Jump to content

“கூட்டணி என்றால் அடிமைகள் இல்லை” - ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுகவிடம் கடுமை காட்டுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
திருமாவளவன்

பட மூலாதாரம்,FACEBOOK/THIRUMAOFFICIAL

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநிலக் கட்சி அந்தஸ்தை சாதித்துள்ளது. இந்த நிலையில் அந்த கட்சி மேற்கொள்ளும் அரசியல் நிலைப்பாடுகள், திமுகவை சங்கடத்தில் தள்ளி வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.

சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆட்சியின் மீதும், காவல்துறையின் நடவடிக்கை தொடர்பாகவும் விமர்சனத்தை முன்வைக்கத் தொடங்கின.

இதில், திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடுமையான நிலையெடுத்து பேச தொடங்கியது. கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை தெரிவித்த போது, கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அதனை உடனடியாக மறுத்தார்.

"கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காவல்துறை விளக்கம் கூறும்போது சாட்சியங்களை திரட்டியே கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை மறுப்பவர்கள் தங்களிடம் ஆதாரம் இருந்தால் அதை முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தது.

திமுகவிடம் கடுமை காட்டுகிறதா வி.சி.க ?

பட மூலாதாரம்,FACEBOOK/THIRUMAOFFICIAL

தலித் தலைவர்களுக்கு குறி?

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் இறுதி நிகழ்வில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியுடன் பங்கேற்று பேசிய திருமாவளவன், “இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது தான் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் முன் வைக்கும் கோரிக்கை. அதனாலேயே மாயாவதி இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவதற்கான கட்டாயம் எழுந்துள்ளது. எனவே காவல்துறை இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும், இதற்கு பின்னால் உள்ள கூலிப்படையினர் யார்? அவர்களின் பின்னணி என்ன என்பதை கண்டறிய வேண்டும். இது போன்ற கொலைகள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தலித் தலைவர்கள், சிறிய அளவில் இருந்தாலும், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது” என்று பேசினார்.

சிபிஐ போன்ற மத்திய விசாரணை முகமைகள் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாக, இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாஜகவிற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் அதிமுகவும், பாஜகவும் சிபிஐ விசாரணை கேட்டு போராடுகின்றன. இப்போது அந்த வரிசையில் விசிகவும் இணைந்துள்ளது.

 

மதுவிலக்கு பிரச்னையிலும் விமர்சனம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய மரணங்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்திலும் திருமாவளவன் திமுகவை நோக்கி விமர்சனத்தை முன்வைத்தார்.

“முழு மதுவிலக்கு தேசிய அளவில் கடைப்பிடிக்க வேண்டும்” என்ற திருமாவளவன், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை வைத்து கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது என்றார்.

“தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே, புதுச்சேரியில் அரசு மது பானக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், அங்கு அரசு மதுபானக் கடைகளுக்கு இணையாக கள்ளச்சாராயக் கடைகள் இருக்கின்றன. அரசு கடைகள் இருப்பதால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை தடுப்பதாகக் கூறியே 2003-ம் ஆண்டு அதிமுக காலத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. அப்போது 3 ஆயிரம் கோடிக்கு விற்பனையானது தற்போது , 45ஆயிரம் கோடிக்கு விற்பனையாகிறது” என்று திமுக ஆட்சியில் மது விற்பனை அதிகரித்திருப்பதை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“கூட்டணி என்றால் அடிமைகளா?”

திமுகவிடம் கடுமை காட்டுகிறதா வி.சி.க ?

பட மூலாதாரம்,X/@WRITERRAVIKUMAR

படக்குறிப்பு,“கூட்டணி கட்சிகள் என்றால் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது” என்று கூறுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.

இது தொடர்பாக கேட்டபோது, ‘வெவ்வேறு கட்சிகள் என்றால் வெவ்வேறு கருத்துகள் இருக்க தானே செய்யும்’ என்று விளக்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார். மேலும் அவர் “கூட்டணி கட்சிகள் என்றால் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. அது மிக தவறான பார்வை” என்று கூறினார்.

திமுக கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை என்று மறுக்கும் திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விமர்சனங்களை ஏற்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிடும் அவர், “இந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்கிறது” என்றார்.

பூரண மதுவிலக்கு தொடர்பாக கேட்டபோது, அது சாத்தியமற்றது என்று மறுத்த அவர், “குடிக்காதவர்கள் மட்டும் தான் கட்சியில் இருக்க வேண்டும் என்று கூற முடியுமா? அப்படி கூறினால் எத்தனை பேர் கட்சியில் இருப்பார்கள். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்திலும் மது குடித்து உயிரிழப்பவர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

 
திமுகவிடம் கடுமை காட்டுகிறதா வி.சி.க ?

பட மூலாதாரம்,FACEBOOK

“எதுவும் நடக்கலாம்!” - ஜெயக்குமார்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுகவின் அணிக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் செல்ல வாய்ப்புள்ளதுதானே என்று கேட்டபோது, ‘அதிமுக பலவீனமாக உள்ளதால் யாரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை’ என்றார் டி கே எஸ் இளங்கோவன். மேலும், “அதிமுக தலைவர் இல்லாத கட்சி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்களால் வலுப்பெற முடியாது” என்று கூறினார்.

பட்டியல் சமுதாய மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுக்காவிட்டால் திருமாவளவன் தனிமைப்படுத்தப்படுவார் என்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

“திருமாவளன், தனது உளக் குமுறல்களை இப்போது வெளிப்படுத்த தொடங்கியுள்ளார். கூட்டணி தர்மத்துக்காக வாய்மூடி இருக்க முடியாதல்லவா? விசிக எங்களுக்கு எதிரி இல்லை. திமுகவும் பாஜகவும் தான் எங்கள் எதிரி. அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.

 

திமுகவுக்கு சவாலாகுமா 2026?

திமுக, அதிமுக அல்லாத வேறொரு அணியை நோக்கி நகர்கிறதா என்ற கேள்விக்கு, “இந்த நிமிடம் வரை விசிக வேறு அணியை நோக்கிச் செல்ல வாய்ப்பில்லை. இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி அமைக்க திமுக விரும்பினால் அதனால் விசிக அணியை விட்டு வெளியேற நிர்பந்தம் ஏற்படும்” என்கிறார் பேராசிரியர் வீ.அரசு.

திமுகவை வீழ்த்துவதற்காக எந்த அணியும் இணையக் கூடும் என்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், “கூட்டணியே வேண்டாம் என்ற சீமான், தம்பி விஜய்யுடன் சேர விருப்பம் என்கிறார். அதிமுக உண்ணாவிரதத்துக்கு நான்கு பிரதிநிதிகளை நேரில் அனுப்பி வைத்து ஆதரவு தெரிவிக்கிறார். சீமானும் விஜய்யும் இணைவார்களா, இணைந்து அதிமுகவுடன் கூட்டணி வைப்பார்களா என்பது இப்போது தெரியாது” என்றார்.

அதே சமயம், ஆட்சியை தக்க வைப்பதற்கான தேர்தல் என்பதால் 2026 தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியம், வி.சி.க தன்னுடைய கூட்டணி முடிவை இப்போது எடுக்காது என்கிறார் பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன்.

மேலும் அவர் “தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சுயநலன், கட்சி நலன் கருதி எடுக்கப்படும் முடிவு. தேர்தல் நேரத்தில் பேசாமல் மௌனம் காத்த விசயங்களைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு பேசுவார்கள். மாயாவதி சி பி ஐ விசாரணை வேண்டும் என்று கூறும் போது, அதே மேடையில் திருமாவளவன் வேண்டாம் என்றா கூற முடியும்?” என்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும் கூட விரும்பும் என்கிறார் அவர், “உத்தர பிரதேசத்தில் செய்தது போல தலித்துகளை தங்கள் பக்கம் ஈர்க்க பாஜக முயன்று வருகிறது. அதற்கு விசிகவினர் இணங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு வேளை அதிமுக, பாஜக என எல்லோரும் இணைந்து ஒரு அணி அமைத்தால் திமுகவுக்கு அது சவாலாக இருக்கும்” என்றார் வீ.அரசு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி சற்றுமுன்னர் வெளியாகியது. நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியாகியது மேலதிக தகவலுக்கு எம்முடன் இணைந்திருங்கள்…. https://athavannews.com/2024/1393623
    • பொலிஸ் மா அதிபரின் நியமனத்தில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி ரணில்! பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார்.   ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பாக ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் காலப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கவேண்டிய தேவை ஏற்படும் எனவும் சட்டவல்லுநர்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர். மேலும் இந்த நியமனத்தை முன்னிலைப்படுத்தி மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் என்றும் சட்ட வல்லுணர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரியப்படுத்தியுள்ளர். எனவே பொலிஸ்மா அதிபர் விடயத்தில் தலையீடு செய்வதை தான் தவிர்த்து கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393636
    • பொலிஸ் மா அதிபா் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம் – பிரதமா் தினேஸ்! தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளாா். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவர், பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார். இந்தநிலையில், கடந்த 25 ஆம் திகதி உயர்நீதிமன்றமானது, பொலிஸ் மா அதிபருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த அமர்வு நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.   ஆனால், நவம்பர் மாதம் என்பது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒருமாதம் கடந்து இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் காலத்தில்தான் இந்த வழக்கு விசாரணை அடுத்ததாக இடம்பெறும். பொலிஸ் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டிய இந்தத் தருணத்தில் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றுக்குள்ளும் தற்போது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 4 ஆவது உறுப்புரையில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக நீதியான தேர்தலை நடத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், உயர்நீதிமன்றமானது இந்தத் தடையை விதிக்கும் முன்னர், தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தைக் கேட்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அரசமைப்பின் 44 (அ) 2 ஆம் உறுப்புறுமையின் கீழ், 14 நாட்களுக்குள் பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவானது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரசமைப்புச் சபையின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். இப்போதும் பொலிஸ் மா அதிபராக இடைக்கால தடை விதிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரே இருக்கிறார் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1393654
    • சுயாதீன (சுயேட்சை) வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.   2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேராவினால் குறித்த தொகை வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக அவரது சட்டத்தரணி தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1393644
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.