Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

28 MAY, 2024 | 02:10 PM
image

யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர், வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று, தான் ஏற்றி வந்த நபரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அதன்போது, உத்தியோகஸ்தர் ஒருவர், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை, வைத்தியசாலை வளாகத்தினுள் ஏன் அத்துமீறி நுழைந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்போது, இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்ட போது, உத்தியோகஸ்தர் மீது வைத்தியசாலைக்குள் இருந்த அச்சியந்திரத்தால் ( printer) தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அதனையடுத்து, அவ்விடத்தில் ஒன்று கூடிய சக உத்தியோகஸ்தர்கள் ஒன்று கூடி தாக்குதல் மேற்கொண்டவரை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபரை பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

IMG_7093.jpg

IMG_7092.jpg

https://www.virakesari.lk/article/184687

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பண்பாட்டுடன் வாழ்ந்த தமிழ் இனம், இன்று தறி கெட்டுப் போய்… எந்த இடத்தில், எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாமல் திரிகின்றது.
வைத்திய சாலையில் இது முதல் தாக்குதலும் அல்ல.
எந்த இனமாவது வைத்திய சாலையில் சண்டித்தனம் காட்டுவதை கேள்விப்பட்டதே இல்லை.
இந்த இனத்துக்கு மட்டும்… ஏன்  கேடு கெட்ட புத்தியோ… 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

குறித்த நபரை பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணையின் பின் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

எவ்வளவு பண்பாட்டுடன் வாழ்ந்த தமிழ் இனம், இன்று தறி கெட்டுப் போய்… எந்த இடத்தில், எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாமல் திரிகின்றது.
வைத்திய சாலையில் இது முதல் தாக்குதலும் அல்ல.
எந்த இனமாவது வைத்திய சாலையில் சண்டித்தனம் காட்டுவதை கேள்விப்பட்டதே இல்லை.
இந்த இனத்துக்கு மட்டும்… ஏன்  கேடு கெட்ட புத்தியோ… 

ஆஸ்பத்திரியிலையே இவர்கள் அட்டகாசம் இந்தளவிற்கு எண்டால்..... மிச்ச இடங்களிலை எப்பிடி இருப்பார்கள் எண்டு  ஒருக்கால் கூட்டிக்கழிச்சு பாருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-ok-1.jpg?resize=700,375&ssl=1

 

யாழ். வைத்தியசாலைத் தாக்குதல் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆளுநருக்கு அவசர கடிதம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், நேற்று இரவு 10:30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மது போதையில் வந்த இருவர் யாழ்போதனா வைத்திய சாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினுள் தமது வண்டியை செலுத்தினார்கள்.

வண்டியின் பின்னால் இருந்தவர் மது போதையில் தனது கையை கண்ணாடிக்குத் தானே இடித்ததனால் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற வந்தவர்.

அவர் அனுமதிக்கும் வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் தானே சிகிச்சை அலகினுள் பிரவேசித்தார். மற்றையவர் விடுதியின் உள்ளே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வைத்தியசாலை ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளை பேசியதோடு அல்லாமல் அங்கிருந்த அச்சு இயந்திரத்தினை எடுத்து தூக்கி ஊழியர் ஒருவரின் மீது வீசி அவரது தலையில் படுகாயத்தை ஏற்படுத்தி இருந்தார்.

பாதிக்கப்பட்ட வைத்தியசாலை ஊழியர் சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மதுபோதையில் வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார்.

இது தொடர்பாக பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.

1.உடனடியாக சம்பவம் தொடர்பான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பாதுகாப்பு பொறிமுறையில் உள்ள தவறுகள் கண்டறியப்பட்டு உடனடியாக திருத்தப்பட வேண்டும்.
2. கடமையில் உள்ள வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
3 . வைத்தியசாலைக்கு வருகின்ற அப்பாவி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
4. சம்பந்தப்பட்ட நபர் ஆகக்கூடிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும்.

இது தொடர்பாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாதவிடத்து வைத்தியசாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தொடர் தொழிற்சங்க போராட்டத்திற்கு செல்ல வேண்டி ஏற்படலாம் எனக் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1384512

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தல் ! 

30 MAY, 2024 | 05:28 PM
image
 

 

யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும்  ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை  ஆராயப்பட்டது.

இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பொலிசார் ஆகியோரிடம் அது குறித்து விளக்கம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தபின் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

இதன்போது யாழ் வைத்தியசாலை அசம்பாவிதங்கள் குறித்து கருத்துக்கூறிய பணிப்பாளர் சத்தியமூர்த்தி - வைத்தியசாலைக்கு நாளாந்தம் குறைந்தது 5000 அதிகமானவர்கள்  அவசர நோயாளர் பிரிவுக்கு பல்வேறு அவசர உயிர் காப்பு தேவை கருதி வருவதுண்டு.

அதுமட்டுமல்லாது இவ்வாறு வருபவர்கள் பலவகையான வாகனங்களில் வருகைதருவதால் உயிர் பாதுகாப்பை கருதி தடையின்றி உள்ளே அனுமதிப்பது வழமை.

அந்த இளக்கமான நடைமுறையை தமக்கு சாதகமாம ஒருசிலர் பயன்படுத்துவதால்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது. அதே நேரம் இவ்வாறான சம்பவங்களை வைத்து அவசர நோயாளர் பிரிவு நுழைவாயிலில் இறுக்கமான நடைறையை கொண்டுவரவும் முடியாது.

அந்தவகையில் வைத்தியசாலையின் பாதுகாப்பு அதன் மகிமைகள் குறித்து இளைஞர்கள் அதிக கரிசனை எடுப்பதனூடாகவே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை கட்டுப்படுத்தலாம். இதற்கு அனைவரது குறிப்பாக இளைஞர்களது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் கூறியிருந்தார்.

அத்துடன் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கடுமையான பிரிவுகளில் சட்டத்தின்முன் நிறுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்நிலையில் வைத்தியசாலையின் பாதுகாப்பில் பொலிசாரின் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அமைச்சர் பொதுமக்களும் வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நலன்களில் அக்கறை கொள்வது அவசியம்.

இதேநேரம் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன்மூலம் இனிவருங் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதவகையில் நடவடிக்கை அமைவதும் அவசியம் என்றும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தல் !  | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.