Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பவளவிழா காணும் எஸ்பொ.

Featured Replies

பவளவிழா காணும் எஸ்பொ.

ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளில் எஸ்.பொன்னுத்துரை (சண்முகம் பொன்னுத்துரை) என்னும் இயற்பெயர் கொண்ட எஸ்பொ அவர்கள் முக்கியமானவர். ஏறத்தாழ அறுபதாண்டுகாலத்தை தாண்டியது அவரது இலக்கிய வாழ்வு. 1932ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்பொ, தனது பல்கலைக்கழக படிப்பை சென்னையில் முடித்தவர். இலங்கையில் மட்டக்களப்பில் ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணியாற்றிய எஸ்பொ, 1981ல் ஆபிரிக்காவில் நைஜீரிய நாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அத்துடன் இலங்கையில் இருந்தபோது கல்வி அமைச்சின் பாடவிதானக்குழுவிலும், இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் குழுவிலும் பங்கேற்றவர். தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் எஸ்பொ. சென்னையில் மித்ர என்னும் பதிப்பகத்தையும் இயக்கி வருகின்றார். 1950களில் தமிழகம் அறிந்த ஈழத்து படைப்பாளிகளில் எஸ்பொ குறிப்பிடத்தகுந்தவர். அக்காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரசண்ட விகடன், கலைமகள், கல்கி, சரஸ்வதி ஆகிய இதழ்களில் இடம்பெற்றுள்ளன. ஈழத்தின் சிறந்த சிறுகதையாளராக கணிக்கப்படும் எஸ்பொ, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, ஊடகம் என பல தளங்களில் செயல்பட்டவர். ஈழத்து இலக்கியத் தளத்தில் 'நற்போக்கு இலக்கியம்" என்னும் கருத்தாக்கத்துடன் செயல்பட்டதுடன், படைப்பாக்கத்தில் பல பரிசோதனைகளையும் முன்னுதாரணங்களையும் நிகழ்த்தியவர். இவரது முதல் நாவலான தீ மிகுந்த பாராட்டையும் கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. தீ, சடங்கு, ஆகிய நாலல்களையும் வீ, பூ, அவா, என்னும் சிறுகதைத் தொகுதிகளையும், நனவிடை தோய்தல், கீதையின் நிழலில், பெருங்காப்பியம் பத்து, ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுளார். அத்துடன் இரண்டு பாகங்கள் கொண்ட 2000ம் பக்கங்களிலான வரலாற்றில் வாழ்தல் என்னும் தன்வரலாற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் ஒரு படைப்பாளியின் தன்வரலாறு இத்தனை பக்கங்களில் இதுவைரை எழுதப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அப்பால் தமிழ் குழுமத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

spo001.jpg

espo01.jpg

espo02.jpg

espo03.jpg

espo04.jpg

espo05.jpg

espo06.jpg

espo07.jpg

espo08.jpg

நன்றி: அப்பால் தமிழ்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியப் போராளி எஸ்.பொ. வாழ்க

"இலக்கியம் என் ஊழியம்

தமிழ் என் தவம்

தமிழ் உணர்வு என் பேறு

மனித நேயம் என் மதம்

மனித விடுதலை என் மோட்சம்

என்பதையே தனது வாழ்வின் தாகமாகக் கொண்டு எழுதுகோல் மூலம் எண்ணற்ற சாதனைகளைச் செய்த பெருமை தமிழீழத்தின் சிறுகதை எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களுக்கு உண்டு.

spoee1.jpg

தமிழீழத்தில் வாழ்ந்த காலத்திலும் வாழமுடியாத நிலையில் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழநேர்ந்தபோதும் தனது தமிழ்த் தவத்தைத் தளராது தொடர்ந்தவர். இன்னமும் தனது 75ஆம் அகவையிலும் தொடர்ந்து வருபவர்.

1985ஆம் ஆண்டு தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் துணையோடு பயணம் மேற்கொண்டபோது எனது நடவடிக்கைகள் அத்தனையையும் ஒளிப்படமாக பதிவு செய்த தம்பி அர்ஜுனா இவரது மகன். களத்தில் போராடி அவன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். நாட்டின் விடுதலைக்காக மகனையே அளித்த பெருமைக்குரியவர் அவர்.

அவரது பவழ விழா சென்னையில் 30-09-2007 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழகம், தமிழீழம் ஆகியவற்றைச் சேர்ந்த அறிஞர்களும் எழுத்தாளர்களும் விழாவில் கலந்துகொண்டு பவளவிழா நாயகர் எஸ்.பொ.அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டினர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எஸ்.பொ. எழுதிய மாயினி, மணிமகுடம் ஆகிய நூல்கள் வெளியிடப்பெற்றன. எஸ்.பொ. அவர்களை ஆசிரியராகக் கொண்ட யுகமாயினி இலக்கிய மாத இதழும் வெளியிடப்பெற்றது.

தமிழீழத்தின் தலைசிறந்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களுக்கு நாமும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

- நெடுமாறன் (தென்செய்தி)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எஸ்.பொ. பெயரை உச்சரிக்காமல் ஈழத்து இலக்கிய வரலாற்றை படிக்க முடியாது. ஏனெனில் அவர் வரலாற்றில் வாழ்ந்திருப்பவர். அவர் தனது வாழ்க்கைக் கதையை ஆயிரம் பக்கங்களில் எழுதி உள்ளார். தமிழிலக்கிய படைப்பாளிகளில் இப்படி தன்வரலாற்றை ஆயிரம் பக்கங்களில் எழுதி வெளியிட்டவர் ஈழத்து படைப்பாளியான எஸ்.பொ.வாகத்தான் இருக்க முடியும். ஈழத்து இலக்கிய வரலாற்றை அறிய இது ஒரு முக்கிய ஆவணமாக இருக்கும். நம் வரலாற்றை நாம்தான் அறியவேண்டும். ஈழத்து படைப்பாளி எஸ்.பொவை யாழ்களத்திற்கு இழுத்துவந்தவர் புகழ் ஓங்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* ஈழத்து இலக்கியத்தில் தடம் பதித்தவர்களில் எஸ்பொ ஒருவர். இவரது பவளவிழா நிகழ்வு தொடர்பான பதிவின் பொருத்தப்பாட்டைக் கருதி அப்பால் தமிழ் இணையத்தில் வெளிவந்த ஆக்கத்தை நன்றியுடன் இணைக்கிறேன்.

பவளவிழா காணும் எஸ்பொ.

Monday, 01 October 2007

1950களில் தமிழகம் அறிந்த ஈழத்து படைப்பாளிகளில் எஸ்பொ குறிப்பிடத்தகுந்தவர். அக்காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரசண்ட விகடன், கலைமகள், கல்கி, சரஸ்வதி ஆகிய இதழ்களில் இடம்பெற்றுள்ளன. ஈழத்தின் சிறந்த சிறுகதையாளராக கணிக்கப்படும் எஸ்பொ, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, ஊடகம் என பல தளங்களில் செயல்பட்டவர். (பவளவிழா படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

http://www.appaal-tamil.com/index.php?opti...4&Itemid=63

  • தொடங்கியவர்

ஒரு படைப்பாளி, ஒரு கலைஞன்/ஞி தன்வரலாற்றை எழுதுவது என்பது மிக மிக அவசியமானது என்றே நானும் கருதுகிறேன். அவனூடாக/அவளூடாக ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் வாழ்வியலை, வரலாற்றை அறிந்துகொள்ளமுடியும் (முழுமையாக இல்லாதுவிடினும்). நல்ல இலக்கியம் என்பது அது உருவாகும் காலத்தை, சமூகத்தளத்தை பிரதிபலிக்கவேண்டும் | பிரதிபலிக்கும். அந்தவகையில் எஸ்.போ. போன்ற ஒரு இலக்கியப் போராளியின் தன்வரலாறூடாக நாம் பலவற்றை அறிந்துகொள்ளமுடியும். இணைத்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பொ. வின் "நனவிடை தோய்தல்" படித்தால் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்று தெரியும். தீ, சடங்கு போன்ற நாவல்கள் ஈழத்தில் உருவாக்கிய சர்ச்சைகளையும், முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு என்ற திசைகளில் தமிழ் எழுத்தாளர்கள் பிரிந்து சென்று நடாத்திய கருத்துமோதல்களையும் அவரின் வரலாற்றில் இருந்து அறியலாம்.

இவரை பற்றி எஸ்.பொ ஒரு பன்முகபார்வை தொகுப்பு என்ற நூலை வாசித்த போது பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது! :lol: !

அதில் யுகபாரதி "அன்பதவதாரம்" என்ற கவிதையில்(கவிதை முழுவதும் இணைக்கவில்லை சில வரிகள் மட்டுமே மன்னிகவும் :D )

தட்டித் தட்டி சிற்பமாக்கவும்

திட்டித் திட்டித் நுட்பமாக்கவும்

உங்களாள் மட்டுமே

முடியும் போல

என் கண்ணுகுள் புகுந்து

உயிருகுள் வளர்ந்த

அன்பு தாவரம் நீங்கள்!! :blink:

இதில் இருந்து இவரை பற்றி அறிய கூடியதாக இருந்தது!!இன்னும் பலரும் இவரை பற்றி பல கருத்துகளை அந்த நூலில் குறிபிட்டிருந்தார்கள் நேரம் கிடைக்கும் போது இணைக்கிறேன்!! :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.