Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்திப்பின் பின்னணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜூனா மூன்
  • பதவி, பிபிசி கொரியா
  • 18 ஜூன் 2024

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வட கொரிய பயணம் செவ்வாயன்று திட்டமிடப்பட்டுள்ளது. இது பல மாத ஊகங்களுக்குப் பிறகு ரஷ்ய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.

புதின் கொரிய நகரமான பியாங்யாங்குக்கு செல்லவிருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் புதின், வடகொரியாவில் கால் பதிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு வடகொரியத் தலைவர் `கிம் ஜாங் இல்’ ஆட்சியில் இருந்த போது அவர் அங்கு சென்றிருந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் (Vostochny Cosmodrome) நடந்த உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, `கிம் ஜாங் உன்’னின் அழைப்பை புதின் ஏற்றுக்கொண்டார்.

கொரியாவில் புதின் பங்கேற்க இருக்கும் உச்சி மாநாடு உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரஷ்யா-வடகொரியா நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் அளவு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான கலாசாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியாவின் அணுசக்தி வளர்ச்சி மற்றும் மேம்பட்ட ஆயுதப் பரிமாற்றங்களை புதின் எவ்வாறு கையாள விரும்புகிறார் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஆகும்.

தென் கொரியாவில் உள்ள வட கொரிய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டாக்டர் கிம் டோங்-யுப் கூறுகையில், "இந்த உச்சி மாநாடு, உறுதியான விளைவுகளை உருவாக்கும் ஆழமான உரையாடல்களுக்கான இடமாக இல்லாமல் ஒரு நிகழ்வாக இருக்க கூடும்” என்றார்.

ராணுவம் : ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் தேவை, வடகொரியாவுக்கு தொழில்நுட்பம் தேவை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்திப்பின் பின்னணி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ரஷ்யாவின் எல்லையில் அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களைப் பயன்படுத்த யுக்ரேனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் விளைவாக வட கொரியாவும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் அதிகம் சார்ந்துள்ளன.

கொரியா பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் துறையின் பேராசிரியரான டாக்டர் நாம் சுங்-வூக்கின் கருத்துப்படி, "அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய தலைப்புகளில் ஒன்று, வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு எவ்வளவு அதிகமாக வழங்கப்படும்" என்பதுதான்.

வழக்கமான ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்களுக்கு அப்பால் இம்முறை பேச்சுவார்த்தை சில முக்கிய முடிவுகளை எட்டக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஆயுத அமைப்புகளின் கூட்டு மேம்பாடு உட்பட நெருக்கமான ராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார் அவர்.

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு ஈடாக வட கொரியா உணவு, எரிபொருள் ஆகியவற்றை விட அதிகமாக எதிர்பார்க்கும் என்று நம்பப்படுகிறது.

மே மாதம் வடகொரியாவின் ராணுவ உளவு செயற்கைக்கோள் ஏவுதல் தோல்வியடைந்துவிட்டது. எனவே, இந்த சந்திப்பின் போது, விண்வெளி தொழில்நுட்பத்தில் ரஷ்யாவின் உதவியை வடகொரியா கோரக்கூடும் என்று டாக்டர் நாம் சுங் கணித்துள்ளார்.

விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா, வடகொரியாவின் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவியாக இருக்கும்.

வடகொரியா தனது உளவு செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கவும் ரஷ்யாவின் ஆதரவை நாடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் அணு ஆயுதங்கள் பற்றிய எந்த பேச்சுவார்த்தையும் வெளிப்படையாக நடக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் நாம் சுங் நம்புகிறார்.

மேற்கத்திய ஆயுதங்கள் யுக்ரேனுக்குள் நுழைவது மற்றும் ரஷ்ய நிலப்பரப்பை அச்சுறுத்துவது குறித்து புதின் முன்னெச்சரிக்கை உணர்வு கொண்டவர். எனவே அணு ஆயுதங்களின் சாத்தியமான பயன்பாடு குறித்து ஆலோசனைகளை அவர் வழங்கி உள்ளார்.

எவ்வாறாயினும், கொரியாவிலும் வடகிழக்கு ஆசியாவிலும் அணுசக்தி தொடர்பான ஒத்துழைப்பு அல்லது அணு ஆயுதங்களைப் பகிர்வது என்பது ரஷ்யாவுக்கு அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்” என்று டாக்டர் நாம் கூறுகிறார்.

எனவே, இந்த உச்சிமாநாட்டில் அணுஆயுதங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் வெளிவர வாய்ப்பில்லை.

 

பொருளாதார ஒத்துழைப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்திப்பின் பின்னணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மாஸ்கோவில் முன்பு இயங்கி வந்த வடகொரிய உணவகம் ‘கொரியோ’

ரஷ்யாவும் வடகொரியாவும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

டோங்-ஏ பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான டாக்டர் காங் டோங்-வான் கருத்துப்படி, "வடகொரியாவிற்கு ரஷ்யாவிடம் இருந்து தற்போது மிகவும் தேவைப்படுவது தொழிலாளர்கள் அனுப்பும் வெளிநாட்டு நாணயம் ஆகும். இதனால் வடகொரியா அதிகளவிலான தொழிலாளர்களை ரஷ்யாவிற்கு அனுப்பும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

ரஷ்யாவை பொருத்தவரை போரினால் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் உள் கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பவும் சீரமைக்கவும் அதன் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் தொழிலாளர்கள் தேவை.

"யுக்ரேன் போருக்காக புதிய படைகள் திரட்டப்பட்டதாலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்றதாலும் ரஷ்யா கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், வட கொரியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டாக்டர் காங் கூறுகிறார்.

எவ்வாறாயினும், வட கொரியாவிற்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதாரத் தடைகளின்படி வட கொரிய தொழிலாளர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதைத் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட கொரிய தொழிலாளர்களையும் 22 டிசம்பர் 2019 க்குள் திருப்பி அனுப்புவதை அது கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா, வட கொரிய தொழிலாளர்களை பணியமர்த்த அதிகாரப்பூர்வமாக முயற்சிகள் மேற்கொண்டால், அது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். சர்வதேச பின்னடைவு மற்றும் ராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்தும் என்பதை சர்வதேச அளவில் அனைவரும் உற்று நோக்குகின்றனர்.

 

கலாசார பரிமாற்றம்: வட கொரியாவின் சுற்றுலா வளர்ச்சியடைகிறதா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்திப்பின் பின்னணி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,வட கொரியாவையும் சீனாவையும் பிரிக்கும் யாலு ஆற்றின் மீதுள்ள ப்ரோக்கன் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்கின்றனர்

கோவிட் -19 தொற்றுநோய் சூழல் காரணமாக பிப்ரவரி 2020 இல் இருந்து இடைநிறுத்தப்பட்ட வட கொரியாவிற்கு செல்லும் `குழு சுற்றுலா’ பயணங்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது.

வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பயணிகள் ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியது, கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக ஜூன் 6 ஆம் தேதி வடகொரியா - ரஷ்யா இடையிலான ரயில் சேவைத் தொடங்கியது.

400 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி மற்றும் மே 2024 க்கு இடையில் வட கொரியாவுக்குச் சென்றுள்ளனர் என்று ரஷ்ய பிராந்தியமான ப்ரிமோர்ஸ்கி க்ராயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய சுற்றுலா நிறுவனம் ஒன்று (Vostok Intur), அதன் இணையதளத்தில் 750 டாலருக்கு (ரூ.62,571) வட கொரியாவிற்கு நான்கு முதல் ஐந்து இரவு சுற்றுலாப் பயணத்தை வழங்குகிறது. இந்த சுற்றுலா ஏஜென்சி செப்டம்பர் மாதம் வரை வட கொரியாவிற்கு குழு சுற்றுப்பயணங்களை திட்டமிட்டு வருகிறது. இதில் பெக்து மலை, வட கொரிய வரலாற்று தளங்கள் ஆகிய பகுதிகளை பார்வையிடுவது, கொரியப் போரின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது ஆகியவை அடங்கும்.

"சுற்றுலா துறை என்பது வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்கான ஒரு வழி மட்டுமல்ல, மக்களிடையே நேரடி பயணங்கள் மூலம் உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று வட கொரிய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் டோங்-யூப் பிபிசியிடம் கூறினார்.

வட கொரியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சர்வதேச அளவில் அதன் மீதான ஆபத்தான நாடு என்னும் பிம்பத்தை மென்மையாக்க உதவும் என்றும் அவர் கருதுகிறார்.

எனவே, வட கொரிய சுற்றுலா என்பது சமூக-கலாசார பரிமாற்றத்தின் முக்கிய வழிமுறையாகக் கருதப்படுகிறது. அதன் பொருளாதார நன்மைகள் மட்டுமின்றி நாட்டின் பிம்பத்தை மேம்படுத்துகிறது.

இருப்பினும், கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து சில சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து, வட கொரியாவுக்கான குழு சுற்றுப்பயணங்களை ரத்து செய்த சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன.

மே 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நான்கு நாள் குழு சுற்றுப்பயணம் பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாக ரஷ்ய பயண நிறுவனம் வோஸ்டாக் இன்டூர் சமீபத்தில் அறிவித்தது.

வட கொரியாவின் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டினரின் சுதந்திர நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் சுற்றுலாத் துறையின் விரிவாக்கத்திற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன.

வட கொரியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் சுற்றுலா ஒத்துழைப்பைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பேராசிரியர் காங் நம்புகிறார்.

 

புதினின் 2020 பயணம் எப்படி மாறுபடுகிறது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்திப்பின் பின்னணி அவர்களை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வடகொரியாவுக்கு முதல்முறையாக சென்ற அதிபர் புதின், 2000-ம் ஆண்டு அந்நாட்டு தலைவர் `கிம் ஜாங் இல்' அவர்களை சந்தித்தார்

2000 ஆம் ஆண்டில், அதிபர் புதின் முதன்முறையாக வடகொரிய தலைநகரான பியாங்யாங்கிற்குச் சென்று வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-ஐ சந்தித்தார். பனிப்போர் முடிவடைந்த பின்னர் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு அது.

அந்த நேரத்தில், ரஷ்யா சர்வதேச அரங்கில் மீண்டும் தலைதூக்க முயன்றது, அதே நேரத்தில் 1990களில் வட கொரியாவில் ஏற்பட்ட "தி ஆர்டியஸ் மார்ச்" என்று அழைக்கப்படும் பஞ்சத்தின் பாதிப்பில் இருந்து வெளிவர முயற்சி செய்து கொண்டிருந்தது. வெளி உலகத்துடன் அதன் தொடர்புகளை அதிகரிக்க முயற்சித்தது.

இரு தலைவர்களும் ரஷ்ய-கொரிய கூட்டு பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர், இது இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியை மையமாக கொண்டிருந்தது. வட கொரிய ஏவுகணை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது, மேலும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விரிவாக பேசப்பட்டது.

ராணுவ ஒத்துழைப்பைப் பொருத்தவரை, இரு நாடுகளும் ஆக்கிரமிப்பு அல்லது ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக இரண்டு நாடுகளும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். தொடர்பளவில் இருக்கும் ஒத்துழைப்பு இம்முறை இன்னும் முறையான கூட்டாண்மையை மேம்படுத்தும் என கருதுகின்றனர்.

"கடந்த காலங்களில், வட கொரியாவின் ராணுவ ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்ட போது புதின் வடகொரியாவுக்கு பயணம் செய்தார். இருப்பினும், யுக்ரேனில் நடந்த போரை அடுத்து வட கொரியாவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ராணுவ உறவுகள் வலுப்பெற்றுள்ளன" என்று டாக்டர் நாம் விளக்குகிறார். உச்சி மாநாடு "கடந்த காலத்தை விட மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பை, கிட்டத்தட்ட ஒரு கூட்டணியை" உருவாக்கும் என்கிறார் அவர்.

டாக்டர் நாமைப் பொறுத்தவரை, வட கொரியா இப்போது அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்பதே புதினின் கடந்த கால பயணத்துக்கும் 2024 பயணத்துக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு.

ரஷ்யாவும் வட கொரியாவும் சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைப்பதன் மூலம் அமெரிக்காவை மையமாக கொண்ட ஒற்றைத் துருவ அமைப்பு ( unipolar system) வீழ்ச்சியடைய தொடங்கும் போது, தேசிய நலன்களை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பின் புதிய வழிகளைக் கண்டறியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று டாக்டர் கிம் கூறுகிறார்.

"கொரிய நாடுகளுக்கிடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முறிவு காரணமாக, வட கொரியா புதிய ராஜதந்திர உத்தியை வகுக்கும் வாய்ப்புள்ளது" என்று அவர் கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பிற்கு வடகொரியா முழுமையான ஆதரவு - வடகொரிய ஜனாதிபதி

19 JUN, 2024 | 12:19 PM
image
 

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பை முழுமையாக ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்தவேளை கிம்ஜொங் உன் இதனை தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் புட்டினிற்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரோஜா மலர்களுடன் அவரை வரவேற்றுள்ளனர், இராணுவ அணிவகுப்பு மரியாதையும் புட்டினிற்கு வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/186435

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.