Jump to content

"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
 
 
"உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு
உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து
உயிரோடு கலந்து உடலோடு உறவாடி
உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!"
 
"சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று
சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று
சொக்கி போகும் பேரழகு பெற்று
சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?"
 
"ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு
ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு
ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு
ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?"
 
"அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி
அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு
அலங்காரம் செய்து கண்டு களித்து
அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?"
 
"கண்மணியே எம் குடும்ப தலைவியே
கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே
கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே
கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?"
 
"கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி
கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே
கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே
கண்காணாத உலகம் சென்றது நீதியோ?"
 
"அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல்
அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல்
அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல்
அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?"
 
"ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல்
ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ
ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம்
ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
289577187_10221219582661908_1668301774033110619_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IliwO05j0gwQ7kNvgFdJYiO&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfACVO_Dr4h1tS2yBnMWzNymn7Y9jw4PnhZUFhI2yalb3A&oe=663ED0F6 289632158_10221219582781911_1853753610137533960_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LkFD9Wz2UDwQ7kNvgF_58s0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDZDDaJ59ygn_A5rXFvKwL8DoP_8AIfkvXFSB4tsbBTKw&oe=663EE024
 
 
 
  • Sad 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kandiah Thillaivinayagalingam said:
சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று
சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று
சொக்கி போகும் பேரழகு பெற்று
சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?

கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் மனைவியைப் பற்றி இப்படிச் சொல்லி இருப்பார்.

என் கை பிடித்திவள் வந்தாள்

வந்த கடன் தீர்ப்பேனோ

என் காவலுக்கு இவள் நின்றாள்

நின்ற கடன் தீர்ப்பேனோ

என் தேவைகள் இவள் தந்தாள்

தந்த கடன் தீர்ப்பேனோ

பல சேவைகள் இவள் செய்தாள்

செய்த கடன் தீர்ப்பேனோ

என் தாய் போல் பிழை பொறுத்தாள்

அந்த கடன் தீர்ப்பேனோ

ஒன்றும் தெரியாதது போல் நடித்தாள்

அந்த கடன் தீர்ப்பேனோ

எந்தக் கடனிலும் மிகப் பெரியது

நல்ல மனைவியின் சேவை

அதை அடைத்திட எண்ணும் போது

பல பிறவிகள் தேவை

சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை. நினைவுகள் அழியாது நெஞ்சில் இருக்கும்.காலங்கள்தான் காயங்களை மாற்றும்.

 

 

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2024 at 13:39, kandiah Thillaivinayagalingam said:
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
 
 
"உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு
உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து
உயிரோடு கலந்து உடலோடு உறவாடி
உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!"
 
"சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று
சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று
சொக்கி போகும் பேரழகு பெற்று
சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?"
 
"ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு
ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு
ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு
ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?"
 
"அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி
அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு
அலங்காரம் செய்து கண்டு களித்து
அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?"
 
"கண்மணியே எம் குடும்ப தலைவியே
கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே
கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே
கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?"
 
"கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி
கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே
கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே
கண்காணாத உலகம் சென்றது நீதியோ?"
 
"அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல்
அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல்
அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல்
அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?"
 
"ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல்
ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ
ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம்
ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
289577187_10221219582661908_1668301774033110619_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IliwO05j0gwQ7kNvgFdJYiO&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfACVO_Dr4h1tS2yBnMWzNymn7Y9jw4PnhZUFhI2yalb3A&oe=663ED0F6 289632158_10221219582781911_1853753610137533960_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LkFD9Wz2UDwQ7kNvgF_58s0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDZDDaJ59ygn_A5rXFvKwL8DoP_8AIfkvXFSB4tsbBTKw&oe=663EE024
 

வணக்கம் தில்லை.

உங்கள் உள்ளத்தில் இப்படி ஒரு சுமை இருப்பது இதுவரை தெரியாது.

சகோதரியை நாங்களும் சுமக்கிறோம்.

 

வணக்கம் தில்லை.

உங்கள் உள்ளத்தில் இப்படி ஒரு சுமை இருப்பது இதுவரை தெரியாது.

சகோதரியை நாங்களும் சுமக்கிறோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்றி 


இறப்பு ஒரு திடீர் சம்பவம்.

 

வேலைக்கு போனவர் மதியம் அளவில் மயங்கி விழுந்து வைத்தியசாகையில் உடனடியாக கொண்டுபோய் ஆனால் அன்றே விடியப்பறம் 4 மணி அளவில் 'இனி நான் சாகிறேன்' என்ற கடைசி வார்த்தையுடன் எம்மை விட்டு பிரிந்தார். [08 / 06/ 2007]

 

அவரின் இரத்தம் முழுவதும் நஞ்சாகி விட்டது. கொரோனா மாதிரி ஒரு தொற்று நோய். பாக்டீரியாவால் பரவுவது எல்லா இயக்கமும் உடனடியாக நின்றுவிட்டது.

 

Meningitis அதன் பெயர்.

மூச்சு / தொடுதல் … இப்படி பரவுவது. அப்பொழுது பிள்ளைகள் படித்துக்கொண்டு இருந்தார்கள்.

 

No photo description available.

Edited by kandiah Thillaivinayagalingam
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லை உங்கள் துயரில் எப்போதும் உங்களுடன் இருப்போம்.

உங்களுக்கு விருப்பமிருந்தால் அடுத்த நினைவுநாளை இங்கு நினைவஞ்சலி பகுதியில் இணைத்து விடலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, இரு சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஒன்பது பேர் கைதாகியுள்ளனர். கர்ப்பமாக உள்ள சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்வது என்ன? தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, 17 வயது சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியை அழைத்து போலீசார் விசாரித்தபோது சிறுமியை மூன்று சிறார்கள் உள்பட, ஒன்பது பேர் பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது. மேலும், சிறுமியின் தோழியான 14 வயதான மற்றொரு சிறுமியையும் இந்தக் கும்பல் வன்புணர்வு செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. தமிழகத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ள இந்தச் சம்பவத்தில், போக்சோ வழக்கின் கீழ் மூன்று சிறார்கள் உள்பட ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்து, இரு சிறுமிகளையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்வது என்ன, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டு, போலீசார் மற்றும் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியது.   வழக்கு குறித்து போலீசார் சொல்வது என்ன? படக்குறிப்பு,பாலியல் வன்புணர்வு வழக்கில் 3 மைனர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உடுமலைப்பேட்டை காவல்துறை தெரிவித்துள்ளது. உடுமலை அனைத்து மகளிர் போலீசார், நம்மிடம் வழக்கு விவரத்தையும் முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் பகிர்ந்துகொண்டனர். நம்மிடம் பேசிய போலீசார், ‘’பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு 17 வயதான சிறுமி 14 வாரம் கர்ப்பமாக உள்ளார். இந்தச் சிறுமியை அவர்களது குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில், பெற்றோர் இறந்துவிட்டனர்." "உறவினர் வழி சித்தியும், பாட்டியும்தான் இவரை வளர்த்து வந்துள்ளனர். 10ஆம் வகுப்பை பாதியில் நிறுத்தியுள்ள இச்சிறுமி, தங்களுக்குச் சொந்தமான வீட்டில் தனியாக வசித்துக்கொண்டு அவ்வப்போது பாட்டியைச் சென்று பார்த்து வருவார்,’’ என்றனர். மேலும், ‘‘கைது செய்யப்பட்டதில் முக்கியக் குற்றவாளியான ஜெயகாளீஸ்வரன், அச்சிறுமியை காதலித்து வந்தார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியில் ஏமாற்றியுள்ளார். தனது நண்பர்களை அழைத்து வந்து சிறுமியை மிரட்டி அனைவரும் வன்புணர்வு செய்துள்ளனர். 17 வயதான சிறுமியின் தோழியான 14 வயது சிறுமியையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்,’’ என்றனர். சிறுமிகளின் வழக்கில் தொடர்புடைய, ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். காவல்துறை அளித்த விவரங்களின்படி, மூன்று சிறார்கள் உள்பட ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), யுவபிரகாஷ் (24), பவபாரதி (22), நந்தகோபால் (19) ஆகிய 6 பேர் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.   என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளையும் 9 பேர் இணைந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். (சித்தரிப்புப் படம்) வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.பி சுகுமாறன், ‘‘2 சிறுமிகள் பாதிக்கப்பட்ட வழக்கில், வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு, மிரட்டல் விடுத்தது உள்பட போக்சோ சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 இளைஞர்கள் மற்றும் ஒரு சட்டத்திற்கு முரண்பட்ட சிறார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மூன்று சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளை காப்பகத்தில் வைத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சமூக நலத்துறையினர் பராமரித்து வருகின்றனர்,’’ என்றார். ‘‘தனியார் தங்கும் விடுதிகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்குவதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஒரு தனியார் விடுதியில் வைத்து சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். விடுதி மீதும் நடவடிக்கை எடுத்து, வேறு விடுதிகளில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்கிறதா எனக் கண்காணிக்கிறோம்,’’ எனவும் டிஎஸ்பி சுகுமாறன் தெரிவித்தார். "இவ்வழக்கில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? கைது எண்ணிக்கை அதிகரிக்குமா?" என்று டிஎஸ்பி சுகுமாறனிடம் கேட்டபோது, ‘‘இரு சிறுமிகளிடமும் வாக்கு மூலம் பெற்று நாங்கள் ஒன்பது பேரை கைது செய்துள்ளோம். சிறுமிகள் நீதிபதி முன்னிலையிலும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதிலும், ஒன்பது பேரைத்தான் குற்றவாளிகளாகக் கூறியுள்ளனர். இதனால், கைது அதிகரிக்க வாய்ப்பில்லை,’’ என்றார்.   சிறுமியின் குடும்பத்தினர் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பாதிக்கப்பட்ட இரண்டாவது சிறுமியின் பாட்டி இந்தச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, ‘‘எனது பேத்தி எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு செல்ல உள்ளார். தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மாலையில் நான்தான் அவளை அழைத்து வருவேன்." "பேத்தி சிறு வயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். என் மகள் வேலைக்குச் சென்று விடுவதால் நான்தான் பேத்தியைப் பார்த்துக் கொள்வேன்." "கடந்த வாரம் உள்ளூர் திருவிழாவிற்கு வீட்டில் அனுமதியின்றி சென்றுவிட்டார். கோபத்தில் நானும் என் மகளும் பேத்தியை அடித்து அறிவுரை கூறினோம். அப்போது, எங்களிடம் கோபித்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்,’’ என்றார்.   'எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரண்டாவது சிறுமியின் வீட்டிற்கே காவல்துறை கூறித்தான் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இருநாட்கள் தேடியும் பேத்தியைக் காணவில்லை என்பதால் போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் அப்போதுதான் பேத்தி பாதிக்கப்பட்டது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர். ‘‘இரு நாட்கள் எங்கு தேடியும் பேத்தியைக் காணவில்லை என்பதால் காவல்துறையில் புகாரளித்தோம். அப்போது, போலீசார் எங்களை அழைத்து, வீட்டில் கோபித்துக்கொண்ட என் பேத்தியை, அந்த 17 வயதான சிறுமி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்ததாகத் தெரிவித்தனர்," என்று கூறும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி, தனது பேத்தி பாதிக்கப்பட்டதே போலீசார் சொல்லித்தான் தங்களுக்குத் தெரிய வந்தது என்றும் கூறினார். "எங்களுக்கு அதற்கு முன் எதுவுமே தெரியாது, என் பேத்தி குழந்தை அவளுக்கு எதுவுமே தெரியாது. குற்றவாளிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்,’’ என, தழுதழுத்த குரலில் பேசினார் அவர். மற்றொரு சிறுமியை அவரது பாட்டிதான் பராமரித்து வருகிறார், சிறுமியுடன் அவரும் காப்பகத்தில் உள்ளதால் 17 வயதான சிறுமி தரப்பு தொடர்பாக யாரிடமும் பேச முடியவில்லை. குற்றவாளிகளாக உள்ள ஒன்பது பேரின் குடும்பத்திடமும், அவர்கள் தரப்பு குறித்து விசாரிக்க பிபிசி தமிழ் பலமுறை முயன்றது. ஆனால், அவர்கள் யாரும் பேச முன்வரவில்லை.   சிறுமிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்! படக்குறிப்பு,‘‘பாலின சமவத்துவம் குறித்து பாடத்திட்டம் உருவாக்கி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் உள்ளோம்,’’ என்று கூறுகிறார் மாதர் சங்கத் தலைவர் சுகந்தி. இரு சிறுமிகளின் குடும்பத்தினரை நேரில் பார்வையிட்ட மாதர் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி, ‘‘பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாழ்க்கை, அவர்களின் பின்புலம், குடும்பம் என அனைத்தையும் பார்வையிட்டோம். சிறுமிகளின் குடும்ப சூழல், அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை பாலியல் ரீதியில் குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர்," என்று கூறினார். தமிழகத்தில் பல போக்சோ வழக்குகள் உரிய நேரத்தில் விசாரணை முடிக்கப்படாமல் விடப்பட்டதால், சாட்சியங்கள் அழிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிப்பதாகக் கூறும் சுகந்தி, "இதன் காரணமாக இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, விரைவில் விசாரணை முடித்து தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்து உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். அதுமட்டுமின்றி, ‘‘பாலின சமவத்துவம் குறித்து பாடத்திட்டம் உருவாக்கி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் உள்ளோம். பாலின சமத்துவக் கல்வியை போதிக்க வேண்டும்,’’ எனவும் சுகந்தி தெரிவித்தார்.   போக்சோ வழக்கில் சிறுமி கர்ப்பமானால் அரசு என்ன செய்யும்? சட்டம் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போக்சோ வழக்கின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் வயது மற்றும் உடல்நலத்தைப் பொறுத்து அவரது கரு கலைக்கப்படுமா, படாதா என்று சட்டபூர்வமாக முடிவு செய்யப்படும். உடுமலை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக உள்ளதால், அரசு என்ன செய்யப் போகிறது? சட்டம் சொல்வது என்ன? சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சுப.தென்பாண்டியனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் வினவியபோது, ‘போக்சோ வழக்குகளில் பாதிக்கப்படும் சிறுமி கர்ப்பமானால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறினார். "முதலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில், கருக்கலைப்பு செய்யும் அளவிற்கு சிறுமியின் உடல்நிலை ஆரோக்கியமாக கருவின் அளவும் ஏற்றபடி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும். சிறுமி வயிற்றில் கரு வலுவாகியிருந்தால் அது கலைக்கப்படாது, பிரசவம் பார்க்கப்பட்டு அந்தக் குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு சட்டப்படி தத்து கொடுக்கப்படும்,’’ என்கிறார் அவர். மேலும், ‘‘ஒருவேளை பாதிக்கப்பட்ட சிறுமி 17 வயதாக இருந்து குழந்தை பெறும்போது அவர் 18 வயதை அடைந்தால், குழந்தையைப் பெற்றெடுத்தவரே வளர்க்க விரும்பினாலும் அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படாது. நீதிபதிகள் விசாரணை முடித்து சட்டப்படிதான் குழந்தை அந்தத் தாயிடம் ஒப்படைக்கப்படும்,’’ எனவும் நம்மிடம் தெரிவிக்கிறார் வழக்குரைஞர் சுப.தென்பாண்டியன்.   ‘சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்படும்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"போக்சோவில் பாதிக்கப்படுவோருக்கு 18 வயது வரை மட்டுமல்ல 21 வயது வரை பராமரிக்க அரசு நிதியுதவி அளிக்கிறது’ என்கிறார் சமூக நலத்துறை அதிகாரி ரஞ்ஜிதா. சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு கல்வி வாய்ப்பு ஏற்படுத்துவதாக உறுதியளிக்கின்றனர் மாவட்ட சமூக நலத்துறையினர். நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்ஜிதா, ‘‘போக்சோ வழக்கில் பாதிக்கப்படும் சிறுமிகளைக் காப்பகத்தில் வைத்து பராமரித்து அவர்களின் மனநலம், உடல்நலத்தை மேம்படுத்தி, கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம்." "அவர்கள் சந்தித்த துயர சம்பவத்தில் இருந்தும், வன்புணர்வு சம்பவத்தில் இருந்தும் மன ரீதியாக அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும். உடுமலை வழக்கில் உள்ள இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.   ’21 வயது வரையில் பராமரிப்போம்’ ‘‘காப்பகத்தில் உள்ள 17 வயதான சிறுமி 10ஆம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளார். நாங்கள் அறிவுரை வழங்கிய பின், அவர் படிப்பைத் தொடர விருப்பம் தெரிவித்து, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காகத் தயாராகி வருகிறார்." "புத்தகங்கள் பெற்று படித்து வருகிறார், வரவுள்ள இடைத்தேர்வு எழுத உள்ளார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் படிப்பைத் தொடர அறிவுரை வழங்கியுள்ளோம்,’’ என்கிறார் ரஞ்ஜிதா. மேலும் தொடர்ந்த அவர், ‘’17 வயதான சிறுமிக்கு குடும்பத்தில் போதிய கவனிப்பு இல்லாததால், 21 வயது வரையில் அவரது கல்விக்கு உதவவும், அவர் விருப்பப்பட்டால் காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். போக்சோவில் பாதிப்பேருக்கு 18 வயது வரையில் மட்டுமல்ல 21 வயது வரையில் பராமரிக்க அரசு நிதியுதவி அளிக்கிறது,’’ என்கிறார் அவர். https://www.virakesari.lk/article/183944
    • ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய "சுரக்ஷா" காப்புறுதித் திட்டம் மீண்டும் ஆரம்பம்! : ஜூன் முதல் வாரத்திலிருந்து சலுகைகளைப் பெறலாம்!  19 MAY, 2024 | 01:03 PM பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த "சுரக்ஷா" மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.  அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்துக்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது.   சுகாதார பிரச்சினைகள் காரணமாக கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வியைத் தொடர வாய்ப்பளித்தல், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலை வரவையும் மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை நோக்கமாக  கொண்டு 2017ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய "சுரக்ஷா" மாணவர் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இத்திட்டம் 01.12.2022 வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், நாட்டில் தற்போது பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்திருந்தார்.  2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான மனித வளங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அதன்படி, அரசாங்க பாடசாலைகள், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கற்கும் 1- 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 5 - 21 வயது வரையான 45 இலட்சம் மாணவர்களுக்கும், விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான பாடசாலைகளில் பயிலும் 4 - 21 வயது வரையான மாணவர்களுக்கும் மருத்துவ மற்றும் விபத்துக் காப்புறுதி உள்ளிட்ட சலுகைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.  மேலும் குறைந்த வருமானம் பெறுவோர் அதாவது 180,000 ரூபாய்க்கும் குறைவான வருட வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆயுள் காப்புறுதியின் கீழ் பெற்றோரின் மரணத்துக்கான நிவாரணங்களும் இந்த திட்டத்தின் கீழ் சகல மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.  1. சுகாதாரக் காப்புறுதி   அரச, தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு 300,000 ரூபாய் வரையில் வழங்கப்படும். அதன்படி அரச வைத்தியசாலைகளில் தங்கும் ஒரு இரவுக்காக  2500 ரூபாய் வழங்கப்படும். (அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டாலும் பெற்றோர் தொழிலுக்குச் செல்ல முடியாமல் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.) தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு ஓர் இரவுக்கு 7500 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.   * நிவாரணத் தொகை 20,000 ரூபாய் வரையில் ஏற்கனவே காணப்பட்ட கண் குறைபாடுகளுக்கான கண்ணாடிகள், செவிப்புலன் குறைபாட்டுக்கான செவிப்புலன் கருவிகளுக்கான நிவாரணங்களும் வழங்கப்படவுள்ளன. அத்தோடு பிள்ளைகள் நோய்வாய்ப்படும் வேளையில் வெளி ஆய்வுக்கூடங்களில் பெறப்படும் அறிக்கைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.  * பாரதூரமான நோய்களுக்கு 200,000 ரூபாய் முதல் 1,500,000 ரூபாய் வரையில் வழங்கப்படும். 2. விபத்துகளுக்கான காப்புறுதி * முழுமையான நிரந்தர ஊனத்துக்கு-200,000/= வழங்கப்படும்.  * முழுமையான இடைநிலை ஊனத்திற்கு - 150,000/= முதல் 200,000/= வரையில் வழங்கப்படும்.  * தற்காலிக ஊனத்துக்கு 25,000/= முதல் 100,000/= வரையில் வழங்கப்படும். 3. வாழ்வாதாரக் காப்புறுதி  * பெற்றோரின் மரணத்தில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பப் பிள்ளைகளின் பெற்றோரில் ஒருவருக்கு 75,000/= வரையில் வழங்கப்படும். பெற்றோர் இருவருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும்.  ஒரு குடும்பத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இந்த நிவாரணங்கள் உரித்தாகும். ஆனால், ஒரு பிரச்சினைக்கு அதிகபட்சமாக 225,000/= ஒதுக்கப்படுகிறது. (அதிகபட்சமாக 3 குழந்தைகளுக்கு தலா 75,000/= ஒதுக்கப்படும்.) இந்தக் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணையவழி முறையின் ஊடாக இந்த நன்மைகள் அனைத்தையும் விரைவாக (குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்குள்) பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட முறைமையொன்று இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்படவுள்ளது.  இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் "சுரக்ஷா" காப்புறுதியின் கீழ் குழந்தைகளுக்கு உரித்தான நிவாரணம், பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப் பிரிவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான விசேட ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றும் உருவாக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சும் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமான பிரிவுடன் ஒருங்கிணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/183944
    • பெரிய‌ப்பு நான் தான் க‌ட‌சி இட‌ம் ப‌ஞ்சாப் ஆப்பு வைக்க‌ வில்லை மும்பை தொட‌ர் தோல்வியால் ப‌ஞ்சாப் 9வ‌து இட‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து இந்த‌ முறை பெரிய‌ புள்ளிய‌ ஒருத‌ரும் பெற‌ போவ‌து கிடையாது கூட்டி க‌ழிச்சு பார்த்தால் நான் தான் க‌ட‌சி இட‌ம்.....................ந‌ம்பின‌ அணிக‌ள் எல்லாம் கைவிட்டால் நில‌மை இப்ப‌டி தான் இருக்கும்😁...............................
    • முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு May 18, 2024     15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே 17) அந்தி வேளையில் கடற்கரையில் வணக்க நிகழ்வொன்றை நடத்தினர். ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். Shoebury East கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும் கவிதைகளாக மாற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான மிதக்கும் நினைவு விளக்குகள் அலைகளில் மிதக்க விடப்பட்டது. அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பங்கேற்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் அதே தீங்கற்ற செயல்பாடு சிறிலங்கா அரசால் தடை உத்தரவுகள், கைதுகள் மற்றும் மிரட்டல்களுடன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. Southend-on-Sea நிகழ்வில் பங்கேற்றவர்களில் பலர் இன அழிப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்களில் ஒருவரான திருமதி நிஷாந்தினி சந்திரதாசன் கூறுகையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இனப்படுகொலை நடந்த இடமும் முள்ளிவாய்க்கால் கடற்கரையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுக்கு ஒரு கடற்கரையில் அமைந்தது பொருத்தமானது என்றார். நிகழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான தருணத்திற்கு முன் அவர் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார். அதன் பின் அங்கு கூடியிருந்த அனைவராலும் நினைவு விளக்குகளும், மலர்களும் கடலில் காணிக்கையாக விடப்பட்டன. ஒளிரும் விளக்குகள் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவு சுமந்து ஆழ்கடல் நோக்கி மிதந்து சென்றன. மே 12 முதல் 18 வரை நடைபெறும் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் போது இந்த வகையான நினைவுச்சின்னங்கள் பரவலாகி, அனைத்து நாடுகளிலும் உள்ள பல கடற்கரைகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை எமது மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அடையாளமாக வருங்கால சந்ததியினர் மறந்துவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-படுகொ-7/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.