Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"நட்பு என்பது நடிப்பு அல்ல"
 
 
"நட்பு என்பது நடிப்பு அல்ல
நடனம் ஆடும் மேடை அல்ல
நயமாக பேசும் பொய்யும் அல்ல
நலம் வாழ என்னும் பாசமே!"
 
"வடிவு என்பது உடல் அல்ல
வட்டம் இடும் கண்ணும் அல்ல
வளைந்து பொங்கும் மார்பும் அல்ல
வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!"
 
"காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல
காது குளிர பேசுவது அல்ல
காமம் கொடுத்து மயக்குவது அல்ல
காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!"
 
"அன்பு என்பது கடமை அல்ல
அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பது அல்ல
அற்பம் சொற்பம் தருவது அல்ல
அறிவுடன் உணர்ந்து பாசமாக நேசிப்பதே!"
 
"முகநூல் நட்பு தேடுவது அல்ல
முகர்ந்து பார்க்க அலைவது அல்ல
முகத்தை மாற்றி ஏமாற்றுவது அல்ல
முழுதாய் சொல்லி அறிவாய் நடப்பதே!"
 
"பொறுப்பு என்பது வீட்டில் இருப்பது அல்ல
பொது நண்பர்களுடன் சுற்றுவது அல்ல
பொய்கள் பேசி திரிவது அல்ல
பொருள் தேடி குடும்பத்தை காப்பதே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
290732799_10221244899574815_5574166228355732030_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xQ7q9SoK7x8Q7kNvgHkM0Eg&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDl6tWiUYbh3R0mUPFquHjxLOSJSk2SC85e04ngLcNj4g&oe=666402F3 290898179_10221244900214831_7683258841725289106_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eqCiZDovQOEQ7kNvgGzPCoq&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDepq81f19iVk5d3BwQ5h6ExyCbtyB-DW7Z9EUfymyy1w&oe=66640750 290663802_10221244898934799_2861531148812096290_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rRBfVhsKfm0Q7kNvgFRJz1x&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCelMOGJ1IF1yuCjirZUP_Bxp41RwZazGJUx8r57kWWaA&oe=6663E5E5
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, kandiah Thillaivinayagalingam said:
"வடிவு என்பது உடல் அல்ல
வட்டம் இடும் கண்ணும் அல்ல
வளைந்து பொங்கும் மார்பும் அல்ல
வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!"
 
"காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல
காது குளிர பேசுவது அல்ல
காமம் கொடுத்து மயக்குவது அல்ல
காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!"

290898179_10221244900214831_7683258841725289106_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eqCiZDovQOEQ7kNvgGzPCoq&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDepq81f19iVk5d3BwQ5h6ExyCbtyB-DW7Z9EUfymyy1w&oe=66640750

அத்தியடி தில்லையர் ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப எங்கை வந்து நிக்கிறார் பாருங்கோ....😂

உங்கள் எழுத்துகளுக்கு வரவேற்புகள் ஆயிரமாயிரம்👍. தொடருங்கள். நேற்றைய தினம் தமிழ்சிறியருடன் தொலைபேசியில் உறவாடிய போது உங்கள் எழுத்து திறமையை பற்றி அதிகம் கதைத்தோம்.

@தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

290898179_10221244900214831_7683258841725289106_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eqCiZDovQOEQ7kNvgGzPCoq&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDepq81f19iVk5d3BwQ5h6ExyCbtyB-DW7Z9EUfymyy1w&oe=66640750

அத்தியடி தில்லையர் ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப எங்கை வந்து நிக்கிறார் பாருங்கோ....😂

உங்கள் எழுத்துகளுக்கு வரவேற்புகள் ஆயிரமாயிரம்👍. தொடருங்கள். நேற்றைய தினம் தமிழ்சிறியருடன் தொலைபேசியில் உறவாடிய போது உங்கள் எழுத்து திறமையை பற்றி அதிகம் கதைத்தோம்.

@தமிழ் சிறி

முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பெருமாள் said:

முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?

ஏன்?  
ஒவ்வொருவரின் இடம் வலம் பார்த்தா யாழ்களத்தில் உறவுகளை தேடி வைத்திருக்கின்றோம்? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?"


நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன் 

அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது 

அப்பொழுது இந்த 'அகதி'

'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே!

இன்று

யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!  

"ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே 
ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்! 
ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் 
ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"
  
அன்று 
 
"குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு    
வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு 
படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு 
பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!"

பின் 

"நாற்பது வயது தொப்பை விழுகுது 
கருத்த முடி நரை விழுகுது 
ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது 
குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது
சோர்வான உடல் எதோ கேட்குது 
ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!"

"ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது   
அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது   
வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது   
மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது  
தலைமுதல் கால் விரல்கள் வரை
படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!"

"கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது  
பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்]
பகலும் இரவும் சாப்பிட வைக்குது  
விரலை குத்தி சீனி பார்க்குது  
நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது 
கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!"


"சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது
கோலம் மாறும் காலம் அதுவென 
அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது 
பேரப் பிள்ளை தோளில் ஏறுது
எழுபது  தாண்டி எண்பது வருமோ?   
ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"  

பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!

 

எல்லோருக்கும் எனது நன்றிகள் 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.