Jump to content

"பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!"
 
 
முதற்கண் [முதலில்] தாழ்மை பற்றிய சொல்லின் பொருளை பார்ப்போம்.
 
1] lowliness of mind, humility, பணிவு
2] inferiority of rank ; கீழ்மை
3] poverty, எளிமை
 
ஆகும். ஆகவே தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணிப் படியாகும்..! அதாவது தாழ்மை என்பது ‘பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்’ என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது. இது நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவது என்று பொருள்படாது. ஆணவத்தை அல்லது ‘நான்’ என்கின்ற சிந்தனையை அடக்குவதே என பொருள் கொள்ளலாம்.
 
‘நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டு மெனில் தாழ்மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.
தாழ்மையைப் பற்றி சமயங்கள் என்ன கூறுகின்றது என்று பாருங்கள்:
 
'தங்களது பிரார்த்தனையில் தாழ்மையாய் இருக்கும் மக்களையே வெற்றிகள் வந்து சேரும்' - இஸ்லாம்.
 
'கடவுளுக்கு முன்பாக தனது ஒன்றுமில்லாமையைக் குறித்து அழுது புலம்பி வேண்டினால் கடவுளைக் காணலாம்' - அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் மதம்.
 
'தாழ்மையாய் இருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாய் இருங்கள், குருவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள், தன்னலத்தை விட்டொழியுங்கள்' -பகவத் கீதை.
 
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - (மத்தேயு 23:11-12)
 
'கர்வத்தைத் தாழ்மையால் வெல்லுங்கள்'- சமண மதம்.
 
 
இப்படி எல்லா சமயங்களும் கற்பிக்கும் தாழ்மை, எமது மனதில் இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற எல்லா தடைகளையும் குறைகளையும் இலகுவாக வென்று விடலாம் என்பதே உண்மை.
 
 
“மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய”
என்பது தொல்காப்பிய நூற்பா.(தொல். பொருளியல். 31)
 
 
இல்லறம் நிகழும்போது, மனைவி தலைவனிடத்தில் காரணம் பற்றியோ அல்லது காரணத்தைக் கற்பித்துக் கொண்டோ ஊடுதலும், ஊடலைத் தணிக்க நாயகன், தன்னுடைய தலைமைப் பண்புக்கு மாறாக, அவளடியில் பணிதலும் [தாழ்தலும்], அவன் அவ்வாறு பணிந்த [தாழ்ந்த] போது, நாயகி அச்சமும் நாணமுமின்றி நாயகனின் பணிதலை [தாழ்தலை] ஏற்றுக் கொள்வதும் தலைவன் தலைவி இருவர்க்கும் உரிய என்பது இந்நூற்பாவின் கருத்து.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
14021491_10207166510063876_966143595232408343_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YmOeVzk9yPAQ7kNvgEjd4o-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDTAwx0i6BiZpn2gxxkoDDuGJK0ztzai5TEqkRvj34ERA&oe=6675941E 443715224_10225223693602179_3911908116574566930_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=UsujGEkK4vwQ7kNvgFvIXJc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYALDrGbjtIk7rIfbUqRqEOIXZmbfGfdTkLKWV2B4qUy-Q&oe=6653E1FF 436491124_10225223698202294_9174644769008288690_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ElieR2EHHboQ7kNvgHtBAS3&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCPyKrM8ytotoH3XOkLHKYes6sfoF53eHgPDErwzkeQ0A&oe=6653E8EA
 
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2024 at 18:07, kandiah Thillaivinayagalingam said:

தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணிப் படியாகும்..!

நல்லதொரு கருத்து

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்........!  😍
    • பிரித்தானிய நேரப்படி முதல்சுற்றில் நாளைதான் கடைசிப் போட்டி. 😀 நாளை முதல் சுற்றுக்கான மிகுதிப் புள்ளிகள் கிடைக்கும்!
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : எதுக்காக கிட்ட வந்தாளோ எதை தேடி விட்டுப் போனாளோ  விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிா்ந்திடுவேனே நானும் ஆண் : { அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை } (2) ஆண் : { என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே….. } (2) ஆண் : { கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான் .......! --- எனை மாற்றும் காதலே ---  
    • ஒரு தேர்தலில் தோற்றவரை ஒதுக்க வேண்டுமென்ற கருத்தில் நான் சொல்லவில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக தோற்றார் என்று தெரிந்தால், இவருக்கும் சிவாஜிலிங்கத்திற்குக் கிடைத்த வரவேற்பே ஜனாதிபதி வேட்பாளராகக் கிடைக்குமா என்று ஊகிக்கலாம். எனவே தான், ஏன் தோற்றார், எந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்றார் என்று கேட்டேன். இது போன்ற baggage ஓடு வருவோரை பொது வேட்பாளராக நிறுத்த சிவில் அமைப்புகள் தயங்குவதும் இதனால் தான்.
    • விளங்க முடியாமல் குழப்பமாக எழுதியிருக்கிறீர்கள். (எனக்கு விளங்கிய வரையில்) உங்கள் கருத்துகளுக்கு அடிப்படையாக இருப்பவை இரண்டு விடயங்கள்: 1. ஆண் - பெண் குடும்பம் தான் பூரண குடும்பம் என்ற உங்கள் "நம்பிக்கை". 2. ஓரினச் சேர்க்கையாளர் மீதான அச்சம் - homophobia இது இரண்டையும் தவிர, எந்த ஆதாரங்களையோ, முன்னுதாரணங்களையோ, மேற்கத்தைய சமூகங்களில் , நாடுகளில் இருக்கும் உதாரணங்களையோ அடிப்படையாக வைத்து முடிவெடுக்கும் இலக்கு உங்களிடம் இல்லை. இந்த மனநிலை இங்கே மட்டுமல்ல, முன்னரும் சில மானிடவியல், வரலாறு தொடர்பான திரிகளில் நீங்கள் வெளிக்காட்டியது தான். எனவே, ஆச்சரியமில்லை.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.