Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kagnaa-ranavath.gif?resize=750,375&ssl=1

கங்கனாவை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி: விமான நிலையத்தில் பரபரப்பு.

நடிகையும் அரசியல் வாதியுமான கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் டெல்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகார் விமான நிலையத்துக்கு சென்றிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரியான  குல்வீந்தர் கவுர் திடீரெ கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத கங்கனா அதிர்ச்சியில் உறைந்தார். இதனையடுத்து அவருடைய உதவியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் அந்த பெண் பொலிஸ் அதிகாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தார்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் கங்கனா சோதனையை முடித்து கொண்டு விமானம் ஏறி டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரி குல்வீந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கங்கனாவை அறைந்தது ஏன்? என  குல்வீந்தர் கவுர் கூறும் வீடியோவொன்று தற்போது  சமூக வலைத் தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அதில்  “ரூபாய் 100 அல்லது 200 கொடுக்கப்பட்டதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கங்கனா தெரிவித்திருந்தார் எனவும், டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் தனது அம்மாவும் ஒருவர்” எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வீடியோவானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1386517

  • கருத்துக்கள உறவுகள்

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் காவலர் பணி இடைநீக்கம் – என்ன நடந்தது?

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் காவலர் பணி இடைநீக்கம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம்,KANGANA RANAUT/X

6 ஜூன் 2024

சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, இந்த வழக்கை மேலும் விசாரிக்க சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கங்கனா ரனாவத் டெல்லி வரவிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், தான் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு நான் இரண்டாவது கேபின் வழியாகச் சென்றபோது சிஐஎஸ்எஃப் காவலராக இருந்த ஒரு பெண் என் முகத்தில் அறைந்தார்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, தான் விவசாயிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக அந்தப் பெண் பதில் கூறியதாக கங்கனா தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை எப்படிச் சமாளிப்பது என்று கவலையாகவும் உள்ளேன்” என்றும் கங்கனா வீடியோவில் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிஐஎஸ்எஃப் காவலர் இடைநீக்கம்

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் காவலர் பணி இடைநீக்கம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கங்கனா ரனாவத்தை அறைந்ததாகக் கூறப்படும் காவலரின் பெயர் குல்விந்தர் கவுர். குல்விந்தரின் சகோதரர் ஷேர் சிங் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், குல்விந்தர் சண்டிகர் விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் 15-16 ஆண்டுகளாக சிஐஎஸ்எஃப்-இல் பணிபுரிவதாகவும் தெரிவித்தார்.

ஷேர் சிங் அனைத்திந்திய கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியுடன் தொடர்புடையவர். இதுகுறித்து பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், குல்விந்தர் கவுர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசியல் எதிர்வினைகள்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள ஹரியாணா முதல்வர் நையப் சைனி சிங், பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்ட ஓர் ஊழியர் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் கர்னால் தொகுதி மக்களவை உறுப்பினருமான மனோகர் லால் கட்டார், இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு அமைப்புகளின் பணி பாதுகாப்பு கொடுப்பது. அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய வேண்டும். பொது மக்களின் உணர்வுகளுடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. சிஐஎஸ்எஃப் துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.

மண்டி தொகுதியில் இருந்து கங்கனாவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இது யாருக்கும், குறிப்பாக இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது. விவசாயிகள் போராட்டம் குறித்து புகார்கள் வந்தாலும், ஒருவரை இப்படி அடிப்பது துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தச் செயலைக் கண்டிப்பதாகவும் இதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

விவசாயிகள் குறித்த கங்கனாவின் சர்ச்சைக் கருத்து

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் காவலர் பணி இடைநீக்கம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம்,KANGANA RANAUT/FB

கடந்த 2020ஆம் ஆண்டில், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய ஓராண்டு போட்டத்தின்போது கங்கனா கூறிய கருத்துகள் சர்ச்சையாகின.

செப்டம்பர் 2020இல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பற்றி கங்கனா பதிவிட்ட ஒரு ட்வீட்டில், “கலவரத்திற்கு வழிவகுத்த சிஏஏ பற்றித் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பிய அதே நபர்கள், இப்போது வேளாண் சட்டங்கள் பற்றியும் தவறான தகவல்களைப் பரப்புகிறார்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் ‘பயங்கரவாதிகள்” என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து கங்கனா மீண்டும் ட்வீட் செய்து, விவசாயிகளை தான் ‘பயங்கரவாதிகள்’ எனக் குறிப்பிட்டதாக யாராவது நிரூபித்தால் தனது ட்விட்டர் கணக்கையே நீக்கிவிடுவதாக விளக்கம் அளித்தார்.

வேளாண் மசோதா குறித்து வதந்தி பரப்புபவர்களைத்தான் ‘பயங்கரவாதிகள்’ என்று தான் அழைத்ததாகவும், விவசாயிகளை அல்ல என்றும் கங்கனா தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cl44z5red05o

  • கருத்துக்கள உறவுகள்

கங்கனாவை தாக்கியது ஏன்? - விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்

07 JUN, 2024 | 10:38 AM
image

சண்டிகர்: நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்க வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை.

இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து பேசியிருக்கும் காவலர் குல்விந்தர் கவுர், “100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கங்கனாவை கன்னத்தில் அறைந்த காவலரான குல்விந்தர் கவுர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர் குல்விந்தர் கவுரை பொறுத்தவரை அவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி கூறும்போது “இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணாவத் சொன்னது என்ன? - கடந்த 2020-ம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பிட்ட ஒரு போராட்டத்தை மேற்கொள்காட்டி அதிலிருக்கும் மூத்த விவசாய பெண்ணை குறிப்பிட்டு நடிகை கங்கனா தனது எக்ஸ் தள பக்கத்தில், “100 ரூபாய்க்காக அவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்” என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதனை தனது எக்ஸ் தள பக்கத்திலிருந்து கங்கனா நீக்கிவிட்டார்.

முன்னதாக தன்னை தாக்கியது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள கங்கனா, “நான் நன்றாக இருக்கிறேன். விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின்போது அந்தச் சம்பவம் நடைபெற்றது. சோதனை முடிந்த பின், நான் செல்லும்போது அந்த பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். நான் அவரைக் கடக்கும்போது அவர் என் முகத்தில் அடித்தார்; பின்பு என்னை திட்டினார்.

ஏன் இப்படி செய்தாய் என்று நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர், விவசாயிகளின் போராட்டத்துக்காகதான் இப்படி செய்தேன் என்றார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதும், இதை எப்படி கையாள்வது என்பதும் தான் எனக்கு கவலை அளிக்கிறது” என தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/185504

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

441896621_396339940067376_71521754553189

கங்கனா கன்னத்தில் காயம். 😂

447782121_1105708590494431_3111230262509

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு காயமும் இல்லை முகத்தில் பட்டி டிங்கரிங் செய்த பெயின்ற் எல்லாம் அடிச்சவரின் விரலில அப்பிப்போட்டுது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.