Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் வாங்கிய கத்தி

Sydney Macquarie அங்காடியின் முதல் தளத்திலுள்ள மின்னூட்டும் தரிப்பிடத்தில் வாகனத்தை கொழுவிவிட்டு அங்காடிக்குள் நுழைந்தேன். வார விடுமுறைக்கு ஏற்ற வளமான கூட்டம். சிட்னியில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து சம்பவங்களால், அங்காடிக்குப் போவதில் அதிகம்பேருக்கு அச்சமிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், அப்படித் தெரியவில்லை. Dymocks புத்தக் கடைக்குள் சென்று, நான் வாங்கவிருந்த புத்தகத்தை எவ்வாறு கேட்பது என்பதை ஓரளவுக்கு மனதுக்குள் தயார் படுத்திக்கொண்டேன்.

புத்தக விற்பனை நிலையத்திலும் நல்ல கூட்டம். வரிசையில் நின்று எனது முறை வந்ததும், "சல்மான் ருஷ்டி எழுதி வெளிவந்த அவரது கடைசி நூல் உள்ளதா" என்று கேட்டேன். மூன்று இஞ்ச் மூக்கின் இடப்பக்க நுனியில் வெள்ளைக் கல்லு மூக்குத்தி அணிந்த, மெழுகு அழகி அவள். சல்மான் ருஷ்டியை அறிந்திருக்கவில்லை. கணனியில் தேடுவதற்கு முயற்சித்தாள். பெயரை முழுமையாக அறிந்தால்தானே தேடமுடியும். தடுமாறினாள். அவள் தடுமாறுகிறாள் என்பதற்காக " Can I have a Knife" என்று கேட்பதற்கு நான் தயங்கியபடி நின்றேன். அவளால் முடியவில்லை என்பதை முழுதாக உணர்ந்த பிறகு, எனது தொலைபேசியில் Knife புத்தகத்தின் அட்டையை எடுத்துக் காண்பித்து, "இந்த நூல் உள்ளதா" என்று கேட்டேன். புத்தக இறாக்கைகளுக்குள் இறக்கை விரித்து ஓடினாள். அவளைப்போன்ற வெள்ளை அட்டை அணிந்த புத்தகத்தை ஏந்திவந்து என் கைகளில் ஒப்படைத்தாள். பொது இடங்களில் மது அருந்துபவர்கள், காகிதப் பையில் போத்தலை மறைத்துக்கொண்டு பதுங்குவதைப்போல, புத்தகத்தை ஒரு பையில் போட்டுக் கட்டிக்கொண்டு பத்திரமாக வந்து காரில் ஏறினேன்.

 
f959cb_021ef927ec134f03a5fe896590ab816a~

நியூயோர்க் நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்த "எழுத்தாளர்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவது எப்படி" என்ற தொனிப்பொருளிலான அரங்கில் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக சல்மான் ருஷ்டி கலந்துகொண்டார். நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து மேடைக்குப் பாய்ந்தோடிச் சென்ற 24 வயது இளைஞன் ஒருவன், ருஷ்டியை சரமாரியாகக் கத்தியால் குத்திச் சல்லடை போட, அவர் இரத்தச் சகதியில் சரிந்தார். முதலில், இந்தத் தாக்குதல், பேச்சின் தொனிப்பொருள் சார்ந்த அரங்காற்றுகை என்று சந்தேகித்த பார்வையாளர்கள் உறைந்திருந்தனர். சில கணங்களில் உண்மையின் தீவிரத்தை உணர்ந்து, எழுந்து குழறினர். ருஷ்டியைக் கொன்றே தீருவதென்று கொலைவெறியாடியவனை, மேடையிலிருந்தவர்கள் பிடித்து மடக்கினார்கள். ருஷ்டி குற்றுயிராக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

நார் நாராகக் குத்திக்கிழிக்கப்பட்ட 75 வயது முதிய ருஷ்டியை பெரியதொரு மருத்துவர்குழு - பெரும்போராட்டத்துக்குப் பிறகு - சாவிலிருந்து மீட்டெடுக்கிறது. இடக்கையில் பல குத்துகள், கண்ணில் பார்வை நரம்புவரைக்கும் பாய்ந்த கத்தியால் பயங்கரக்காயம், இவற்றைவிட மார்பில் - கழுத்தில் என்று ஏகப்பட்ட ஆழமாக வெட்டுகள். சம்பவம் தொடர்பிலான காணொலியை பின்னர் விசாரணை செய்ததன் அடிப்டையில், கிட்டத்தட்ட 27 செக்கன்கள், ருஷ்டி தன்னைத் தாக்கியவனின் கத்தியோடு மேடையில் நின்று போராடியிருக்கிறார்.

தான் நுகர்ந்த மரண நெடியையும் - நேர்ந்த அத்தனை அவலங்களையும் - ஒவ்வொரு காயத்திலுமிருந்து உயிர் மீண்ட அனுபவத்தையும் - அவற்றின் பின்னணியில் இடம்பெற்ற பல சம்பவங்களையும் வலிபெயர்த்து விவரிக்கம் அபுனைவுதான் Knife. ருஷ்டி எழுதிய 21 ஆவது நூலான Victory City வெளிவரவிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்று, அந்த வெளியீடு அவர் உயிர் மீண்ட பிறகு நடைபெற்றது. தற்போது, Knife வெளியாகி பல லட்சக்கணக்கான வாசகர்களிடம் சென்றடைந்திருக்கிறது.

ஒரு எழுத்தாளன் மீதான தாக்குதலில் அவன் உயிர் தப்பினால், அந்த அனுபவத்தை அவன் எவ்வளவுக்கு எல்லைவரை சென்று தன் வாசகனுடன் பகிர்ந்துகொள்வான் என்பதற்கு இந்த நூல் செறிவான உதாரணம்.

ருஷ்டியின் இந்த நூலில் மிகக் கனிவோடும் இறுக்கமாகவும் பகிர்ந்துகொள்ளும் இரு விடயங்கள் முக்கியமானவை.

ஒன்று - அன்பின் மீதான ருஷ்டியின் தீராத பற்றினால், காலம் அவருக்கு எலைஸா என்ற மனைவியை அருளியது. ருஷ்டி ஐந்தாவது தடவையாக எலைஸாவைத் திருமணம் செய்துகொண்டது, எழுத்தாளர் வட்டத்திலேயே அதிகம்பேருக்குத் தெரியாது. எலைஸாவும் அதனைப் பெரியளவில் விரும்பவில்லை. ருஷ்டி மீதான தாக்குதலுக்குப் பிறகு எலைஸா, பேரொளியாய் பெருக்கெடுக்கிறார். ருஷ்டியைத் தன் நிழலில் வைத்து ஏந்துகிறார். ருஷ்டி குறிப்பிடுவதைப்போல அவரளவுக்கு எலைஸாவும் காயமாகி வலி சுமக்கிறார். ருஷ்டிக்குக் கிடத்தட்ட எலைஸாதான் உயிரூட்டி மீட்கிறார். தன்னைவிட முப்பது வயது மூத்த கணவனின் மீது எலைஸா கொண்டுள்ள காதலும், காயம்பட்ட ருஷ்டியை எவ்வாறுப் போராடி வெல்கிறார் என்பதும் இந்த நூலில் மிகக்கனிவான பக்கங்களாக விரிந்திருக்கின்றன. அந்தக் காதலைப் பக்கத்துக்குப் பக்கம் ருஷ்டி கொண்டாடித் தீர்ப்பது மிகவும் நெகிழ்ச்சியானது.

இரண்டு - ருஷ்டிக்குள்ளிருக்கும் இந்தக் கனிவான - அன்புக்கு ஏங்கும் - இதயத்துக்கு எதிர் அந்தத்தில் உள்ள அவரது எழுத்தினாலான தன்னகங்காரம். பதினைந்து தடவைகள் குத்திக் குதறப்பட்ட பிறகும், அந்த சல்லடையான உடலில் இருந்து மீண்டு வந்து, தன்னைக் குத்தியவனை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று விரும்புவதும், கடைசியில் அவன் அடைக்கப்பட்ட சிறைச்சாலைக்குச் சென்று அதனை வெளியிலிருந்து படம்பிடித்துவிட்டு "அவனிருந்த அந்தச் சிறையைக் கண்டதும் எனது கால்கள் நடமாடின" - என்று எழுதுவதும் அவரின் எழுத்து-நரம்புகளில் ஓடுகின்ற தன்னகங்காரம்தான். இந்த அகங்காரம்தான் அவரைச் சாவுக்கு எதிராகவும் போராடும் வல்லமையைக் கொடுத்தது. இந்த நூலில் அவர் எழுதாததும் - வாசகன் புரிந்துகொள்ளக்கூடியதுமான புள்ளி - "நான் வேறு எவ்வாறேனும் மரணிக்கத் தயார், ஆனால், இவனது தாக்குதலில் சாகமாட்டேன்" - என்று இறுதிவரை அவருக்குள்ளிருந்த ஓர்மம். இந்தத் திமிர்தான் பதினைந்து மாதங்களில் அவரை மீண்டும், அதே எழுத்தாளனாக அவரது கதிரையில் கொண்டுவந்து இருத்துகிறது.

இந்தத் தாக்குதலினால் ருஷ்டி அடைந்த காயங்களும், அவற்றின் விளைவுகளும் ஒவ்வொன்றிலிருந்து வெளியேற அவர் அனுபவித்த - கதறிய - ஓலங்களும் நூலில் வாசகனையே பதறவைக்கக்கூடியவை. சகல காயங்களும் ஆறியபிறகும் அவருக்கு புற்றுநோயுள்ளதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட அறிவிப்பும் பிறகு, அது ஏனைய காயங்களின் தொற்றினால் ஏற்பட்டது என்று ஆறிப்போவதும் உள ரீதியாகவே ஒருவருட காலம் அவரை சிதைக்கிறது. தாக்குதல் ஏற்படுத்திய பழைய நினைவுகளினால் விளைந்த கொடும் கனவுகளால் பெருந்துயரடைகிறார்.

இந்தக் கூட்டு வாதையை ஒரு எழுத்தாளனாக - தனது கருத்தை உறுதியோடு எழுதியதற்காக - ருஷ்டி அனுபவித்து மீண்டிருக்கிறார்.

 
f959cb_9c7a4bed7c994a04b6da6de5356354c2~
 
 

Knife நூலில் ருஷ்டிக்கு சமனாக அவரது மனைவி எலைஸாவின் காதலும் எந்த எல்லைவரையும் சென்று தனது கணவரைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் அவரது ஓர்மமும் வாசிப்பில் நிறைவுதந்தாலும், ருஷ்டியின் தன்னகங்காரமும் எழுத்தாளனுக்கு அந்தக்குணம் இருக்கவேண்டிய தேவையும் அதிகம் ஈர்க்கிறது.

 

தன்னைத் தாக்கியவனைச் சிறையில் சென்று சந்திக்க விரும்பும் ருஷ்டிக்கு அவரது மனைவி மறுப்புச் சொல்கிறார். தாக்குதலாளியின் சார்பிலான சட்டத்தரணிகளே அதற்கு அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறி கணவனைத் தேற்றுகிறார். அதனை ருஷ்டியே பின்னர் உணர்ந்துகொண்டாலும், நூலின் ஒரு பகுதியை தனக்கும் தனது தாக்குதலாளிக்கும் இடையிலான கற்பனை உரையாடலாக ருஷ்டி எழுதுகிறார். அந்த உரையாடல், மிகவும் முதிர்ச்சியானது. இந்த உரையடலை, தன்னைப் பதினைந்து தடவைகள் குத்தியவனை திட்டித் தீர்ப்பதற்கு ருஷ்டிய பயன்படுத்தவில்லை. அவனுக்கு எதிராக தனது ஏளனங்களைப் பதிவுசெய்வதற்கும் - விலங்கணிந்த அவனது குற்றத்தை எள்ளி நகையாடுவதற்கும் நீட்டிக்கொள்ளவில்லை. மாறாக, அவனது தரப்பிலிருக்கக்கூடிய கொலை வாதங்களை சமமாக முன்வைக்கிறார். அவனது அடிப்படைவாத மனநிலையை அவனது கத்தியின் முனையிலிருந்து புரிந்துகொள்கிறார்.

லெபனானுக்குச் சென்று திரும்பியதிலிருந்து நான்கு வருடங்களாக வீட்டின் ஒரு மூலையிலிருந்து youtube பார்ப்பதையே முழுநேரமாகச் செய்துகொண்டிருந்தவன், அடிப்படைவாதத்திற்குள் ஈர்க்கப்பட்ட கோரத்தையும் - அதன் பரிதாபமான விளைவுகளையும் - தான் எந்த வகையில் அவனுக்கு எதிரியாகவேண்டும் என்ற நியாயமான கேள்வியையும் கனிவோடு முன்வைக்கிறார். சமூகவலைத்தளங்களில் algorithm உலகிற்குள் ஒருவன் தன்னை அறியாமல் வசீகரிக்கப்படக்கூடிய சீரழிவின் உச்சத்தையும் அதன் கோரமான விளைவையும் காயங்களின் பிரதிநியாக நின்று பகிர்ந்துகொள்கிறார்.

சுமார் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்ற இவ்வுலகில், தன்னுடன் பேசுவதற்கு தனது தாக்குதலாளி, வன்முறையைத் தெரிவுசெய்த காரணத்தை திரும்பத் திரும்ப வெவ்வேறு தளங்களில் முன்வைத்து, இறுதியில் "நீ என்னைக் கொலைசெய்ய முயன்றாய், ஏனெனில், உனக்கு புன்னகைப்பது எப்படி என்று தெரியாது" - என்று நிறைவுசெய்கிறார்.

எழுத்தை எழுத்தால் - கருத்தைக் கருத்தால் - எதிர்கொள்ளமுடியாமல் வன்முறைகளை எதிர்கொண்ட எல்லா எழுத்தாளர்களும் இந்தக் கடைசிவரியில் கண்முன் வந்து போகிறார்கள்.

முன்னர் குறிப்பிட்டதைப்போல, ருஷ்டி போன்றோருக்கு இப்படியானதொரு நிகர் அனுபவம் ஏற்படும்போது, அதன் விளைவு இவ்வாறான மிகவும் எடைமிகுந்த நூலாகவே வெளியாகும் என்பதில் ஆச்சரியமில்லை. ருஷ்டியின் பலம் அவர் வரலாற்றின் மீதுகொண்ட ஆழமான புரிதலும் மொழியை லாவகமாக சுழற்றியெடுத்து, எழுத்தின் திசை வகுக்கும் வல்லமையும்தான். இந்தநூலிலும் அந்தக் கூட்டு-நகர்வு செறிவாக அமைந்துள்ளது.

இரண்டாம் வாழ்வைப்போராடிப் பெற்ற ஒரு எழுத்தாளனின் இரத்த சாட்சியமாக இந்த நூலைப் படிப்பதற்கு அப்பால், நடப்பு உலகில் கூர்மையடையும் அடிப்படைவாதத்தின் இழிநிலையைப் புரிந்துகொள்வதற்கும் இன்றைய உலகம் முகங்கொடுக்கவேண்டிய புதிய அறம் சார்ந்த கேள்விகளையும் Knife பல்வேறு புள்ளிகளின் ஆழமாகப் பேசுகிறது.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி........!  😁

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கத்தியை நானும் வேண்டி வீட்டில வைத்திருக்கிறேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, P.S.பிரபா said:

கத்தியை நானும் வேண்டி வீட்டில வைத்திருக்கிறேன். 

 

இன்னமும் தீட்டவில்லை போலத் தென்படுகிறது  🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.