Jump to content

வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7

10 MAY, 2024 | 01:20 PM
image
 
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால், பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. 

அதேவேளை, வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/183142

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?

 ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

அதேவேளை, வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போடுவது தடையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போடுவது தடையா?

சிங்கப்பூர் ஆகவேணாமா

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:
3 hours ago, குமாரசாமி said:

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போடுவது தடையா?

சிங்கப்பூர் ஆகவேணாமா

நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கிறது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கிறது.

யாழ்ப்பாணம் சிங்கப்பூருக்கு கிட்டவா வந்திட்டுது.வெய்யில் மட்டும்தான் பிரச்சனையா இருக்கு

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போடுவது தடையா?

இல்லையண்ணை. செய்தியின்படி சந்தையில் வியாபாரம் செய்யும்போது வெற்றிலை போடக்கூடாது எனப்புரிந்து கொண்டேன். வெற்றிலை போட்டபின் சுற்றாடலில் தானே புளிச்சென துப்புவார்கள். அது அங்கு வருபவர்களால் உழக்கப்படலாம் தானே?!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

இல்லையண்ணை. செய்தியின்படி சந்தையில் வியாபாரம் செய்யும்போது வெற்றிலை போடக்கூடாது எனப்புரிந்து கொண்டேன். வெற்றிலை போட்டபின் சுற்றாடலில் தானே புளிச்சென துப்புவார்கள். அது அங்கு வருபவர்களால் உழக்கப்படலாம் தானே?!

வெற்றிலை போடக்கூடாது என்றொரு சட்டம் இருப்பது எனக்குத்தெரியாது.
அப்படி ஒன்றிருந்தால் வரவேற்கத்தக்கதே.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.