Jump to content

குறுங்கதை 6 -- சிலந்தி வலை


ரசோதரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சிலந்தி வலை
----------------------
காற்றில் ஈரப்பதன் குறைந்ததும், வருடம் முழுவதும் கடுமையான குளிர் அற்றதுமான ஒரு இடத்தில் நீண்டகாலமாக வசித்து வருகின்றேன். எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கோடைகாலம், அதன் பின்னர் வரும் மூன்றோ அல்லது நாலு மாதங்கள் கூட குளிர் என்று சொல்லி விடமுடியாதவை. உலர்ந்த காலநிலைக்கென்றே சிலந்திகள் படைக்கப்பட்டிருக்கின்றன போல. உலகில் 40,000 வகை சிலந்திகள் இருக்கின்றன என்று சொல்கின்றனர். அந்த 40,000 வகைகளும் இங்கேயே இருக்கின்றன என்று நினைக்கின்றேன்.
 
சிலந்தியின் வலையில் அப்பாவிப் பூச்சிகள் மட்டும் தான் அகப்பட்டு அல்லாடிச் சாகின்றன என்றில்லை. வீட்டுக்கு வருபவர்கள் வீட்டில் எங்கோ ஒரு மேல் மூலையைப் பார்த்து, 'அது என்ன........, சிலந்தி கட்டினதா...........' என்று கேட்டு விட்டால், நாமும் தான் வீட்டில் அகப்பட்டுப் போகின்றோம்.  இந்தப் பூமியையே காலால் எட்டி உதைத்து உருட்டித் தள்ளி விடுவோம் என்று வீட்டுக்குள்ளே வீரம் பேசும் பெண் பிள்ளைகள், அதே வீட்டிற்குள் பயந்து ஒடுங்கி அடங்கி நிற்பது ஒரு நூலில் மேலிருந்து கீழே தலை கீழாக இறங்கி வரும் சிலந்திகளுக்கும், சரசரவென்று காலில் ஏறி கடந்து ஓடும் கரப்பான் பூச்சிகளுக்குமே மட்டுமே.
 
பல போதைப் பொருட்களின் வீரியத்தை, தாக்கத்தை அறிய அவற்றை சிலந்திகளுக்கு கொடுத்து அதன் பின்னர் அவை பின்னும் வலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர். அவை பின்னியவை எல்லாமே கோணல், ஓட்டை வலைகள். ஒரு புழு பூச்சியும் அங்கே சிக்காது. இந்த ஆராய்ச்சி அறிக்கையின் பின்னர் அந்தக் குறிப்பிட்ட போதை மருந்துகளின் விற்பனை குறைந்ததா அல்லது கூடியதா என்ற தரவுகளை எவரும் வெளியில் விடவில்லை.
 
சில சிலந்திகள் தாங்கள் கட்டும் வலையில் அவை தங்குவதில்லை. 'என்னடா........ வலை வெறுமனே இருக்குதே.........' என்று நான் வலையைப் பின்னிய சிலந்திகளை சில தடவைகள் தேடியும் இருக்கின்றேன். வலையில் இருந்து போகும் ஒரு ஒற்றை இழையில், சிறிது தூரத்தே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார் அதன் சொந்தக்காரர். ஒரு நாலைந்து வலைகள் சொந்தமாக வைத்திருக்கும் தண்டையல், முதலாளி போன்றவர் இவர்.
 
எல்லா சிலந்திகளும் வலை பின்னித் தான் இரையை பிடிக்கும் என்றில்லை. கொய்யா மரத்தில் ஏறி, அடுத்த கொப்பில் கைவைக்க, அங்கே ஒரு புலி முகம் நிற்க, சர்ரென்று சறுக்கி கீழே வந்து, உள்ளுக்குள் போயிருக்குமோ என்று பயப்பட, அந்தப் பயத்தில் எல்லா இடமும் ஏதோ ஊர்வது போன்று உணர்வு வர, பதறி அடித்து எல்லா உடுப்புகளையும் கழட்டி எறிந்த நிகழ்வும் உண்டு. புலிமுகம் அப்படியே மேலே அந்தக் கொப்பிலிருந்தே இந்தக் கூத்தை பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.
 
வீட்டின் முன் வாசலுக்கு வெளியே இரண்டு பக்கங்களிலும் வரிசையாக ஒரு பத்து அடிகளுக்கு பூச்செடிகள். எல்லாமே ரோஜாவின் வகைகள் தான். உயர்த்தி மண் போட்டு, அதற்கு கான்கிரீட்டால் எல்லை போட்டு வளர்க்கப்படுகின்றன. நடுவால் போய் வரும் பாதை. நித்திரைக்கு போக முன் வெளியே எட்டிப் பார்த்து விட்டு வருவோமே என்று போனேன். முகத்தில் அடித்தது ஒரு சிலந்தி வலை. பின்னேரம் இது இங்கே இருக்கவில்லை. அதற்கிடையில் முழு வலையை ஒரு சிலந்து கட்டி விட்டதா என்று ஆச்சரியமாக இருந்தது. முதலே வேறு எங்கோ கட்டி வைத்து, அப்படியே தூக்கி வந்து, இரண்டு வரிசை பூச்செடிகளுக்கும் இடையில் பொருத்தும் தொழில்நுட்பமாகவும் இருக்குமோ என்றும் ஒரு யோசனை வந்தது.
 
முகத்தில் பட்டு அறுந்த சிலந்தி வலையில் இருந்து ஒரு சிலந்தி கீழே விழுந்து ஓடுவது தெரிந்தது. 'அடப் பாவமே....... என்னால் இதனுடைய இன்றைய இரவுணவு இல்லாமல் போய் விட்டதே.........' என்று பார்த்து நிற்க, திடீரென்று பூச்செடி ஒன்றின் அடியிலிருந்து தோன்றிய பல்லி ஒன்று அதன் நாக்கை நீட்டி சிலந்தியை வளைத்து எடுத்துக் கொண்டது.
Edited by ரசோதரன்
  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

சிலந்தியின் வலையில் அப்பாவிப் பூச்சிகள் மட்டும் தான் அகப்பட்டு அல்லாடிச் சாகின்றன என்றில்லை. வீட்டுக்கு வருபவர்கள் வீட்டில் எங்கோ ஒரு மேல் மூலையைப் பார்த்து, 'அது என்ன........, சிலந்தி கட்டினதா...........' என்று கேட்டு விட்டால், நாமும் தான் வீட்டில் அகப்பட்டுப் போகின்றோம்.  இந்தப் பூமியையே காலால் எட்டி உதைத்து உருட்டித் தள்ளி விடுவோம் என்று வீட்டுக்குள்ளே வீரம் பேசும் பெண் பிள்ளைகள், அதே வீட்டிற்குள் பயந்து ஒடுங்கி அடங்கி நிற்பது ஒரு நூலில் மேலிருந்து கீழே தலை கீழாக இறங்கி வரும் சிலந்திகளுக்கும், சரசரவென்று காலில் ஏறி கடந்து ஓடும் கரப்பான் பூச்சிகளுக்குமே மட்டுமே.

ஓரிரு மாதங்களுக்கொரு தடவை வீட்டுக்குள் போகும் நம்ம நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்க சார்.

கொண்டு போகும் பொதிகளை வாசலில் வைத்துவிட்டு நீச்சல் குளத்தில் நீச்சலடித்தது போல கைகளை அசைத்துக் கொண்டு போனாலே உடம்பில் வலைகள் ஒட்டாமல் போகலாம்.

இதைவிட வாசலில் சிட்டுக்குருவி கூடுகட்டி இப்போ பெரிய குடும்பம் நடத்துகிறார்கள்.

இருண்ட பின் முன் கதவைத் திறக்கப் போக இப்ப என்னத்துக்கு கதவைத் திறக்கப் போறீங்கள் என்று மனைவியின் அதட்டல்.

ஏனப்பா என்ன நடந்தது? முன்னுக்கு ஏதோ வாகனச் சத்தம் கேட்டதே.

உனக்கு கேட்கலையா? என்றால்

யாராவது வந்தால் பெல் அடிப்பாங்கள் தானே இப்ப கதவைத் திறந்து சத்தம் போட குருவிகள் பயப்பிடப் போகுது என்கிறா.

இனி ஆட்களைக் காணலையே என்று என்னவெல்லாம் வந்து குடியேறப் போகுதோ?

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

யாராவது வந்தால் பெல் அடிப்பாங்கள் தானே இப்ப கதவைத் திறந்து சத்தம் போட குருவிகள் பயப்பிடப் போகுது என்கிறா.

🤣...........

பெரும் பரோபகாரர்கள்.......

எங்களை விட மற்றவர்கள் எல்லோருக்கும் நல்லாகவே பரோபகாரம் பார்ப்பார்கள்.

அவர்களை கேட்டால், நீங்களும் அப்படித்தானே என்று எங்களைச் சொல்வார்கள்.........😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

சில சிலந்திகள் தாங்கள் கட்டும் வலையில் அவை தங்குவதில்லை. 'என்னடா........ வலை வெறுமனே இருக்குதே.........' என்று நான் வலையைப் பின்னிய சிலந்திகளை சில தடவைகள் தேடியும் இருக்கின்றேன். வலையில் இருந்து போகும் ஒரு ஒற்றை இழையில், சிறிது தூரத்தே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார் அதன் சொந்தக்காரர். ஒரு நாலைந்து வலைகள் சொந்தமாக வைத்திருக்கும் தண்டையல், முதலாளி போன்றவர் இவர்.

சிலந்தி, பல்லி என்று பலவற்றுக்கு வீட்டில் இடம் கொடுத்திருக்கிறீர்கள்.சாப்பாடு போட்டு அவைகளை வளர்க்கத் தேவையில்லை. உங்களுக்கும் செலவில்லை. இருந்திட்டுப் போகட்டுமே.

சிலந்தி வலையை வாசிக்கும் போது.

சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்குதடா

பலரை இங்கே பணிய வைக்க பணம்தான் வலையா உதவுதடா…”

கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? காலையில் முதலில் நான் தேடி வாசிப்பது உங்கள் குறுங்கதையைத்தான். உடன்பிறப்புக்களுக்கு கருணாநிதி நாள்தவறாமல் எழுதியது போல் ரசோதரனும் எழுத ஆசைப்படுகிறேன்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் குறுங்கதைகள் நன்றாக இருக்கின்றன........கவி கூறியதுபோல் காலையில் உங்களின் கதை வந்திருக்குதா என்று பார்ப்பது வழக்கமாகி விட்டது , முன்பு ஈழநாட்டில் "கோகிலாம்பாள் வழக்கு" வாசித்ததுபோல்........!  😂

பழைய துப்பறியும் ஆங்கிலப்படங்களில் ஒருவரை கொல்லப்போகிறேன் என்று எச்சரிக்கை செய்வதற்கு ஒரு சிலந்தியை அவருக்கு பார்சலில் அனுப்பி வைப்பார்கள்.......!

அப்பாடா, நான் முன்பே இந்தமாதிரி ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லியாச்சுது.......!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்குதடா

பலரை இங்கே பணிய வைக்க பணம்தான் வலையா உதவுதடா…”

கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? காலையில் முதலில் நான் தேடி வாசிப்பது உங்கள் குறுங்கதையைத்தான். உடன்பிறப்புக்களுக்கு கருணாநிதி நாள்தவறாமல் எழுதியது போல் ரசோதரனும் எழுத ஆசைப்படுகிறேன்.

🙏........

நீங்கள் இப்படி சொல்ல எனக்கு பயமாக இருக்கின்றது. மனதில் தோன்றுவதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். இங்கு சிலருக்கு பிடித்திருக்கின்றது என்பது மிகவும் சந்தோசம். 

'இங்கு படைக்கப்பட்டவை எல்லாம் உண்பதற்காகவே........' என்று பாரதத்தில் வியாசர் பீஷ்மருக்கு ஒரு இடத்தில் சொல்வார். பீஷ்மர் வியாசரைப் பார்க்க அவரின் குடிலுக்கு போயிருக்க, அங்கு வியாசரின் குடிலின் முன் நின்ற நிறைமாத பசுவை ஒரு சிங்கம் இழுத்துப் போகும் போது இந்த உரையாடல் வருகின்றது.

கண்ணதாசன் பாடலில் சொல்லியிருப்பது போல, சிலந்தி போலவே எல்லா உயிர்களும் வலைகளை பின்னி வைத்திருக்கின்றன. சிலந்தியின் வலை கண்ணுக்குத் தெரிகின்றது, அதன் கீழே கண்ணும் கருத்துமாக ஒளித்திருக்கும் பல்லியின் வலை தெரியவில்லை, ஆனால் வலை அங்கும் இருக்கின்றது. 

 

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

பழைய துப்பறியும் ஆங்கிலப்படங்களில் ஒருவரை கொல்லப்போகிறேன் என்று எச்சரிக்கை செய்வதற்கு ஒரு சிலந்தியை அவருக்கு பார்சலில் அனுப்பி வைப்பார்கள்.......!

அப்பாடா, நான் முன்பே இந்தமாதிரி ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லியாச்சுது.......!

🤣........

இங்கு ஒரு பேராசிரியர் தபாலில் மற்றும் வேறு வழிகளில் குண்டு அனுப்பி சில சக பேராசிரியர்களையும் மற்றவர்களையும் காயப்படுத்தியும், சிலரை கொலை செய்ததும் ஞாபகத்திற்கு வருகின்றது.......Unabomber என்று அழைக்கப்பட்டார்........🫣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள்... சாந்தன், சம்பந்தனின் செத்த வீட்டுக்கு வந்த சனத்தைப் பற்றிக் கதைக்க, நீங்கள் கில்மிசாவின் களியாட்ட நிகழ்ச்சியை பற்றி கதைக்கின்றீர்கள்.  அப்படி என்றால்... தமன்னாவுக்கு வந்த ஆட்களையும்  ஒப்பிட்டு  பார்க்க வேண்டியதுதானே.
    • கந்ஸ், ஆரம்பம் முதல் இந்த விடயத்திற்கு கருத்தெழுதாமல் தவிர்த்ததற்குக் காரணம் செய்தியில் முழுமையாக விடயங்கள் வெளியிடப்படவில்லை என்று கருதியதால்தான். ஆனால் கண்காணிப்புக் கமரா விடயத்தில் பொருள் இருக்கிறது என்று நம்புகிறேன்.    பிரச்சனையைத் தொடாதது தாங்களும் சுண்டலுமே.  திருமுருகன் அல்லது அங்குள்ள வேலையாட்களோ நிர்வாகிகளோ பிள்ளைகள்நீராடுவதையும் உடை மாற்றுவதையும் பார்த்தார்கள் அல்லது பதிவு செய்தார்கள்  என்று எங்குமே எவருமே குற்றம் சுமத்தவில்லை. நிர்வாகம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுதான் பிரச்சனையின் சாராம்சம்.  பெட்டிசன் போட்டது உண்மையாக இருந்தால்  அதைச் செய்தது  சைவர்களே. அங்குள்ள சிறார்களும் சைவர்களே,  விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது அப்பிரதேசத்திற்குரிய AGA Office. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது ஆளுனர்.  இதில் சமயத்திற்கு எங்கே  இடம்?  ஆனால் சைவப் பழங்களுக்கு பெயர் கெட்டுவிடும் என்று விடையத்தை திசைதிருப்பி மூடி மறைக்க முற்படுவது தாங்களும் சுண்டல் போன்ற உசார் மடையர்களுமே. 
    • ஆளப் போகும்  தொழில் கட்சியில் இருந்து  உமா குமரன் 19,145 வாக்குகளுடன்  வெற்றி பெற்றுள்ளார். 🙂 பிரித்தானியாவின் புதிய பிரதமர் – யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? ! பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார். அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில் கட்சியின் ஆட்சி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதாவது, பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு படு தோல்வியையே கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது. இதேவேளையில், தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரித்தானியவின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதிவியேற்கவுள்ளார். யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? அவரது பின்னணி என்ன? 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார் கீர் ஸ்டார்மர். இவரின் தாய் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். பாடசாலை கல்வியை நிறைவுசெய்த கெய்ர் ஸ்டார்மர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்றுள்ள நிலையில், சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகின்றார். அத்துடன் இவரொரு இசைக்கலைஞர் எனவும் குறிபப்பிடப்படுகின்றது. கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தவர் ஆவார். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டி, கடந்த 2014 இல் மறைந்த ராணி எலிசபெத் கெய்ர் ஸ்டார்மர்க்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.   பிரித்தானிய பிரதமராக டோனி பிளேயர் இருந்த காலத்தில், பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த போது, கெய்ர் ஸ்டார்மர் அதனை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கெய்ர் ஸ்டார்மர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் நடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். கெய்ர் ஸ்டார்மரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. இதையடுத்து, 2020 ஆம் ஆண்ட லேபர் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப்பட்டார். தற்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1391080
    • உரிய விளக்கம் கோரல்... நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, ஈஸ்வரபாதம்‌ சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ யசோதை சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, லக்ஷ்மி சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ நால்வரும்‌ 361, கஸ்தூரியார்‌ வீதி, யாழ்ப்பாணம்‌ கேள்விக்‌ கடிதம்‌ தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன்‌ ஆலய முகாமைத்துவ சபையின்‌ தலைவர்‌ கலாநிதி ஆறு. திருமுருகன்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலில்‌ எழுதும்‌ கேள்விக்‌ கடிதமாவது, 04.07.2024 அன்று தங்களது நிறுவனத்தினால்‌ பிரசுரிக்கப்படும்‌ உதயன்‌ நாளிதழின்‌ முன்பக்கத்தில்‌ “மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு!  ஆறு.திருமுருகனால்‌ நடத்தப்படும்‌ சிறுவர்‌ இல்லம்‌ இழுத்துமூடல்‌ எனும்‌ தலைப்பில்‌ செய்தியொன்று தலைப்புச்‌ செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.  குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்ட 04.07.2024 இற்கு முன்பதாக அவ்வாறான எந்தவொரு உத்தரவும்‌ வடமாகாண கெளரவ ஆளுனரினால்‌ வழங்கப்பட்டிருக்கவில்லை.  மேலும்‌ மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு எனும்‌ முற்றிலும்‌ பொய்யான விடயம்‌ குறித்த செய்தியில்‌ உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி முகவரியில்‌ தங்கள்‌ நிறுவனம்‌ அமைந்துள்ள ஆதனமானது எனது கட்சிக்காரர்‌ தலைவராக கடமையாற்றும்‌ சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டு விட்டது என்பதாலும்‌  குறித்த ஆதனத்திலிருந்து தங்களை வெளியேற்ற எனது கட்சிக்காரர்‌ நடவடிக்கை எடுத்து வருகின்றார்‌ என்பதனாலும்‌ அவர்‌ மீதுள்ள குரோதத்தின்‌ காரணமாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதென எனது கட்சிக்காரர்‌ கருதுகின்றார்‌. எனது கட்சிக்காரர்‌ கடந்த இரு தசாப்த காலத்தில்‌ தனது நாவன்மையின்‌ மூலம்‌ சேகரித்த நிதியைக்‌ கொண்டு பல்வேறு சமய சமூகப்‌ பணிகளை செய்து வருவதோடு ஈழ சைவ சமயிகளினுடைய குறிப்பிடத்தக்க தலைவராகவும்‌ இருந்து வருகின்றார்‌.  தங்களது பத்திரிகையில்‌ வெளியிடப்பட்ட முற்றிலும்‌ பொய்யான செய்தியானது பொதுப்பணிகளில்‌ ஈடுபட்டு வரும்‌ எனது கட்சிக்காரரை இழிவுபடுத்தும்‌ தன்மையானது என்பதோடு அவரது நற்பெயருக்கு இழுக்கேற்படுத்தும்‌ தீய நோக்கம்‌ கொண்டதுமாகும்‌. எனவே இக் கடிதம் கிடைத்து 48 மணத்தியாலங்களிற்குள் தங்ளால் பிரசுரிக்கப்படும் உதயன் நாளிதழில் 04.07.2024ம் திகதி வெளி வந்த செய்திக்கு நிகரான வடிவத்தில் எனது கட்சிக்காரரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன், இக் கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் ரூபா 300 மில்லியன் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என எனது கட்சிக்காரர் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். மேற்குறித்த விடையங்களை உரிய காலத்துள் செய்ய தவறுமிடத்து தங்களுக்கு எதிராக பொருத்தமான நீதிம்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இத்தால் தங்களிற்கு அறியத்தருகின்றேன். கலாநிதி குமாரவடிவேல் குருபரன் LL.B (Hons) (Colombo)  B.C.L (Oxford) Ph.D (London) Attomey-at-Law (Sri Lanka) Notary Public and  Commissioner for Oaths.
    • அப்படி அல்ல சுவைப்பிரியரே! துஷ்டரைக் கண்டால் தூர விலகு. அவர்கள் தமிழர்கள் இத்திரியிலும் துஷ்டர்களைக் கண்டு விலகி நிற்கிறார்கள். 😔
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.