Jump to content

"மனித மனம் திருப்தி அடையாது"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"மனித மனம் திருப்தி அடையாது"
 
 
"மனித மனம் திருப்தி அடையாது
மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது
மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது
மற்றவரைத் தாழ்த்தாமல் வாழ முடியாது"
 
"கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான்
கடும் மழை பொழிந்தால் திட்டுகிறான்
கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான்
கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்"
 
"இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது
இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும்
இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை
இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்"
 
"சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை
சிலருக்கு வைக்க இடமே இல்லை
சிக்கனம் தெரிந்தவனுக்கு வாழ்வு மகிழ்வு
சிம்மாசனம் தேடுபவனுக்கு மகிழ்ச்சி இல்லை"
 
"பணக்காரன் மூட்டை முடிச்சு பதுக்குகிறான்
பஞ்சம் பிடித்தவன் போல் அலைகிறான்
பட்டினி கிடக்கிறான் சாதாரண மனிதன்
பங்கிட்டு அதையும் கொடுத்துச் சாப்பிடுகிறான்"
 
"உன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்பதல்ல
உன்னிடம் என்ன இருக்கிறதுதான் முக்கியம்
உலோபியாக சேர்த்து வைப்பதை விட
உரிமையுடன் கொஞ்சத்தையும் சரியாக அனுபவி !"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]
240785787_10219786571157516_8075786961198824570_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=fhZ4WDpDH6sQ7kNvgER3-yG&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYCBdI05IyhACGgCjSfv95rNJpfqWlAn7eKOVM2scgrG2A&oe=66832813  240792855_10219786570797507_6787313053288664334_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=QHXHm19XXKoQ7kNvgGiUYDf&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYD2CKUu-Q4nnj9GulRPMw5YXVb4wwcWxJGhkRwbZegwDw&oe=668359A6 240800959_10219786571597527_3342207447057755334_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=_sTYZGnk_MgQ7kNvgETC39a&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDVFX9Mj_7k0KgUmJdGikC76ugdDa0HBkUyePRpeUPQEg&oe=66832CAF
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதை வைத்து திருப்திப்படுவது தான் மனிதனுக்கு அழகு.

மிருகங்களும் பறவைகளும் தமக்கு மிஞ்சி எதையும் சேகரிப்பதுமில்லை. உண்ணுவதுமில்லை.
இயற்கையை மீறி  எதையும் செய்வதுமில்லை. ஆனால் ஆறறிவு உள்ள இனம் மட்டும்....?

  ஏனோ தெரியவில்லை இந்த பாடல்தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்..

வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்..

நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்..


பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்?


 

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.