Jump to content

டெல்லியில் கனமழை பாதிப்பு: விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, பலர் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 JUN, 2024 | 10:57 AM
image
 

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

GRIEt_EXkAESMw5.jpg

விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல்.

இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அங்கு அவர்கள் விரைந்துள்ளனர்.

GRIEt-_WgAEjdMH.jpg

பீம் சரிந்து விழுந்து சேதமடைந்த காரில் இருந்து ஒருவரை மீட்டுள்ளனர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சம்பவத்தால் டெர்மினல் 1 பகுதியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது விமான நிலைய தரப்பு. மேலும், இந்த சம்பவத்தை தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதனை அவர் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி மழை: கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதன் காரணமாக அங்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்த சூழலில் நேற்று (வியாழக்கிழமை) அங்கு மழை பதிவானது. அதோடு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரம் பதிவான மழை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

GRIEt_IXIAAuKt_.jpg

அங்கு பருவமழை முன்கூட்டியே எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனங்கள் நேற்று தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் காலநிலை மாற்றம் காரணமாக அதீத வெப்பம் மற்றும் மழை என இரண்டையும் எதிர்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/187154

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு எஞ்சினியர்கள் கட்டிய மேற்கூரையாக இருக்குமோ. 😂

 

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டு எஞ்சினியர்கள் கட்டிய மேற்கூரையாக இருக்குமோ. 😂

 

ஊழல் முகவர்கள்தான் காரணம், கேரளாவில் ஒரு வைத்தியசாலை கட்டுமானத்தில் (கூலித்தொழிலாளியாக) வேலை செய்திருந்தேன் அந்த கட்ட ஒப்பந்தகாரர் மிக மோசமான தரக்குறைவான கட்டத்தினை கட்டியிருந்தார், ஆனால் அங்கு பணியாற்றிய புதிதாக படிப்பினை முடித்து விட்டு வந்திருந்த பொறியிலாளர் மிகவும் சிரமப்பட்டு கண்காணித்தார் அவரது கண்களூக்கு மண்ணை தூவி தனது காரியத்தினை சாதித்துவிட்டார் அந்த கட்டட ஒப்பந்த காரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி விபத்து | 3 தொழிலாளிகள் உடல் மீட்பு; மழை தொடர்பான உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு

29 JUN, 2024 | 12:22 PM
image
 

புதுடெல்லி: தலைநகரில் பெய்த கனமழை காரணமாக வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப்பணியிடத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக டெல்லியில் மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப் பணியிடத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட டெல்லி தீயணைப்புத் துறையினருக்கு (டிஎஸ்எஃப்) அதிகாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்தது. இதுகுறித்து டிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறும்போது, “கட்டுமானப் பணியிடத்தில் நடந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் இருவர் சந்தோஷ் குமார் யாதவர் (19) மற்றும் சந்தோஷ் (38) என்பது தெரியவந்துள்ளது. மூன்றாமவர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இடிபாடுகளை அகற்ற கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டுமான குழிகளில் இருந்த மழைநீரை அகற்ற மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன

இடிபாடுகளில் இன்னும் யாரவது சிக்கியிருக்கிறார்களா என்று அறிய தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், காவல் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

இவை தவிர, பருவ மழைத் தொடங்கி உள்ள டெல்லியில் கடந்த 88 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஜூன் மாதத்தில் அதிக மழை பொழிந்த நிலையில் மழைத் தொடர்பான விபத்துக்களில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 மேற்கூரை இடிந்து விழுந்து கார் ஓட்டுநர், ரோகினி பிரேம் நகர் பகுதியில் மின்சாரம் பாய்ந்து 39 வயது ஆண் ஒருவர், நியூ உஸ்மான்பூர் மற்றும் ஷாலிமார் பாக் பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி 3 பேர் அடங்குவர்.

டெல்லி கனமழை: கடந்த வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை டெல்லியில்228 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1936-ம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் இந்தளவுக்கு மழை பெய்துள்ளது. 88 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மழை சாதனை அளவாகப் பார்க்கப்படுகிறது.

1936-ம் ஆண்டு் ஜூன் மாதத்தில் 235.5 மில்லிமீட்டர் மழை பெய்ததே இதுவரை அதிகபட்ச மழை அளவாக உள்ளது. மழை காரணமாக டெல்லி-என்சிஆர் (டெல்லி-தேசிய தலைநகர மண்டலப் பகுதிகள்) பகுதிகளில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

https://www.virakesari.lk/article/187243

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமைதி வழி அரசியல் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உருப்படியாக எதையும் பெற்றுக் கொடுக்க முடியாத தோற்றுப்போன அரசியல்வாதியாக 91 வயது வரை வாழ்ந்து தன் வாழ்நாள் கனவான எம் பி யாகவே சாக வேண்டும் என்பதை மட்டுமே நிறைவேற்றிக் கொண்ட ஒருவராக விடைபெற்றார்.  
    • ஆழ்ந்த அனுதாபங்கள்.
    • 91 வயது வரை அரசியலில் இருந்தும்…. தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத தோல்வியுற்ற அரசியல்வாதியாக காலமாகிவிட்டார்.
    • கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தர் காலமானார் 
    • கேரளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் தம்பதிகளுக்கு சில திடுக்கிடும் பிரச்னைகள் ஏற்பட, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே `பேரடைஸ்' படத்தின் கதை.       பேரடைஸ் தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார்.  அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள - தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும் நடத்துகிறார்கள். இருப்பினும் சுற்றுலா வந்திருக்கும் நபர்களுக்கு எந்த நெருக்கடியும் அவர்கள் கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் பசுமை கொஞ்சுகிற இல்லற விடுதிக்கு வருகிறார்கள் தம்பதிகள். அன்றிரவு தம்பதிகளுக்கு இரவு உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடுக்கிடும் பிரச்னை ஒன்று வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைப் பொறுமையாகப் பேசுவதே இந்த மலையாள மொழிப் படத்தின் கதை.  காதலுக்கான அன்னியோன்னியம், சரி தவறு ஆகிய இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கும் மனித இயல்பு, இறுதிக்காட்சியில் நரகத்தை உடைத்து வெளிவருகிற அழுகை என தர்ஷனா ராஜேந்திரன் படத்தின் மைய கருவுக்கு வலுசேர்த்து அற்புதமான நடிப்பினை வழங்கியிருக்கிறார். அவருக்குப் போட்டியாக மனித இயல்பின் தடுமாற்றம், தன்னலத்திலிருந்து சுயநலத்துக்கு மாறுகிற நிலை, குற்றவுணர்ச்சியை போக்கடிக்க காரணம் கற்பிக்கும் மனநிலை என யதார்த்த நடிப்பினை வழங்கி தன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரோஷன் மேத்யூ. காவல்துறை அதிகாரியாக பெரேரா, ஓட்டுநராக ஷியாம் பெர்னான்டோ, விடுதி வேலைக்காரர்களாக சம்சுதீன் மற்றும் இளங்கோ தங்களுக்கான வேலையைத் திரையில் திறம்படச் செய்திருக்கிறார்கள்.  தீவு தேசத்தின் பசுமையை ரம்மியமாகப் படம் பிடித்திருக்கிறது ராஜிவ் ரவியின் கேமரா கண்கள். வலிந்து திணிக்கப்படாத காட்சிகளுக்குச் சரியான வேகத்தினை கொடுத்து யதார்த்தினை உறுதி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத். தனிமையில் இயற்கையுடன் அமர்ந்து பேசுகிற விதமாக ஒளி வடிவமைப்பு கச்சிதமாகச் செய்யப்பட, அதில் தேவைக்கேற்ப ‘கே’யின் பின்னணி இசை மேஜிக் செய்திருக்கிறது. காவல்நிலையம், ஹோம் விடுதிக்குள் பணியாட்கள் தங்குமிடம் எனக் கலை இயக்கத்தில் தம்மிக்கா ஹேவாடுவத்தாவின் மெனக்கெடல் தெளிவாகத் தெரிகிறது.  படம் ஆரம்பித்ததிலிருந்தே உலக சினிமாவுக்கான இலக்கணத்தின் படி மிதமான வேகத்தில் எதார்த்த திரைமொழியைக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. ஒருபுறம் இலங்கையில் நடக்கும் சமகால பிரச்னையை மையமாக வைத்து ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற படம், மறுபுறம் மனித மனங்களில் மண்டி கிடக்கும் கசடுகளைத் தூர் செய்கிறது. பல அடுக்குகளை உருவகமாக வைத்து நகரும் காட்சிகளில் ராமாயணம், மான் ஆகியவற்றைப் பயன்படுத்திய விதத்தில் இயக்குநர் பிரசன்ன விதானகே பார்வையாளர்களுக்குப் பலப்பரீட்சை நடத்துகிறார். அதனால் படம் முடிந்த பின்னரும் ஒவ்வொரு காட்சியாக நாம் மீண்டும் அசை போடத் துவங்குகிறோம். இந்த உரையாடலே படைப்புக்கான வெற்றி எனக் கருதலாம்.  “நான் சோகமாக இருக்கவேண்டுமென்று நீ நினைக்கிறாயா”, “மனித உயிரோட மதிப்பு என்ன? ஒரு ஓட்டுதான்” போன்ற வசனங்கள் போகிற போக்கில் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதிலும் “சீதையே ராவணனைக் கொல்லும் ராமாயணம் உட்பட 300க்கும் மேற்பட்ட ராமாயண வெர்ஷன்கள் இங்கே இருக்கின்றன”, “சந்தேகப்படும் ராமனை அக்கினி பரீட்சையில் வெல்கிறாள் சீதை” என்று பேசப்படும் வசனங்கள் இறுதிக் காட்சிக்கான குறியீடாக நம் மனதில் பதிகிறது. அதே போலக் கதையில் பேசப்பட்ட விஷயங்களைப் பெண் மையபார்வையில் அணுகியதற்கும், அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மை மக்களை அதிகாரம் என்ன செய்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியதற்கும் படக்குழுவுக்குப் பாராட்டுக்கள்.  பதற்றமான சூழலில் மனிதன் தன்னை எந்த நிலையில் வெளிப்படுத்துகிறான் என்பதை, ஒரு நாட்டின் பதற்ற சூழலை வைத்துப் பின்னியிருக்கும் இறுதிக் காட்சி நம்மைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி உறைய வைக்கிறது. சில இடங்களில் பொறுமையாக நகரும் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன என்றாலும், அந்த நிதானத்தைத்தான் படைப்பாளர் நம்மிடம் விரும்புகிறார் என்கிற இடத்தில் இந்தப் படம் நிஜமாக ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது.  மொத்தத்தில் 90 நிமிடங்களுக்குள் நம் அக உணர்வுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் இந்த `பேரடைஸ்', ஒரு பெண்ணின் பார்வையில் `எது சொர்க்கம்’ என்ற கேள்வியை முன்வைத்து, படத்தில் வரும் வசனம் போலவே மற்றொரு ராமாயண பதிப்பாக நம் மனதில் ஆழமாகப் பதிகிறது.   https://cinema.vikatan.com/mollywood/darshana-rajendran-and-roshan-mathews-paradise-movie-review?pfrom=home-main-row
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.