Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"பூ மேயும் வண்டு "
 
 
சங்க இலக்கியத்தில், நற்றிணைப் பாடல் 290 இல், ஆண்களை "பூ மேயும் வண்டு" என்று தோழி சாடுகிறாள்.
 
 
“வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே! 5
நீயே பெரு நலத்தையே; அவனே,
''நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு'' என மொழிப; ''மகன்'' என்னாரே.”
 
இதன் பொருள்:வயலில் வெள்ளாம்பல் பூக்கும். அது தலையில் சூடத் தகுந்த பூ. அதனைக் கன்று போட்டிருக்கும் பசு உண்ணும். அது தின்ற மிச்சத்தை நடை தளர்ந்த எருது மேயும். இப்படிப்பட்ட நில நாட்டுத் தலைவன் அவன். அவன் தொடர்பினை நீ நிலையாகக் கொண்டிருக்க விரும்பினால், என் சொல்லைக் கேள். நீயோ முள்ளைப் போன்ற பல் வரிசையுடன் பேரழகு மிக்கவள். என்றாலும், அவன், நீர் நிறைந்த பொய்கையில் அன்றாடம் மலரும் புது மலர்களை ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன் என்று கூறுகின்றனர். அவனை “மகன்” என்று யாரும் மதிப்பதில்லை. கவனமாக நடந்துகொள் என்று இந்த பாடல் அறிவுறுத்துகிறது. இப்படியே காளிதாசனும் ஆண்களை சாடுகிறான் !!
 
 
"Kalidasa in Shakuntalam Drama (Act 5 - verse eight)
 
O ,you honey -pilfering bee!
Greedy as ever for fresh honey
Once ,you lovingly kissed
The mango’s fresh spray of flowers -
And forgotten her so quickly?
You are content now merely to stay
Within the full blown lotus "
 
இதன் பொருள்: “தேன் திருடும் வண்டே, எப்போதும் புதிய பூவுக்கு பேராசை பாடுபவனே, முன்னர் மாமரப் பூவை கொஞ்சி தேனுண்டாய், அவளை மிகவும் விரைவாக பின் மறந்தாய், இப்போது தாமரைப் பூவை தழுவி நுகர்கிறாயே" என்பதாகும்.
 
அதே போல 1958 ஆம் ஆண்டு,பழைய கருப்பு / வெள்ளை திரைப் படம் "நான் வளர்த்த தங்கை" யில்:
 
"ஆண்கள் மனமே அப்படிதான் – அது அடிக்கடி மாறும் இப்படித்தான்"
 
என்ற ஒரு வரியையும் காண்கிறோம். எல்லா பூக்களிலும் தேனின் சுவை இனிமை தான். ஆனாலும் - தாவும் குணத்தை வண்டுகள் மாற்றுவ தில்லை என்கிறது இந்த பாடல்.
 
அதே போல, பெண்களை இலக்கியவாதிகளும், கவிஞர்களும் பூவையர் என்று அழைப்பார்கள். பூவைப் போல் அழகானவர்கள். பூவைப் போல் மென்மையாவர்கள் என்பது இதன் பொருள். பூவுக்கும் பெண்ணுக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. சரியான கவனிப்பு இல்லாத பொழுது துவளும். தலைவன் தலை எதிர்பட்டதும் மலரும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]   
281024615_10221021934880837_1385487513523222890_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_r2hRMAlBFIQ7kNvgFSfyHl&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCKoyvwGy4OE10zPqvsqX5ZOl7k-IZ37t0QLXMUHrv_ug&oe=6647F906 281167234_10221021935720858_2159331293615714956_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BSwkcEr9UaYQ7kNvgFaDM0l&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYA8D9Tc5QbfuGr3mPigq7S5i88E3jvKKz8QvPPZQIphEw&oe=6647EF12
 
  • கருத்துக்கள உறவுகள்

சிச்சுவேசன் சாங்; 

உபயம்; இளையராஜா

படம்: காதல் ஓவியம் 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:
ஆண்கள் மனமே அப்படிதான் – அது அடிக்கடி மாறும் இப்படித்தான்"
 

இயற்கை ஐயா.

மலருக்கு மலர் தாவினாலே வண்டின் வயிறு நிறையும்.

மகரந்தச் சேர்க்கையும் நடக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.