Jump to content

மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்
4 ஜூன் 2024, 10:50 GMT
புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்
இந்திய தேர்தல் 2024

பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்

ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை
 
 
 
  • என்டிஏ*
  • 295
  •  
  • என்டிஏ (பாஜக கூட்டணி) 295 seats
  • இந்தியா**
  • 231
  •  
  • இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 231 seats
  • மற்றவை
  • 17
  •  
  • மற்றவை 17 seats
*பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 5:11 PM
அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும்

தற்போது வரை வெளியாகியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளில் வேட்பாளர்களின் நிலவரம் என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.

 

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக)

மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக)

2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக)

இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக )

மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக)

தென்சென்னை தொகுதி
படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக)

3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)

இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக)

மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக)

4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக)

இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக)

மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக)

5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக)

இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக)

மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்)

6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: செல்வம் ஜி (திமுக)

இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக)

மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக)

7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக)

இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக)

மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக)

8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக)

இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக)

மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக)

9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக)

மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக)

 
தேர்தல் முடிவுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்பு படம்

10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: மணி. எ (திமுக)

இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக)

மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக)

11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக)

இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக)

மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக)

12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக)

இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக)

மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக)

13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக)

இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக)

மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக)

14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: மலையரசன் டி (திமுக)

இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக)

மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி)

15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக)

இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக)

மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக)

16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக)

இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக)

மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக)

17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக)

இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக)

மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி )

18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக)

மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக)

19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ஆ.ராசா (திமுக)

இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக)

மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)

 
கோயம்புத்தூர் தொகுதி
படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக)

20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக)

இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக)

மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக)

21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக)

இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக)

மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக)

22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக)

இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக)

மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக)

23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக)

மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக)

24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: துரை வைகோ (மதிமுக)

இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக)

மூன்றாம் இடம்: செந்தில்நாதன். பி (அமமக)

25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: அருண் நேரு (திமுக)

இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக)

மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக)

26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக)

மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக)

சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள்
படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக)

27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக)

இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக)

மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக)

28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக)

மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக)

29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக)

மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி)

30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: முரசொலி எஸ் (திமுக)

இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக)

மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக)

31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக)

மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக)

 

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: வெங்கடேசன் எஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக)

மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக)

33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக)

இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக)

மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக)

34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக)

மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக)

இராமநாதபுரம் வேட்பாளர்கள்
படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை)

35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்)

இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை)

மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக)

36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக)

இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக)

மூன்றாம் இடம்: ரோவெனா ரூத் ஜேன் ஜே (நாம் தமிழர் கட்சி)

37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக)

இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக)

மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக)

 
திருநெல்வேலி தொகுதி
படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்)

38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ராபர்ட் பிரூஸ் சி (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக)

மூன்றாம் இடம்: சத்யா (நாம் தமிழர் கட்சி)

39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக)

மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக)

40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக)

மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி)

https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்சூர் அலிகானை முந்திய நோட்டா!

தற்போதைய நிலவரம்;

தி.மு.க - 4,46,326

பா.ஜ.க - 2,72,289

அ.தி.மு.க - 88,584 

நாம் தமிழர் கட்சி - 38,978

மன்சூர் அலிகான் - 2,181

நோட்டா - 6,695

வேலூர்: விட்டு தராத கதிர் ஆனந்த்... ஹாட்ரிக் தோல்வி ஏ.சி.எஸ்! - மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! | vellore parliamentary constituency - dmk candidate kathir anand wins - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடியில் எதிர் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,37,879 வாக்குகள் பெற்று 3,90,472 வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அதோடு, கனிமொழியைத் தவிர போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

2. சிவசாமி வேலுமணி (அதிமுக)-1,47,407

3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா) - 1,21,680

4. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்)- 1,19,374

Election 2024: தமிழ்நாடு வேட்பாளர்களின் முன்னணி வெற்றி நிலவரம்... உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்! | Lok sabha election 2024 live updates of tamilnadu - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள்

TN-RESULT.jpg

 

TN-RESULT-1.jpg

 

TN-RESULT-2.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்

மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்
4 ஜூன் 2024
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்திய தேர்தல் 2024

இறுதி முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்

ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை
 
 
 
  • என்டிஏ*
  • 292
  • 58
  • என்டிஏ (பாஜக கூட்டணி) seats, 292 58 seats lost since 2019
  • இந்தியா**
  • 234
  • 149
  • இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 234 seats, 149 seats gained since 2019
  • மற்றவை
  • 17
  • 90
  • மற்றவை 17 seats, 90 seats lost since 2019
2019 உடன் ஒப்பிடும்போது ஏற்பட்டுள்ள மாற்றம்
*பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது.

இந்த 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என்என்ன, அடுத்த 2 இடங்களை பெற்ற வேட்பாளர்களின் வாக்குகள் என்ன என்பது குறித்து இங்கே காணலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்), 7,96,956

இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக), 2,24,801

மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக), 2,23,904

2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக), 4,97,333

இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக ), 1,58,111

மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக), 1,13,318

தென்சென்னை தொகுதி
படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக)

3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), 5,16,628

இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக), 2,90,683

மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக), 1,72,491

4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக), 4,13,848

இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக), 1,69,159

மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக), 7,20,16

5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக), 7,58,611

இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக) 2,71,582

மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்) 2,10,110

6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: செல்வம் ஜி (திமுக), 586044

இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக), 364571

மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக), 164931

7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக), 563216

இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக), 256657

மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக), 202325

8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக), 568692

இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக), 352990

மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக), 117682

9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்), 492883

இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக), 300397

மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக), 214125

 
தேர்தல் முடிவுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்பு படம்

10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ஆ. மணி (திமுக), 432667

இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக), 411367

மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக), 293629

11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக), 547379

இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக), 313448

மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக), 156650

12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக), 500099

இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக), 291333

மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக), 236571

13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக), 477033

இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக), 406330

மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக), 181882

14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: மலையரசன் டி (திமுக), 561589

இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக), 507805

மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி), 73652

15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக), 566085

இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக), 495728

மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக), 127139

16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக), 462036

இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக), 432924

மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக), 104690

17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக), 562339

இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக), 325773

மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி ), 82796

18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), 472739

இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக), 346811

மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக), 185322

19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ஆ.ராசா (திமுக), 473212

இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக), 232627

மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக), 220230

 
கோயம்புத்தூர் தொகுதி
படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக)

20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக), 568200

இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக), 450132

மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக), 236490

21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக), 533377

இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக), 281335

மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக), 223354

22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக), 670149

இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக), 226328

மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக), 112503

23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்), 534906

இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக), 368090

மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக), 102482

24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: துரை வைகோ (மதிமுக), 542213

இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக), 229119

மூன்றாம் இடம்: ராஜேஷ் (நாம் தமிழர் கட்), 107458

25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: அருண் நேரு (திமுக), 603209

இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக), 214102

மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக), 161866

26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்), 455053

இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக), 269157

மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக), 205244

சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள்
படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக)

27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக), 505084

இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக), 401530

மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக), 168493

28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்), 518459

இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக), 247276

மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக), 166437

29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), 465044

இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக), 256087

மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி), 131294

30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: முரசொலி எஸ் (திமுக), 502245

இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக), 182662

மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக), 170613

31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), 427677

இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக), 222013

மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக), 195788

 

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: சு. வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), 430323

இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக), 220914

மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக), 204804

33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக), 571493

இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக), 292668

மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக), 155587

34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்), 385256

இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக), 380877

மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக), 166271

இராமநாதபுரம் வேட்பாளர்கள்
படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை)

35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்), 509664

இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை), 342882

மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக), 99780

36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக), 540729

இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக), 147991

மூன்றாம் இடம்: விஜயசீலன் எஸ்டிஆர் (தமிழ் மாநில காங்கிர), 122380

37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக), 425679

இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக), 229480

மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக), 208825

 
திருநெல்வேலி தொகுதி
படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்)

38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்), 502296

இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக), 336676

மூன்றாம் இடம்: ஜான்சி ராணி எ (அதிமு), 89601

39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்), 546248

இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக), 366341

மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக), 52721

40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்), 426005

இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக), 289489

மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி), 39603

https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவையில் பாஜக தோல்வி; சவால் விட்ட பாஜக நிர்வாகி மொட்டை

06 JUN, 2024 | 10:39 AM
image

தமிழகத்தில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி நடு சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் கோவையில் பாஜக வெற்றி பெறும் என மாற்றுக் கட்சி நபர்களிடம் பந்தயம் கட்டிய நிலையில், ஒருவேளை பாஜக கோவையில் தோற்றுவிட்டால் அனைவர் முன்னிலையிலும் பஜாரில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொள்வதாக சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் கோவையில் பாஜக தோல்வியைத் தழுவிய நிலையில் பாஜக நிர்வாகி ஜெய்சங்கர் தூத்துக்குடியின் பரபரப்பான சாலையின் ரவுண்டான அருகில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பாஜக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/185422

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7 இடங்களில் டெபாசிட் காலி - அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்காலம் என்ன?

அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிவக்குமார் ராஜகுலம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 ஜூன் 2024
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் அதிமுகவை பொருத்தவரை உண்மையாகியுள்ளன. அந்தக் கட்சிக்கு ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை.

அதையும் தாண்டி அதிமுகவின் வாக்கு வங்கியில் கடும் சரிவு ஏற்பட்டிருப்பதையும் புள்ளிவிவரம் காட்டுகிறது. அதிமுகவின் வாக்கு வங்கி சரிவும், பாஜகவின் வாக்கு வங்கி உயர்வும் உணர்த்துவது என்ன?

அதிமுகவுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் அளவுக்கு பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளதா?

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பதவிக்கு நெருக்கடி வருமா? அதிமுவின் எதிர்காலம் என்ன ஆகும்?

7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்த அதிமுக

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தேர்தல்களில் தடுமாறி வரும் அதிமுகவின் போக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது. ஜெயலலிதா தலைமையில் கடைசியில் அதிமுக எதிர்கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகள் என்ற வரலாறு காணாத வெற்றியை ருசித்த அதிமுக அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாமல் போயுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டையே பறிகொடுத்தது.

அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்காலம் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிமுக செல்வாக்கு பெற்ற தொகுதியாகப் பார்க்கப்படும் கோவை தொகுதியில் நூலிழையில் அதிமுக டெபாசிட்டை தக்க வைத்தது. அண்ணாமலை இரண்டாவது இடம் பிடித்த அந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்றார். டெபாசிட் பெற 16.67 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிலையில், அதிமுக வேட்பாளர் 17.2 சதவீத வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தார்.

அதிமுக கூட்டணி 27 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதிமுக 24 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக 3 இடங்களிலும் இரண்டாவது இடத்தில் வந்தன. தமிழ்நாட்டில் மற்ற 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாது இடத்தைப் பிடித்தது. கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் அதிமுக நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

திமுகவுக்கு அதிமுக கூட்டணி நெருக்கடி அளித்த தொகுதிகள்

தமிழ்நாட்டில் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.

மாநிலத்திலேயே திமுக கூட்டணிக்கு அதிமுக கூட்டணி கடும் சவால் அளித்த தொகுதி என்றால் அது விருதுநகர்தான். முன்னிலை நிலவரம் மாறி மாறி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக கூட்டணி வேட்பாளரான தேமுதிகவின் விஜயபிரபாகரனை 38,877 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் தோற்கடித்தார்.

விருதுநகர் தவிர, கொங்கு மண்டலத்தில் சேலம், நாமக்கல் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் திமுகவுக்கு சவால் தரும் வகையில் வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

 

தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரும் சரிவு

அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிமுகவை பொருத்தவரை இம்முறை தென் மாவட்டங்களில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றார். தொடக்கத்தில் முன்னிலை பெற்றிருந்த அவர், வாக்கு எண்ணிக்கையின் இரண்டாவது பாதியில் பின்தங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியை நூலிழையில் முந்தி அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் அதிக செல்வாக்கு பெற்ற தொகுதியான கன்னியாகுமரியில் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசம். அங்கே அதிமுகவை பின்னுக்குத் தள்ளி நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதேநேரத்தில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவரும் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தத்தமது தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். குறிப்பாக, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், இரண்டாவது இடம் பிடித்த தினகரன் ஆகியோரும் முன்னாள் அதிமுகவினரே.

இதேபோல், மதுரை தொகுதியிலும் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அங்கே பாஜக இரண்டாவது இடம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. சசிகலா, ஓ.பன்னீசெல்வம், டிடிவி தினகரன் ஆகியோரின் வெளியேற்றத்தால் அதிமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக வேறு கட்சிகளுக்கு மாறியிருப்பதைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கணிசமான தொகுதிகளை வென்ற கொங்கு மண்டலத்திலும்கூட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் நிலை மிகச்சிறப்பாக இருந்ததாகக் கூற முடியாது. சேலம், நாமக்கல் தொகுதிகளில் மட்டுமே அதிமுகவால் திமுக கூட்டணிக்கு ஓரளவுக்கு சவால் கொடுக்க முடிந்தது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தது.

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. வெறும் 5,267 வாக்குகளை மட்டுமே பெற்று அதிமுக வேட்பாளர் ராணி, டெபாசிட்டை இழந்தார்.

 

'அதிமுக வாக்கு வங்கியில் வரலாறு காணாத சரிவு'

அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிமுக வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், "நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அதிமுக கூட்டணி 23 சதவீதமும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.2 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன. அதிமுக ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதா தலைமைப் பதவியை வகித்தபோதுகூட அது நடந்திருக்கிறது. ஆனால், அதிமுக கூட்டணி ஒருபோதும் 30 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றதில்லை," என்று தெரிவிக்கிறார்.

ஆனால், "இந்த முறை அதிமுக கூட்டணி அதற்கும் கீழே 23 சதவீதமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும்கூட திமுக கூட்டணியும் 3 சதவீதம் வரை வாக்குகளை இழந்தே இருக்கிறது. அதேநேரத்தில், பாஜக கூட்டணி மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியும் தனது வாக்கை 2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது."

கடந்த தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் இருந்தாலும்கூட தனது அடிப்படையான வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார் எஸ்.பி.லட்சுமணன்.

"வாக்கு சதவீதம் 25 சதவீதத்திற்கும் கீழே குறைந்தால் அந்தச் சரிவில் இருந்து மீண்டெழுவது மிகவும் கடினம். 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டை இழந்துள்ளது. 12 தொகுதிகளில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. குமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நான்காவது இடத்திற்கு அதிமுக சரிந்துள்ளது," என்று கூறினார்.

'2026 தேர்தலுக்கு பாடமும் படிப்பினையும் தந்துள்ளது'

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், "தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டார்.

அதோடு, "இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிமுகவை அச்சுறுத்தும் அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா?

அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாடாளுமன்ற தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அதிமுகவின் எதிர்காலம், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமைப் பதவியில் நீடிப்பாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசியபோது, "இந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை எடப்பாடி தலைமையில் அதிமுக பெற்ற 9வது தோல்வி என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்புகிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை இதுவொரு இடைக்காலம் மட்டுமே. 10 இடங்களில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டதால் மட்டுமே அக்கட்சி வளர்ந்துவிட்டதாகக் கருத முடியாது," என்றார்.

நாம் தமிழர் கட்சி 6 இடங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதையெல்லாம் அதிமுகவுக்கு ஒரு இடைக்கால சரிவாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார். "தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகள்தான் பெரிய கட்சிகள். இவற்றில் ஒன்று ஆளுங்கட்சியாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் மாறிமாறி வரும்."

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியதற்காக எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டிய அவர், "அதிமுக ஒரு நல்ல விஷயத்திற்காக பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்திருக்கிறது. இல்லையென்றால் அந்தக் கட்சியைச் சிதைத்துவிடுவார்கள்; அழித்து விடுவார்கள். மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா, நிதிஷ்குமார் கட்சி ஆகியவற்றுக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்" என்றவர், இப்படிப்பட்ட சூழலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நெருக்கடி கொடுப்பார்கள் என்பது தெரிந்தும் விலகி வந்த எடப்பாடியை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, "எதிர்க்கட்சி அந்தஸ்து பாஜகவுக்கு கிடைத்துவிட்டது என்ற குரல் வந்தால் அதை நாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்ததற்காக அதிமுக கவலைப்பட வேண்டியதில்லை. கண்டிப்பாக அதிமுகதான் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி," என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

 

'எடப்பாடி பழனிசாமி உத்தியை மாற்றுவது அவசியம்'

அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிமுகவின் எதிர்காலம் குறித்துப் பேசியபோது, "பாஜக அணியில் போட்டியிட்ட, முன்னாள் அதிமுகவினரான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்று தத்தமது தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒற்றுமையே பலம் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்துகிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பின்னர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'இந்த தேர்தல் முடிவு 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடத்தையும் படிப்பினையையும் தந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரும் படிப்பினை என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதே இல்லை. ஆகவே அவர் சூழலை உணர்ந்து உத்திகளை வகுப்பார் என்று நம்பலாம் எனவும் அவர் கூறுகிறார்

"சட்டப்படி, எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச் செயலாளர் என்று நீதிமன்றமே உறுதி செய்துவிட்ட நிலையில், அவரது பதவிக்கு ஆபத்து ஏதும் இல்லை. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பேசி, அவர்களையும் கட்சியில் இணைத்துக் கொண்டு பயணிப்பதே அதிமுகவுக்கு நன்மை தரும்."

"இல்லாவிட்டால் ஜூன் 4க்கு பிறகு அதிமுகவே இருக்காது என்ற அண்ணாமலையின் பேச்சு காலப்போக்கில் உண்மையாகிவிடும். அதற்கு சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அது நடக்கவே நடக்காது என்று புறந்தள்ளிவிட முடியாது," என்று எச்சரிக்கிறார் எஸ்.பி.லட்சுமணன்.

https://www.bbc.com/tamil/articles/cn006kegn37o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கு ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 02:26 PM   மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் 11 ஆம் திகதி  சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.  இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான்  15 ஆம் திகதி விஜயம் செய்து பார்வையிட்டதுடன், குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (20) மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் முன்னர் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கில் இரு தரப்பினரும் இன்றைய தினம்  ஆஜராகியிருந்தனர். கைது செய்யப்பட்டு சொந்த  பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்களுக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன், நா.மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியவர்கள் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூதூர் நீதிமன்ற பதில் நீதவானால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186564
    • உங்களின் பேத்தி மிகவும் விரைவாக குண்மடைந்து விடுவார் அண்ணை, யோசிக்காதேங்கோ. அன்று நீங்கள் அவசரம் அவசரமாக கலிஃபோர்னியா வந்தேன் என்று சொன்னவுடனேயே, மனதிற்குள் கொஞ்சம் யோசனையாக இருந்தது. 
    • ஒரு காலத்தில் காங்கேசன்துறை, பருத்தித்துறை துறைமுகங்கள் பிரசித்தி பெற்று இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எத்தனயோ வெற்றிகரமான பயணங்கள், வியாபாரங்கள் நடை பெற்றிருந்தாலும் இப்படியான துயர சம்பவங்களும் நடந்திருக்கு. அதன் பின்பு எனதும் சிறியினதும், பூட்டி வேறு ஒரு குடும்பத்தவரையும் எத்தனயோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கடல் தாண்டி பயணிக்க விடவில்லை.
    • பேத்தி சீக்கிர‌ம் குண‌மாக‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🙏.....................  
    • அதிமுக ஆட்சியில் பதுங்கி இருக்கும் ரவுடிகளும், சமூக விரோதிகளும் திமுக ஆட்சியில் வெளியில் வந்து அராஜகம் செய்வது காலம் காலமாகவே தொடருவது. ஸ்டாலின் இந்த விசயத்தில் உசாராக இருந்து ஒரு மாற்றத்தை ஏறபடுத்துவார் என்று பார்த்தால், அவரும் அதே பழைய குதிரையில் ஏறி சறுக்கி விழுந்து கொண்டிருக்கின்றார். எல்லோர் மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த விஷச் சாராய மரணங்களாவது, அரசினதும், அரச நிர்வாகத்தினதும் மற்றும் முழுச் சமூகத்தினதும் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வேண்டும்........😔.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.