Jump to content

வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்படும்; வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 MAY, 2024 | 03:13 PM
image
 

வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார். 

இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/184524

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஓவ்வொரு ஊராகப் போய் ஆஸ்பத்திரியை பெரிதாகக் கட்டித் தருகின்றோம் என்று சொல்கின்றார்....இப்ப யாருக்காவது சந்தேகம் வர வேண்டுமே, ஏன் எல்லா ஆஸ்பத்திரிகளையும் ஒரெயடியாக பெரிதாக்குகின்றார்கள் என்று.......😀.

மாங்குளத்தில் திறந்து வைத்ததில், மாங்குளம் என்று எழுதியிருந்ததில் எழுத்துப் பிழை இருந்தததாம். அதை திருத்தச் சொல்லி எவ்வளவு நாளாகக் கேட்டும் கடைசி மட்டும் திருத்தவில்லையாம்...... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

ரணில் ஓவ்வொரு ஊராகப் போய் ஆஸ்பத்திரியை பெரிதாகக் கட்டித் தருகின்றோம் என்று சொல்கின்றார்....இப்ப யாருக்காவது சந்தேகம் வர வேண்டுமே, ஏன் எல்லா ஆஸ்பத்திரிகளையும் ஒரெயடியாக பெரிதாக்குகின்றார்கள் என்று

கல்லாபெட்டி காலியா இருக்கு

வாக்குறுதிகள் மட்டும் தேவைக்கு அதிகமாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு 700 காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி

Published By: VISHNU

26 MAY, 2024 | 07:35 PM
image
 

"உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திலுள்ள 04 பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 பிரதேச செயலக அலுவலகங்களை உள்ளடக்கியதாக 700  முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வைத்து கையளித்தார். 

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் "உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் 5400 முழு உரிமையுள்ள  காணி உறுதிப்  பத்திரங்கள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184558

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது : ஜனாதிபதி முன்னிலையில் செல்வம் அடைக்கலநாதன்

Published By: VISHNU   26 MAY, 2024 | 06:08 PM

image

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உறுமய காணி உரித்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்தையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இம்மாவட்டத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.

இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவை உங்கள் தலைமையில் நடத்தி முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணி உள்ளிட்ட பிரச்சனைக்குத் தீர்வு வழங்க வேண்டும். காணி உறுதியில்லாத மேலும் பலர் உள்ளனர். சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எமது மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றேன் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/184550

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:
26 MAY, 2024 | 03:13 PM
image
 

வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார். 

இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/184524

 

இது நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்மையில் சிறப்பானது. 

வவுனியா மக்கள் பெரிதும் யாழ் வைத்தியர்களை நம்பி உள்ளார்கள். ஒரு கண் சோதனை செய்வதற்கோ வேறு உடல்உபாதைகளுக்கோ வைத்திய ஆலோசனை கேட்பதற்கும், சிகிச்சை பெறுவதற்கும் போதிய வசதிகள்/நிபுணர்கள் இல்லை.

வவுனியாவில் மருத்துவபீடம் அமைக்கப்படுவதும். வவுனியா அரசினர் வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றம் பெறுவதுவும் வவுனியா, அண்டித்த பிரதேச மக்களின் வைத்திய/சுகாதார சேவைகள்/தேவைகள் பூர்த்தி செய்யப்பட பேருதவியாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோக்கம் எதுவாக இருந்தாலும் நல்ல விடயமே . வவுனியா மக்கள் இதனால் நன்மை அடைவார்கள் . மக்களின் தேவையே இப்ப முக்கியம் .

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.