Jump to content

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பலி : மன்னார் முருங்கன் பூவரசங்குளம் பகுதியில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

14 JUN, 2024 | 02:52 AM
image
 

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை(13)  இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான தந்தை ஒருவர் தனது  வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார்.

இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/186038

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் ஆசைப்படுகின்றதே என்று ஆபத்தான இடங்களில் பிள்ளையை வைத்துக் கொண்டு இப்படியான வேலைகளைச் செய்யக் கூடாது என்பது இதில் கிடைக்கும் பாடம்.  அந்தத் தந்தையின் நிலையை இப் போது எண்ணிப்பார்க்க முடியாமல் உள்ளது. தாங்க முடியாத சோகம்.ஆழ்ந்த இரங்கல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல ...... ஆழ்ந்த இரங்கல்கள் .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை முன்னே இருத்திப் பயணிப்பதும் பாதுகாப்பற்றது. ஆனால் பலரும் செய்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

மிக கவலையான செய்தி. கவலையீனமான பிழைகளால் நடக்கும் தவறுகளை என்னவென்பது? பரிதாபகரமான மரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி பேத்தி பலி!

தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயதுடைய பேத்தி  உயிரிழந்த சம்பவம் நேற்று (13)  இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார்.

இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய பேத்தி திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://tamil.adaderana.lk/news.php?nid=188762

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஜனிகாந்த் எண்ட பெயரில ஒருத்தர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வெளிக்கிட்டவர். அப்ப ஒரு சனமும் ஒரு கதையும் இல்லை.  😁
    • கனடா (Canada) - டொர்ன்டோ (Toronto) நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த குருக்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கனேடிய நேரப்படி, இன்றைய தினம் (08.11.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி   இதன்போது, இந்து மத வழக்கப்படி மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் ஒரு கட்டத்தில் அந்நிகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தெரியாமல் இடிபட்டு குறித்த குருக்கள் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  மேலும், இந்த நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. https://tamilwin.com/article/tamil-iyyar-fell-off-in-toronto-in-tamil-event-1731068969
    • பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ் பதவி, பிபிசி நியூஸ் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆண் கொசுக்களின் கேட்கும் திறனை மட்டுப்படுத்தினால் அவை இனச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. பெண் கொசுக்கள் சிறகடிக்கும் ஓசையைக் கேட்டே ஆண் கொசுக்கள் ஈர்க்கப்படும். அவையிரண்டும் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே உடலுறவில் ஈடுபடும். கொசுக்களின் செவித்திறன் மரபணுவை மாற்றிய ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றத்திற்கு பிறகு ஆண் கொசுக்கள் ஒரே கூண்டில் இருந்தும் கூட மூன்று நாட்கள் ஆகியும் எந்த பெண் கொசுவுடனும் உறவில் ஈடுபடவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். பெண் கொசுக்கள் தான், மக்களுக்கு நோய்களை பரப்பக் கூடியவை. அந்த கொசுக்களை முட்டை இடாமல் தடுப்பதன் மூலம், அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்கும். செவித்திறனை நீக்கியதால் கொசுக்களின் இனச் சேர்க்கையில் பாதிப்பு ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு நோய் பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் எஜிப்டய் (Aedes aegypti) எனும் கொசுக்களைப் பற்றி இர்வினில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கொசுக்களின் இனச் சேர்க்கை பழக்கங்களை ஆய்வு செய்தார்கள். இதன் கால அளவு சில நொடிகளிலிருந்து ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே இருந்தது. பிறகு தான் மரபணுக்களை கொண்டு எப்படி இதை தடுப்பது என்று கண்டுபிடித்தனர். டி.ஆர்.பி.வி.எ. (trpVa) என்ற புரதத்தை அவர்கள் குறிவைத்தனர். இந்த புரதம் தான் கொசுக்களின் செவித்திறனுக்கு முக்கியமானது. மரபணு மாற்றம் பெற்ற கொசுக்கள், அவற்றின் இணையின் இறக்கை சத்தத்திற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. அந்த சத்தம் கேட்கமுடியாத அவற்றின் காதுகளில் விழுந்தது. இதற்கு மாறாக, மரபணு மாற்றம் பெறாத கொசுக்கள் பல்வேறு முறை உடலுறவில் ஈடுபட்டு அந்த கூண்டில் இருந்த அனைத்து பெண் கொசுக்களையும் கருத்தரிக்க செய்தன. பிஎன்ஏஎஸ் அறிவியல் இதழில் தங்கள் படைப்புகளை வெளியிட்ட கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த மரபணு மாற்றம் ஏற்படுத்திய செவித்திறன் நீக்கம், கொசுக்களின் இனச்சேர்க்கையை முற்றிலுமாக தடுத்து விட்டது என்று கூறினார்கள்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏடிஸ் எஜிப்டய் கொசுக்கள் ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு நோய் பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்களை பரப்புகின்றன உணவுச் சங்கிலியில் கொசுக்களின் பங்கு ஜெர்மனியிலுள்ள ஓல்டன்பர்க் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோர்க் ஆல்பர்ட், கொசுக்களின் இனப்பெருக்கத்தைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர். அவரிடம் இந்த ஆய்வை பற்றி நான் கேட்டேன். “கொசுக்களின் செவித்திறனை அழிப்பது கொசுக்களை கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாக இருந்தாலும் இதில் இன்னும் நிறைய அறிய வேண்டியுள்ளது.” என்று அவர் கூறினார். “இந்த ஆய்வில் வழங்கப்பட்ட முதல் நேரடி மூலக்கூறு சோதனையின் முடிவில், கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு செவித்திறன் முக்கியமானது மட்டுமல்ல இன்றியமையாததும் கூட என்பதைக் காட்டுகிறது.” என்றார். “ஆண் கொசுக்களின் செவித்திறன் மட்டுப்படுத்தப்பட்டாலோ, அவை சத்தத்தினை கேட்டு ஈர்க்கப்படவில்லை என்றாலோ கொசுக்களின் இனமே அழிந்துவிடும்.” என்றும் ஆல்பர்ட் கூறுகிறார். கொசுக்களை கட்டுப்படுத்த மற்றொரு வழியையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அதாவது கொசுக்களால் அதிகம் நோய்கள் பரவும் இடங்களில் மலட்டு ஆண் கொசுக்களை நாம் விட்டுப் பார்க்கலாம். என்னதான் கொசுக்கள் நோய்களை பரப்பினாலும், இவை உணவுச்சங்கிலியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக மீன்கள், பறவைகள், வவ்வால்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களுக்கு இவை ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் சில வகை கொசுக்கள் முக்கியமான மகரந்த சேர்க்கையாளர்களாகவும் இருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew2097719zo
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.