Jump to content

புதியன புகுதலே வாழ்வு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

large.newton.jpg.2625f5156199656164fe977587925aa8.jpg

புதியன புகுதலே வாழ்வு!

*****************************

ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு

மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு

இன்றைய நாளே எமக்கு புதிசு

எனிவரும் நாட்களும் புதிசு புதிதே!

 

பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும்

பனாட்டொடியல் நாங்கள் உண்டதும்

வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும்

வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும்

 

சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி

சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும்

நடந்த்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும்

நம்முன்னோர் வாழ்வு கதைகள் சொல்வதும்

 

இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு-இவைகள்

எல்லாம்  வெறும் கற்பனைக்கதைகளே!

எங்கள் வாழ்வோ இப்போது இல்லை...

இவர்களின் வாழ்வோ எனி வரப்போவதில்லை

 

பாலை வனங்கள் மழையால் அழியுது-வெண்

பனி கொட்டுமிடமெல்லாம் வெய்யில் அடிக்குது

மும்மாரி மழையும் மோசமாய் போயிற்று

முன்பு போல் இல்லை இயற்கையே  மாறிற்று.

 

பழசை மட்டுமே இறுக்கமாய் பிடிப்பதால்

பயனொன்றுமில்லை பரிதாப வாழ்வே!

புதுசை நோக்கியே போய்க்கொண்டிருந்தாலே

புதுமைகள் பார்த்து  மகிழ்வோடு வாழலாம்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

Edited by பசுவூர்க்கோபி
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை காண்கிறேன் ! அதாவது  புதுமைக்கு இடமளித்துப் பழமை மாறுகிறது என்னும் பொருளுடைய “The old order changeth, yielding Place to new” என்னும் லார்டு டென்னிசன் (Lord Tennyson) அவர்களின் பாடல் பகுதியையும் காண்கிறேன். எனினும் சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பங்களை கவனத்தில் எடுத்து, பழையன எல்லாமே கழிந்து விடவேண்டும் - புதியன எல்லாமே புகுந்துவிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை? என்று நம்புகிறேன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையன கழிதலும் புதியன புகுதலும் கவிதை அழகு .......!   👍

நன்றி கோபி ......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, kandiah Thillaivinayagalingam said:

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை காண்கிறேன் ! அதாவது  புதுமைக்கு இடமளித்துப் பழமை மாறுகிறது என்னும் பொருளுடைய “The old order changeth, yielding Place to new” என்னும் லார்டு டென்னிசன் (Lord Tennyson) அவர்களின் பாடல் பகுதியையும் காண்கிறேன். எனினும் சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பங்களை கவனத்தில் எடுத்து, பழையன எல்லாமே கழிந்து விடவேண்டும் - புதியன எல்லாமே புகுந்துவிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை? என்று நம்புகிறேன்

உங்களின் கருத்துக்கு நன்றிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2024 at 21:28, suvy said:

பழையன கழிதலும் புதியன புகுதலும் கவிதை அழகு .......!   👍

நன்றி கோபி ......!

நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

On 30/4/2024 at 21:28, suvy said:

பழையன கழிதலும் புதியன புகுதலும் கவிதை அழகு .......!   👍

நன்றி கோபி ......!

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.