Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

1626240-sunitaa33.webp?resize=750,375&ss

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளியான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக, உயர் ரக விண்கலமான “ஸ்டார்லைனரில்” விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, போயிங் நிறுவனத்தின், ‘ஸ்டார்லைனர்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட் நேற்று (05) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

‘அட்லஸ் 5’ விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், இன்றிரவு (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது.

இதில், 58 வயதுடைய இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், மற்றும் நாசாவின் மூத்த விண்வெளி வீரரான 61 வயதுடைய புட்ச் வில்மோர் பயணித்துள்ளனர்.

போயிங் நிறுவனத்தின், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்களை சுமந்து செல்லும் முதல் விண்வெளி பயணம் இதுவாகும்.

அதன்படி, போயிங் நிறுவனத்தால் ஏவப்பட்ட புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செய்யும், முதல் விண்வெளி வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

இவர்கள், 25 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1386395

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3வது முறையாக விண்வெளிக்கு பயணித்த சுனிதா வில்லியம்ஸ்!

Sunita Williams' third space mission called off due to technical glitch:  All you need to know

இந்திய வம்சாவளியினரான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 3ஆவது முறையாக விண்வெளிக்குப் பயணித்துள்ளார்.

நேற்றைய தினம் (06) இரவு 8.22 மணியளவில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

குறித்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகிய இருவரும் புறப்பட்டனர்.

NASA Starliner spacecraft: 3ನೇ ಸಲ ಬಾಹ್ಯಾಕಾಶಕ್ಕೆ Sunita Williams ಪ್ರಯಾಣ

போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் இன்றையதினம் (06) இரவு 9.45 மணியளவில், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என நாசா தெரிவித்துள்ளது.

குறித்த இவரும் சுமார் ஒருவார காலம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் செயற்பாடுகள் தொடர்பில், ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/303261

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்டார்லைனர் விண்கலனில் கோளாறு - சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கிக் கொண்டாரா?

பட மூலாதாரம்,NASA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பல்லப் கோஷ்
  • பதவி, அறிவியல் செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற இரண்டு விண்வெளி வீரர்கள் இந்நேரம் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். புதன்கிழமை இரவே புறப்பட்டிருக்க வேண்டிய அவர்கள், இன்னும் கிளம்பவில்லை. தற்போது அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.

பூமிக்குத் திரும்ப வேண்டிய விண்கலனில் சில கோளாறுகள் இருப்பதால், இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்கலனில் உள்ள த்ரஸ்டர் (thruster), விண்கலனை உந்தித் தள்ளும் இயந்திரமாகும். அதில் சில பிரச்னைகள் இருப்பதாலும், ஹீலியம் வாயு கசிவாலும் விண்கலன் குறித்த நேரத்தில் கிளம்ப முடியவில்லை.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உயர்மட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதன் பிறகே, விண்கலனும் அதிலுள்ள விண்வெளி வீரர்களும் பூமிக்குத் திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இந்த விண்கலனில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் இருவருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது. ஆனால் விண்கலனில் ஏன் இந்தக் கோளாறுகள் ஏற்பட்டன, அவர்கள் பூமிக்குத் திரும்புவதை இது எப்படி பாதிக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 

ஹீலியம் வாயுக் கசிவு எப்போது நடைபெற்றது?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கிக் கொண்டாரா?

பட மூலாதாரம்,NASA

ஹீலியம் வாயு சிறதளவில் கசிந்த போதும், ஸ்டார்லைனர் ஜூன் 5ஆம் தேதி, விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலனை வான்வெளியில் இயக்குவதற்கும், பூமியின் வளி மண்டலத்தில் நுழையும்போது அதன் வேகத்தைக் குறைப்பதற்கும் உதவும் த்ரஸ்டர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது.

ஹீலியம் கசிவு மிகச் சிறிய அளவிலேயே இருந்ததால், விண்வெளி பயணத் திட்டத்தை இது எந்த வகையிலும் பாதிக்காது என்று பொறியாளர்கள் நம்பினர். எனவே விண்கலன் வானில் செலுத்தப்பட்டது.

ஆனால், தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கிய பிறகு, ஸ்டார்லைனரில் மேலும் நான்கு முறை ஹீலியம் கசிவு ஏற்பட்டது. விண்கலனை திசை மாற்றி இயக்குவதற்காக உள்ள 28 த்ரஸ்டர்களில் ஐந்து விண்வெளி மையத்தை அடையும் முன்பே பழுதாகிவிட்டன. பழுதான ஐந்து த்ரஸ்டர்களில் நான்கு மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

இந்தப் பயணம் எட்டு நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால், பொறியாளர்கள் இந்தக் கோளாறுகளை ஆய்வு செய்து வருவதால், விண்கலன் பூமிக்குத் திரும்புவது தாமதமாகியுள்ளது.

அமெரிக்க நேரப்படி ஜூன் 26ஆம் தேதி இரவு பத்து மணிக்கு (இந்திய நேரப்படி ஜூன் 27ஆம் தேதி காலை 7.30 மணி) ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும் என்று நாசா அறிவித்திருந்தது.

 

ஹீலியம் கசிவால் விண்வெளி வீரர்களுக்கு பாதிப்பா?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கிக் கொண்டாரா?

பட மூலாதாரம்,NASA

ஹீலியம் கசிவுகளால் விண்வெளி வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாசா முன்னரே தெரிவித்திருந்தது. “விண்கலன் செய்யவேண்டிய இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ள ஏழு மணிநேரம் மட்டுமே ஆகும். ஸ்டார்லைனரில் 70 மணிநேரங்களுக்குத் தேவையான ஹீலியம் இருப்பில் உள்ளது.”

ஆனால் சில நாட்கள் கழித்து, ஸ்டார்லைனர் ஜூலை மாதத்தில் பூமிக்குத் திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாசா முடிவு செய்தது. பூமிக்குத் திரும்பும் தேதி ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தக் கோளாறுகள் எதனால் ஏற்பட்டது என்று, விண்கலன் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பாகவே, முழுவதுமாகக் கண்டறிய விண்கலனின் பொறியாளர்கள் விரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது. ஏனென்றால், விண்வெளியில் இருந்து திரும்பி வரும்போது, பூமியின் வளிமண்டலத்தில் விண்கலம் நுழையும் நேரத்தில், ஸ்டார்லைனரின் கோளாறுகள் நிறைந்த கீழ் சர்வீஸ் மோட்யூல் (service module) எனும் பகுதி எரிந்துவிடும். அதிலுள்ள தகவல்களை இழந்துவிட்டால், கோளாறு எதனால் ஏற்பட்டது என்று தெரிந்துகொள்ள முடியாது.

விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொள்ளவில்லை என்று நாசா வலியுறுத்துகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், விண்கலன் உடனடியாக பூமிக்குத் திரும்பத் தயார் நிலையில் உள்ளது என்று நாசா கூறியுள்ளது.

அடுத்து என்ன நடக்கும் என்பது நாசாவின் மறு ஆய்வுகளைப் பொருத்ததாகவே இருக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 

ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும் விண்ணில் செலுத்தியது சரியா?

தற்போது நடைபெற்றுள்ளதைப் பார்க்கும்போது, ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும், ஸ்டார்லைனர் விண்ணில் செலுத்தப்பட்டது சரியா என்ற கேள்விகள் எழுகின்றன.

விண்கலன்கள் உந்து இயந்திரங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ‘ராக்கெட் என்ஜினியரிங்’ என்ற நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆதாம் பேகர், ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும், விண்கலன் ஏன் விண்ணில் செலுத்தப்பட்டது என்று தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்.

இருப்பினும் கசிவு ஏற்பட்ட போதே, எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை அறிந்து அதை முழுமையாகச் சரி செய்திருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்று வெகு காலம் எடுத்துக்கொள்ளும்போது, அதற்கான செலவு அதிகரிக்கும். மக்கள் மற்றும் அரசியல் ஆதரவும் மறைந்துவிடும்” என்று கூறிய அவர், அதே நேரம், “விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு இந்தக் கசிவுகள் மோசமடையலாம் என்று போதுமான அளவு கணித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நாசாவும் போயிங் நிறுவனமும் செய்திருக்க வேண்டியது இதுதான்” என்றார்.

அதாவது, விண்கலனை அதன் ஏவுதளத்தில் இருந்து விலக்கி, விண்கலனில் உள்ள உந்து இயந்திரங்களை நீக்கி ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்வது அதிக செலவுகளை உள்ளடக்கிய நடவடிக்கை.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கிக் கொண்டாரா?

பட மூலாதாரம்,NASA

நாசா கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயத்தை ஒபன் யூனிவர்சிட்டியில் உள்ள விண்வெளி விஞ்ஞானி டாக்டர் சிமோன் பார்பர் சுட்டிக்காட்டுகிறார். இந்த விண்கலன் ஏற்கெனவே இரண்டு முறை ஆளில்லாமல் பயணம் மேற்கொண்டபோது, இந்தக் கோளாறு ஏன் கண்டறியப்படவில்லை என்பதை நாசா ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

“கடந்த சில வாரங்களாக ஏற்படும் கோளாறுகள், பொதுவாக இறுதிக் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் விண்கலனில் ஏற்படும் என்று யாரும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள்” என்றார் அவர்.

“இந்தத் திட்டத்தின் நோக்கமே, விண்கலனை விண்வெளி வீரர்கள் இயக்கினால், அதன் செயல்திறன் எப்படி இருக்கும் என்று சோதித்துப் பார்ப்பதுதான். ஆனால் அதைவிட்டு, சில அடிப்படையான விஷயங்களைக் கையாண்டு கொண்டிருக்கிறோம்” என்றார்.

 

இந்த ஹீலியம் கசிவுகள் எதனால் ஏற்பட்டன என்ற சரியான காரணத்தைக் கண்டறியும் முக்கியப் பணி நாசாவுக்கு உள்ளது. அதைக் கண்டறியும் வரை, விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவது குறித்து திட்டமிடுவதும், அவசர காலத் திட்டமிடல்களும் முழுமை பெறாது என்று டாக்டர் பார்பர் தெரிவிக்கிறார்.

“கோளாறுகளுக்கான ஆணிவேர் என்னவென்று கண்டறியும் வரை, விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புவது குறித்து என்ன கணிப்பு இருந்தாலும் அது முழுமையான தகவல் கையில் இல்லாமல் எடுக்கப்படுவதாகும். தவறு எதனால் நடந்தது என்று புரிந்து கொள்ளவில்லை என்றால், அடிப்படை உந்து இயந்திரங்கள் மட்டுமல்லாமல் மாற்று இயந்திரங்களையும் பாதிக்கும் கோளாறுகள் எதுவும் விண்கலனில் இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது”

வேறு வழியே இல்லை என்றால், விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலனில் (ஈலோன் மஸ்க்-க்கு சொந்தமான நிறுவனம்) பூமிக்குத் திரும்ப அழைத்து வரலாம். ஆனால் அது போயிங் நிறுவனத்துக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும். இன்னும் அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை என்கிறார் டாக்டர் பேகர்.

“ஒரு புதிய விண்கலனில் எதிர்ப்பார்க்காததை எதிர்ப்பார்க்க வேண்டும்” என்கிறார் அவர். “இந்தப் பயணத்தில் இது முழுவதுமாக எதிர்ப்பார்க்கப்பட்ட தடங்கல்தான். இது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் என்று நான் கருதவில்லை. இதை ஆய்வு செய்து, அடுத்த முறை ஆட்களுடன் விண்வெளிக்குச் செல்லும் முன் சீரமைக்க வேண்டும்,” என்றார்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விண்வெளியில் 50 நாட்களை கடந்த சுனிதா வில்லியம்ஸ்: பூமிக்கு திரும்புவது எப்போது?

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு எப்போது திரும்புவார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. அவர்களது ஒரு வார கால விண்வெளி பயணம் தற்போது சுமார் 50 நாட்களைக் கடந்துள்ளது.

இந்தச் சூழலில் அவர்கள் விண்வெளிக்கு பயணித்த போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்றவற்றுக்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் நாசா இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக நியூ மெக்சிக்கோவில் பொறியாளர்கள் தீவிர சோதனை (டெஸ்ட்) மேற்கொண்டுள்ளனர். அதில் த்ரஸ்டர்களுக்குள் அதிக வெப்பம் ஏற்படுவது சிக்கலுக்கு காரணம் என அறிந்துள்ளனர். மேலும், பூமிக்கு திரும்பும் போது ஸ்டார்லைனரை மேனுவலாக கன்ட்ரோல் செய்வது தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகளை விஞ்ஞானிகள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது.

இருந்தும் ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்ற காரணங்களால் அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், அவர்கள் பூமிக்கு திரும்புவது எப்போது என்றும் தெரியாமல் உள்ளது. அவர்கள் பயணித்த விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்களா அல்லது வேறு விண்கலத்தில் வர உள்ளார்களா என்பதும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் 90 நாட்கள் வரை மட்டுமே விண்வெளியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/306998

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனிதா வில்லியம்ஸ் உண்மையில் விண்வெளியில் சிக்கியுள்ளாரா? பூமிக்கு திரும்புவதில் ஏன் தாமதம்?

சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்- ISS) மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர், கடந்த ஜூன் 5ஆம் தேதி விண்வெளிக்குச் சென்றனர். எட்டு நாட்களில் சோதனைப் பணிகளை முடித்துவிட்டு பூமிக்கு திரும்புவதுதான் திட்டம், ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இப்போதுவரை அவர்களால் திரும்பி வர முடியவில்லை.

அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்ய தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

அதேசமயத்தில், வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி க்ரூ 9 (Crew 9) என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்பவுள்ளது நாசா.

ஸ்டார்லைனர் விண்கலத்தின் தாமதத்தால் க்ரூ 9 திட்டம் பாதிக்கப்படுமா? சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் என்னென்ன சவால்கள் உள்ளன?

ஸ்டார்லைனரின் தொழில்நுட்பக் கோளாறுகள்

ஸ்டார்லைனர் விண்கலம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,சர்வதேச விண்வெளி மையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஸ்டார்லைனர் விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலங்கள் மூலம் வீரர்களை அனுப்பி, மீண்டும் அவர்களை பூமிக்குக் கொண்டுவரும் பணியில் இரண்டு தனியார் நிறுவனங்கள் நாசாவுடன் இணைந்து பணியாற்றுகின்றன. முதல் நிறுவனம், எலோன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்', இரண்டாவது போயிங்.

நாசா இதுபோன்ற விண்கலங்களைச் சொந்தமாக வைத்து இயக்க விரும்பாமல், வணிக நிறுவனங்களிடம் இருந்து இந்தச் சேவையை வாங்க விரும்புகிறது. விண்வெளி பயணத்திற்கான செலவைக் குறைக்கவும், விண்வெளித் துறையில் ஒரு புதிய வணிகச் சந்தையை உருவாக்கவும் இதை செய்வதாக நாசா கூறியிருந்தது.

ஸ்டார்லைனர் விண்கலம் 2015-ஆம் ஆண்டில் தனது முதல் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தது. ஆனால் அது 2019 வரை தாமதமானது, ஏனெனில் அதன் மென்பொருள் குறைபாடுகள் உள்ளிருந்த கடிகாரத்தைச் செயலிழக்கச் செய்தது. இதனால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது முயற்சி, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டது. ஆனால் அது மீண்டும் 2022-ஆம் ஆண்டு மே மாதம் வரை தாமதமானது. உந்துவிசை அமைப்பில் (த்ரஸ்ட்- Thrust) ஒரு சிக்கல் ஏற்பட்டதால் இது நடந்தது என்று சொல்லப்பட்டது.

இந்தக் குறைபாடுகள், வயரிங் மற்றும் பாராசூட்களின் பாதுகாப்பில் இருந்த கூடுதல் சிக்கல்கள் விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் திட்டத்தை தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது.

பின்னர் அனைத்துச் சிக்கல்களும் சரிசெய்யபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு, கடந்த மே 7ஆம் தேதி தனது முதல் சோதனை குழுவைச் சுமந்துகொண்டு ஸ்டார்லைனர் விண்ணில் பாய்வதற்கு 90 நிமிடங்களே இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விண்வெளிப் பயணம் நிறுத்தப்படுவதாக நாசா அறிவித்தது.

பயணம் ரத்து செய்யப்பட்டதால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஸ்டார்லைனரின் முதல் பயணம்

ஸ்டார்லைனரின் முதல் பயணம்

பட மூலாதாரம்,NASA

பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, ஜூன் 5ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்டார்லைனர் விண்கலம்.

ஆனால் அப்போது ஹீலியம் வாயு கசிவு சிறிதளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு காரணம் ஹீலியம் கசிவு மிகச்சிறிய அளவிலேயே இருந்ததால், விண்வெளி பயணத் திட்டத்தை இது எந்த வகையிலும் பாதிக்காது என்று பொறியாளர்கள் நம்பினர்.

விண்கலனை வான்வெளியில் இயக்குவதற்கும், பூமியின் வளி மண்டலத்தில் நுழையும்போது அதன் வேகத்தைக் குறைப்பதற்கும் உதவும் த்ரஸ்டர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கிய பிறகு, ஸ்டார்லைனரில் மேலும் நான்கு முறை ஹீலியம் கசிவு ஏற்பட்டது. விண்கலனை திசை மாற்றி இயக்குவதற்காக உள்ள 28 த்ரஸ்டர்களில் ஐந்து விண்வெளி மையத்தை அடையும் முன்பே பழுதாகிவிட்டன. பழுதான ஐந்து த்ரஸ்டர்களில் நான்கு மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

இந்தப் பயணம் எட்டு நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால், பொறியாளர்கள் இந்தக் கோளாறுகளை ஆய்வு செய்து வந்ததால், விண்கலன் பூமிக்குத் திரும்புவது தாமதமானது.

அமெரிக்க நேரப்படி ஜூன் 26ஆம் தேதி இரவு பத்து மணிக்கு ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும் என்று நாசா அறிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்படவில்லை.

ஏறக்குறைய 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த தொழில்நுட்ப குறைகளை சரிசெய்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோரை பூமிக்கு அழைத்துவர பல சோதனைகளைச் செய்து வருகிறது நாசா.

 
சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம்,NASA/BOEING

படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர்

போயிங் நிறுவனத்தின் மீதான அழுத்தம்

போயிங் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட்ட பதிவில், “எங்கள் குழுக்கள் நடத்திய ஏராளமான சோதனைகளின் அடிப்படையில் ஸ்டார்லைனர் திட்டத்தின் மீதும், விண்கலத்தின் திறன் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்குவது தொடர்பாக நாசாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.” என்று கூறியுள்ளது.

இந்தத் திட்டம் போயிங் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

100 ஆண்டுகள் பழைமையான, முதல் உலகப் போரில் இருந்து தனது விமானங்களை உற்பத்தி செய்து வரும் ஒரு நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து பேசுபொருளாகி வந்தது. காரணம், சமீப காலங்களில் அந்த நிறுவனத்தின் விமானங்கள் சந்தித்த தொடர் விபத்துகள்.

போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களில், 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டு காலகட்டத்தில் உலகம் முழுக்க 320 விமான விபத்துகள் நடந்துள்ளதாக அவர்களுடைய 2020-ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த பத்து ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் மொத்தமாக 1,752 பேர் உயிரிழந்துள்ளனர். 2020-ஆம் ஆண்டில் மட்டும் போயிங் நிறுவனம் தயாரித்த விமானங்களில் 17 விமான விபத்துகள் நடந்துள்ளன. அதில் மொத்தமாக 121 உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

இவ்வாறு அடுத்தடுத்த விபத்துகளால் போயிங் நிறுவனத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தது. இந்த ‘ஸ்டார்லைனர்’ திட்டம் தங்கள் மீதான விமர்சனங்களை துடைத்தெறிய போயிங் நினைத்தது.

சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து காணொளி மூலமாக பேசிய சுனிதா வில்லியம்ஸ் (ஜூலை 14)

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் உள்ள சிக்கல்கள்

விண்வெளியில் தங்கி இருப்பதால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் இருவருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது என்றும், அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு முன்னர் பலமுறை தெளிவுபடுத்தியிருந்தது நாசா. ஆனால் இந்தக் கோளாறுகளை ஏன் நாசாவால் சரிசெய்யமுடியவில்லை என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

“ஸ்டார்லைனரை சோதனை செய்யதான் அவர்கள் சென்றார்கள், எனவே விண்வெளியில் சிக்கியுள்ளார்கள் என்றே சொல்ல முடியாது” என்கிறார் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.

“போயிங் நிறுவனத்தின் மீது பல விமர்சனங்கள் உள்ளது உண்மைதான், ஆனால் இதுவொரு சோதனை முயற்சிதான் என்பதால் நாசா மற்றும் போயிங் எதிர்பார்க்காத கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஹீலியம் வாயு கசிவு மற்றும் த்ரஸ்டர்களில் ஏற்பட்டுள்ள பிரச்னை”

“இது நிச்சயம் சரிசெய்யப்படக்கூடிய ஒன்றுதான். அவர்கள் அங்கு பத்திரமாக இருப்பார்கள் ” என்கிறார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன்.

முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.
படக்குறிப்பு,இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.

க்ரூ 9 (Crew 9) திட்டம் குறித்து கேட்டபோது, அந்தத் திட்டம் இதனால் பாதிக்கப்படாது என தான் நம்புவதாகவும், ஸ்டார்லைனர் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை பூமிக்கு கொண்டுவர முடியாவிட்டால், நாசாவிடம் வேறு திட்டங்கள் இருக்கும் என்றும் கூறுகிறார் அவர்.

“ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் மூலம் கூட பூமிக்குத் திரும்ப அழைத்து வரலாம். ஆனால் போயிங் நிறுவனத்திற்கு இதுவொரு பின்னடைவுதான். விண்வெளித்துறையில் தனியாரின் பங்கு குறித்து நாசா மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது” என்று கூறினார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

சுனிதா வில்லியம்ஸும்(Sunita Williams) அவரது சக விண்வெளி வீரருமான வில்மோரும்(Butch Wilmore) மே 05 அன்று ஒரு சோதனைப் பயணத்திற்காக விண்வெளி சென்றனர்.

எனினும் அவர்களது விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காலமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை 

இந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய நிலையில் தற்போது 2 மாதங்களாகியும் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.

விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் | Sunita Williams Space Return Postponed

இந்நிலையில், அவர்கள் இப்போதைக்கு பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களுடைய போயிங் ஸ்டார்லைனர் (Boeing's Starliner) விண்கலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், பூமியிலிருந்தவண்ணம் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு

அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் | Sunita Williams Space Return Postponed

இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி “Crew 9” என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/sunita-williams-space-return-postponed-1723108187

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

sunithaaaa.jpg?resize=750,375

சுனிதாவை மீட்க ‛‛ஸ்பேஸ் எக்ஸை” நாடும் நாசா.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் 2025 பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியுடன் அவர்களை மீட்டுவர நாசா நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு ஆய்வுக்கு சென்றனர். திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 2025 பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில் க்ரோ-9 (Crew 9” ) என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செப்டம்பர் மாதம் 2 பேர் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோரை பூமிக்கு மீட்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://athavannews.com/2024/1397057

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனிதா வில்லியம்சை அழைத்து வர நாசா புதிய திட்டம் - பூமிக்கு எப்போது, எப்படி திரும்புவார்?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஹோலி கோல், ரெபேக்கா மோரெல் & கிரேக் போஸ்னன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 25 ஆகஸ்ட் 2024, 05:51 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் "ஆளில்லாமல்" திருப்பிக் கொண்டு வரப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு விண்வெளி வீரர்களும் ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். ஆரம்பத்தில் அவர்கள் 8 நாட்கள் அங்கு இருப்பார்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இப்போது விண்வெளி சுற்றுப்பாதையில் 8 மாதங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகில் சென்றபோது அதில் சிக்கல்கள் ஏற்பட்டன. விண்கலத்திற்கு உந்துசக்தியை வழங்கக்கூடிய ஐந்து உந்துகலன்கள் வேலை செய்யாமல் போனது.

ஹீலியம் வாயுவும் தீர்ந்துவிட்டதால், அந்த விண்கலம் எரிபொருளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

நாசா தனது விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வணிக விண்கலங்களுக்காக போயிங், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.

போயிங் 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஈலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

ஆளில்லாமல் திரும்பும் ஸ்டார்லைனர் விண்கலம்

இதுவரை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி வீரர்களுடன் ஒன்பது விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. ஆனால், ஆட்களுடன் போயிங் விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படுவது இதுவே முதன்முறை.

போயிங் மற்றும் நாசாவில் உள்ள பொறியாளர்கள் ஸ்டார்லைனர் விண்கலத்தின் தொழில்நுட்ப சிக்கல்களைப் புரிந்துகொள்வதில் அதிக நேரம் செலவிட்டனர்.

அவர்கள் விண்வெளியிலும் பூமியிலும் பல சோதனைகளை நடத்தி தரவுகளைச் சேகரித்தனர். பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிந்து, "விண்வெளி வீரர்களை பூமிக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்கான வழியைக் கண்டுபிடிப்போம்" என்று அவர்கள் நம்பினர்.

சனிக்கிழமையன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், நாசா நிர்வாகி பில் நெல்சன், இந்த விண்கலத்தைச் சரிசெய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

 
ஸ்டார்லைனர் விண்கலம்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, ஸ்டார்லைனர் விண்கலம் போயிங் நிறுவனத்தின் சோதனை விண்கலம்

"பாதுகாப்பான அல்லது தொடர்ந்து இயக்கப்படும் விண்கலமாக இருந்தாலும் அது ஆபத்தானது. சோதனை வின்கலத்தைப் பொறுத்தவரை பாதுகாப்பானதும் அல்ல, அது தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதும் அல்ல. பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், அதுதான் எங்களை வழிநடத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.

தற்போது இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்தில் பிப்ரவரி 2025 வரை இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, அவர்கள் 'ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்' எனும் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள்.

இந்தக் கூடுதல் நேரம், ஸ்பேஸ் எக்ஸ் அதன் அடுத்த விண்கலத்தை ஏவுவதற்கான நேரத்தை வழங்கும். அந்த விண்கலம் செப்டம்பர் இறுதியில் விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன், அந்த விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் செல்வதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இருவர் மட்டுமே அதில் செல்லவுள்ளனர். அதன்மூலம், விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது அந்த இரு விண்வெளி வீரர்களுடன் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் இணைந்துகொள்வார்கள்.

பூமிக்கு எப்படி திரும்புவர்?

தற்போது விண்வெளியில் இருக்கும் இரு விண்வெளி வீரர்களும் இதற்குமுன் இரண்டு முறை நீண்ட காலத்திற்கு விண்வெளியில் இருந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருப்பது உள்ளிட்ட சோதனை விமானங்கள் தொடர்பான அபாயங்களை அவர்கள் புரிந்து இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது.

பூமிக்குத் திரும்பும் திட்டத்தை, 58 வயதான சுனிதா வில்லியம்ஸ், 61 வயதான வில்மோர் ஆகிய இருவரும் முழுமையாக ஆதரித்துள்ளதாகவும் நாசா கூறியது.

அதோடு, "அதுவரை அவர்கள் விண்வெளி நிலையத்தில் அறிவியல் சார்ந்த பணிகள், விண்வெளியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர்கள் 'விண்வெளி நடைபயணம்' கூடச் செய்வார்கள்" என்றும் நாசா தெரிவித்துள்ளது.

 
ஸ்டார்லைனர் விண்கலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செப்டம்பர் மாதம் இரு விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும்

விண்கலத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக போயிங்கின் ஸ்டார்லைனர் ஏற்கெனவே பல ஆண்டுகள் தாமதமானது.

முந்தைய ஆளில்லா விண்கலங்களும் தொழில்நுட்பப் பிரச்னைகளை எதிர்கொண்டன.

“விண்கலத்தில் செல்பவர்களின் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக” போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில், "நாசாவின் தீர்மானிக்கப்பட்ட திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். மேலும், அந்த விண்கலம் பாதுகாப்பாக, வெற்றிகரமாக பூமிக்குத் திரும்ப நாங்கள் தயாராகி வருகிறோம்" என்று கூறியுள்ளது.

ஸ்டார்லைனரில் என்ன தவறு நடந்தது?

ஸ்டார்லைனர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டபோது, சிறியளவில் ஹீலியம் கசிவு ஏற்படத் தொடங்கியது. ஆனால், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும் அதில் மேலும் இரு கசிவுகள் ஏற்பட்டன.

முதல்முறை ஏற்பட்ட கசிவு சிறிய ளவிலும், இரண்டாவது முறை ஏற்பட்ட கசிவு ஐந்து மடங்கு பெரியதாகவும் இருந்தது.

விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியதும், 28 உந்துகலன்கள் மூடப்பட்டன. அதில், நான்கு உந்துகலன்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின. இதற்குப் பிறகு, உந்துவிசை அமைப்பில் மேலும் இரண்டு ஹீலியம் கசிவுகள் கண்டறியப்பட்டன.

போயிங் நிறுவனத்தின் மார்க் நாபி கூறுகையில், மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல சோதனைகளில் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்தார்.

ஆனால் சில பொறியாளர்கள் இந்தச் சிக்கல் ஆளில்லா சோதனைப் பணிகளின்போது அல்லது விண்கல வடிவமைப்பின் ஆரம்பக் கட்டங்களில் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர்.

 

போயிங் விண்கலத்தில் முன்பு ஏற்பட்ட சிக்கல்கள்

ஸ்டார்லைனர் விண்கலம்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டது

இது போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட முதல் பிரச்னை அல்ல.

கடந்த 2019ஆம் ஆண்டில் அதன் முதல் ஆளில்லா விண்கலத்தில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக, அதை இயக்க முடியாமல் போகவே, அந்த விண்கலம் விண்வெளி நிலையத்தை அடைய முடியவில்லை.

கடந்த 2022இல் இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த விண்கலத்தில் மீண்டும் சில உந்துகலன்கள் குளிரூட்டும் அமைப்பில் சிக்கல்களை எதிர்கொண்டன.

இதற்கிடையில், போயிங்கின் போட்டியாளரான ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. அதையடுத்து, ஸ்டார்லைனர் விண்கலங்கள் விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகளை விண்வெளி நிலையத்திற்குச் சுமந்து செல்கிறது.

பூமியில் போயிங் விமானங்களில் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நோக்கம் அதிகரித்து வரும்போது இவை அனைத்தும் நடக்கின்றன.

போயிங் ஸ்டார்லைனர் ஒரு ஏவுதளமாக மாறுவதற்கு இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கும் என்பது இப்போது உறுதியாகத் தெரிகிறது.

நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருந்தால் உடலில் என்ன நடக்கும்?

“விண்வெளிக்குச் செல்லத் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. அதற்குக் காரணம் பூஜ்ஜிய ஈர்ப்புவிசை சூழல் என்பது மனித உடலில் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது” என்று பிபிசி தமிழிடம் முன்னர் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

“பூஜ்ஜிய ஈர்ப்புவிசை நிலையில் அதிக நாட்கள் இருக்கும்போது விண்வெளி வீரர்களுக்கு தசை வலிமையும், எலும்பின் அடர்த்தியும் குறையும். அதுமட்டுமல்லாது உடல் எடை குறைவது, பார்வைத் திறனில் பாதிப்பு, நரம்பு மண்டலத்தில் மாற்றம் ஆகியவையும் பல நாட்களுக்கு விண்வெளியில் தங்குபவர்களுக்கு ஏற்படும்” என்கிறார் அவர்.

 
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்
படக்குறிப்பு, "சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே அவர்களை விண்வெளியில் ஆரோக்கியமாக இருக்க உதவும்" என்கிறார், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்

விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1-2% எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர். ஆறு மாத காலத்தில் சுமார் 10% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.

(அதுவே பூமியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 0.5%-1% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.)

இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிலிருந்து குணமடைவதற்கான காலம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது.

பூமிக்குத் திரும்பிய பின்னர் அவர்களின் எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம்.

அமெரிக்காவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ செப்டம்பர் 21, 2022இல், ஆறு மாத கால பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அவரால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை.

இறுதியாக, 371 நாட்களை விண்வெளியில் கழித்த பிறகுதான் அவரால் பூமிக்குத் திரும்ப முடிந்தது. நீண்ட காலம் விண்வெளியில் தங்கியதால் அவரது உடலில் ஏற்பட்ட விளைவால், கேப்ஸ்யூலில் இருந்து மீட்புக் குழுவினரால் அவர் தூக்கிக்கொண்டு வரப்பட்டார்.

“சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே விண்வெளியில் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும். இதற்காக அவர்களுக்கு அவ்வப்போது உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த சோதனைகள் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என்று சிவன் பிபிசி தமிழிடம் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் நாள் அறிவிக்கப்பட்டது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2025 ஆம் ஆண்டு தான் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது.

2024 ஜூன் 5 அன்று, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்களும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் கிளம்பி ஜூன் 6 அன்று சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர்.

அந்த விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 80 நாட்களாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் ஸ்டார்லைனர் விண்கலனை ஆளில்லாமல் பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என்ற தகவலை நாசா தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/308400

  • கருத்துக்கள உறவுகள்
Posted

images-1.jpg?resize=300,168

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா இன்றி வரும் விண்கலன்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது.

அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்துள்ளதுடன் விண்வெளி மையத்தில் சுமார் 90 நாட்களாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆளில்லாமல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு அது சனிக்கிழமை அன்று தரையிறங்கும் என நாசா தெரிவித்துள்ளது

https://athavannews.com/2024/1397833

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்டார்லைனரில் கேட்கும் வினோதமான சத்தங்கள்- நாசா விடுத்திருக்கும் எச்சரிக்கை

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஆகஸ்ட் 1, 2024 இல் செயல்படாத ஸ்டார்லைனர் கேப்ஸ்யூலில் இருந்து வரும் “வினோதமான சத்தங்கள்” குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மூத்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வசிப்பவர்கள், ராப் டேல் என்ற வானிலை நிபுணரால் முதலில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பதிவின் படி, ‘கிட்டத்தட்ட ஒரு சோனார் பிங் போன்ற துடிப்பு சத்தத்தை’ எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக சத்தம் தெளிவாக இல்லாததால், வில்மோர் மீண்டும் முயற்சிப்பதாகக் கூறினார், அதனால் என்ன தவறு என்பதைக் கண்டறிய குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்னொரு தடவை நான் அதைச் செய்வேன், நீங்கள் அனைவரும் உங்கள் தலையை சொறிந்துவிட்டு என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்று விண்வெளியில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர் சொல்வதைக் கேட்க முடிவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://thinakkural.lk/article/308884

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆளே இல்லாமல் பூமிக்கு திரும்பும் ஸ்டார்லைனர் விண்கலம் - சுனிதா வில்லியம்ஸ் வருவது எப்போது?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்
4 செப்டெம்பர் 2024

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆளே இல்லாமல் பூமிக்கு திரும்புகிறது.

தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததால் இந்த விண்கலத்தின் மூலம் அவர்களை பூமிக்கு கொண்டு வருவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் அந்த இரண்டு விண்வெளி வீரர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது. அதற்கு முன்னதாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு ஆளில்லாமலேயே திரும்பும்.

ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்புவதற்கான சோதனைகளை நாசாவும் போயிங் நிறுவனமும் செய்து முடித்துள்ளன. செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும். இறுதிக்கட்டத்தில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது வானிலையில் பிரச்னை எழுந்தாலோ இந்த பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 விண்கலம் இந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி பூமியில் இருந்து புறப்படுகிறது. இந்த விண்கலத்தில் தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகின்றனர். க்ரூ 9 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல ஏதுவாக, அதற்கு முன்னதாக வரும் 6-ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அங்கிருந்து புறப்படும்.

சுனிதா வில்லியம்ஸ், நாசா, ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் (சித்தரிப்புப் படம்)

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்த பிறகு ஸ்டார்லைனர் விண்கலம் பூமியை வந்தடைய 6 மணி நேரமாகும். அது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும். ஸ்டார்லைனர் விண்கலம் சனிக்கிழமை, செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அதிகாலை 12.03 மணிக்கு திட்டமிட்டப்படி தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஸ்டார்லைனர் விண்கலம் ஒரு பாராசூட்டைப் பயன்படுத்தி தரையிறங்க உள்ளது. தரையிறங்கும் போது விபத்து ஏற்படாமல் தடுக்க ஏர்பேக்குகள் பயன்படுத்தப்படும். தரையிறங்கும் தளத்தில் தயாராக இருக்கும் குழு, விண்கலத்தை புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள போயிங் ஸ்டார்லைனர் ஆலைக்கு எடுத்துச் செல்லும்.

ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆளில்லாமல் பூமிக்கு திரும்பச் செய்ய முடிவு செய்த பின் விண்கலத்தின் செயல்பாடுகளை ஆளில்லா விமானத் தகவல் அமைப்பு ஒன்றின் மூலம் அதன் பணி மேலாளர்கள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பும் பயணத்தின் போது முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படும். ஹூஸ்டனில் உள்ள ஸ்டார்லைனர் மிஷன் கண்ட்ரோல் அலுவலகம் மற்றும் புளோரிடாவில் உள்ள போயிங் மிஷன் கண்ட்ரோல் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள நிபுணர்கள் ஸ்டார்லைனர் விண்கலத்தின் செயல்பாட்டை கண்காணிப்பார்கள். ஏதேனும் தேவை எழும் பட்சத்தில் விண்கலத்திற்கு உரிய கட்டளைகளை அவர்கள் அளிப்பார்கள்.

 
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு சென்றனர்.

இதற்கு முன்பு, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி சுற்றுப்பாதையில் மேற்கொண்ட இரண்டு சோதனைப் பயணங்களின் போது ஆள் இல்லாமல் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் செயல்முறையை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்த பயணங்களில் ஒன்றில், அது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து வரும் செயல்முறையையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

நாசா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு ஏற்றிச் செல்வதே போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பணியாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் இந்த விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர்

ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவது பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய சோதனைகள் நடத்தப்பட்டன. முடிவில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 விண்கலத்தின் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள். செப்டம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்க உள்ள ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ 9 விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவருக்காக இரண்டு இருக்கைகள் காலியாக விடப்படும்.

"விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும். அந்த வகையில்தான், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டார்கள். அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆளில்லாமல் பூமிக்கு திரும்பச் செய்ய முடிவு செய்யப்பட்டது.", என்று நாசா அதிகாரி பில் நெல்சன் கூறுகிறார்.

 
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

ஸ்டார்லைனர் பயணம் போயிங்கிற்கு ஏன் முக்கியமானது?

விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நாசா தனது சொந்த விண்கலத்தை பயன்படுத்தி வந்தது.

இந்த செயல்பாட்டை தனியார்மயமாக்க நாசா முடிவு செய்த போது, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனத்திற்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலங்களை பயன்படுத்த நாசா ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டனர்.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஆளில்லாமல் விண்வெளி பயணம் மேற்கொள்ள சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் தடைகளும் தாமதங்களும் இருந்தன. இதனால் விண்வெளி நோக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி அன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஸ்டார்லைனர் விண்கலம் புறப்பட்டது.

ஜூன் 6-ஆம் தேதி அன்று, பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதையும், விண்கலத்தின் உந்துவிசைகள் செயலிழந்ததையும் நாசாவும், போயிங் நிறுவனமும் கண்டறிந்தன.

அப்போதிலிருந்து, விண்கலத்தை பழுது பார்க்க பொறியியல் குழுக்கள் முயற்சி செய்தன. விண்கலத்தில் இருந்து பல்வேறு தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும், விண்கலத்தை பூமிக்கு மீண்டும் கொண்டு வர பல்வேறு திட்டங்களும் முடிவு செய்யப்பட்டன.

ஆனால், சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகிய இருவரும் அதே விண்கலத்தில் மீண்டும் பூமிக்கு திரும்ப பாதுகாப்பானது இல்லை என்பதாலும், அதன் செயல்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதையும் உணர்ந்ததாலும், அவர்களை வேறொரு விண்கலம் மூலம் மீண்டும் பூமிக்கு கொண்டு வர நாசா முடிவு செய்தது.

போட்டியாளரான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா தீர்மானித்தது போயிங் நிறுவனத்திற்கு பெரிய அடி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆளில்லா பயணத்தின் போது ஸ்டார்லைனர் விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தற்போது அனைவரின் பார்வையும் இருக்கும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களின் வழக்கமான பயணத்திற்கு நாசாவின் வணிகக் குழு திட்டத்தில் போயிங் நிறுவனம் அனுமதி பெற வேண்டும். இப்போது ஸ்டார்லைனர் பூமிக்கு திரும்பியதும், இந்த பயணம் தொடர்பான அனைத்து தரவுகளும் ஆய்வு செய்யப்படும். நாசா சான்றிதழைப் பெற வேறு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் போயிங் நிறுவனம் முடிவு செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய ஸ்டார்லைனர் விண்கலம் - நாசா கூறியது என்ன?

ஸ்டார்லைனர் விண்கலம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, பூமிக்குத் திரும்பிய ஸ்டார்லைனர் விண்கலம்
4 செப்டெம்பர் 2024
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் சனிக்கிழமை காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே உள்ளனர்.

இரு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டதால், அதில் வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது.

இதனால், அவர்களின் எட்டு நாட்கள் பயணம் எட்டு மாதங்களாக நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்கு 6 மணிநேரம் எடுத்தது.

பூமியின் வளிமண்டலத்தில் அந்த விண்கலம் மீண்டும் நுழைந்த பின்னர், நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் மெதுவாகத் தரையிறங்கும் விதமாக பாரசூட்கள் பயன்படுத்தப்பட்டன.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் இருவரும் அவர்களுடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

"இருவரும் இந்த விண்கலம் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளனர்," என நாசாவின் திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் தெரிவித்தார்.

 

என்ன சிக்கல்?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததால் இந்த விண்கலத்தின் மூலம் அவர்களை பூமிக்குக் கொண்டு வருவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் அந்த இரண்டு விண்வெளி வீரர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.

முன்னதாக, ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்புவதற்கான சோதனைகளை நாசாவும் போயிங் நிறுவனமும் செய்திருந்தன. செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 விண்கலம் இந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி பூமியில் இருந்து புறப்படுகிறது. இந்த விண்கலத்தில் தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் பூமிக்குத் திரும்புகின்றனர்.

 
சுனிதா வில்லியம்ஸ், நாசா, ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் (சித்தரிப்புப் படம்)

ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆளில்லாமல் பூமிக்கு திரும்பச் செய்ய முடிவு செய்த பின் விண்கலத்தின் செயல்பாடுகளை ஆளில்லா விமானத் தகவல் அமைப்பு ஒன்றின் மூலம் அதன் பணி மேலாளர்கள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதற்கு முன்பு, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி சுற்றுப்பாதையில் மேற்கொண்ட இரண்டு சோதனைப் பயணங்களின் போது ஆள் இல்லாமல் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் செயல்முறையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இந்த பயணங்களில் ஒன்றில், அது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து வரும் செயல்முறையையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

நாசா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு ஏற்றிச் செல்வதே போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பணியாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் இந்த விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர்.

 
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு சென்றனர்.

ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவது பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய சோதனைகள் நடத்தப்பட்டன. முடிவில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 விண்கலத்தின் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள். செப்டம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்க உள்ள ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ 9 விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவருக்காக இரண்டு இருக்கைகள் காலியாக விடப்படும்.

"விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும். அந்த வகையில்தான், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டார்கள். அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆளில்லாமல் பூமிக்கு திரும்பச் செய்ய முடிவு செய்யப்பட்டது.", என்று நாசா அதிகாரி பில் நெல்சன் கூறியிருந்தார்.

 
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

ஸ்டார்லைனர் பயணம் போயிங்கிற்கு ஏன் முக்கியமானது?

விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நாசா தனது சொந்த விண்கலத்தை பயன்படுத்தி வந்தது.

இந்த செயல்பாட்டை தனியார் மயமாக்க நாசா முடிவு செய்த போது, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனத்திற்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலங்களை பயன்படுத்த நாசா ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டனர்.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஆளில்லாமல் விண்வெளி பயணம் மேற்கொள்ள சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் தடைகளும் தாமதங்களும் இருந்தன. இதனால் விண்வெளி நோக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி அன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஸ்டார்லைனர் விண்கலம் புறப்பட்டது.

ஜூன் 6-ஆம் தேதி அன்று, பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதையும், விண்கலத்தின் உந்துவிசைகள் செயலிழந்ததையும் நாசாவும், போயிங் நிறுவனமும் கண்டறிந்தன.

அப்போதிலிருந்து, விண்கலத்தை பழுது பார்க்க பொறியியல் குழுக்கள் முயற்சி செய்தன. விண்கலத்தில் இருந்து பல்வேறு தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும், விண்கலத்தை பூமிக்கு மீண்டும் கொண்டு வர பல்வேறு திட்டங்களும் முடிவு செய்யப்பட்டன.

ஆனால், சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகிய இருவரும் அதே விண்கலத்தில் மீண்டும் பூமிக்கு திரும்ப பாதுகாப்பானது இல்லை என்பதாலும், அதன் செயல்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதையும் உணர்ந்ததாலும், அவர்களை வேறொரு விண்கலம் மூலம் மீண்டும் பூமிக்கு கொண்டு வர நாசா முடிவு செய்தது.

போட்டியாளரான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா தீர்மானித்தது போயிங் நிறுவனத்திற்கு பெரிய அடி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆளில்லா பயணத்தின் போது ஸ்டார்லைனர் விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தற்போது அனைவரின் பார்வையும் இருக்கும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களின் வழக்கமான பயணத்திற்கு நாசாவின் வணிகக் குழு திட்டத்தில் போயிங் நிறுவனம் அனுமதி பெற வேண்டும். இப்போது ஸ்டார்லைனர் பூமிக்கு திரும்பியதும், இந்த பயணம் தொடர்பான அனைத்து தரவுகளும் ஆய்வு செய்யப்படும். நாசா சான்றிதழைப் பெற வேறு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் போயிங் நிறுவனம் முடிவு செய்யும்.

பிபிசியின் அறிவியல் செய்தியாளர் ரெபேக்கா மோரெல் மற்றும் ஆலிசன் பிரான்சிஸ், பிபிசி செய்தியாளர் மைக்கேல் ஷீல்ஸ் மெக்னமீ வழங்கிய கூடுதல் தகவல்களுடன்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரலையில் சுனிதா வில்லியம்ஸ்!

நேரலையில் சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இன்று இந்திய நேரப்படி இரவு 11:45 மணிக்கு விண்வெளியில் இருந்து நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பானது  நாசா+, நாசா செயலி மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தங்கள் நீட்டிக்கப்பட்ட பணியின் நுண்ணறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஜூன் 5 ஆம் திகதி போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமியிலிருந்து புறப்பட்டனர். அவர்கள் பயணித்த விண்கலமானது ஜூன் 6 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

இருப்பினும், விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பது எதிர்பாராதவிதமாக நீட்டிக்கப்பட்டது.

எட்டு நாட்கள்  பணிக்காக சென்ற அவர்கள், தற்சமயம் மூன்று மாதங்களாக அங்கு தங்கியுள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக விண்வெளி வீரர்கள் திரும்புவது 2025 பெப்ரவரி வரை தாமதமாகும் என்று நாசா அண்மையில் உறுதி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1399316

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்குச் சென்றது - சுனிதா வில்லியம்ஸை எப்போது அழைத்து வரும்?

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், லாரென்ஸ் பீட்டர்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 30 செப்டெம்பர் 2024, 03:17 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப கொண்டு வருவதற்கான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.

புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்காக இரண்டு காலி இருக்கைகள் கொண்ட டிராகன் காப்ஸ்யூல், புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து சனிக்கிழமை ஏவப்பட்டது.

எட்டே நாளில் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய அவர்கள் இருவரும், தாங்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாமல் ஸ்டார்லைனர் விண்கலம் காலியாக ஏற்கனவே பூமிக்கு திரும்பிவிட்டது.

நாசா விண்வெளி வீரரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் புதிய ஆய்வுக் கருவிகள் மற்றும் பொருட்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு செல்கின்றனர். அவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் சுனிதா மற்றும் புட்ச் ஆகியோருடன் பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

டிராகன் விண்கலத்தை வியாழக்கிழமையன்று விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் வீசிய ஹெலேன் சூறாவளி காரணமாக அதன் புறப்பாடு தாமதமானது. இந்த சூறாவளி புளோரிடா, வடக்கு ஜார்ஜியா, டென்னஸி மற்றும் கரோலினா மாகாணங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

ஈலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களுடன் விண்கலத்தை அனுப்புகிறது.

இரண்டு விண்வெளி வீரர்களை மீட்க அனுப்பப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான ஒப்பந்தத்தின் படி, மூன்று இருக்கைகள் கொண்ட ரஷ்ய சோயுஸ் விண்கலத்தின் ஒவ்வொரு விண்வெளி பயணத்தின் போதும் ஒரு நாசா விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். நான்கு இருக்கைகள் கொண்ட டிராகன் விண்கலத்தில் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் இருப்பார்.

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் கூறியது என்ன?

ஓய்வுபெற்ற கடற்படை ஹெலிகாப்டர் பைலட்டான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார்.

போர் விமானியாக பணியாற்றிய வில்மோர், ஏற்கனவே இரண்டு முறை விண்வெளிக்கு சென்றுள்ளார்.

"நாங்கள் இங்கே மிகவும் பிஸியாக இருக்கிறோம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினருடன் நாங்கள் இணைந்தோம்," என்று சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து சமீபத்திய உரையாடலில் கூறினார்.

"இது எங்களுக்கு வீடு மாதிரி. இப்படி முன்னும் பின்னுமாக மிதந்தால் நன்றாக இருக்கும். விண்வெளியில் நேரத்தை செலவிடுவது ஒரு அதிசயம்" என்று இருவரும் கூறினர்.

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் விண்வெளியில் இருந்து அளித்த பேட்டியில், "எதிர்பாராத விதமாக இவ்வளவு நாட்கள் விண்வெளியில் இருக்க நேரிட்டது மிகவும் நல்லது" என்று கூறியுள்ளனர்.

இன்னும் சில வாரங்கள் இங்கு தங்கியிருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே இருவரும் கூறினார்கள்.

 
சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

விண்வெளியில் வீரர்கள் ஏற்கனவே சிக்கியுள்ளார்களா?

கடந்த காலத்திலும் விண்வெளி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நாட்கள் விண்வெளியில் தங்க வேண்டியிருந்தது.

1990-ஆம் ஆண்டில், சோவியத் விண்வெளி வீரர் வெல்ட்ரே புலிகோவ் அந்நாட்டின் மிர் விண்வெளி ஆய்வு நிலையத்தில் 437 நாட்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு, ஃபிராங்க் ரூபியோ சர்வதேச விண்வெளி நிலையத்தில் 371 நாட்களை செலவிட்டார். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் இவர்தான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது.

நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் க்ரூ-9 மிஷனுக்கான விண்கலம் மூலம் பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது அதன் புறப்பாடு மேலும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல். இதை நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் உறுதி செய்துள்ளார்.

https://thinakkural.lk/article/313979

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்தம்மாவை நிலத்தில குந்தியிருக்க விடமாட்டார்கள் போல இருக்கே ........ அவவும் ஏதோ கின்னஸ் சாதனை செய்யும் நோக்கத்தில் அங்கன சுத்திக் கொண்டிருக்கிறா ......... புருஷன்காரன் குடுத்து வைச்சவன் ..........!  😂

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.