Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

annai-poopathi-750x375.jpg

யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது.

அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது.

இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1378867

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல்

April 20, 2024
 
 

9 6 யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

8 4 யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.

 

https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னை பூபதி அம்மாவுக்கு நினைவஞ்சலிகள். 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.