Jump to content

கொழும்பில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை

இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது | 4People Including Member Sl Navy Arrested Colombo

 

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது முதற்தடவை அல்ல. சிங்கள முப்படை.. உளவுப்படை.. பொலிஸ்படை.. அரசியல்படை.. இவற்றின் ஒத்துழைப்பு இல்லாமல்.. சொறீலங்காவில்.. ஒரு ஊசி வியாபாரம் கூட செய்ய முடியாது. இந்த நிலையில்.. இவ்வளவு கோடிகள் புரளும் போதைவஸ்து வியாபாரம் மட்டும் நடந்திடுமா என்ன. 

 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.