Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம்:அரங்கேற்ற வேளை

பாடியவர்: கே ஜே ஜேசுதாஸ்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் பூவாரம்

சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு

மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்

ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்

கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

Edited by nunavilan

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply

இசைஞானியின் தனிப்பட்ட பல நடவடிக்கைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் அவர் தமிழினத்திற்கு கிடைத்த ஒரு பெரும் சொத்து. தமிழர்களுக்கு தமிழ் இசையை கொடுத்த தாய் அவர்.

சபேசன் நீங்களா இப்படி ஏன் இளையராஜாவுக் முன்பு இசையே இருக்கவில்லையா?

ஒவ்வொரு இசையமைப்பாளரும் தன்னுடைய காலத்துக்கு ஏற்ப இசையமைத்துள்ளனர்.இதில் ஒருவரை உயர்த்தி பேசுவது நல்லதல்ல.

15 16 வயசு பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள் ரகுமான்தான் சிறந்த இசையமைப்பாளர். என்று.

35 வயசுக்கு மேற்பட்டவர்களை கேட்டால் விஸ்வநாதன்தான் சிறந்தவர் என்பார்கள்.அவரவர் தங்கள் காலத்தில் கேட்ட பாடல்களi இசையமைத்தவர்களை சிறந்தவர்கள் என்பது இயல்பு.

இளையராஜாவும் சினிமாவுக்கு பல நல்ல பாடல்களை வழங்கியிருக்கின்றார் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் தாய் அவர்தான் இசையை வளர்த்தார் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே அழகி

பாடியவர்: விஜய் ஜேசுதாஸ், நந்திதா

இந்தப் பாட்டு இளையராஜா ஸ்பெஷல். அங்கங்கு “அது ஒரு கனாக்காலம்” என்று நினைக்கத் தோன்றும் பாட்டு இது. இளையராஜாவின் மெலடி மெட்டு என்றாலே ஒரு தனித்தன்மை இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம். சரணத்தில் குரல்களோடு வயலின்கள் தொடர்ந்து வருவதைக் கொஞ்சம் கேளுங்கள். சின்ன விஷயம் கூட எப்படிப் பாட்டு அமைப்பை மாற்றும் என்று தெரிய வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

படம்: தளபதி

பாடியவர்கள்:எஸ்.பி .பி, ஜானகி

இசை:இசைஞானி இளையராஜா.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே... (சுந்தரி)

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா

பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

அ அ அ வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்ஜில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை

எனைத் தான் அன்பே மறந்தாயோ

மறப்பேன் என்றே நினைத்தாயோ... (சுந்தரி)

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்

பாலயெங்கும் பூக்கள் ஆகும் நீ என் மார்பில் தூங்கினால்

அ அ அ வாரங்கலும் மாதம் ஆகும் நானும் நீயும் நீங்கினல்

மாதங்களும் வாரம் ஆகும் பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்

காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்

வருவேன் அன்னாள் வரக்கூடும்... (சுந்தரி)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

கம்ப்யூட்டர் மூலம் இசை என்று செய்தி வந்து ஜூரம் போன்று கம்ப்யூட்டர் ம்யூசிக் என்று எல்லாரும் சிலாகித்த நேரம் அது. புன்னகை மன்னனில் (1986) இளையராஜா கம்ப்யூட்டரை வைத்து இசையமைத்திருக்கிறார் என்று பரபரப்பாகப் பேசிக்கொண்டார்கள். கேஸட் வந்ததும் அடித்துப் பிடித்து வாங்கிப் பாடல்களைக் கேட்டால் இசை பளிங்கு மாதிரி படு துல்லியமாக இருந்தது. கேட்கும்போதே புல்லரித்தது. கம்ப்யூட்டர் இசையென்றால் படங்களில் பார்த்ததுபோல் ரிகார்டிங் தியேட்டரில் வயலின் வரிசைகள் எதுவும் இல்லாது, கம்ப்யூட்டர் முன் இளையராஜா ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டு இசையைத் தட்டச்சுவது போன்ற காட்சி மனக்கண்ணில் ஓடியது.

பின்பு ஏதோ ஒரு பேட்டியில் இளையராஜா "கம்ப்யூட்டர் இசை என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. நாம் உள்ளே செலுத்துவதை அது வெளியே தள்ளுகிறது" என்பது போன்று சொன்ன மாதிரி நினைவு. (இதே பாணியில் குப்பையைக் கொடுத்தால் குப்பையைத் தள்ளும் என்ற பழமொழியையும் கணிணித் துறையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி உபயோகிப்பார்கள்). அதாவது கம்ப்யூட்டர் ஒருநாளும் இசைஞானியாக முடியாது!

படத்தில் கமல் (குரு பக்தியினாலோ என்னவோ) நிறைய சிரத்தையுடன் கஷ்டப்பட்டுச் செய்திருந்தார். அபூர்வ சகோதரர்கள் அப்புவுக்கு முன்னோட்டமாக சார்லி சாப்ளின் குள்ளமாகும் காட்சியைப் புன்னகை மன்னனில் செய்திருந்தார் கால்களை மடக்கிக் கட்டிக்கொண்டு முழங்காலில் ஷூக்களை வைத்து நின்றார் என்பது புரிந்தாலும், ஒரு முறை மடக்கிக் கட்டி நின்றோ நடந்தோ நாம் பார்த்தால்தான் அவர் பட்ட சிரமம் எவ்வளவு என்று புரியும்.

வழக்கமான காதல் கதை என்றாலும், கமலின் அட்டகாசமான நடிப்பு, நடனம், பாடல்கள், இசை என்று பல காரணங்களுக்காகப் படம் 100 நாள் மதுரையில் ஓடியது. டைட்டில் பாடலான "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" முழுவதிலும் சில்-அவுட் போன்று உருவங்கள் நிழலாக வரும்.

மேடைப் பாடலுக்கு கமலும், ரேவதியும், இருக்கை மீது சாப்ளின் செல்லப்பாவும் நடனமாடும் காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் பாடல் அருமையான தாளத்துடன் நன்றாக இருக்கும். வயலின்கள் நிறைந்த வெண்மைப் பின்னணியுடன் மேடை அமைப்பு சிறப்பாக இருக்கும்.

ஊட்டியின் தேயிலைத் தோட்டச் சரிவுகளில் IND SUZUKI சிவப்பு பைக்கில் கமலும் ரேவதியும் பிரயாணித்துக்கொண்டே பாடும் "சிங்களத்துச் சின்னக் குயிலே" பாடலும் ஓஹோ ரகம். சரணத்திற்கு முன்னால் கை தட்டல்கள் வரும். பொறுமையாக எண்ணி 36 தடவை கை தட்டுகிறார்கள் என்று கணக்கிட்டிருக்கிறேன்.

இரண்டு சாப்ளின்கள் மோதிக்கொள்ளும் மாமாவுக்குக் குடுமா குடுமா பாடல் ஒரு ஸ்பெஷல். ரேவதி அமர்ந்திருக்க பின்புறமாக வரும் சாப்ளின் கமல் மூங்கில் இருக்கையில் அமர்வதும், இருக்கையோடு எழுந்து உருண்டு புரள்வதும் கைத்தடியைச் சுழற்றுவதும் என்று கமல் பின்னியெடுத்திருப்பார். பின்பு ரேவதியை நோக்கி, பின்புறம் ஒட்டியிருக்கும் இருக்கையோடு ஒரு நடை நடந்து வருவார் பாருங்கள் - அபாரம்! நிறைய இடங்களில் சாப்ளினை அப்படியே கொண்டு வந்தது அவர் சாதனை.

ரேவதி ஸ்ரீவித்யாவிற்கு தனது நடனத்தின் மீதான அபிமானத்தை நிரூபிக்க இரவுபகலாக ஆடும் கவிதைக் கேளுங்கள் பாடலும் அருமையான பாடல்.

கமல் ரேவதியிடம் காதலை வெளிப்படுத்தும் Love theme இசையும் நடனமும் கண்ணிலேயே நிற்கின்றன. இன்றைய காக்கா வலிப்பு நடனங்களுக்கு நளினமான அந்த நடனம் எவ்வளவோ மேல்.

இந்தப் பாடலில் பாலு அசத்தியிருப்பார். இசை, குரல் என்று எல்லாவிதத்திலும் இன்று வரை மெய்மறந்து கேட்கச் செய்யும் பாடல் "என்ன சத்தம் இந்த நேரம்" பாடல். காட்சியாக்கமும், சூழ்நிலையும் அருமையாக அமைந்த பாடல்.

"கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே"யில் ரேகாவின் கன்னத்தில் முத்தத்தின் ஈரம் தெரியும்.

"மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு" வரிக்கு ரேகாவும் கமலும் கண்ணிமைகளை மூடுவது நல்ல டைமிங்.

ரேகாவின் அடர்த்தியான கூந்தலைக் காட்டி, திடுக்கென்று அதை ஊடுருவி வரும் கமலின் விரல்களைக் காட்டுவார் பாலசந்தர் "கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ" வரிக்கு. ஒரு மாதிரியான ஹஸ்கி குரலில் பாலு அவ்வளவு மென்மையாகப் பாடியிருப்பார். அந்த மந்திரக் குரலுக்கு வந்தனங்கள்! அதை அவருக்களித்த இறைவனுக்கு நன்றி.

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா

கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா

அடடா..

(என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே

கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு

ஆரிரரோ இவர் யார் எவரோ

பதில் சொல்வார் யாரோ

(என்ன)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ

உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்

ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யாரிவர்கள் இரு பூங்குயில்கள்

இளங்காதல் மான்கள்

(என்ன)

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம் : ஆறிலிருந்து அறுபது வரை!

ரஜினியின் 51-வது படம். 1979-இல் வந்தது. S.P. முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில்.

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் பாலுவும் ஜானகியும் அழகாகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் கண்மணியேஎஏஎஏ கற்பனையோஒஓஒஓ காவியமோஒஓஒஓ என்று தென்றலைப் போலவே மிதந்து மிதந்து காதில் ஒலிக்கிறது. சரணத்தின் வரிகளுக்குப் பின்னணியாக 'லாலல லாலல' என்று தொடர்ச்சியாக குரல்களை ஒலிக்க விட்டிருப்பதே ஒரு கனவுலகத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது.

கண்மணியே காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா

நேரமும் வந்ததம்மா

பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

இந்தப் பாவையின் உள்ளத்திலே

பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

(கண்மணியே)

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்

தேவையை நானறிவேன்

நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்

இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

(கண்மணியே)

  • கருத்துக்கள உறவுகள்

படம்:விறுமாண்டி

இசை: இளையராஜா

உன்னை விட இந்த உலகத்தில் உள்ளது ஒண்ணும் இல்லை (2)

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

வாக்குபட கிடைசான் விருமாண்டி

சாட்சி சொல்ல சன்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி

கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்னை விட உன்னை சரிவர புரின்சிக்க யாருமில்லை யெவளுமில்லை

உன்னை விட..... என்னை விட........

அல்லி கொடிய காது அசைக்குது

அசையும் கொளதுக் உடம்பு கோசுது

புல்லரிசு பாவம் என்னை போலவே அலை பாயுது

நிலவில் காயும் வஎட்டி சேலையும்

நம்மை பார்து சோடி சேருது

சேர்து வைச்ச காதே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனல் ஆகுதேய் என் தயக்கம்

யாரு சொல்லி தந்து வந்தது

கான கனவு வந்து கொள்ளுது

இதுக்கு பாரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா....

உன்னை விட.................................

காட்டு வழி காளைங்க கழுத்து மணி

கஎட்கயில நமக்கு அது கோயில் மணி

ராதிரியில் புல் வெளி நனைக்கும் பனி

போதிகிற நமக்கு அது மூடு பனி - உன்னை விட......

உன் கோட நான் கோடி இருந்திட

எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா

நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா?)

நூறு ஜென்மம் நமக்கு போதுமா

வேற வரம் யாதும் கேட்போமா?

சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்

ஆகாசம ஆன போதிலும்

என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்து தான் பொறக்கனும்

இருக்கனும் கலக்கனும்

(உன்னை விட...)

வாழ்கை தர வன்தான் விருமான்டி

சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி

கேட்ட வரம் உடனே தன்தான்டி

(உன்னை விட....)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பொன் மானே கோபம் ஏனோ

காதல் பால்குடம் கள்ளாய் போனது

ரோஜா ஏனடி முள்ளாய் போனது

(பொன்)

காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா..

ஊடல் என்பது காதலின் கௌரவம் போ..

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கொபம் கொள்வதா

லா..லலா..லலா.. லா.. லலா..லலா.. லா..லலா..லலா..

ஆண்கள்.. எல்லம்.. பொய்யின் வம்சம்

கோபம்.. கூட.. அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓகோ....

(பொன்)

உந்தன் கண்களில் என்னையே பார்கிறேன் நான்

ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்கிறேன் வா.

உன்னை பார்ததும் எந்தன் பெண்மைதான் கண்ணை திறந்ததே

லா..லலா..லலா.. லா.. லலா..லலா.. லா..லலா..லலா..

கண்ணஎ.. மேலும்.. காதல்.. பேசு

நேரம்.. பார்த்து.. நீயும்.. பேசு

பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓகோ....

பொன் மானே கோபம் எங்கே

பூக்கள் மோதினால் காயம் நேருமா

தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா லா... லாலா..லாலா..லாலா....

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இதயம் திரைப்படத்தில் இடம் பெற்ற என் இதயம் கவர்ந்த இனிய பாடல் காந்தர்வக்குரலோன் கே.ஜே.ஜேசுதாசண்ணாவின் குரலில்.

http://www.youtube.com/watch?v=atFl3KQcdBY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் இளையராஜாவின் மற்றுமொரு இன்னிசைப் பிரவாகம். ஒரு பாடல் என்றென்றும் மனதில் நிலைத்திருக்க அதற்குப் பல காரணிகள் சரியாக அமைந்திருக்க வேண்டும். அதில் பிரத்தியேகமான தாளக்கட்டும் (பாடலில் அது அடிக்கடி மாறினால் இன்னும் சிறப்பு) பல்லவியில் ஒரே மெட்டு திரும்பவும் உபயோகிக்காமல் இருத்தலும் இன்றியமையாதது.

இந்தப்பாடலில் தாளம் 3x4 இல் அமைந்து அந்த அமைப்புக்குள் வித்விதமாக மாறிக்கொண்டே இருக்கும். இதனால் ஒரு சோர்வு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் பல்லவியின் ஒவ்வொரு வரியும் ஒரு தனித்துவமான மெட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

பாடலின் இடையீட்டு இசை என்னை மிகவும் கவர்ந்தது. முக்கியமாக முதலாவது இடையீட்டு இசையில் நேரக்கணக்கில் 1:10 க்கு வரும் புல்லாங்குழல் மற்றும் அதைத் தொடர்ந்த வயலின் இசை மிகவும் அமர்க்களம்.

இதுவரை இதன் ஒளிவடிவை நான் பார்த்திருக்கவில்லை. தற்போதுதான் பார்த்தேன். ஐயகோ..! இப்படிக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்களே..! :D இதனால் யாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், யாரும் இதன் ஒளிவடிவத்தைப்பார்க்காமல் இசையை மட்டும் கேட்டுக்கொண்டு தளத்தில் வேறு எதையாவது செய்யுங்கள்..! :wub::)

டங்குவார்

நீங்கள் மேலே சொல்லியுள்ள தீபம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்ப் பதிவின்போதுதான் கவியரசு வைரமுத்துவிற்கும் கே.ஜே.ஜேசுதாசிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. காரணம் கே.ஜே.ஜேசுதாசிற்கு தமிழில் , உச்சரிப்பு சரியாக வராது. அதனால்த்தான் பாடலில் வரும் கிளியே கிளியே என்பதை கிலியே கிலியே என அவர் பாட அதை வைரமுத்து திருத்த முயன்றும் முடியாமல் போய்விட்டது. இப்படி உச்சரிப்புப் பிரைச்சினைகள் பல தடவைகள் ஏற்பட்டு கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் ஒலிப்பதிவிலிருந்து இசையமைப்பாளர்களுக்குச் சொல்லாமலேயே வெளியேறியிருக்கின்றார். இதை மெல்லிசைமன்னர் விஸ்வநாதனும் ஒரு செவ்வியின் போது சொல்லியிருந்தார்.

Edited by Vasampu

தீபம் திரைப்படத்திற்கு வைரமுத்து பாடல் எழுதியிருக்க சந்தர்ப்பமே இல்லை. தீபம் 1977ஆம் ஆண்டு வெளிவந்தது.

வைரமுத்து அறிமுகமான நிழல்கள் 1980இல் வெளிவந்தது.

தீபம் திரைப்படம்தான் இளையராஜா முதல் ஒப்பந்தமான படம் என்றும், அதற்கு தான் பாட்டு எழுதியதன் மூலம் இளையராஜாவின் இசையில் முதலாவதாக பாடல் எழுதியதுதான் தான்தான் என்று கங்கைஅமரன் கூறிய ஒரு பேட்டி படித்திருக்கிறேன்.

வசம்பு வேறு ஒரு படத்தை மாறிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

படம்:சின்ன கவுண்டர்

பாடியவர்கள்:சுசிலா, எஸ்.பி .பி

இசை: இசை ஞானி இளையராஜா

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ இல்லாதபோது

படம்: இளமைக் கோலம்

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், ஜென்சி

இசை: இளையராஜா

ஒரு ஏகாந்த உலகத்தில் சஞ்சரிக்க வைக்கும் இனிய காதல் மெட்டு. எண்பதுகளில் தாயகத்தில் இருந்தவர்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள். இதுபோன்ற பாடல்களைக் கேட்கும்போது ஏக்கம் பரவுவது தவிர்க்க முடியாதது.

பாடலில் சிறப்பம்சங்களில் ஒன்று தபலா. வித்தியாசமான முயற்சி. குறிப்பாக "நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்" என்ற வரிகள் முழுக்க பாடலின் தாளத்துக்குள் வாசிக்காமல் இருப்பது நன்றாக இருக்கும்.

கேட்டு மகிழுங்கள்.

http://www.youtube.com/watch?v=pX3gACqUZuM

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இசைஞானி
பாடியவர்:எஸ் .பி பாலசுப்பிரமணியம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by nunavilan

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் சுகன்யா நடித்திருக்கும் சின்னக் கவுண்டர் (1991) படத்தில் பல அருமையான பாடல்கள். ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருக்கிறார். இந்தப் பாடலை பாலுவும் சுசீலாவும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசைஞானியின் இசை ஒரு தென்றல். "அந்த வானத்தப் போல" பாடல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

விஜயகாந்த் தவசி பாத்திரத்தில் நன்றாகச் செய்திருந்தார். தமிழ்ச் சினிமாக்களின் வழக்கமான கிராமத்துக் கதை.

படத்தை முழுவதுமாக உட்கார்ந்து ஒருமுறை கூட பார்த்ததில்லை. பகுதி பகுதிகளாக சில காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். மனதில் நிற்கும் காட்சிகளில் ஒன்று பணத்தைப் புரட்டுவதற்காக விருந்தளித்து சாப்பிட்டுவிட்டு இலைக்கடியில் வைத்துவிட்டுப் போகும் பணத்தைச் சுகன்யா வரிசையாக எடுத்துக்கொண்டு வரும்போது விஜயகாந்த் தனது இலைக்கடியில் தாலியை வைப்பதும் அதைச் சுகன்யா பார்ப்பதும் - அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் சுகன்யா - ஆயிரம் கதை சொல்லும் அந்த ஒரு காட்சி.

இந்தப் பாடலின் சூழ்நிலையும் அதைப் படமாக்கியிருக்கும் விதமும் வரிகளும் கச்சிதமாக ஒன்றுக்கொன்று பொருந்தியிருக்கின்றன. சுகன்யாவின் தாய் இறக்கும்போது அளித்துவிட்டுப் போகும் ஒரே சொத்தான முத்துமணி மாலையை பணப்பிரச்சினைகளுக்காக அடகு வைக்க நேர்வதும் அதை விஜயகாந்த் மீட்டெடுத்து திருமண நாளின் இரவில் திரும்ப அளிப்பதும் நன்றாக அமைக்கப்பட்ட - வசனங்களை நம்பியிராமல் காட்சிகளில் உணர்வுகளை வெளிப்படுத்தும் - காட்சிகள்.

பாலு பாடுவதைப் போலவே அவர் குரலுக்கு "மவுசுதான் கொறயுமா?" என்று மிடுக்கோடு கேட்டுக் கொள்ளலாம். தெளிந்த நீரோடை போன்ற சுசீலாவின் குரல்.

உண்ட மயக்கத்தில் வேப்பமர நிழலில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருக்கும்போது லேசாக வீசும் தென்றல் காற்று கிளப்பும் இதமான சுகமான அந்த உணர்வு இந்தப் பாடலைக் கேட்கும்போதும் எழுகிறது.

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமி உன் பேர்தானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

கொலுசுதான் மெளனமாகுமா

மனசுதான் பேசுமா

மேகந்தான் நிலவை மூடுமா

மவுசுதான் கொறயுமா

நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

காலிலே போட்ட மிஞ்சிதான்

காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலிதான்

காவியம் பாடுதே

நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்

பொட்டுவச்சதாரு நாந்தானே

அத்திமரப் பூவும் அச்சப்படுமா?

பக்கத்துணையாரு நீதானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமரும் நீதானே

இது நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் சுகன்யா நடித்திருக்கும் சின்னக் கவுண்டர் (1991) படத்தில் பல அருமையான பாடல்கள். ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருக்கிறார். இந்தப் பாடலை பாலுவும் சுசீலாவும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசைஞானியின் இசை ஒரு தென்றல். "அந்த வானத்தப் போல" பாடல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நுணாவிலான்,

இந்தப்பாடலைப் பற்றி ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றை இயக்குனர் உதயகுமார் ஒரு பேட்டியில் சொல்லக் கேட்டேன். அதாவது, இந்தக் காட்சிக்கு இளையராஜா மற்றும் பாடலாசிரியருடன் அமர்ந்து மெட்டமைத்து பாடல் எழுதி முடித்துவிட்டார்களாம். பின்பு ஒருநாள் பாடல் பதிவுக்கு எல்லோரும் வந்திருக்கிறார்கள். காலை 7 மணி. இளையராஜா பாடலுக்கான இச்சைக்குறிப்புகளை உருவாக்கி எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனால் உதயகுமாரின் முகத்தில் ஒரு வாட்டம். என்னவென்று ராஜா கேட்க இவர் தனக்கு அந்த மெட்டில் பெரிதாகத் திருப்தியில்லை என்றிருக்கிறார்.

அதற்கு ராஜா பாடல், மெட்டு, இசை எல்லாம் போட்டு முடித்து இசைக்கலைஞர்களும் பாடல் பதிவுக்காக ஒத்திகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, என்ன இது என்று சிறிது கோபத்துடன் கேட்டாராம். அதற்கு உதயகுமார் எப்படியாவது நீங்கள்தான் மாற்றிக்கொடுக்கவேண்டும் என்று சொன்னாராம்.

சரியென்று அமர்ந்த ராஜா அரைமணி நேரத்தில் மெட்டுப்போட்டு இசையமைத்த பாடல்தான் இந்த முத்து மணிமாலையாம். :rolleyes: முதலில் போட்ட மெட்டு பிறகு எந்தப்படத்தில் வந்ததோ தெரியவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

Danguvaar, அத்தகவலுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என் மன வானில்

படம்: காசி

இசை: இளையராஜா

பிரமாதமான இசை மற்றும் பாடல் வரிகள். மெய்சிலிர்க்கவைக்கும் விக்ரமின் நடிப்பு. பிறகென்ன..? :unsure:

பல்லவி:

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே

என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே

என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே

என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

உங்களைப்போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசைகொண்டேன்

சிறகுகளின்றி வானத்தில் பறந்து தினம்தினம் திரும்பி வந்தேன்

ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே

இதயம் தாங்குமோ நீ கூறு

(என் மன..)

சரணம் 1:

இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான்

மனிதரில் இதை யாரும் அறிவாரோ

நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ

பூமியில் இதை யாரும் உணர்வாரோ

மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்

எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே

ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக்கொள்வேன்

என் நெஞ்சில் உண்மையுண்டு வேறென்ன வேண்டும்

(என் மன..)

சரணம் 2:

பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்

பாடினேன் அதை நாளும் நாளும்

பொருளிலாப் பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்

போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்

மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன்

மறந்திடா ராகம் இதுதானே

வாழ்க்கை என்னும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம்

பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி

(என் மன..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நிற்பதுவே

படம்: பாரதி

பாடல் மூலம்: மகாகவி சுப்பிரமணிய பாரதி

இசை: இளையராஜா

இனிய யாழ்கள நேயர்களே.. :unsure:

நான் அண்மையில் கேட்டு ரசித்த ஒரு இனிய பாடல்.. இதில் முழுமையான பாடல் உபயோகிக்கப்படவில்லை. இரண்டாவது சரணம் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் எனக்கு சிறிது வருத்தம். உள்ளதை உள்ளபடியே உபயோகிக்கவேண்டுமென்பது என் விருப்பம்.

மற்றும்படி, பாடல் வரிகளில் உள்ள அர்த்தங்கள் ஆழமானவை. படைப்பைப் பற்றி ஆராயும் பாரதியின் பாங்கு அற்புதம். ஒரு சிறு வருத்தம் தோய்ந்த உணர்வு பாடல் வரிகள்தோறும் இழையோடுகிறது. அதற்கேற்றாற்போல் ராஜாவின் இசை வேறு.. சொல்லவும் வேண்டுமா? :wub:

பல்லவி:

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்

சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்

அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

சரணம் 1:

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்

கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்

நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

சரணம் 2:

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்

கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?

நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

இரண்டாவது சரணம் தொடங்கி பாரதியின் வரிகள் முழுமையாக:

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்

கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்

சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?

வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை

காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

படம்: இரட்டை வால் குருவி.

உயிர்: இளையராஜா.

குரல்: கே.ஜே.யேசுதாஸ்.

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு உண்டானதே

(ராஜ ராஜ சோழன் நான்...)

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே

கை நீட்டும் போது பாயும் மின்சாரமே

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்

இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்

அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்

உன் ராக மோகனம் என் காதல் வாகனம்

செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

(ராஜ ராஜ சோழன் நான்...)

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே

துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே

பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே

முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே

என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே

தேனோடை ஓரமே நீராடும் நேரமே

புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி

(ராஜ ராஜ சோழன் நான்...)

இசைத்தோர் இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ், மோகன்

Fantastic interludes and violin work at the end..

  • கருத்துக்கள உறவுகள்

படம்: புவனா ஒரு கேள்விகுறி

பாடல்: விழியிலே மலர்ந்தது

இசை: இசைஞானி

பாடியவர்: எஸ்.பி.பி

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கீரவாணி

படம்: பாடும் பறவைகள் (தமிழில்)

இசை இளையராஜா

எண்பதுகளில் வெளிவந்த இந்தப் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். மிக இனிமையான அதே சமயம் ஒரு வித்தியாசமான மெட்டு. பாடலைமட்டும் கேட்டு அனுபவித்துவிட்டு பிறகு அதன் காட்சியைப் படத்தில் பார்த்தபோது அது படமாக்கப்பட்ட விதம் பிடிக்கவில்லை.. இது இந்தப்பாட்டுக்கு மட்டுமல்ல. இன்னும் பல இனிய பாடல்களுக்கு இந்தக் கொடுமை நடந்துள்ளது. அதனால் ஒரு மேடையில் தெலுங்கில் பாடப்பட்ட ஒளிவடிவை இங்கே இணைக்கிறேன். இசைக்கு மொழி தடையில்லைதானே? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

படம்: தளபதி.

உயிர்: இளையராஜா.

உடல்: வாலி.

குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல சேதி

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

(சுந்தரி கண்ணால் ஒரு சேதி...)

வாய்மொழிந்த வார்த்தை யாவும்

காற்றில் போனால் நியாயமா

பாய்விரித்துப் பாவை பார்த்த

காதல் இன்பம் மாயமா?

வாள் பிடித்து நின்றால் கூட

நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட

ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவுதான் வாட ஏனிந்த சோதனை

வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை

எனைத்தான் அன்பே மறந்தாயோ

மறப்பேன் என்றே நினைத்தாயோ

(சுந்தரி கண்ணால் ஒரு சேதி...)

சோலையிலும் முட்கள் தோன்றும்

நானும் நீயும் நீங்கினால்

பாலையிலும் பூக்கள் பூக்கும்

நானுன் மார்பில் தூங்கினால்

மாதங்களும் வாரம் ஆகும்

நானும் நீயும் கூடினால்

வாரங்களும் மாதம் ஆகும்

பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ

நீயெனைத் தேடினால்

காயங்களும் ஆறாதோ

நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்

வருவேன் அந்நாள் வரக் கூடும்

(சுந்தரி கண்ணால் ஒரு சேதி...)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.