Jump to content

ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2024 at 07:51, ஏராளன் said:

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

large.IMG_6895.jpeg.b093ba1c75dd9855e349

Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6895.jpeg.b093ba1c75dd9855e349

நானும் கடைசிவரை பார்த்துக் கொண்டிருந்தேன்

திரை விலகவே இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2024 at 17:30, ஏராளன் said:

இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

பொது வேட்பாளர் விடயத்தில் 2 முக்கிய தமிழ்க்கட்சிகள் கைச்சாத்திடவில்லை..ருகட்சிகளையும் இணைத்து இதனைச் செயல்படுத்தாவிட்டால் இந்தப் பொதுவேட்பாளர் விடயம் பிசுபிசுத்துப் போய்விடும்.மாவையும் சிறிதரனும் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தவர்கள். ஆனால் சுமத்திரன் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.தமிழரசுக்கட்சிக்குள் தீரமானங்களை எடுப்பதில் இன்னமும் சுமத்திரனின்கையே ஓங்கி நிற்கிறது.பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைஎழுத்திட்ட அரசியல்வாதிகளும் பத்தி எழுத்தாளர்களும் முழுக்க முழுக்க இந்தியாவின் நலனைப் பேணுபவர்கள். அவர்களால் 13 இற்கு மேல்போக முடியாது.அடுத்து பொது வேட்பாளரை நிறுத்தினால் ஒரு வாக்கை மட்டும் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது வாக்குகளை அளிப்பது பொதுவேட்பாளரை நிறுத்துவதை அர்த்தமற்றதாக்கிவிடும். இதுபற்றி தெளிவுபடுத்தப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் வாக்குகளுடன் மாத்திரம் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஜே.வி.பி. விரும்பவில்லை - அனுரகுமார

Published By: RAJEEBAN   28 JUL, 2024 | 10:45 AM

image

ஐக்கிய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கு முஸ்லீம்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் முஸ்லீம் சகோதரத்துவத்தின் காலி பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

anura_muslim11.jpg

இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் முன்னணி எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க இலங்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடனேயே தனது அரசாங்கம் ஆட்சிக்குவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களின் ஆதரவை பெற்ற அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என எதிர்பாத்துள்ளதாக தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க ஐக்கிய அரசாங்கமொன்றை உருவாக்குதே தனது கட்சியின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

சிங்களவாக்காளர்களின் வாக்குகளுடன் தேர்தலை வெல்வது மாத்திரம் எங்களிற்கு போதுமானதல்ல என தெரிவித்துள்ள அவர் வெற்றிபெறுவதற்கு சிங்களமக்களின் வாக்குகள் போதுமானவை ஆனால் எங்களின் நோக்கம் அதுவல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

anura_muslim.jpg

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்கள் விரும்புகின்றோம்,எங்கள் இயக்கம் தேர்தலில் வெற்றிபெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டதல்ல,உண்மையின் நலனை அடிப்படையாகவைத்தே எங்கள் இயக்கம் அரசியலில் ஈடுபடுகின்றது,என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் எந்த சமூகமாவது பாரபட்சத்தை  எதிர்கொண்டால் எங்கள் இயக்கம் அவர்களிற்கு ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தீர்ப்புகளிற்கு எதிராக செயற்படுகின்றார் நேற்று நடந்தது மாத்திரமே அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு போதுமானது என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சஜித்பிரேமதாச குறித்து நான் அதிகம் பேசுவதில்லை அவரை நாங்கள் பேசவிடுகின்றோம் அது எங்களிற்கு தேவைக்கு அதிகமான பலனை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189578

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2024 at 08:56, கிருபன் said:

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - களமிறங்கும் வேட்பாளர்கள்

இதனடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வலஹங்குனவேவே மிஹிந்தலை ரஜமஹா விகாரை தம்மரதன தேரர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

453002386_8232429360112669_5140452231506

கட்டுப்பணத்தை... விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்த ஆமத்துறு. 😂

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் சீலரத்ன தேரர், 
கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்துவதற்காக  
தேர்தல் ஆணையத்துக்கு சென்ற நிலையில்... தனது கட்டுப் பணத்தை 
விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்ததால்... 
வருகின்ற திங்கள்கிழமை கட்டுப்பணம் செலுத்துவார் என எதிர்பார்க்கப் படுகின்றது. 🤣

அடுத்த ஜனாதிபதியாக வர இருக்கும்  இவருக்கு... 
கட்டுப் பணம் செலுத்தாமலே, தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Amaraweera.jpg?resize=650,375

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து 31 ஆம் திகதி அறிவிக்கப்படும்! -மஹிந்த அமரவீர.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

இதேவேளை இன்றையதினம் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, வேட்பாளரை தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ரஜபக்சவிற்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

கொழும்பு – விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதற்கு முன்னரும் இவ்வாறான பல சந்திப்புகள் இடம்பெற்ற நிலையில் அவை இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தன. அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று வெளியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393921

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு விசேட அறிவித்தல்

29 JUL, 2024 | 12:18 PM
image
 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர்களின் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் ஜூலை மாதம் 26 ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மேலாக, 

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு , சுதந்திர சதுக்கம், கொழும்பு 07 

தொழிலாளர் திணைக்களம்  நாராஹேன்பிட்டி கொழும்பு 05

கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல

பதிவாளர் நாயகம் திணைக்களம், இல.234/A3,டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல

தபால் தலைமையகம் ஆர்.விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள். அபிவிருத்தி அமைச்சு, மாளிகாவத்தை 

தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோரின் விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தேர்தல்கள்  அலுவலகத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து விண்ணப்பங்களை இலவசமாக பொற்றுக்கொள்ள முடியும் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் 

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரியிடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன் ஒப்படைக்க வேண்டும்.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள்  ஆகஸ்ட் 5 அல்லது  அதற்கு முன்னர் அந்தந்த மாவட்டங்களின் தேர்தல்  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் - தேர்தல் ஆணைக்குழு

https://www.virakesari.lk/article/189673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சா குடும்பத்தின் கட்சியான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்க்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதில்லை என்று சற்று முன்னர் அறிவித்துள்ளனர். அவர்களின் வேட்பாளரை பின்னர் அறிவிப்பார்கள் என்றும் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

https://www.dailymirror.lk/breaking-news/SLPP-decides-not-to-support-Ranil-but-to-field-its-own-candidate/108-288288

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சா குடும்பத்தின் கட்சியான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்க்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதில்லை என்று சற்று முன்னர் அறிவித்துள்ளனர். அவர்களின் வேட்பாளரை பின்னர் அறிவிப்பார்கள் என்றும் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

https://www.dailymirror.lk/breaking-news/SLPP-decides-not-to-support-Ranil-but-to-field-its-own-candidate/108-288288

 

பெட்டி கூடுதலாக எதிர்பார்க்கிறார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

பெட்டி கூடுதலாக எதிர்பார்க்கிறார்களோ?

பசிலுக்கும், ரணிலுக்கும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். பசிலுக்கு எட்டு மூளைகள் என்று அவர்களே சொல்லிக் கொள்வதும் அவர்கள் வழக்கம். ரணிலுக்கு ஒரே ஒரு மூளை தான்...... கூடி இருக்கும் கூட்டத்தை பிரித்து விடும் அந்த ஒரு மூளை.........🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எந்த ஒரு வேட்பாளருக்கும் முதலாவது இரண்டாவது மூன்றாவது எண்ணிக்கைகளில் எவருக்குமே 50 க்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கவில்லை என்றால்

அடுத்து என்ன நடக்கும்?

இதுபற்றி யாருக்கேனும் ஒரு தெளிவிருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

 

எந்த ஒரு வேட்பாளருக்கும் முதலாவது இரண்டாவது மூன்றாவது எண்ணிக்கைகளில் எவருக்குமே 50 க்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கவில்லை என்றால்

அடுத்து என்ன நடக்கும்?

இதுபற்றி யாருக்கேனும் ஒரு தெளிவிருக்கிறதா?

இன்றைய டெயிலி மிர்ரரில் நன்றாகவே விளங்கப்படுத்தியிருக்கின்றார்கள், அண்ணை:

https://www.dailymirror.lk/top-story/How-will-second-third-preferences-matter-in-case-no-candidate-gets-over-50/155-288264

 அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களையும் மட்டும் எடுத்து, அவர்களை இரண்டாவது அல்லது மூன்றாவது ஆகத் தெரிந்தெடுத்த வாக்குகளின் எண்ணிக்கையும் கூட்டி, இப்பொழுது அதிக வாக்குகள் பெற்றிருப்பவர் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்படுவார். இங்கு, இந்தச் சுற்றில், 50% பார்க்கப்படுவதில்லை. இந்த சுற்றின் முடிவில் இரு வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் சம எண்ணிக்கையில் வந்தால், திருவுளச்சீட்டு தான்.............🙃.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2024 at 18:51, தமிழ் சிறி said:

453002386_8232429360112669_5140452231506

கட்டுப்பணத்தை... விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்த ஆமத்துறு. 😂

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் சீலரத்ன தேரர், 
கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்துவதற்காக  
தேர்தல் ஆணையத்துக்கு சென்ற நிலையில்... தனது கட்டுப் பணத்தை 
விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்ததால்... 
வருகின்ற திங்கள்கிழமை கட்டுப்பணம் செலுத்துவார் என எதிர்பார்க்கப் படுகின்றது. 🤣

அடுத்த ஜனாதிபதியாக வர இருக்கும்  இவருக்கு... 
கட்டுப் பணம் செலுத்தாமலே, தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். 🤣

@ரசோதரன் இது தான்… கட்டுப் பணத்தை விகாரையில் விட்டுட்டு வந்த தேரரின் செய்தி. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

@ரசோதரன் இது தான்… கட்டுப் பணத்தை விகாரையில் விட்டுட்டு வந்த தேரரின் செய்தி. 😂

தேரர் ஆழம் பார்க்கத் தான் போனாரோ............😜. தியேட்டர், அங்க இங்க எல்லாம் இவர்களை சும்மாவும் உள்ளே விடுவார்கள் போல.........

இப்பவும் அதே பழைய 50,000 மற்றும் 75,000 ரூபாய்கள் தானாம். கட்சி வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் 50,000. சுயேட்சை என்றால் 75,000.

இதையே 25 இலட்சம், 30 இலட்சம் ரூபாய்களாக மாற்றுவதற்கு ஆலோசிக்கப்பட்டது, ஆனால் அது இன்னமும் தீர்மானமாகவும், சட்டமாகவும் வரவில்லை என்றிருக்கின்றது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இன்றைய டெயிலி மிர்ரரில் நன்றாகவே விளங்கப்படுத்தியிருக்கின்றார்கள், அண்ணை:

https://www.dailymirror.lk/top-story/How-will-second-third-preferences-matter-in-case-no-candidate-gets-over-50/155-288264

 அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களையும் மட்டும் எடுத்து, அவர்களை இரண்டாவது அல்லது மூன்றாவது ஆகத் தெரிந்தெடுத்த வாக்குகளின் எண்ணிக்கையும் கூட்டி, இப்பொழுது அதிக வாக்குகள் பெற்றிருப்பவர் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்படுவார். இங்கு, இந்தச் சுற்றில், 50% பார்க்கப்படுவதில்லை. இந்த சுற்றின் முடிவில் இரு வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் சம எண்ணிக்கையில் வந்தால், திருவுளச்சீட்டு தான்.............🙃.  

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி அரசியலை ஒதுக்கி ஒன்றுபடுவதன் முக்கியத்தை புரிந்த எம்.பி.க்களுக்கு நன்றி: ஒற்றுமையுடன் எம்மால் சாதிக்க முடியும் : ஜனாதிபதி

30 JUL, 2024 | 06:29 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டைக் கட்டியெழுப்பும் கடினமான பயணத்தில் கட்சி அரசியலை விடுத்து தன்னுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  செழிப்பான இலங்கையை உருவாக்குவதற்கு ஏனையோரையும் தன்னுடன் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆரம்பத்திலிருந்தே என்னுடன் நின்றவர்களின் ஆதரவு நாட்டை மீட்பதற்காகான மு தல் படிகளை சாத்தியமாக்கியது.

நாடு நெருக்கடியில் இருந்தபோது, எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் போராடும்போது என்னையும் எனது திட்டத்தையும் நீங்கள் நம்பினீர்கள்.

சவால்கள் சமாளிக்க முடியாததாகத் தோன்றியபோது உங்களின் அர்ப்பணிப்பு எனக்கு ஊக்கமளித்தது. இந்த பயணத்தில் இடைநடுவில் இணைந்த எம்.பி.க்களுக்கும்  முன்னேற்றத்தைக் கண்டு, மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கும் நன்றி.

இப்போது எங்களுடன் இணைந்திருப்பவர்களின் ஆதரவு நாங்கள் செல்லும் நேர்மறையான திசையை காட்டுகிறது. கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபடுவதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஒன்றாக, நாம் இன்னும் சாதிக்க முடியும்.

இன்னும் எங்களுடன் சேராத எம்.பி.க்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். செழிப்பான, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எமது பணி தொடர்கிறது. மேலும் அதனை நனவாக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். 

இந்த பயணம் எளிதானது அல்ல, ஆனால் ஒன்றாகச் சேர்ந்து அதனை இலகுவாக்கலாம். அனைவரும் ஒன்றிணைந்து  நம்பிககையான இலங்கையை உருவாக்குவோம்.

நமது நாட்டின் எதிர்காலத்திற்கான உங்கள் தைரியமான அர்ப்பணிப்புக்கு நன்றி.

https://www.virakesari.lk/article/189747

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ்மா அதிபர் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியுமா? இலங்கையில் புதிய குழப்பம்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

29 ஜூலை 2024

இலங்கையில் போலீஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் செயல்பட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் மாஅதிபர் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்ற நிலையில், பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என மற்றுமொரு தரப்பு தெரிவிக்கின்றது.

போலீஸ் மாஅதிபர் பதவிக்கும், ஜனாதிபதி தேர்தலுக்கு என்ன தொடர்பு? போலீஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல்? இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?

இலங்கையில் போலீஸ் மாஅதிபருக்கு நடந்தது என்ன?

தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் கடந்த 24ம் தேதி இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கான இடைக்கால தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில், அந்த பதவிக்கு சட்ட ரீதியாக தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் தேதி வரை அமலில் இருக்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் ஓய்வை அடுத்து, பிரதி போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் பதில் போலீஸ் மாஅதிபராக 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைத்த பிறகு, பதில் போலீஸ் மாஅதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னக்கோன் போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டார்.

எனினும், இலங்கையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு விசாரணைகளை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்திருந்தமை ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு தரப்பினர் அவரது நியமனத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.

 

இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோனின் பெயர் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அவரது பெயர் தெரிவு செய்யப்பட்ட விதம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

அரசியலமைப்பு சபையில் 9 அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது அவர்களில் ஐந்து பேரின் அனுமதி அவசியம் என கூறப்படுகின்றது.

அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது வாக்குகள் சமமாகும் பட்சத்தில் மாத்திரமே சபாநாயகரினால் தனது வாக்கை அளிக்க முடியும்.

இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் தெரிவின் போது அரசியலமைப்பு சபையின் 4 பேர் தேசபந்து தென்னக்கோனிற்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்திருந்ததுடன், எஞ்சிய இருவர் வாக்களிக்காதிருந்தனர்.

வாக்களிக்காத இருவரது வாக்குகளும் எதிராக அளிக்கப்பட்ட வாக்கு என கருதி, சபாநாயகர் தனது வாக்கை ஆதரவாக அளித்தார். இதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னக்கோன்னை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போலீஸ் மாஅதிபராக நியமித்தார்.

இந்த செயற்பாடானது, அரசியலமைப்பை மீறிய செயற்பாடு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON/FACEBOOK

உயர்நீதிமன்றம் போலீஸ் மாஅதிபருக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையை அவசரமாக கூட்டியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பான சட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து இரண்டு தினங்களுக்குள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார்.

போலீஸ் மாஅதிபர் பதவி வெற்றிடமாகவில்லை எனவும், தேசபந்து தென்னக்கோனே தொடர்ந்து போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுகின்றார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

போலீஸ் மாஅதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் வெகுவிரைவில் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன கூறினார்.

''உயர்நீதிமன்றம் போலீஸ் மாஅதிபரின் கடமைகளை இடைநிறுத்தும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் மாதம் 11ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 11ம் தேதி ஆகும் போது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவடைந்திருக்கும் என்பதை நாட்டிலுள்ள அனைவருக்கும் அறிவார்கள். புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றிருப்பார். தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் ஆணைக்குழுவுடன் பாதுகாப்புக்காக போலீஸ் மாஅதிபர் செயற்படுவார்.

போலீஸ் மாஅதிபரின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை பாரிய பிரச்னையை தோற்றுவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாது, அரசியலமைப்பின் 41 (அ) சரத்தின் கீழ் பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க முடியாது. தற்போதைய ஜனாதிபதி, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகின்றமையினால், பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க முடியாது. போலீஸ் மாஅதிபர் பதவி இன்னும் வெற்றிடமாகவில்லை. அவரே இன்றும் போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுகின்றார்," என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிடுகின்றார்.

'உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லுபடியாகாது’

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்திற்கு கீழ் செயற்படுகின்றமையினால், அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் எந்தவிதத்திலும் கேள்வி எழுப்ப முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகாது எனவும் கூறியள்ளார்.

''அரசியலமைப்பு சபை என்பது நாடாளுமன்றத்திற்கு கீழ் செயற்படுகின்றது" என அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பு சபையின் தீர்மானம், நாடாளுமன்ற கட்டமைப்பிற்கு கீழ் மாத்திரமே கட்டுப்படும். நாடாளுமன்றத்தை தவிர வேறு எந்தவொரு நிறுவனத்திற்கும் அரசியலமைப்பு சபையின் தீர்மானம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது" எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''நாடாளுமன்றம் உயரியது. அதனால், அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது அல்லது உத்தரவு பிறப்பிப்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அதனால், இடைக்கால தடையுத்தரவு செல்லுபடியாகாது.|" என அவர் கூறுகின்றார்.

 

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு

போலீஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனிற்கு உயர்நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை பிறப்பித்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ள பின்னணியில், போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை நடத்த முடியாது என கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவூட்டினார்.

சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கலந்துரையாடி ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்னையை தீர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“போலீஸ் மாஅதிபரின் நியமனம் சட்டரீதியானது என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சென்றால் எந்த இடத்தில் இந்த பிரச்னை முடிவடையும் என தெரியாது. தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே நாம் கடமையாற்றி வருகின்றோம். அதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு முழுமையாக ஆதரவை வழங்குங்கள்,” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் முதலில் வினவுவதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அவசியமொன்று இருந்தது. ஏனென்றால், 106வது சரத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு போலீஸ் அதிகாரிகளை, போலீஸ் மாஅதிபரிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபரிடம் கிடையாது. போலீஸ் மாஅதிபர் ஒருவர் இல்லையென்றால், எவ்வாறு அதிகாரிகளை கோருவது என ரணில் தரப்பு கூறுகிறது.

"தேவையான போலீஸ் அதிகாரிகளை இந்த வாரம் போலீஸ் மாஅதிபரிடம் கோர வேண்டும். அதன்பின்னர் கோரினால், அதிகாரிகளை வழங்க முடியாது. அப்படியென்றால், தேர்தலை நடாத்த முடியாது, செப்டம்பர் 21ம் தேதிக்கு பின்னர் தேர்தல் காலத்தை நீடிப்பதற்கு தனக்கு விருப்பம் கிடையாது" என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

"சிவில் அமைப்புகள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறிகின்றேன். நீதிமன்றத்திற்கு சென்று மேலும் குழப்ப வேண்டாம். நான் ஒன்றை கூறுகின்றேன். சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கதைத்து இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வாரத்திற்குள் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். செப்டம்பர் 21ம் தேதி தேர்தலை தேர்தல் ஆணைக்குழு நடத்தும் வகையில் நான் செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன்." என்று அவர் கூறியுள்ளார்.

சபாநாயகர் கருத்து

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,MAHINDA YAPA ABEWARDANE FACEBOOK

படக்குறிப்பு,சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

"போலீஸ் மாஅதிபரை தெரிவு செய்தமை தவறு என சிலர் கூறுகின்றார்கள். எனினும், தவறான விதத்தில் தீர்மானம் எடுக்கவில்லை என நான் கூறுகின்றேன்" என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

''அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நீக்குவது தொடர்பில் அரசியலமைப்பின் 44 (சீ) சரத்தின் கீழ் திட்டங்கள் காணப்படுகின்றன. அந்த திட்டத்தின் கீழ் சென்றே செயற்பட வேண்டும். அப்படியில்லை என்றால், மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு சென்று இந்த தீர்மானத்தை அந்த இடத்தில் எடுங்கள். ஜனாதிபதியினால் தீர்மானம் ஒன்று எடுக்க முடியாத இடத்திலேயே அவர் இருக்கின்றார். நான் தவறு என்றால், நீதிமன்றத்திற்கு சென்று தவறை சரி செய்து கொள்ளுங்கள்," என சபாநாயகர் தெரிவித்தார்.

சபாநாயகர் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை சபாநாயகர் திரிபுபடுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

"பிரதமரும் அங்கம் வகிக்கின்ற அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை திரிபுபடுத்தி சபாநாயகர் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்திற்குப் பின்னர், அதன் முடிவை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காமல் ஜனாதிபதிக்கு இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் அரசியலமைப்பை தெளிவாக மீறியுள்ளது. பிழையான, பொய்யான, வஞ்சிக்கும் இந்த கடிதத்தின் அடிப்படையில் ஜனாதிபதி நியமனங்களை வழங்கியதும் அரசியலமைப்புக்கு முரணானது" என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சபாநாயகரின் அடிப்படையற்ற இவ்வாறான கடிதங்களை மூலமாகக் கொண்டு ஜனாதிபதி இவ்வாறான நியமனங்களை மேற்கொள்வது பொருத்தமான நடவடிக்கையா? இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போலீஸ் மாஅதிபர்

பட மூலாதாரம்,SJB MEDIA

படக்குறிப்பு,சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவர்

போலீஸாருக்கு இப்போது யார் கட்டளையிடுவது?

போலீஸ் மாஅதிபராக பதவி வகிக்க தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் திணைக்களம் தலைமைத்துவம் இன்றி கடந்த 24ம் தேதி முதல் செயற்பட்டு வருகின்றது.

அத்துடன், போலீஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபராக (நிர்வாகம்) கடமையாற்றிய நிலந்த ஜயவர்தன, ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் விசாரணை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ் திணைக்களத்தின் உயர் பீடத்திலுள்ள இரண்டு பதவிகளும் வெற்றிடமாகியுள்ள பின்னணியில், போலீஸ் திணைக்களத்திற்கு யார் கட்டளை பிறப்பிக்கின்றார்கள் என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் போலீஸ் திணைக்களத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

வெற்றிடமாகியுள்ள பதவிகளுக்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை நடத்த முடியாதா?

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON/FACEBOOK

போலீஸ் மாஅதிபர் இன்றி ஜனாதிபதித் தேர்தலை நடத்த தடை கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''நீதிமன்றம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தீர்ப்பொன்றை வழங்கும் வரை தற்போதுள்ள போலீஸ் மாஅதிபர், அவர் இதற்கு முன்னர் வகித்த பதவியிலிருந்து செயற்பட முடியும். பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமித்து, அவரின் கீழ் தேர்தலை நடத்த முடியும். அதற்கு எந்தவித பிரச்னையும் கிடையாது. இடைகால ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தை நடத்த முடியும் என்றால், பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும்," என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

தேர்தல் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளனவா?

போலீஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனிற்கு இடைகால தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cw8yj889pn7o

போலீஸ் மாஅதிபராம் பிபிசி தமிழ்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்!

31 JUL, 2024 | 10:23 AM
image
 

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார, சஜித் பிரேமதாஸ சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தினார்.

https://www.virakesari.lk/article/189864

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தபால் மூல வாக்களிப்பு குறித்து பரவும் போலித் தகவல்! தெளிவுபடுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

31 JUL, 2024 | 04:08 PM
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொதுமக்களின் இதர தேவைகளுக்காக, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர்களின் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க முடியும் என சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் தகவல்கள் போலியானதாகும்.

எனவே, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தகவலின்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/189909

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு பெருகும் ஆதரவு: ஜனாதிபதி பக்கம் சாய்ந்த சிறிலங்கா சுதந்திர கட்சி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாகாண சபைகளின் முன்னாள்  பிரதிநிதிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

மகிந்தவுக்குக் பறந்த கடிதம்

அதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்திய 116 பேர் கொண்ட குழு இன்று (31) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணிலுக்கு பெருகும் ஆதரவு: ஜனாதிபதி பக்கம் சாய்ந்த சிறிலங்கா சுதந்திர கட்சி | Sri Lanka Freedom Party Support Ranil Election

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை (Podujana Peramuna Party) பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதனைத் தெளிவுபடுத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga ) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனியான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தையடுத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

https://ibctamil.com/article/sri-lanka-freedom-party-support-ranil-election-1722436281

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களிடையே 50 சதவிகித வாக்கை பெறக்கூடியவர்கள் என எவருமில்லை - சி.வி.விக்னேஸ்வரன்

Published By: DIGITAL DESK 7   01 AUG, 2024 | 12:15 PM

image

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய ஆபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (31) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர்மேலும் தெரிவிக்கையில்:-

நாட்டை பொறுத்தவரையில் இப்பொழுதும் எனக்கு ஒரு கரிசனை இருக்கிறது. அதாவது தேர்தலின் பின்னர் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என்ற நிலை இருக்கிறது. சிங்கள வேட்பாளர்களிடையே ஐம்பது சதவிகித வாக்கை பெறக் கூடியவர்கள் என்று எவரும் இல்லை. 

உண்மையில் அவர்கள் ஐம்பது சதவிகித வாக்குகளுக்கும் குறைவாகத்தான் பெறுவார்கள்.

ஆனால் இத்தேர்தலில் பலபேர் போட்டியிடுவதாக கூறினாலும் ரணில், சஜித், அனுர என்ற மூன்று போர் தான் முக்கியமானவர்கள். 

இந்த மூவருக்கும் இடையில் என்ன மாதிரியான போட்டி நடக்க போகிறது. இந்த தேர்தலில் மொட்டு கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகிறேன். 

அதாவது தெற்கிலே இருக்கிற அவர்களுடைய ஆசனங்கள் எல்லாம் ஜேவிபி கட்சிக்கு போய்விடும் என்பது என்னுடைய கருத்து. அந்தளவிற்கு இந்த நாட்டிற்கு இவர்கள் செய்த துரோகம் மக்கம் மனதிலே இருக்கின்றது. 

குறிப்பாக இந்த நாட்டை சூறையாடி இருக்கின்றார்கள்,  போர் போர் என்று போரின் காரணமாக தங்களை தங்கள் வளர்த்து கொண்டார்கள். இவை எல்லலாம் மக்ளுக்கு இப்போது நன்றாகத் தெரியும். 

ஆகவே எந்த விதத்திலும் தற்போது இருக்கிற நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் பண்ணுவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால தங்களுடைய கட்சியின் தனித்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற முறையில் ஏதோ சில சில பேச்சுக்கள் எல்லாம் பேசி வருகின்றனர்.

அவர்கள் கட்டாயமாக ரணிலுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.இப்போது மொட்டு கட்சியில் உள்ள பலர் ரணிலுக்கு ஆதரவை தெரிவித்துள்ள அதேநேரத்தில் தங்களுடைய தனித்துவத்தை எடுத்து கட்டி வேறொரு வேட்பாளரை போடக்கூடும். 

ஆனால் அவர்களில் 92 பேர் ரணிலுக்கு ஆதரவு என்றால் மற்றையவர்களும் இதே மாதிரியான மனோ நிலையில் இருப்பார்கள் என்று தான் நான் நம்புகின்றேன். 

எனினும் முழுமையாக ரணிலிடம்  தாங்கள் சரண்டைந்து விட்டோம் என்று காட்டுவது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். இன்னும் மக்கள் ஆதரவுடனே இருக்கிறோம் என்று காட்டுவதற்க்கு பலதும் பேசுவார்கள். 

இப்போது அரசாங்கத்தோடு சேர்ந்திருப்பவர்கள் அதிகமாக ரணிலுக்கு ஆதரவை வழங்குவார்கள் என்றே நம்புகிறேன். 

ஏனெனில் ராஜபக்சாக்களோடு இருப்பவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால் இதன் பின்னர் பாராளுமன்றம் போக கூடிய நிலைமை பலருக்கு இல்லை என்பது என்னுடைய கருத்தாகும் என அவர்மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189963

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணத்தைச் செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான  விஜயதாச ராஜபக்ஷ, இன்று  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

 

இதேவேளை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் (7) வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394322

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.