Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னிகோசிப் 33

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் கம்பன் கழகத்தினர் குற்றவாளி கூண்டில் இராமன் என்ற தலைப்புடன் தங்களது கழகத்தை தொடங்கி உள்ளனர் அவுஸ்ரெலியாவில்.மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் கம்பன் கழகதிற்கு ஒரு வெற்றி என்று தான் நினைக்கிறேன்.சிட்னி டமிழ்சிற்கு சனி,ஞாயிறு என்றால் இப்படி பொழுதுபோக்கு தேவை தானே கொஞ்ச புராண கதைகளுடன் பக்தி கதைகள் சம்பந்தமான விடயங்கள் என்றால் சனம் காஞ்சிபுரசேலை,பட்டுவேட்டியு

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள் சில பேர்கள் இருக்கின்றார்கள். தாங்களும் செய்யமாட்டார்கள், மற்றவர்களையும் விடமாட்டார்கள்.

திராவிடம் கதைக்கின்றோம், தமிழ் வளர்க்கின்றோம் என்பார்கள், ஆனால் நாள்க்கணக்காக மற்றவர்களைப் புறணி பாடுவதிலேயே அவர்களின் பரணி வாழ்க்கை முடிந்து விடும்.

சரியோ பிழையோ, இன்ழைறக்குத் தமிழ்க் கலைஞர்களுக்கு கௌரவம் கொடுத்து அவர்களிற்கு ஊக்கத்தை கொடுப்பது கம்பன் கழகம் தான். மற்றவர்கள் எங்கே போனார்கள்??

தமிழ்நாட்டில் கருணாநிதி ஐயா தொடக்கம் திராவிடம் கதைக்கின்றவர்கள் சினிமாக்காரருக்கு கொடுக்கின்ற மரியாதையின் ஒரு பங்கைக் கூடத் தமிழ் எழுத்தாளர்களுக்கு கொடுப்பதில்லை.

அவர்களின் எழுத்துப் பணிக்கு ஒரு கௌரவம் கொடுத்தால் அவர்களை முன்னுக்கு வர வைக்கலாம்.

இல்லை.... புறணிகள் தொடரட்டும்.

(சிலபேரின் எழுத்துப் பிழைகளைப் பார்க்கின்றபோது கன்னித் தமிழை வளர்க்க வேண்டும் போலத் தான் உள்ளது)

Edited by தூயவன்

300- 400 வருடங்களிற்கு பிறகு கம்பன் அவுஸ்ரெலியாவின் பூர்வீககுடி என்பார்கள்இவெள்ளையர்கள் ஆதாரம் கேட்டால் அவுஸ்ரெலியாவின் பூர்விக குடி கறுப்பு கம்பனும் கறுப்பு ஆகவே கம்பன் அவுஸ்ரெலியாவின் பூர்விக குடிமகன் என்பார்கள் மேலும் அவுஸ்ரெலியாவின் தலைநகரம் "கம்பன் நகர்" என்று தான் இருந்தது ஆனால் வெள்ளையர்கள் மாற்றிவிட்டார்கள் கன்பரா என்று.அதற்கு ஒரு விவாத மேடை போடுவார்கள் "கன்பரா" என்று அழைப்பது சரியா "கம்பன் நகர்" என்று அழைப்பது சரியா என்று ஆனால் இந்த விவாதத்தை நிச்சயாமாக எங்களுடைய வாரிசுகள் தமிழில் நடாத்து ஆங்கிலத்தில் தான் நடத்துவார்கள்.

300-400 வருடங்களுக்கு வேகமாக அழிந்து வரும் தமிழ் மொழி இருக்குமா என்பது சந்தேகமே. தமிழர் என்றொரு அடிமை இனம் இருந்தது என்ற வரலாற்றுக்குறிப்புகள் வேண்டுமானால் இருககலாம். அல்லது தமிழன் என்றொரு தனித்துவமான இனம்அடிமைக்குணம் இன்றி ஈழம் என்ற நாட்டுடன் இருக்கலாம். 300-400 வருடங்களில் புலம்பெயர் தேசங்களில் எமது வருங்கால தலைமுறை நாடோடிகள் என்ற அர்த்தம் தொனிபட திரிவார்கள். அவர்களிற்கு கம்பன் ஒரு அர்த்தத்தை கொடுக்கப்போவதில்லை. தேசத்தை மறந்து புராணத்தை தலையில் தூக்கி ஆடுபவன் அவன் பிள்ளைகளுக்கு எதிர்கால அடயாளத்தை அழிக்கின்றான்.

உங்கள் பதிவுக்கு நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

:lol::D:rolleyes: ஹாஹா... புத்துமாமா நல்லாச் சொன்னீங்கள்.. உவேக்கு அத்திவாரம் கட்டி வீடு குடிபுகுந்தாப் பிறகுதான் இப்படி கன்னித்தமிழ் வளர்க்கின்றோம், கத்தரிக்காய் நடுகின்றோம் என்று பதாதைகள் தூக்கிக்கொண்டு நாதஸ்வரம், மேளங்கள் முழங்க ஷோ காட்டுவீனம்.

எங்க ஒருக்கால் தென் ஆபிரிக்காவில.. இல்லாட்டி சோமாலியாவுக்கு போய், இல்லாட்டி மத்திய கிழக்குநாடுகளுக்கு போய், தென் அமெரிக்கநாடுகளுக்கு போய் இந்த விளையாட்டுக்கள செய்துபார்க்கச் சொல்லுங்கோ? அவர்களால முடியாது. ஏனென்றால் அங்க இன்னும் எங்கட ஆக்கள் அத்திவாரம் வெட்டி வீடு கட்ட தொடங்கவில்லை.

கம்பன் கழகம் மக்டொனால்ட், டொயோடா மாதிரி ஒரு சர்வதேச வியாயார ஸ்தாபனமாக மாறி வருகின்றது. முடிந்தால் நீங்களும் இப்போதே சிட்னி கம்பன் கழகத்தில் சில ஆயிரம் டொலர்களை அன்பளிப்பு செய்து அதில் ஒரு உறுப்பினராக மாறிவிடுங்கள். அப்போதுதான் இன்னும் சில வருடங்களில் சிட்னி கம்பன் கழக கிளையில் மூத்த உறுப்பினராக.. அமைப்புச் செயலாளராக வந்து உங்கள் கொடியை உயர்த்தமுடியும். எல்லாம் ஒரு இன்வெஸ்மண்ட் மாதிரி..

இப்ப பாருங்கோ விசு எண்டு ஒருவர் அரட்டை அரங்கம் குரட்டை அரங்கம் என்ற பெயரில ஒவ்வொரு நாடுகளுக்குபோய் சபா வச்சுக்கொண்டு இருக்கிறார் தானே? அதுமாதிரி இதுவும் இந்தக்கால மொடேர்ன் வேர்ல்டில் ச்சும்மா ஒரு டைம் பாஸிங். கனக்க எல்லாம் யோசிக்க கூடாது. வேட்டிய கட்டினோமா, பேர்பியூம் அடித்தோமா, கழுத்தில் வெளியில தெரியுறமாதிரி அரைக்கிலோ பாரமான தங்க செயினை போட்டோமா, காரில போய் கலர் காட்டிப்போட்டு வந்தோமா எண்ட மாதிரி இருக்கவேணும். ஓகேயா?

உங்களுக்கு விருப்பம் என்றால் சொல்லுங்கோ, இந்த கம்பன் கழகத்துக்கு போட்டியா நாங்கள் அகில உலக திருவள்ளுவர் கழகம் எண்டு ஒன்றை ஆரம்பித்து கன்னித்தமிழ் என்ன... சங்கத்தமிழே வளர்ப்போம்!! ஏற்கனவே அப்படி ஒரு கழகம் இருந்தால் வேறு யாராவது பெயரில்... இளங்கோ, விபுலானந்தர்... இப்படி யாராவது பெயரில் துவங்குவோம். ஆனால், ஒரு நிபந்தனை, நான்தான் இந்த அமைப்பின் பொருளாளராக இருப்பேன்.

புராணங்களை எங்கட சனங்களின் காதுகளில் தொடர்ந்து ஓதி இவங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் சம்பல் அரைக்கப் போறாங்களோ..?? எல்லாம் அந்த.. 'தன்னை ஒரு பூனை' என்று சொல்லி பாலை குடிக்கவெளிக்கிட்ட கம்பனுக்குத்தான் வெளிச்சம். கம்பனே தன்னை ஒரு பூனை என்று அந்தக்காலத்திலேயே சொல்லும் போது இவர்கள் இப்போது எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை தானே?

வரட்டு கெளரவம் கொண்டவர்கள், வியாபாரிகள், சாதி பார்ப்பவர்கள், தீவிர மதவாதிகள், சுயநலவாதிகள், படம் காட்டுபவர்கள்.. இவர்கள் ஒதுங்கும் இடமும் இந்த கம்பன் கழகம்தான் என்பதை மறந்துபோடாதிங்கோ.. எதற்கும் கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ.. நானும் தான். இல்லாட்டி நாளைக்கு எங்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏத்திப் போடுவாங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விருப்பம் என்றால் சொல்லுங்கோ, இந்த கம்பன் கழகத்துக்கு போட்டியா நாங்கள் அகில உலக திருவள்ளுவர் கழகம் எண்டு ஒன்றை ஆரம்பித்து கன்னித்தமிழ் என்ன... சங்கத்தமிழே வளர்ப்போம்!! ஏற்கனவே அப்படி ஒரு கழகம் இருந்தால் வேறு யாராவது பெயரில்... இளங்கோ, விபுலானந்தர்... இப்படி யாராவது பெயரில் துவங்குவோம். ஆனால், ஒரு நிபந்தனை, நான்தான் இந்த அமைப்பின் பொருளாளராக இருப்பேன்.

முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் நண்பரே!

வாய்ச்சவால் வேண்டாமே.

அப்போது தான் கஸ்டம் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்கு போனால் குற்றம்...

கம்பன் விழாவுக்கு போனால் குற்றம்....

சமய மன்றங்களுக்கு, முக்கியமாக சைவ சமய, போனால் குற்றம்...

திரைப்படம் பார்க்க போனால் குற்றம்...

புலம் பெயர் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு போனால் குற்றம் (சினிமா பாட்டுக்கு தானே ஆடுகினம், பாடுகினம்)...

ஊரார் ஒன்று கூடலுக்கு போனால் குற்றம்...

கொண்டாட்டத்துக்கு(கனடா) போனால் குற்றம்...

வாணிப வசந்தத்துக்கு(கனடா) போனால் குற்றம்...

பூப்புனித நீராட்டு விழாவுக்கு போனால் குற்றம்...

இந்து? சைவ முறைப்படி நடக்கும் திருமண வைபவத்திற்கு போனால் குற்றம்...

மேற்கத்தைய முறைப்படி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு போனால் குற்றம்...

சேலை உடுத்தி போனாலும் குற்றம்... கட்டை பாவாடை, ராங் ரொப் போட்டு போனாலும் குற்றம்...

வேட்டி கட்டி போனாலும் குற்றம்... கோமணத்தோட போனாலும் குற்றம்...

சைவ தமிழன் எங்கே தானய்யா போறது???

"அகலகரை ஆந்திரா வேட்டியும்

தோளிள் சுமந்த சால்வையுடன்

அப்போ வேட்டியும் தமிழனோட இல்லையா? அப்பிடியெண்டால் நாங்கள் தமிழ் அடையளத்தோட வாழுறதுக்கு இலைகுழைய தான் கட்டணும். இல்லை அதுக்கும் முதல் போகணுமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத் தான் நண்பரே ஒட்டுமொத்தமாகச் சொல்லுகின்ற பழமொழி உண்டு.

வேண்டாப் பெண்டாட்டி, கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத் தான் நண்பரே ஒட்டுமொத்தமாகச் சொல்லுகின்ற பழமொழி உண்டு.

வேண்டாப் பெண்டாட்டி, கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்.

அப்பிடியும் சொல்லேலாது தூயவன். குற்றம் சொல்பவர்களை அங்கையெல்லாம் போகச்சொல்லி யாரும் கட்டாயபடுத்தவில்லை. சமூகச்சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மற்றாக்களின் முதுகில் ஊத்தை இருக்கெண்டு சொல்லுகினம். இவர்களாகவே தொட்டுட்டு குற்றம் சொல்லுகினம். பகிடி என்னவெண்டால் செய்யிற 4 லச்சம் பேரும் மடையங்கள் குற்றம் சொல்லுற 4 பேரும் அறிவாளிகள். அதுகும் பகுத்தறிஞ்சவர்கள்.

புத்துமாமா நீங்களும் போனனீங்களா பேபியும் வந்திருந்தது யாரும் வந்தா சைட் அடிக்கலாம் என்ற ஒரு நப்பாசையில அங்கே போய் பார்த்தா எல்லாரும் கிழடுகள் !!ஒரு 5,6 பேர் நின்றவை இல்லை என்று சொல்லவில்லை!!

சும்மா சொல்ல கூடாது சிட்னிடமிழ்ஸ் வந்து இப்படியான நிகழ்ச்சிகள் என்றா என்னவோ தெரியாது புத்துமாமா சொன்னபோல காஞ்சிபுரம் எல்லாம் போட்டு கொண்டு நகை எல்லாம் அடுக்கி கொண்டு போயிடூவீனம் அரங்கும் நிறைந்து இருக்கு.........இதே மாதிரி தமிழர்புனர்வாழ்வு கழகம் ஒரு கூட்டம் வைக்கும் அங்கே போனா கதிரை எல்லாம் சும்மா இருக்கும் ஆனா நேற்று அரங்கு நிறைந்து நிற்கவேண்டிய நிலை நான் கூட நின்று தான் பார்தேன் என்றா பாருங்கோ :) !!பிறகு நீங்க கேட்கலாம் ஏன் நீங்க விருப்பம் இல்லாட்டி போக வேண்டும் என்று நாம போனா தானே இவை செய்யிற எல்லாவற்றையும் விளக்கமா சொல்லமுடியும் நம்ம யாழ்கள மெம்பர்சிற்கு அது தான் போனனான். :o .........என்ன செய்யிறது என்னை போல சில அறிவாளிகள் சிட்னியில இருப்பதால தான் ஈசியா காதில பூ சுற்ற முடியாம இருக்கிறது இவைக்கு!! :lol: )

சரி விசயதிற்கு வாரேன் தலைப்பு வந்து "குற்றவாளி கூண்டில் இராமன்" குற்றவாளி இல்லை என்று ஒரு அணி அது தான் வரும்கால "சிட்னி கம்பன் கழக தலைவர் ஆக போறவர்" மற்றைய அணியில் சிட்னி வாழ் மக்களிற்கு தெரிந்த மதிப்புகுரிய பெயர் குறிப்பிடவில்லை சில காரணங்களிற்காக அவர் குற்றவாளி தான் இராமர் என்று பேச வந்திருந்தார்!!இதற்கு நடுவராக ஒருவர் கொடுமை சார் முடியல!! :)

விவாதம் தொடங்கியது குற்றவாளி இராமர் என்ற தரப்பு மிகவும் பலமாக வாதாடியது எதிரணி வரும்கால கம்பப் கழக அணி சொல்ல போனா விவாதம் தொடங்கி முடியும் வரை ஒரு முக்கிய விடயத்தையும் அவர்கள் பேசவில்லை :lol: ஆனால் எதிரணி பேச்சாளரை நக்கல் பண்ணுதல் மற்றும் நடனம் ஆடுற மாதிரி கையை,காலை தூக்கி ஓவர் பில்டப் ஆனா சரக்கு ஒன்றையும் காணவில்லை ஆனா எதிரணியை நையாண்டுபடுத்துவேலையை சரியாக செய்தார்கள் (இதை பார்த்த பேபிக்கு யாழ்களம் தான் ஞாபகதிற்கு வந்தது :lol: )ஆனாலும் சும்மா சொல்ல கூடாது யாழ்களத்தில அறிவுபூர்வமாக சிலர் கதைபார்கள் ஆனா இங்கே இராமர்குற்றவாளி இல்லை என்று சொல்லுறவர் சொல்லுறார் "இராமர் கடவுள் ஆகவே குற்றவாளி கூண்டில் அவரை ஏற்றகூடாது" இப்படி வடிவேல் சொல்லுற மாதிரி சின்னபுள்ளதனமாக விவாதித்தார் இதில் வேற "கன்னி தமிழ் வளர்போம்" அது சரி டங்கு அண்ணா அடிகடி சொல்லுவார் "கேட்கிறவன் கேணையன் என்றா எருமை மாடும் ஏரொபிளேன் ஓட்டும் என்று " அது சரியாக தான் இருந்தது!! :lol:

இவர்கள் கன்னி தமிழை வளர்க்க மாட்டார்கள் தங்கள் பண்டித தன்மை (பேச்சளவில் வெட்டி வீழ்த்துவார்கள்) மூலம் ஏனையவர்களை பிழை பிடித்து (சொல்ல போனா தங்களிற்கு ஒன்றும் தெரியாது இத்து போன ரெக்கோடர் மாதிரி சொன்னதை மறுபடி சொல்லி கொண்டிருக்க தான் தெரியும்) இப்படி இவர்கள் வளர்க்க மாட்டார்கள் தமிழை இவர்களாள் பாரதி சொன்ன மாதிரி "மெல்ல தமிழ் சாவும் இனி" இது தான் நடக்கும் வேண்டும் என்றா இருந்து பாருங்கோ!! :lol: றோட்டு போட்டுவிட்டா கார் ஓடுறது இலகு றோட்டும் போட்டு காரும் ஓடினா பாராட்டலாம் நம்ம ஜெனரல் சொன்ன மாதிரி சோமாலியா பக்கம் போய் தங்களின் கழகத்தை வளர்க்கலாமே நம்ம டங்கு அண்ணா கூட அங்கே தான் இருகிறார்!! :D

எனக்கு ஒரு யோசனை "கம்பனிற்கு கழகம் இருகிறபடியா" யாரோ தெரியாத ஒருத்தருக்கு கழகம் ஆகவே நான் அகில உலக நெடுக்ஸ் தாத்தா கழகம் என்று ஒரு கழகத்தை ஆரம்பித்து அவரை கெளரவிக்கும் முகமாகவும் கன்னிதமிழை வளர்க்கவும் பாடுபடபோகிறேன் இதை பற்றி யாழ்கள்மெம்பர்ஸ் என்ன நினைக்கிறீங்க!!அட நம்ம நெடுக்ஸ் தாத்தா எவ்வளவு அளபரிய சேவை செய்து இருகிறார் ஆகவே அவருக்கு ஒன்று தொடங்குவது தப்பில்லை முதல் கட்டமாக இது யாழ்நாற்சந்தியில் உத்தியோகபூர்வமாக திறகபட்டு பிறகு கன்னி தமிழை வளர்க்கும் நோக்கில் பயணிக்கும்..........ஆனா இப்படி தேவையற்ற விவாதங்கள் அது தான் குற்றவாளி கூண்டில் இராமன் என்று எல்லாம் விவாதிக்கமாட்டோம் மாறாக காலதிற்கு தேவையானவற்றை விவாதிபோம்!! :(

கம்பன் கழகம் பல பிரச்சினைகளை எதிர் கொண்டு இப்ப முன்னுக்கு வந்திருக்காம் அந்த கஷ்டம் தங்களிற்கு தான் தெரியும் என்று சிலர் சொல்லுவார்கள்.........கம்பன் கழகம் ஆயுத போராட்டமா செய்தது என்னவோ நாலு பேரை வைத்து பட்டிமன்றம் செய்து விட்டு தமிழை வளர்க்கபாடுபட்டவையாம் செமஜோக்!!

என்னவோ நேற்று கம்பனின் சிலை கொண்டு வந்து பூசை நடத்தியாச்சு இனி என்ன கோவில் ஒன்றை கட்டிபோட்டு கலக்சன் தானே அரசியலில இது எல்லாம் சகஜம் ஆனா கதைக்கும் போது பார்க்க வேண்டும்!!என்னவோ நமீதா ரசிகர் மன்றம் மாதிரி இதுவும் ஒன்று என் பார்வையில் இதை விட வேறேன்ன சொல்ல இருக்கு.....!!

சரி என்னவோ நேற்று மூன்று மணித்தியாலம் என்ட நேரத்தை வீணாக்கியது தான் மிச்சம் அந்த நேரத்திற்கு யாழில வந்திருந்தாலும் அரட்டையாவது அடித்து இருக்கலாம்!!ஆனா பாருங்கோ நம்ம சனம் இருக்கே பட்டிமன்றம் நடக்கும் போது எங்கையோ பார்த்து கொண்டு கதைத்து கொண்டு இருந்துபோட்டு (முக்கியமாக சிட்னிகேள்ஸ் பிறகு பேபி கூட கோவிக்க கூடாது உண்மையை சொன்னேன் ) என்ன விளங்கிச்சோ தெரியாது ஒருவர் கைதட்ட இவை அந்த மாதிரி கை தட்டினவை என்றா பாருங்கோ!!இறுதியாக என்ன செய்ய ஒரு மாதிரி நிகழ்ச்சி முடிந்தது கோவிலில பிரசாதம் வேற கொடுத்தவை வந்ததிற்கு பிரசாதம் ஆவது கிடைத்த சந்தோசத்தில வீட்டை வந்து சேர்ந்தோமல!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி நேற்றைய பட்டிமன்றம் பற்றிய பார்வை-

"மூஞ்சுறு தான் போக வழியை காணவில்லை அதுகுள்ள விளக்குமாறை தூக்கின கதை தான் நேற்றைய பட்டிமன்றம்"

புத்தன் கம்பன் கழகத்தைப் பற்றிச் சொல்லி விட்டு மதிப்புக்குரிய புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதையினையும் எழுதியுள்ளார். புத்தனுக்கு தெரியாதவிடயம் மதிப்புக்குரிய புதுவை அவர்களும் முன்பு கம்பன் கழகத்தில் இருந்தவர் என்பது.

யழுனா வாழ்க்கையில் பட்டிமன்றம் ஒன்றையும் ஒருமுறை கூட பார்க்கவில்லை போல அவரது கருத்துக்கள் சொல்லுகின்றன. பட்டிமன்றத்தில் நகைச்சுவைக்காக எதிர் அணியினரை நக்கல் செய்வது வழக்கம். இது கூட அவருக்கு தெரியவில்லை. அத்துடன் பட்டிமன்றத்தில் நடுவர் இருப்பதும் வழக்கம். ஆனால் யமுனா பட்டிமன்றத்தில் நடுவர் இருப்பது கொடுமை என்று சொல்கிறார்.

இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஈழத்திலும் ஏன் வன்னியுலும் கூட பட்டி மன்றம் நடைபெற்று வருகிறது. அங்கும் இராமயணம் பற்றிய பட்டிமன்றங்கள் நடக்கின்றன. அதனால் அவர்கள் இராமருக்கு கோவில் கட்டுவார்கள், கம்பனுக்கு கோவில் கட்டுவார்கள் என்பது பிழையான தகவல்களாகும். பட்டிமன்றத்தில் இராமரை விமர்சிக்கிறார்கள். குற்றவாளியாக்குகிறார்கள். இங்கே இராமர் புகழ் பாடப்படுவதில்லை. தமிழ் இயல் தான் பாடப்படுகிறது. சிட்னி கம்பன் கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் சிலர் கிறிஸ்தவ நண்பர்களின் நத்தார் விழாவிலும் பட்டிமன்றங்களில் கலந்து கொள்வதுண்டு. இதனால் அவர்கள் மதம் மாறினார்கள் என்று பொருள் படுமா?. இப்பட்டிமன்ற பேச்சாளர்கள் ஒருவரும் இராம பக்தர்களுமல்லர், ஜேசு பக்தர்களுமல்லர். ஆனால் தமிழ் மீது பற்றுள்ளதினால் பட்டிமன்றத்தில் பங்கு கொள்கிறார்கள். யமுனா அடிக்கடி சிவாஜி படத்தில் வரும் 'அப்பா நான் வரட்டா' என்று வரும் வசனத்தை யாழில் பதிவதினால் அவர் சிவாஜிக்கு கோவில் கட்டுவார் என்பது பொருளா?.

வன்னிக்கு சென்றீர்கள் என்றால் அங்குள்ள பாண்டியன் சுவையூற்றில் தேசியத்தலைவரின் கருத்துக்களுடன் பாரதிதாசனின் கருத்தினையும் காணலாம். அவர்கள் தமிழை மீது பற்றுள்ளதினால் தான் பாரதிதாசனின் கருத்தினையும் அதில் இட்டுள்ளார்கள். புதுவை அவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் இறுவெட்டுக்களைப் பாருங்கள் .அதில் வள்ளுவர்,கம்பன், பாரதி போன்றவர்களின் வாக்கியங்களையும் உதாரணமாக மதிப்புக்குரிய புதுவை அவர்கள் சொல்வதைக் காணலாம். கம்பனைப் பற்றிச் சொல்வதினால் கம்பனுக்கு கோவில் கட்டுவது தான் அர்த்தமா?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லோரினதும் கருதிற்கு நன்றிகள்!!

கலைஞன் திருவள்ளுவர் மன்றம் அமைக்கலாம் ஆனா மேடையில காலைகாட்டி கையை காட்டி கதைக்கும் திறமை எனகில்லை உங்களுக்கு இருந்தா பிரச்சினை இல்லை,ஏற்கனவே சிட்னியில் சில ஊடகங்களில் திருவள்ளுவரை தெய்வீக புலவர் என்று புலம்ப தொடங்கிட்டாங்க ஆனபடியால் எங்களுக்கு அது சாதகமாக போய்விட்டது நல்ல நேரம் பார்த்து சொல்லுங்கோ தொடங்குவோம்.

தூயவன்.சபேஷ்,சிவகுமார் உங்களுடைய மாற்று கருத்திற்கு நன்றி நான் இதில முக்கியமாக சொல்ல வந்தது என்னவென்றா கம்பன் புகழ் பாடி கன்னி தமிழ் வளராது கன்னி தமிழால் சிட்னியில் சில இளசுகள் வளர்கினம் என்பதை சொல்ல வாரேன் தமிழ் வந்து அவர்களை வளர்கிறது அவர்கள் தமிழை வளர்க்கவில்லை இது தான் நிஜம்.

கம்பன் கழக மேதாவிகள் பகிரங்கமாக தமிழால் நாம் வளர்ந்தோம் என்று உரக்க கூறினா நல்லது.

தமிழால் கம்பன் எப்படி புகழ் பெற்றானோ அதே மாதிரி இவர்களும் புகழ் பெற துடிக்கிறார்கள் வாழ்த்துகள்.

கம்பன் கழகத்தில் சில புகழ் வேண்டிகள் இருகின்றார்கள் இல்லை என சொல்லவில்லை ஆனால் அவர்களால் முடிந்த அளவு தமது சேவையை தமிழுக்கு வழங்குகின்றனர் என்பதில் மாற்றுகருத்துக்கு வாய்பில்லை என நினைகின்றேன்.

பட்டு புடவை உடுத்திறதும் நகை அணிவதும் அவரவர் விருப்பு புத்தன் அவர்களும் அப்படி போனதாக சிட்னி பட்சி சொன்னது.உங்களின் அநேகமான கொசிப்புகள் அருமை ஆனால் இந்த கொசிப்புடன் எனக்கு உடன்பாடில்லை

கம்பனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிப்பது கம்பன் விழாவில் நடப்பதுண்டு கொழும்பில் நடக்கும் கம்பன் விழாவிலும் இது நடந்தே வருகின்றது இதில் என்ன பிழை இருகின்றது.எமது கல்லூரியில் திருவள்ளுவர் பாரதியார் கம்பன் ஆகியோரின் சிலைகள் உண்டு அதற்காக கோயில் என்பதா தமிழறிஞர்களை புரிந்தவர்களை கவுரவிக்கும் நிகழ்வு அது ஜமுனாவுக்கு தெரிந்திருக்கும் என நினைகின்றேன்

ஆமாம் சிவகுமரன் அண்ணா நான் வாழ்கையில பட்டிமன்றமே பார்கவில்லை சரியான பேபி முதன் முதலா மம்மியின்ட கையை பிடித்து கொண்டு "குற்றவாளி கூண்டில் இராமன்" பட்டிமன்றம் பார்க்க தான் முதல் முதலா போனனான் :( என்ட கன்னி தமிழை வளர்போம் என்று பிறகு தான் தெரியும் நேக்கு இங்கு போனா எனக்கு இருந்த தமிழும் மறந்து போயிடும் என்று :( !!சிவகுமரன் அண்ணா எதிரணியை நக்கல்படுத்துவது இருகட்டும் ஆனா நக்கல்படுத்துவதே கொள்கையாக கொள்வது என்றா என்ன சொல்ல :unsure: .....நேக்கும் இது தெரியாது வெற யாரும் பட்டிமன்றம் பார்த்த ஆட்கள் சொல்லுங்கோ எதிரணியை மட்டம் தட்டி 2 மணித்தியாலமும் பட்டிமன்றத்தை கொண்டு செல்வது தான் கன்னி தமிழை வளர்பதன் நோக்கமா சபாஷ் ஜயா உங்கள் விளகதிற்கு!!அத்தோட அண்ணே ஒரு பட்டிமன்றத்திலையும் சிலை கொண்டு வந்து பூசை செய்து மாலை போட்டு இப்படி எல்லாம் இந்த பட்டிமன்றத்தில தான் நடந்தது அப்ப இப்படி தான் ஏனைய பட்டிமன்றமும் நடக்குமா :) .........அதுவும் கம்பனிட சிலையை கொண்டு வந்து பூசை மாலைபோட்டு பூசை செய்ததன் நோக்கம் தான் என்ன :) ........அப்ப ஏனைய பட்டிமன்றங்களிளும் ஒவ்வொருவரின் சிலைகளை கொண்டு வந்து பூசை செய்வார்களோ அண்ணே!!

பட்டிமன்றத்தில் நடுவர் இருக்கலாம் ஆனா நடுவரே கம்பன்கழக உறுப்பினரா இருந்தவர் என்றா பிறகு நான் என்னத்தை சொல்ல ஜயா!!சரி அதை விடுங்கோ அவர் இருகட்டும் நான் சொன்ன அர்த்தம் என்னவென்றா முக்கியமான கருபொருள் இதற்கு ஒரு நடுவர் அவசியம் தான ஏனேனில் தீர்பு எப்படி வரும் என்று எல்லாருக்கும் தெரிந்தது தானே யாருக்கும் தெரியாட்டி நேக்கு நல்லா தெரியும்....!! :wub:

கிறிஸ்தவ நண்பர்களின் பட்டிமன்றங்களில் கலந்து கொள்கிறார்கள் அப்ப எல்லா ஜேசுவின் படம் கொண்டு வந்து மாலை போடுவார்களா :) அண்ணே நேக்கு தெரியாது நீங்க தான் பல பட்டிமன்றங்களை பார்தனீங்க சொல்லுங்கோ அண்ணே!!தமிழ் மீது பற்று உள்ளபடியா பங்குபற்றுகிறாறா அது சரி குற்றவாளி கூண்டில் இராமர் இப்படி தான் தலைப்பு போட்டு தமிழ் பற்றை காட்டுறதோ அண்ணே!!

அண்ணே சிவாஜி படத்தில் வார டயலக்கை தான் சொன்னேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் தமிழில் "அப்ப வரட்டா" என்ற சொல் பாவணையில் இல்லையா அண்ணே!!நீங்க இப்ப வசனம் எழுதின பல சொல்லும் சிவாஜிபடத்தில வந்தது தான்........ஆனா வசனத்தை மட்டும் நான் இங்கு எழுதுறன் சிவாஜியின் படத்தை போட்டு "கன்னி தமிழ வளர்போம்" சிவாஜியின் மூலம் என்று போஸ்டர் அடித்து!!

சிவாஜி சிலையை கொண்டு வந்து மாலை போட்டனா!!பிறகு எப்படி அண்ணே நான் கோயில் கட்டுவேன் :) ....அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் மதிபுகுரிய புதுவை இரத்தினம் துறை ஜயா தற்போதும் கம்பன் கழகத்தில் இருக்கிறாறா ஏன் தற்போது இல்லை என்ற காரணத்தை முடிந்தா தந்துதவமுடியுமா????அவர் கம்பனின் வசனங்களையும் தமிழ் புலமையும் சொல்லி இருப்பார் இறுவெட்டில் ஆனால் கம்பரின்ட படத்தை கொண்டு வந்து மாலை போட சொன்னவரா நேக்கு தெரியாது...தெரிந்தா சொல்லுங்கோ!!

என்னவோ அண்ணே நான் பேபியாக்கும் பட்டிமன்றம் பார்த்தது இது தான் முதல் தரம் ஆகவே எப்படி பட்டிமன்றம் நடக்கும் என்று எனக்கு தெரியாது இப்படி என்னை மாதிரி பார்க்காத ஆட்களை தவறான வழியில் கொண்டு செல்லாம் நேரான பாதையில் கொண்டு போனாலே தமிழ் வளரும்!!

தமிழை யாரும் வளர்க்க தேவையில்லை அங்கே ஒருத்தர் வளர்த்து கொண்டிருகிறார் அதை பாராட்டலாம் மற்றவை எல்லாம் தமிழை கொண்டு முன்னேறி கொண்டு வாறீனம்!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"தமிழை வளர்கிறோம் என்று தமிழை அழிக்க கிளம்பிட்டங்கா"!!

கம்பனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிப்பது கம்பன் விழாவில் நடப்பதுண்டு கொழும்பில் நடக்கும் கம்பன் விழாவிலும் இது நடந்தே வருகின்றது இதில் என்ன பிழை இருகின்றது.எமது கல்லூரியில் திருவள்ளுவர் பாரதியார் கம்பன் ஆகியோரின் சிலைகள் உண்டு அதற்காக கோயில் என்பதா தமிழறிஞர்களை புரிந்தவர்களை கவுரவிக்கும் நிகழ்வு அது ஜமுனாவுக்கு தெரிந்திருக்கும் என நினைகின்றேன்

அது சரி ஈழவன் அண்ணே பாடசாலையில யாரோ வந்து போடுவீனம் யார் மதிப்பு கொடுத்தது சில நேரம் நீங்க கொடுத்து இருக்கலாம் நம்மன்ட பச்சில ஒருத்தரும் மதிப்பு கொடுத்ததே இல்லை என்னவோ பனிஸ்மன்ட் கிடைக்கும் வராட்டி என்று கடுப்பில வந்து நிற்கிறது :wub: .....சரி விசயதிற்கு வாரேன் இலங்கையில இருக்கிறவனிற்கு அடுத்த நேரம் என்ன செய்யிறது என்ற பிரச்சினை சும்மா கெளரவித்தா அதோட போயிடும் ஆனா நம்ம சிட்னியில இருக்கிறவைக்கு யோசனை எப்படி இருக்கு இதன் மூலம் எப்படி புகழ் அடைவது என்பது மட்டுமே இருக்கும் ஆகவே அதன் பின் சொல்ல தான் வேண்டுமா.... :) !!சொல்ல போனா ஒருவரை கெளரவிக்கிறது சிறந்தது இல்லை என்று சொல்லவில்லை அதற்கு ஒரு லிமிட் இருக்கு அதை மீறும் போது அதை ஏற்று கொள்ளமுடியாது :unsure: .........நாம கெளரவிக்கிறோம் என்று உடனே காலில விழுற கோஷ்டிகள் தானே பிறகு என்னத்தை சொல்ல குரு என்று சொல்லி காலில விழுந்து கும்பிடுறது ஆட்களிற்கு முன்னால பிறகு அவனை பிரிந்து கொண்டு வேற ஒன்றுக்கு தாவுறது இதை தான் நாம் செய்யிறோம் :) .......இப்படி போனா கன்னி தமிழை வளர்க்க ஏலாது வேறேதையாவது வளர்பீங்க!! :)

அப்ப நான் வரட்டா

அது சரி ஈழவன் அண்ணே பாடசாலையில யாரோ வந்து போடுவீனம் யார் மதிப்பு கொடுத்தது சில நேரம் நீங்க கொடுத்து இருக்கலாம் நம்மன்ட பச்சில ஒருத்தரும் மதிப்பு கொடுத்ததே இல்லை என்னவோ பனிஸ்மன்ட் கிடைக்கும் வராட்டி என்று கடுப்பில வந்து நிற்கிறது :wub: .....சரி விசயதிற்கு வாரேன் இலங்கையில இருக்கிறவனிற்கு அடுத்த நேரம் என்ன செய்யிறது என்ற பிரச்சினை சும்மா கெளரவித்தா அதோட போயிடும் ஆனா நம்ம சிட்னியில இருக்கிறவைக்கு யோசனை எப்படி இருக்கு இதன் மூலம் எப்படி புகழ் அடைவது என்பது மட்டுமே இருக்கும் ஆகவே அதன் பின் சொல்ல தான் வேண்டுமா.... :) !!சொல்ல போனா ஒருவரை கெளரவிக்கிறது சிறந்தது இல்லை என்று சொல்லவில்லை அதற்கு ஒரு லிமிட் இருக்கு அதை மீறும் போது அதை ஏற்று கொள்ளமுடியாது :unsure: .........நாம கெளரவிக்கிறோம் என்று உடனே காலில விழுற கோஷ்டிகள் தானே பிறகு என்னத்தை சொல்ல குரு என்று சொல்லி காலில விழுந்து கும்பிடுறது ஆட்களிற்கு முன்னால பிறகு அவனை பிரிந்து கொண்டு வேற ஒன்றுக்கு தாவுறது இதை தான் நாம் செய்யிறோம் :) .......இப்படி போனா கன்னி தமிழை வளர்க்க ஏலாது வேறேதையாவது வளர்பீங்க!! :) அப்ப நான் வரட்டா
எனக்கு சிட்னி தமிழர்களை அதிகம் தெரியாது ஆனால் கம்பன் கழகத்தை ஒட்டுமொத்தமாக நக்கல் செய்வதை ஏற்க மறுகின்றேன்.அதுமட்டுமல்ல நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியாது அந்த சிலைகளை அமைக்க நிதி உதவி செய்தது எங்கள் பச் அசம்பிளியில் நிற்பதாக கூறினாலும் தமிழறிஞர்களை எப்படியாயினும் நினைத்தீர்களே அதுவே சிலைகள் அமைத்ததின் வெற்றிதான் :)அத்துடன் அந்த தலைப்பும் தேவையற்றது என்பதனையும் ராமர் கடவுள் என சொன்னதையும் ஏற்க என்னால் முடியவில்லை என்பதனையும் ஒத்துகொள்கின்றேன்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிப்பது கம்பன் விழாவில் நடப்பதுண்டு கொழும்பில் நடக்கும் கம்பன் விழாவிலும் இது நடந்தே வருகின்றது இதில் என்ன பிழை இருகின்றது.எமது கல்லூரியில் திருவள்ளுவர் பாரதியார் கம்பன் ஆகியோரின் சிலைகள் உண்டு அதற்காக கோயில் என்பதா தமிழறிஞர்களை புரிந்தவர்களை கவுரவிக்கும் நிகழ்வு அது ஜமுனாவுக்கு தெரிந்திருக்கும் என நினைகின்றேன்

அந்தாள் விழுந்த பக்கத்துக்கு குறி சுடும் எண்டு தெரிஞ்சும் இப்பிடி கேக்கிறிங்களே.... :D;)

நான் பல காலமாக யாழில் கருத்துக்கள் வாசிப்பவன். ஆனால் யாழில் எழுதத்தொடங்கியது மிக அண்மையில் தான். வேறு ஊடகங்களில் நான் எழுதுவதுண்டு. யாழில் புத்தனின் கொசிப்புக்களை விரும்பிப் படிப்பதுண்டு. பெரும்பாலனவை எனக்கு உடன்பாடு இருந்தாலும் சிலவற்றில் புத்தனின் கொசிப்புக்கள் எனக்கு உடன் பாடில்லாதவை. இவற்றில் புத்தன் எல்லாவற்றையும் கடைப்பிடிக்கிறாரா என்பது சந்தேகமா இருக்கிறது. எனேனில் ஒரு கொசிப்பில் சொல்வதற்கும் இன்னொரு கொசிப்பில் சொல்வதற்கும் வேறு பாடுகள் காணப்படுகிறது. அதாவது அவரே எதாவது கொசிப்பு எழுத வேண்டும் என்பதற்காக எழுதுகிறரோ என்பது போலத் தெரிகிறது. அவ்வாறே அவரின் கவிதைகளிலும் வேறு பாடுகள் காணப்படுகிறது.

முன்பு ஒரு கொசிப்பில் அன்னதானம் கோவில்களில் தேவையா என்று கேட்டிருந்தார். இன்னொரு பகுதியில் சிட்னி முருகன் அன்னதானத்தில் யாழ்கள உறவுகளுடன் சந்தித்ததாகச் சொல்லி இருந்தார். அதுவும் அன்னதான வரிசையில் நிற்காமல் அன்னதானம் பெற்றதாக எழுதி இருக்கிறார்.

ஒரு கருத்தில் மூட நம்பிக்கைகள் பற்றி எழுதி இருந்தார். சாமியார்கள் பற்றி எழுதி இருந்தார். ஆனால் இன்னொரு புகைபடத்தில் அவர் கைகளில் சாமியார் ஒருவரின் நூல் கட்டி காட்சியளிக்கிறார்.

சிவாஜி படத்தை புறக்கணிக்கச் சொன்னார், ஜேசுதாஸ் நிகழ்ச்சி பற்றி கொசிப்பு எழுதி, புலம் பெயர்ந்த நாடுகளில் ஜேசுதாஸ் போன்ற இந்தியக் கலைஞர்களின் நிகழ்வுகள் தேவையா புறக்கணியுங்கள் என்றும் சொன்னார். ஆனால் அவரே அண்மையில் எழுதிய கொசிப்பில் விவேக் நைட்டில் கலந்து கொண்டதாக கொசிப்பு எழுதி உள்ளார். இனி எஸ்பிபி நிகழ்ச்சி சிட்னியில் நடைபெறப் போகிறது. அதற்கு என்ன எழுதப் போகிறரோ. கலந்து கொள்ளவிட்டால் புறக்கணிக்க எழுதுவார். கலந்து கொண்டால் அன்னிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களை நக்கல் செய்து எழுதுவார்.

யமுனா, நீங்கள் வேறு பட்டி மன்றங்களுக்கு செல்லவில்லை என்று எழுதி யுள்ளீர்கள். யாழில் மோகன் இணைத்த வன்னியில் நடைபெறும் பட்டிமன்றங்களைப் பார்வையிட்டபின்பு கருத்துக்களை எழுதுங்கள் அல்லது வேறு பட்டிமன்றங்களுக்கு சென்று பார்த்தபின்பு கருத்து எழுதுங்கள். வேறு பட்டிமன்றங்களைப் பார்க்காமல் பட்டிமன்றத்தை எப்படி விமர்சனம் செய்வது?. எழுதுவதற்காக எழுதாதீர்கள்.

ஈழவன் அண்ண!!

சிட்னி டமிழ்சை தெரியாதோ சுண்டல் அண்ணாவிட்ட கேட்டா சொல்லுவார் பாருங்கோ :lol: ............இல்லாட்டி டிசம்பருக்கு வரக்க நான் சொல்லி தாரேன்!!கம்பன் கழகத்தை நக்கல் பண்ணுறது ஒன்றும் பெரிய தெய்வ குற்ற பிரச்சினை இல்லை உங்களுக்கு பிடித்திருக்கலாம் அதை பற்றி தெரியா யாழில கூட சுகந்திர கருத்தாளர் சங்கம் என்று ஒரு சங்கம் பற்றி நீங்க நல்லா சொன்னீங்க தானே அதை மாதிரி தான் :lol: இதுவும் இது கழகம் அது சங்கம் அது தான் வித்தியாசம்...அது சரி கழகம் என்றா என்ன என்று யாரும் நேக்கு சொல்லி தரமுடியுமா!!நான் அப்ப இருந்த மாதிரி தான் இப்பவும் இப்ப இருந்த மாதிரி தான் எப்பவும் ஆனா அங்கே அமைதி இங்கே அதை நானே சொல்லுறதா!!அண்ணே நான் எங்கே சொல்லி இருகிறன் எங்கள் பச் தான் நிதியுதவி வழங்கினது என்று நான் கூறி இருகிறேன் பனிஸ்மன்ட் கிடைக்கும் அங்கே வந்து நிற்காட்டி என்று வடிவா ஒருக்கா வாசித்து பாருங்கோ :lol: .......சரி அப்படி தான் நிதி உதவி கொடுத்து இருந்தாலும் பாடசாலை கேட்டிறது என்று கொடுத்திருக்கலாம் அல்லவா மற்றும் நீர்தடாகாத்தை சூழ அழகான சிலைகள் இருந்தா பாடசாலை சுற்றுபுறசூழலிற்கு அழகு என்று எங்கள் பச் நிதி கொடுத்திருக்கலாம் அல்லவா :D ...........இப்படி எல்லா கோணத்திலும் சிந்திக்க வேண்டும்.......இதில் ஒன்றும் வெற்றியாக நான் கருதவில்லை ஏதோ வடிவா இருக்கிறது என்று சிலை அமைத்ததாகவே என் பார்வையில் பார்கிறேன் உங்கள் பார்வையில் எப்படி என்று நேக்கு தெரியாதுங்கோ :D !!!!இறுதியாக சில்வற்றுடன் என்னுடன் ஒத்துபோனதில் மிக்க மகிழ்ச்சி அது சரி மெல்பனில் இப்படி ஒன்றும் நடக்கிறது இல்லையோ!! :)

சபேஷ் மாமா!!

என்னவோ பெரிய டயலக் எல்லாம் சொல்லுறீங்க பேபிக்கு ஒன்றும் விளங்கவில்லை (விளங்காட்டி நல்லது என்று சொல்லுற மாதிரி இருக்கு) என்ன செய்ய மாமா நானோ பேபி விழுந்து தான் எழும்பவேண்டும் பெரிய ஆட்களே "கன்னி தமிழ் வளர்போம்" என்று சென்று விழும் போது நான் மட்டும்.......ஆனாலும் விழுந்தாலும் எழும்பிடுவேன் குதிரையை மாதிரி.......!! :D

சிவகுமார் அங்கிள்!!

ஓம் அங்கிள் நீங்க சொல்லுறது மிகவும் சரி புத்தனின்கோசிப்பில சிலதில் எனக்கும் உடன்பாடு இல்லை முக்கியமாக "சிட்னி வானொலி" என்று எழுதினார் அது தான் உங்களுக்கு இதில் உடன்பாடா இல்லையா அங்கிள்!! :)

அது சரி நம்ம விசயதிற்கு வாரேன் ஆமாம் அங்கிள் நீங்க தான் சொன்னீங்க நான் ஒரு பட்டிமன்றதிற்கும் போகவில்லை என்று ஆனா மோகன் அண்ணா இணைத்த பட்டிமன்றம் யாவற்றையும் பார்தேன் அதனை போய் "குற்றவாளி கூண்டில்" இராமருடன் ஒப்பிடுவது வேடிக்கையிலும் வேடிக்கை!!அங்கிள் நீங்க தான் சொன்னீங்க நான் பட்டிமன்றம் பார்க்கவில்லை என்று ஆமாம் அங்கிள் இப்படி ஒரு பட்டிமன்றத்தை பார்க்கவில்லை என்று சொல்லலாம் ஏனேனில் பிருள் அற்ற ஒரு பட்டிமன்றம் நான் பார்த்தது எல்லாம் சமூக சிந்தனை மற்றும் இலக்கிய சிந்தனை நிரம்பி இருக்கும் ஆனால் இதில் 2 மணி நேரம் கையால் நாட்டியம் ஆடி எதிரணியை வசைபாடி சில பொருத்தமற்ற விளக்கங்களை கொடுத்து இது ஒரு அணிக்கு மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன்...எழுதுவதிற்காக எழுதுவது என்றா நான் பயணகட்டுரை எழுதமாட்டேனா நேரத்தை வீணாக்கி இதை பற்றி எழுதுவேனா அங்கிள்!! :D

ஆகவே அங்கிள் ஏதும் பிழை இருந்தா விமர்சிக்கலாம் அதை எடுத்து முன்னேறுவது சிறந்த கலைஞனிற்கு அழகு இது எல்லாருக்கும் பொருந்தும்,ஒருவரை பற்றி புகழ்ந்து தான் அவரை கெளரவிக்க வேண்டும் இல்லை என்பது என்னுடைய கருத்து இதை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீங்க!!அங்கிள்மார்களிற்கு தெரியாத விசயம் எல்லாமா பேபிகளிற்கு தெரிய போகுது அது சரி முதல் நான் கேட்ட கேள்விகளிற்கு இன்னும் விடை வந்த மாதிரி தெரியவில்லை என்னவோ போங்கோ அங்கிள் "கன்னி தமிழை வளர்போம்" என்று ஜோக் எல்லாம் விடாம சீரியசா ஒரு பட்டிமன்றம் வையுங்கோ "குற்றவாளி கூண்டில் புலதமிழர்கள்" என்று நானும் வந்து பல விசயங்களை எடுத்து கொள்வேன் பலருக்கும் இது உதவியாக இருக்கும் அதைவிட்டு ஒரே புராணம் ஒரே பல்லவி இதை உடனடியா மாற்றுறது கடினம் தான் என்றாலும் யோசித்து பாருங்கோ அங்கிள் உங்களை சொல்லவில்லை சம்மந்தபட்ட ஆட்களை சொல்லுகிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"உலகத்தை கொஞ்ச நாளைக்கு ஏமாற்றலாம் உலகம் விழித்துகிட்டா அதற்கு பிறகு ஏமாற்றினவன் பாடு அம்மோ!!"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கொசிப்பால் பாதிக்கபட்ட உறவு போல் தெரிகிறது நண்பன் சிவகுமார். *** எல்லோரும் உங்களை போல் சிறந்த படைபாளிகள் அல்ல என்னை பொறுத்தவரை நான் ஒரு சாதாரண தெரு கொசிபாளி என்னால் இப்படி தான் எழுத முடியும் ஒருத்தரை புகழ்ந்தோ அல்லது பப்பாவில் ஏற்றியோ கலையுணர்வுடன் எனக்கு புகழ் தேடி எழுத முடியாது எனக்கு என்று ஒரு இமேஜேயும் இல்லை அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் எனகில்லை.

வந்தோமா நாலும் பேரில குறை கண்டோமா போனோமா என்பது தான் நம்ம பொலிசி.

புத்தனின் கையில் கயிறு இருப்பது முக்கியமல புத்தன் என்ன கருத்தை வைத்து கோசிப் பண்ணிணான் என்பது தான் முக்கியம்,புத்தன் யேசுதாசின் இன்னிசைக்கோ அல்லது விவேக்கின் நிகழ்ச்சிகோ போக வேண்டாம் என்று கூறவில்லை அதை கூறுவதிற்கும் எனக்கு தகுதியும் எனகில்லை ஆனால் நான் கூறியது அந்த நிகழ்சியின் போது எமது மாவீரர்களிற்கு அகவணக்கம் செய்தா நல்லது என்பதை பற்றி தான் அடியேனின் தாழ்ந்த அபிபிராயத்தை கூறி இருந்தேன் ஆனால் தாங்கள் புத்தன் கையில் கயிறு புத்தனின் கோமணம் சிகப்பு என்று தனிநபராக சிந்திக்கிறீர்கள் ஓழிய சமுகத்தை பற்றி சிந்திக்கிறீங்கள் இல்லை,இப்படி நீங்கள் தனிநபர்களை தூக்கி பிடிப்பதால் தான் கம்பன்,இராமன் என்று சில சிட்னி வாழ் இளைஞர்கள் தங்கள் புகழை நிலைநாட்ட துடித்து கொண்டு திரிகிறார்கள்..

ஜெய் ராம்,ராம ஜெயம்,வாழ்க கம்பன்

*** கள உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.