Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

15 வருடங்கள் கடந்த போதிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

15 ஆவது முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று(12.05.2024)  இலங்கை தமிழரசு கட்சியின் பருத்தித்துறை தொகுதியினரால் வல்வெட்டு வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் வாரம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் கடைசி நாட்களில் எமது மக்கள் கஞ்சிக்கு கூட பறிதவிக்கின்ற நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/sumandran-presscomment-mullivaikal-remembrance-day-1715539722

ஓநாய் நீலி கண்ணீர் வடிக்கிறது பதவிக்காக .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓடி  ஓடி உலக நாடெல்லாம் திரிந்து சொறிலங்காவில் இனவழிப்பு நடைபெறவில்லை என்று தனியாக சென்று தமிழரசு கொடுத்த பதவியுடன் சொல்லி நம்ப வைத்த  தமிழரின் துரோகி பயல் இப்ப இப்படி சொல்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, பெருமாள் said:

ஓடி  ஓடி உலக நாடெல்லாம் திரிந்து சொறிலங்காவில் இனவழிப்பு நடைபெறவில்லை என்று தனியாக சென்று தமிழரசு கொடுத்த பதவியுடன் சொல்லி நம்ப வைத்த  தமிழரின் துரோகி பயல் இப்ப இப்படி சொல்கிறார் .

அடுத்து என்னுடைய திட்டம் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகி வேலை வெட்டி இல்லாமல் சும்மா வீட்டில இருக்கிற ஒரு புரக்கிராசியைப் பிடித்து தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுக்கூடம் நிர்வாகக் குழுக்கூட்டம் இவை போன்றவை நடக்கவிருந்தால் நீதிமன்றில் ஒரு இடைக்காலத் தடை வாங்கி இவங்களை ஓட ஓட விரட்டுவத்துதான்.

தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகளின்படி ஒரு தலைவர் ஆக்கக் கூடியது இரண்டு வருடத்துக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது என்பதாகும் ஆகவே இனிமேல் எது நடந்தாலும் புதிய தலைவர் செயலாளர் தெரிவின் பின்பேதான் கூட்டமோ கும்மாளமோ நடக்கவேணும் எனக் கட்டையைப் போட்டல் ஆனந்த சங்கரியர் கூட்டணியை முடக்கினதுபோல தமிழரசுக்கட்சியும் முடங்கிப்போயிடும் இதை எவர் வேண்டுமானாலும் பொது நல வழக்காக நீதிமன்றில் வாதிடலாம் அதுக்குபின்பு எல்லாம் ஒழுங்கா நடுக்குதா பார்க்கலாம்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே சர்வதேசம் "கம்" மென்று இருங்க புலிகளை அழித்து முடிந்ததும் தமிழர்களுக்கு தீர்வு பெற்று தருகிறோம் என்றார்களே.

இதுவரை எந்த சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டி எங்கையா தீர்வு என்று கேட்டீர்கள்?

மக்களைச் சேர்த்து அவர்களின் வாசலில் பெரியதொர போராட்டமே நடத்தியிருக்கலாமே?

15 hours ago, பெருமாள் said:

15 வருடங்கள் கடந்த போதிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

 

  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.