீடிக்க முடியும்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. அதன்படி போட்டியிடுபவர் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் அமெரிக்க குடிமகனாகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும்.

குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.

https://www.bbc.com/tamil/articles/cd11074k9gwo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.