Jump to content

குறுங்கதை 12 -- கலப்புத் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலப்புத் திருமணம்

-------------------------------
சினிமாவில் வருகின்ற அமெரிக்க மாப்பிள்ளைக்கும், உண்மையான நிலவரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி சைபீரியா பாலைவனம் போல நீண்டதும், கொடியதும், பொதுவில் மற்றவர்களுக்கு தெரியாததும். அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் அடித்து பிடித்து பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற காலம் தமிழ்நாட்டில் எப்பவோ வழக்கொழிந்துவிட்டது. பெண் பார்க்கப் போகும் இடத்தில், பெண் வீட்டாரிடம் இருந்து  'மாப்பிள்ளை அமெரிக்காவில் என்ன விசாவில் இருக்கின்றார்....' என்ற முதலாவது கேள்வி வரும். என்ன விசா என்று பதில் சொல்ல ஆரம்பித்தாலே, கிரீன் கார்ட் இல்லையா, இன்னும் சிட்டிஷன் ஆகவில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகள் வரும். அவை வந்திடும் என்று சும்மா சொல்லித் தப்பவும் முடியாது. இங்கு ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு தோராயமான வழங்கும் திகதியும், காலமும் இருக்கின்றது. அதை ஒரு வெப்சைட்டில் போய் பார்க்கலாம். பெண் கொடுக்கப் போகின்றவர்கள் சும்மா இருப்பார்களா?
 
இப்பொழுது இந்தியர்களுக்கு கிரீன் கார்ட் கிடைக்க 15 வருடங்கள் அல்லது அதற்கு மேலேயேயும் எடுக்கின்றது. நிரந்தர வதிவுடமை இல்லாதவர்களுக்கு நாங்கள் பெண் எல்லாம் கொடுப்பது இல்லை என்று நேரேயே சொல்லி விடுகின்றார்கள்.
 
இந்த தடையை தாண்டினால், அடுத்த தடை மாப்பிள்ளை எந்தக் கம்பனியில் வேலை செய்கின்றார் என்ற கேள்வி. ஆப்பிள், கூகிள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட்,...... இதில் ஒன்றா என்று அங்கே பாண்டிக்குப்பத்தில் இருந்து கேட்பார்கள். இங்கு வந்ததே கனவா அல்லது நனவா என்று சந்தேகத்தில் இருக்கும் பெரும்பானமையானவரின் நிலை, இதில் ஆப்பிளா அல்லது ஆரஞ்சா என்றால் அதற்கு எங்கே போவது? இந்தக் கம்பனிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ரவுண்டுகள் வரை இருக்கும் நேர்முகத் தேர்வுகள். ஒவ்வொரு ரவுண்டிலும் கேள்வி கேட்பவர்கள் நடிகர் கமல் போலவே கதைப்பார்கள். ஒன்றும் விளங்கவே விளங்காது. மன உளைச்சல் தான் மிஞ்சும்.
 
இதையும் தாண்டினால் சொந்த வீடு இருக்கா, கடன் ஏதும் இருக்கா என்ற அடுத்த தடையைத் தாண்டவேண்டும். அங்கு பரம்பரை வீட்டில் இருந்து கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்பார்கள். கடன் இல்லாமல் இங்கு எவரிடம் சொந்த வீடு இருக்கின்றது? வீடு என்ன வீடு, கடன் இல்லாமல் அமெரிக்காவில் கார் கூட ஒருவரிடமும் கிடையாது.
 
இப்படியான எல்லா தடைகளையும் தாண்டி ஒரு நண்பன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெண்ணை நேரில் பார்க்கப் போயிருந்தான். எத்தனையோ பெண்களை கல்யாண தரகர்கள் மூலம் பேசி, மாட்ரிமோனியல் வெப்சைட்டுகளில் விண்ணப்பித்து, பல கல்லூரி ஒன்றுகூடல்களிற்கு போய், இங்கு கடலை கடலையாகப் போட்டு எதுவுமே சரி வராமல், எல்லாம் சுத்தமான தோல்வியாகி, ஒரு கேள்விக்குறியாக இருந்தவன் அவன். இந்தச் சம்பந்தம் எதிர்பாராத விதமாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
 
அப்பொழுது இருவரும் இங்கே ஒரு கம்பனியில், ஒரே அணியில் வேலை செய்து கொண்டிருந்தோம். இந்தப் பெண்ணை பார்க்க ஊருக்குப் போகும்  போது கல்யாணம் கட்டாமல் திரும்பி வரவே மாட்டன் என்று சொல்லி விட்டுப் போனான் நண்பன். இதற்கு முன்னும் சில தடவைகள் ஊருக்குப் போய், போன மாதிரியே வெறுங்கையுடன் திரும்பி வந்தவன் தான், ஆனால் இந்த முறை அவன் கண்ணில் ஒரு உறுதி தெரிந்தது. அநேகமாக திரும்பி வர மாட்டான் என்றுதான் எனக்கும் மனதில் பட்டது.
 
நாலு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண்ணும் நண்பனின் குடும்பத்தில். நண்பன் தான் கடைசி. மற்ற நால்வரும் திருமணமானவர்கள். முதல் அண்ணா, அடுத்தது அக்கா. அப்பா இல்லை, அம்மா உண்டு. குடும்பத்தில் மூத்தவர் தான் எல்லா முடிவுகளும் எடுப்பது.
 
பெண்ணை இவனுக்கு பிடித்துவிட்டது. நல்லாகவே பிடித்து விட்டது, அவனின் நிலைமை உங்களுக்கும் தெரியும் தானே. 
 
நண்பன் கொஞ்சம் கறுப்பாக இருப்பான். கொஞ்சம் கறுப்பு என்றால் ஆரம்ப கால ரஜனிகாந்த, விஜய்காந்த் அளவிற்கு கறுப்பாக இருப்பான். ஆபிஸில் ஏதாவது ஃபோட்டோ எடுக்கும் போது பலர் அவன் பக்கத்தில் போய் நின்று கொள்வார்கள்.
 
பெண் பார்த்து விட்டு, வீட்டுக்கு போய் சொல்கின்றோம் என்று மூத்தவர் கிளம்பி வந்துவிட்டார். என்ன வீட்டை போய் சொல்லுவது, இப்பவே சம்மதம் என்று சொல்வது தானே என்று இவன் நினைத்தான், ஆனால் மூத்தவரை நேரடியாகக் கேட்கத் துணிவில்லை.
 
மூத்தவர் நண்பனைத் தனியே கூப்பிட்டுப் போனார். இந்தச் சம்பந்தம் சரி வராது என்றார் அவனிடம். அந்தக் கணத்தில் அவனுக்கு பூமி கால்களில் இருந்து நழுவியிருக்க வேண்டும். ஏன் என்று ஈனஸ்வரத்தில் முனகினான். மூத்தவர் சொன்னார்: அந்தப் பெண் நல்ல வெள்ளையாக இருக்குது. எங்களின் ஆட்களில் இப்படி வெள்ளையாக ஒருவர் வரவே முடியாது. இது ஏதோ கலப்புக் குடும்பம். அநேகமாக இது ஒரு முதலியார் கலப்பாகத்தான் இருக்கும் என்று.
 
அது முதலியார் கலப்பாக இருந்தால் என்ன, அல்லது முதலைக் கலப்பாக இருந்தால் என்ன, தனக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வையுங்கோ என்று அழுது புரண்டு, அல்லாவிட்டால் மான்று விடுவேன் என்று அவன் வீட்டாரைப் பயமுறுத்தி, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தான் நண்பன். இப்பொழுது அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். 
  • Like 2
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் அடித்து பிடித்து பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற காலம் தமிழ்நாட்டில் எப்பவோ வழக்கொழிந்துவிட்டது. பெண் பார்க்கப் போகும் இடத்தில், பெண் வீட்டாரிடம் இருந்து  'மாப்பிள்ளை அமெரிக்காவில் என்ன விசாவில் இருக்கின்றார்....' என்ற முதலாவது கேள்வி வரும். என்ன விசா என்று பதில் சொல்ல ஆரம்பித்தாலே, கிரீன் கார்ட் இல்லையா, இன்னும் சிட்டிஷன் ஆகவில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகள் வரும். அவை வந்திடும் என்று சும்மா சொல்லித் தப்பவும் முடியாது. இங்கு ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு தோராயமான வழங்கும் திகதியும், காலமும் இருக்கின்றது. அதை ஒரு வெப்சைட்டில் போய் பார்க்கலாம். பெண் கொடுக்கப் போகின்றவர்கள் சும்மா இருப்பார்களா

20 வருடம் முதல் அமெரிக்கா என்றால் சினிமா நடிகைகளில் இருந்து கொழுத்த பணக்காரர் வரை கண்ணை மூடிக் கொண்டு பெண் கொடுப்பார்கள் என்பார்கள்.

இப்போ ஐரி துறையில் இந்தியா கோலோச்சுவதால் பழைய பல்லவி பாட முடியாது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

20 வருடம் முதல் அமெரிக்கா என்றால் சினிமா நடிகைகளில் இருந்து கொழுத்த பணக்காரர் வரை கண்ணை மூடிக் கொண்டு பெண் கொடுப்பார்கள் என்பார்கள்.

இப்போ ஐரி துறையில் இந்தியா கோலோச்சுவதால் பழைய பல்லவி பாட முடியாது போல.

👍....

அவர்கள் இலட்சக் கணக்கில் அமெரிக்கா வந்துவிட்டார்கள். அதனால் தெரிவுகள் அதிகமாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

ஆபிஸில் ஏதாவது ஃபோட்டோ எடுக்கும் போது பலர் அவன் பக்கத்தில் போய் நின்று கொள்வார்கள்.

‘ஆப்பிள்’, ஆரஞ்சு’, ‘கம்பனி’ ,’ஆபிஸ் எண்டு உங்களையே அறியாமல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

அந்த மாப்பிள்ளை நீங்கள் இல்லை என்று நம்புகிறேன்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன அத்தனை கேள்விகளையும் பாஸ் பண்ணிய பின் ..........

சுவி.......  கொஞ்சம் பெண்ணைப் பார்க்கலாமா ......

அவர்கள்........ ஓ.....அதுக்கென்ன தாராளமா ...... அம்மா கொடியிடை இங்கே வாம்மா, மாப்பிள்ளை உன்னைப் பார்க்க வேண்டுமாம்...... (பெண் வருகிறாள்)

அவர்கள் ....... என்ன மாப்பிள்ளை யோசிக்கிறீங்கள் ........ பெண் பிடித்திருக்கா .......

சுவி ......... அதுவந்து பெண்ணுக்கு கண் கொஞ்சம் வாக்கு போல ........மூக்கும் சப்பையாய் ......யு.எஸ் சில் ஒரு பங்க்சனுக்கு அழைத்துப் போவதென்றாலும் கலர் கம்மி ....... நண்பர்கள் பின்னால் நின்று கேலி பண்ணுவார்கள் போல..... பெயருக்கும் பெண்ணுக்கும் சம்பந்தமேயில்லை போலிருக்கே.......

அவர்கள்......... அது நாங்கள் அவ பிறந்தவுடன் வைத்த பெயர்.........இப்ப கொஞ்சம் தடியாகிட்டா ......

சுவி........ஓ......சரி......இப்ப நாங்கள் போட்டு பிறகு சொல்லி அனுப்புகிறோம்.......

அவர்கள்.....அதெப்படி நீங்கள் எங்கள் பெண்ணைப் பார்த்து விட்டு வேண்டாம் என்று சொல்லலாம்......

சுவி....... நீங்கள் கேட்ட அத்தனை தகுதியும் எனக்கு இருக்கும் போது நானும் எனக்கு ஏற்றவாறு பெண்ணைத் தேடுவது ஒன்றும் தப்பில்லையே ....... ஓக்கே அப்ப வரட்டா .......!  😂

(எனக்கும் இப்படி பெண்ணைத் தேடிப்பார்க்க விருப்பம்தான் ....... அதுக்கு இனியொரு சந்தர்ப்பம் அமையுமோ தெரியவில்லை).  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

‘ஆப்பிள்’, ஆரஞ்சு’, ‘கம்பனி’ ,’ஆபிஸ் எண்டு உங்களையே அறியாமல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

அந்த மாப்பிள்ளை நீங்கள் இல்லை என்று நம்புகிறேன்

இல்லை, இல்லை, அது நான் இல்லை.......... ஒரு தமிழ்நாட்டு நண்பனின் அனுபவம் இது. கொஞ்சம் கண்ணும், மூக்கும் வைத்து எழுதினேன். அவர்களுடன் சேரும் போது அவர்களின் தமிழும் வந்து சேர்கின்றது. நான் கவனித்து தவிர்த்திருக்க வேண்டும்...........

என்னுடைய ஊரின் நிலைமை உங்களுக்குத் தெரிந்திருக்கும் தானே. எல்லோரும் ஊருக்குள் தான் கட்டுவார்கள். வெளியில் எவரும் எங்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள் என்று நாங்களே எங்களைப் பகிடி பண்ணிக் கொள்வோம். மிக இளைய வயதிலேயே கட்டியும் வைத்து விடுவார்கள்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, Kavi arunasalam said:

‘ஆப்பிள்’, ஆரஞ்சு’, ‘கம்பனி’ ,’ஆபிஸ் எண்டு உங்களையே அறியாமல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

அந்த மாப்பிள்ளை நீங்கள் இல்லை என்று நம்புகிறேன்

இந்தக் கலரையும்...தடுமாற்ற்த்தையும் பார்த்தால்ல் இவருதான் மாப்பிள்ளை...ஒரு படத்தோடை விளக்குங்கோவன் கவியர்..

தனக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வையுங்கோ என்று அழுது புரண்டு, அல்லாவிட்டால் மான்று விடுவேன் என்று அவன் வீட்டாரைப் பயமுறுத்தி, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தான் நண்பன்.  

இதுதான் நானும் செய்தது

Edited by alvayan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

இந்தக் கலரையும்...தடுமாற்ற்த்தையும் பார்த்தால்ல் இவருதான் மாப்பிள்ளை...ஒரு படத்தோடை விளக்குங்கோவன் கவியர்..

தனக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வையுங்கோ என்று அழுது புரண்டு, அல்லாவிட்டால் மான்று விடுவேன் என்று அவன் வீட்டாரைப் பயமுறுத்தி, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தான் நண்பன்.  

இதுதான் நானும் செய்தது

🤣......

அது நான் இல்லை............ அதோட நான் மாநிறமாக்கும்.............😜.

என் நண்பனின் ஊரின் பெயர் அந்தக் கதையிலேயே இருக்கின்றது.

*******************

சுவி ஐயா எழுதியது போலவே என்னுடைய கதையை எழுதினால் இப்படித் தான் இருக்கும்:

நான்: இப்ப என்ன அவசரம்.........நான் இன்னும் படித்தே முடிக்கவில்லை, இன்னும் ஒரு வருஷம் இருக்கு.

வீட்டார்: இப்ப எழுதிட்டு போ..... அடுத்த வருஷம் கல்யாணம் வைக்கலாம்.

நான்: பெண்....?

வீட்டார்: அது தான் அடுத்த ஒழுங்கையில்...............

நான்:  அதுவா, அதுக்கு எத்தனை வயசு?

வீட்டார்: என்ன சின்ன வயசு.......... இந்த வயதில நாங்கள் கையில இரண்டு, மடியில இரண்டு என்று பெத்துப் போட்டிட்டம்..............

(என் வீட்டார்கள் அதற்குப் பிறகு இன்னும் நாலு பெற்றவர்கள்......... மொத்தம் எட்டு உருப்படிகள்....🤣)

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.