Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

‘அவன் கையில் ஆயுதம் இருக்கவில்லை’ - வங்கதேசப் போராட்டத்தின் முகமாக மாறிய சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்

வங்கதேசப் போராட்டத்தில் கொல்லப்பட்ட மாணவர்

பட மூலாதாரம்,SHARIER MIM

படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு புகைப்படம், வங்கதேசக் காவல்துறையை எதிர்கொள்ளும் போது, அபு சயீத் தனது கைகளை உயர்த்துவதைக் காட்டுகிறது கட்டுரை தகவல்
  • எழுதியவர், அக்பர் ஹுசேன் மற்றும் தரேகுஸ்ஸமான் ஷிமுல்
  • பதவி, பிபிசி வங்காள மொழிச் சேவை
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

வங்கதேசத்தில் நடந்துவரும் மாணவர் போராட்டத்தின் முகமாக மாறியுள்ளார் அபு சயீத்.

போராட்டத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் ஒன்றையொன்று செங்கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளால் தாக்கிக் கொண்டன. நாடு முழுவதும் நடந்த இந்த மோதல்களில் கொல்லப்பட்ட ஆறு பேரில் 22 வயதான அபு சயீதும் ஒருவர். இந்தப் பேரணிகளைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர்.

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிய வங்கதேசப் போர் வீரர்களின் உறவினர்களுக்கு பொதுத் துறையில் சில வேலை வாய்ப்புகளை ஒதுக்கும் முறை சமீபத்தில் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் பல நாட்களாகப் போராட்டங்கள், பேரணிகளை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு புகைப்படம், வங்கதேசக் காவல்துறையை எதிர்கொள்ளும் போது, அபு சயீத் தனது கைகளை உயர்த்துவதைக் காட்டுகிறது.

சயீத்தின் மரணத்திற்கு காவல்துறையே காரணம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சட்டு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வங்கதேசத்தின் வடமேற்கு நகரமான ரங்பூரின் போலீஸ் கமிஷனரான முகமது மோனிருஸ்ஸமான் பிபிசி-யிடம் பேசினார். அபு சயீதின் மரணம் குறித்து போலீசார் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளனர், என்று அவர் கூறினார்.

போராட்டங்களில் 6 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா புதன்கிழமை உறுதியளித்தார்.

பல நாட்கள் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க, அதிகாரிகள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சயீதுக்கு என்ன ஆனது?

இந்தச் சம்பவம் தொடர்பாக வலம்வரும் ஒரு வீடியோவில், போலீசார் திடீரென ரப்பர் தோட்டாக்களைச் சுடத் தொடங்கும் போது, சயீத் நடுரோட்டில் நிற்பதைக் காணலாம். பிபிசி இந்த வீடியோவை சரிபார்க்கவில்லை.

அப்போது சயீத், கையில் ஒரு குச்சியைப் பிடித்தபடி தோட்டாவிலிருந்து ஒதுங்க முயல்கிறார். அவர் பல அடிகள் பின்னோக்கி நடந்து, சாலையின் மையத்திலுள்ள தடுப்புகளைக் கடந்து, தரையில் விழுகிறார்.

ரப்பர் தோட்டாக்களால் காயமடைந்த சயீத், மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் சில வீடியோக்களை பிபிசி வங்காள மொழிச் சேவை ஆய்வு செய்தது. அவற்றில் சயீத் வன்முறையாகவோ, ஆக்ரோஷமாகவோ நடந்துகொள்வதுபோலத் தெரியவில்லை.

பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் பேசிய ரங்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சஹ்ரியா மிம், "போலீசார் முதலில் சயீதை வேறு இடத்திற்கு போகச் சொன்னார்கள். ஆனால் அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்," என்று கூறினார். அப்போதுதான் ரப்பர் தோட்டாக்கள் சுடப்பட்டன என்று மிம் கூறுகிறார்.

 
வங்கதேச மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,டாக்கா மற்றும் பிற பகுதிகளில் போராட்டக்காரர்கள், போலீசார் மற்றும் ஆளும் கட்சி செயல்பாட்டாளர்களுக்கு இடையே பல நாட்களாக மோதல்கள் நடந்து வருகின்றன

பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஒரே குழந்தை

ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த சயீத், அரசு வேலை கிடைக்கும் என்ற கனவில் இருந்தார்.

ரங்பூர் நகரில் உள்ள பேகம் ரோகியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவரான இவர், வங்கதேசத்தின் தேசியக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அபு சயீதுக்கு உடன்பிறந்த ஒன்பது சகோதர சகோதரிகள் உள்ளனர். மேலும், அவரது குடும்ப உறுப்பினரில் அவர் ஒருவர் மட்டுமே பல்கலைக்கழகம் வரை சென்றுள்ளார்.

அவரது இளைய சகோதரிகளில் ஒருவரான சுமி அக்தர் பிபிசி-யிடம் பேசினார். அவரது சகோதரர் பட்டப்படிப்பை முடிந்தவுடன் அவருக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்ததாகக் கூறினார்.

அவர், தனது சகோதரரின் மரணத்துக்கு காவல்துறைதான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.

“அவர் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. அவர் நாட்டின் தேசியக் கொடியை வைத்திருந்தார்,” என்று அவர் கூறினார்.

போராட்டக்காரர்களுக்கு கடுமையான முறையில் பதிலடி கொடுத்த காவல்துறையை மனித உரிமை ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.

"ஒருவரின் கருத்தை வெளிப்படுத்துவது, கிளர்ச்சி செய்வது - இவை குடிமக்களின் ஜனநாயக உரிமைகள், அவை நமது அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன," என்று மனித உரிமைகள் அமைப்பான சட்டம் மற்றும் நடுவர் மையத்தின் (Law and Arbitration Centre - ASK) நிர்வாக இயக்குநர் ஃபரூக் பைசல் பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் தெரிவித்தார்.

“அங்கு போராட்டம் நடத்திய நிராயுதபாணி மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? […] அந்த இளைஞரிடம் கொடிய ஆயுதம் எதுவும் இல்லை. அதனால் போலீசார் வன்முறையில் ஈடுபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்று அவர் கூறினார்.

பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் பேசிய முன்னாள் காவல் கண்காணிப்பாளரான (IGP) முஹம்மது நூருல் ஹுடா, வங்கதேசத்தின் சட்டங்கள் "சில சூழ்நிலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்குகின்றன," என்று கூறினார்.

"ஆனால் அது ஒரு விகிதாசார மட்டத்தில் அல்லது தர்க்க அடிப்படையில் இருக்க வேண்டும், ஆனால் இது அப்படியா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். செவ்வாய் கிழமை பிற்பகல் பேகம் ரோகியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பினார்.

இந்தச் சம்பவத்தில், நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு, இரண்டு வாரங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
வங்கதேச மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,MONIRUL ALAM/EPA-EFE

படக்குறிப்பு,டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்

தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பு

போர் வீரர்களின் உறவினர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஒதுக்கும் முறை பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டும் என்றும் போராடும் மாணவர்கள் கூறுகின்றனர்.

சில வேலைகள் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் உள்ள அரசாங்க வேலைகள், தனியார் துறை வேலைகளுடன் ஒப்பிடும்போது நல்ல ஊதியம் வழங்குகின்றன. பாதுகாப்பான ஓய்வூதிய பலன்களையும் வழங்குகின்றன.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தக் கொலைகளைக் கண்டித்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அரசாங்க வேலைகளைத் தனது விசுவாசிகளுக்கு ஒதுக்குவதற்காக ஷேக் ஹசீனா இட ஒதுக்கீட்டுத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

"ஒவ்வொரு கொலையையும் நான் கண்டிக்கிறேன்," என்று புதன்கிழமை மாலை தொலைக்காட்சியில் உரையாற்றிய ஷேக் ஹசீனா கூறினார். போலீஸ் படைகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களுக்கு நடந்து ஒருநாள் கழித்து அவர் இந்த உரையை ஆற்றினார்.

"கொலை, கொள்ளை மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வேன் என்று தீர்க்கமாக அறிவிக்கிறேன்," என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடந்த மரணங்களுக்கு அவர் யார்மீதும் பொறுப்பு சுமத்தவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் ஹசீனா வேலை ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை ‘ரஜாக்கர்’ என்று விமர்சித்தார். ரஜாக்கர் என்பது 1971 போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்தவர்களைக் குறிக்கும் சொல்.

 
வங்கதேசத்தில் நடந்துவரும் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,MONIRUL ALAM/EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,பல நாட்கள் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க, அதிகாரிகள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்

'எங்கள் குரல்களை அடக்க நினைக்கிறார்கள்'

இந்த வாரம், தலைநகர் டாக்கா உட்பட பல வங்கதேச நகரங்களில், ஒதுக்கீட்டு எதிர்ப்பு இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கும், குறிப்பாக பங்களாதேஷ் சத்ரா லீக் (BCL) என அழைக்கப்படும் ஆளும் கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவினருக்கும், அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தேறின.

"நாட்டில் பயங்கரவாத ஆட்சியை உருவாக்குவதன் மூலம் அவர்கள் எங்கள் குரல்களை நசுக்க நினைக்கிறார்கள்," என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் மாணவி ரூபாயா ஷெர்ஸ்தா பிபிசி-யிடம் கூறினார்.

"இன்று நான் போராட்டம் நடத்தவில்லை என்றால், இன்னொரு நாள் என்னை அடிப்பார்கள். அதனால்தான் நான் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறேன்," என்கிறார் அவர்.

இருப்பினும், பங்களாதேஷ் சத்ரா லீக் அமைப்பினர் கூறுகையில், எதிர்ப்பாளர்கள் நாட்டில் ‘அராஜகத்தை’ உருவாக்க முயற்சிக்கின்றனர் என்கின்றனர். மேலும் அவர்களின் நடவடிக்கைகளை எதிர்க்க உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

வங்கதேச உச்ச நீதிமன்றம், கடந்த வாரம் இந்த இடஒதுக்கீட்டு முறையை இடைநிறுத்தியது. ஆனால் அது நிரந்தரமாக அகற்றப்படும் வரை எதிர்ப்புகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பேரணியில் உரையாற்றிய பங்களாதேஷ் சத்ரா லீக்கின் தலைவர் சதாம் ஹொசைன், தனது குழு இந்த இடஒதுக்கீடு முறையின் "தர்க்கரீதியான சீர்திருத்தத்தை" விரும்புவதாகக் கூறினார். நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு எதிர்க்குழுவின் மாணவர்கள் ஏன் ‘தங்கள் இயக்கத்தை நீடிக்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

"அவர்கள் ஏன் தெருக்களில் அராஜகம் செய்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

பெரும்பாலான அரசுப் பல்கலைக்கழக வளாகங்கள் காலி செய்யப்பட்டுள்ளதால், நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர மாணவர்கள் வியாழக்கிழமை உறுதிபூண்டனர். சாலைகள் மற்றும் ரயில் வழிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மொபைல் இணையம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என்று வங்கதேசத்தின் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவித்தார்.

 

அரசியல் கட்சிகளின் எதிர்வினைகள்

ஆளும்கட்சியன அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான ஒபைதுல் காதர், மாணவர் போராட்டங்களை ‘அரசுக்கு எதிரான இயக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் அரசியல் எதிரிகள், தங்கள் சொந்த லாபத்திற்காகப் போராட்டங்களைத் தூண்டி வருவதாக மூத்த அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி இதை மறுத்துள்ளது.

அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜுபைதா நஸ்ரின் பிபிசியிடம், இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம், வங்கதேசத்தில் உள்ள பல இளைஞர்களின் ‘ஒன்று திரண்ட கோபத்தின்’ வெளிப்பாடு என்று கூறுகிறார்.

"இட ஒதுக்கீடு இயக்கம் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள மக்களின் கோபம் வெளிப்படுகிறது. அதனால்தான் ஆளும் அரசாங்கம் தான் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது," என்று பேராசிரியர் நஸ்ரின் கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடரும் ஆர்ப்பாட்டங்கள் - வன்முறைகள் - நேற்று 35க்கும் அதிகமானவர்கள் பலி – ஊரடங்கை அறிவித்தது பங்களாதேஸ் அரசாங்கம்

Published By: RAJEEBAN    20 JUL, 2024 | 09:14 AM

image

அரச வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மூண்டுள்ளதை தொடர்ந்துபங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

banga.jpg

வெள்ளிக்கிழமை 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த  நிலையிலேயே அரசாங்கம் ஊரடங்கை அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நர்சிங்டி சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ள நிலையிலேயே பிரதமர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

GS5rL88b0AA41--.jpg

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை பயன்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வன்முறைகள் மூண்டதை தொடர்ந்து சுமார் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன எனினும்  உண்மையான  எண்ணிக்கையை மதிப்பிட முடியாத நிலை காணப்படுகின்றது.

ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளை தொடர்ந்து பங்களாதேஸ் தநைகரில் இணையசேவைகள் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டாக்காவில் பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது வீதிகளில் பொலிஸார் இராணுவத்தினர் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டங்களை தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வாரகாலமாக காணப்படும் முழுமையான முடக்கல் நிலையை தொடரப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

GS5rMIWb0AA7qQs.jpg

எங்கள் சகோதாரர்களின் இரத்தம் வீணாவதற்கு அனுமதிக்கமாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர் டாக்கா பல்கலைகழக மாணவர்களிற்கு ஏனைய பல்கலைகழக மாணவர்களும் ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் அவர்களுடன் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

1971ம் ஆண்டு முதல் நாட்டில் காணப்படும் அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு முறையை கைவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மாணவர்கள் தரத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என தெரிவிக்கின்றனர்.

1971 ம் ஆண்டு சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் உட்பட விசேட குழுவினருக்கு ஆயிரக்கணக்கான அரசவேலை வாய்ப்புகளை ஒதுக்கும் நடைமுறை பங்களாதேசில் காணப்படுகின்றது.

 

இந்த முறையின் கீழ் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்தவர்களிற்கு அரசவேலைகளில் ஒதுக்கீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

2018 இல் இந்தஒதுக்கீட்டு முறை இடை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

 

இந்நிலையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு 30 வீத ஒதுக்கீட்டை மீள வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது .

 

இது புதிய ஆர்ப்பாட்டங்களிற்கு வழிவகுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களிற்கு ஆறு வித ஒதுக்கீட்டை  ஏற்றுக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர்.

GS5rL-GaIAAl9N5.jpg

இந்த ஒதுக்கீட்டை நான்கு வாரங்களிற்கு ஒத்திவைப்பதாக கடந்த வாரம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நான்கு வாரங்களில் இது குறித்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மாணவர்களை கல்விநடவடிக்கைகளை தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

 

இந்த ஒதுக்கீடு முறையை நிறுத்தவேண்டும் என கோரி திங்கட்கிழமை முதல் பங்களாதேஷ் பல்கலைகழகங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.GS5rL8ObIAU6JeL.jpg

இந்த முறை பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு ஆதரவு வழங்குபவர்களின் குடும்பங்களிற்கு சாதமாக காணப்படுவதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/188906

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

BANGALADESH-300x200.jpg

பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்குள்ள 3 பல்கலைக்கழகங்களில் 50 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கின்றனர். குறித்த மாணவர்கள் விரும்பினால் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.

https://thinakkural.lk/article/306512

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பற்றி எரியும் வங்கதேசம், போராட்டங்களில் கொல்லப்பட்ட 100 பேர் - இந்திய மாணவர்களின் நிலை என்ன?

வங்கதேச மக்களின் கோபத்துக்கு ஆளான அரசாங்கம்? - பின்னணி என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
  • பதவி, தெற்காசிய பிராந்திய ஆசிரியர்
  • 57 நிமிடங்களுக்கு முன்னர்

வங்கதேசம் கடும் கொந்தளிப்பில் உள்ளது.

17 கோடி மக்கள் வசிக்கும் இந்தத் தெற்காசிய தேசத்தில் மக்கள் போராட்டங்கள் புதிதல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் மிக மோசமாக இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

வங்கதேசத்தில் அரசாங்க வேலைகளில் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொதுத்துறை அரசு வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971-இல் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படைவீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமானது என்று மாணவர்கள் வாதிடுகின்றனர், மேலும் தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

பல்கலைக்கழக வளாகங்களில் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு தழுவிய ஆர்பாட்டமாக உருமாறியுள்ளது.

வங்கதேச மக்களின் கோபத்துக்கு ஆளான அரசாங்கம்? - பின்னணி என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

போராட்டம் தீவிரமானது ஏன்?

'பங்களாதேஷ் சத்ரா லீக்' என அழைக்கப்படும் காவல்துறையும் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினரும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிருகத்தனமான நடவடிக்கைகளைப் மேற்கொண்டனர். அவர்களின் செயல்பாடுகள் கோபத்தைத் தூண்டுவதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. வியாழன் (ஜூலை 18) அன்று வன்முறை உச்சகட்டத்தை அடைந்தது. அன்று குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும், வெள்ளிக்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைய சேவைகளை முடக்கியுள்ளது மற்றும் தொலைபேசி சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

"இது மாணவர்கள் போராட்டம் என்ற கட்டத்தை கடந்து விட்டது. அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்திருப்பது தெரிகிறது," என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் சமினா லுத்பா பிபிசியிடம் கூறுகிறார்.

போராட்டங்கள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. வங்கதேசம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வங்கதேச மக்களின் கோபத்துக்கு ஆளான அரசாங்கம்? - பின்னணி என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

விரக்தியில் வங்கதேச இளைஞர்கள்

சுமார் 1.8 கோடி வங்கதேச இளைஞர்கள் வேலை தேடி வருவதாக ஆய்வு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களை விட குறைவாக படித்தவர்களை விட அதிக வேலையின்மை விகிதத்தை எதிர்கொள்கின்றனர்.

வங்கதேசம் ஆயத்த ஆடைகள் (ready-to-wear clothing) ஏற்றுமதியின் அதிகார மையமாக மாறியுள்ளது. இது உலக சந்தைக்கு சுமார் 40 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 3.3 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.

இந்தத் துறையில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணியாற்றுகின்றனர், அவர்களில் பலர் பெண்கள். ஆனால் பட்டம் பெற்ற இளைய தலைமுறையினருக்கு இந்த தொழிற்சாலை வேலைகள் போதுமானதாக இல்லை.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவின் 15 ஆண்டுகால ஆட்சியின் கீழ், தலைநகர் டாக்காவில் புதிய சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள் , மெட்ரோ ரயில் என கட்டமைக்கப்பட்டதன் மூலம் வங்கதேசம் புதிய மாற்றங்களைக் கண்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த வளர்ச்சி பிரதமர் ஹசினாவின் அவாமி லீக் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே பலன் அளிப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.

டாக்டர் லுத்ஃபா கூறுகையில், "நாங்கள் பல ஊழல்களை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் செய்யும் ஊழல் நீண்ட காலமாக தண்டிக்கப்படாமல் தொடர்கிறது,” என்றார்.

சமீப மாதங்களில் வங்கதேச சமூக ஊடகங்களில், ஹசினாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் சிலருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவாதங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. முன்னாள் ராணுவத் தலைவர், முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி, மூத்த வரி அதிகாரிகள் மற்றும் மாநில ஆட்சேர்ப்பு அதிகாரிகள் உட்பட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

சொத்து குவித்த அரசு அலுவலக பியூன்

கடந்த வாரம் ஹசினா செய்தியாளர் சந்திப்பில், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், இது நீண்ட கால பிரச்னை என்றும் கூறினார்.

டாக்காவில் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் 34 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 280 கோடி ரூபாய்) மதிப்பிலான சொத்துக்கள் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட உதவியாளர் (பியூன்) மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.

"சாதாரணப் பயணங்களுக்கு கூட ஹெலிகாப்டர் பயன்படுத்துகிறார். அவர் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார்? இதை அறிந்த நான் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்தேன்," என்றார்.

இருப்பினும் அந்த நபர் யார் என்பதை பற்றி அவர் குறிப்பிடவில்லை.

வங்கதேச ஊடகங்களில் இந்த விவகாரம் பற்றிய பல எதிர்வினைகள் எழுந்தன. அரசாங்க ஒப்பந்தங்களுக்கான லஞ்சம், ஊழல் அல்லது லஞ்சம் ஆகியவற்றின் மூலம் இவ்வளவு பணம் குவிக்கப்பட்டிருக்கும் என்பது ஊடகங்களின் கூற்று.

ஒரு காலத்தில் ஹசினாவின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்பட்ட முன்னாள் காவல்துறைத் தலைவர் பெனாசிர் அகமது சட்டவிரோதமான வழிகளில் மில்லியன் கணக்கான டாலர்களைக் குவித்ததற்காக வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவும் பொருளாதார நெருக்கடி ஆகிய சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் நாட்டில் உள்ள சாதாரண மக்களுக்கு இந்த செய்திகள் சீற்றத்தை ஏற்படுத்தியது.

ஊழல் குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி, கடந்த 15 ஆண்டுகளில் ஜனநாயக நடவடிக்கைகளுக்கான இடம் சுருங்கிவிட்டதாக பல சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"தொடர்ந்து மூன்று தேர்தல்களில், நம்பகமான சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்குப்பதிவு செயல்முறை இல்லை," என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் (Human Rights Watch) தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"எங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை ஜனநாயக உரிமை இங்குள்ள மக்களுக்கு மறுக்கப்படுவதைப் பற்றி ஹசினா குறைத்து மதிப்பிட்டுள்ளார்," என்று கங்குலி கூறினார்.

2014 மற்றும் 2024-ஆம் ஆண்டு தேர்தல்களை பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) புறக்கணித்தது, ஹசினாவின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் சாத்தியமில்லை என்றும், தேர்தல்கள் நடுநிலையான கவனிப்பு நிர்வாகத்தின் கீழ் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் விரும்புவதாகக் கூறினர்.

ஆனால், இந்தக் கோரிக்கையை ஹசினா நிராகரித்துவிட்டார்.

வங்கதேச மக்களின் கோபத்துக்கு ஆளான அரசாங்கம்? - பின்னணி என்ன

பட மூலாதாரம்,EPA

குற்றச்சாட்டுகளை மறுக்கும் அமைச்சர்கள்

கடந்த 15 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர், அவர்களில் பலர் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள், என்றும், அவர்களது குடும்பத்தினருக்கு அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

ஷேக் ஹசினா கடந்த சில ஆண்டுகளில் அரசியல் ரீதியாக எதேச்சதிகாரமாக வளர்ச்சி அடைந்துள்ளார் என்ற பரவலான விமர்சனங்களுக்கு மத்தியில், அரசாங்கம் ஊடகங்களையும் எதிர்பவர்களையும் ஒடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.

"அரசாங்கத்திற்கும் ஆளும் கட்சிக்கும் எதிரான கோபம் நீண்ட காலமாக அதிகரித்து வருகிறது," என்கிறார் டாக்டர் லுத்ஃபா.

“மக்கள் இப்போது தங்கள் கோபத்தை வெளிப்படுத்து வருகின்றனர். தங்களுக்கு எந்த வழியும் இல்லை என்ற சூழலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்,” என்கிறார்.

ஹசினாவின் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள், போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட போதிலும் அரசாங்கம் தீவிர நிதானத்தைக் காட்டியதாகக் கூறுகிறார்கள்.

இந்த போராட்டங்களுக்கு முக்கிய காரணம் அவர்களது அரசியல் எதிர்கட்சிகள் தான் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சில இஸ்லாமியக் கட்சிகளாலும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியதாக அமைச்சர்கள் தரப்பு கூறுகிறது.

பிரச்னைகளை நிதானமாக விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் கூறினார்.

“மாணவர் போராட்டக்காரர்களை அரசு அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நியாயமான வாதம் முன்வைக்கப்பட்டால், நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம்” என்று ஹக் இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார்.

2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஹசினா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாணவர் போராட்டங்கள் இருக்கலாம்.

வங்க தேசத்தில் பிரச்னைகள் எப்படித் தீர்க்கப்படும் என்பது பிரதமர் ஹசினா அமைதியின்மையை எவ்வாறு கையாளுகிறார் என்பதையும், மிக முக்கியமாக, பொதுமக்களின் அதிகரித்து வரும் கோபத்தை அவர் எவ்வாறு நிவர்த்தி செய்கிறார் என்பதையும் பொறுத்தது.

இந்திய மாணவர்கள் நிலை என்ன?

வங்கதேசத்தில் சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக, டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சிட்டகாங், ராஜ்ஷாஹி, சில்ஹெட் உதவித் தூதரகங்கள், இந்திய குடிமக்கள் அங்கிருந்து பத்திரமாக தாயகம் திரும்புவதற்கு உதவி செய்து வருவதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இந்தியத் தூதரகம், இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் உள்ள எல்லை கடக்கும் பகுதிகளில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதுவரை, 778 இந்திய மாணவர்கள் பல்வேறு தரை துறைமுகங்கள் மூலம் இந்தியா திரும்பியுள்ளதாக இந்திய வெளியுறவு துறையின் அறிக்கை கூறுகிறது. மேலும், டாக்கா மற்றும் சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் உதவி தூதரக அலுவலங்களுடன், வங்கதேசத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நாடு திரும்பாத மீதமுள்ள 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகின்றன. நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கோரிக்கையின் பேரில் இந்தியாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வங்கதேசம்: மாணவர் போராட்டத்தின் போது நிகழ்ந்த கொடூரம் - அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள்

வங்கதேசப் போராட்டத்தின் கொடூர தாக்குதல்களை பிரதிபலிக்கும் வீடியோக்கள்

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன் மற்றும் ஸ்ருதி மேனன்
  • பதவி, பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி வெரிஃபை
  • 30 ஜூலை 2024

ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாததை கூட ஒரு புகைப்படம் உணர்த்தி விடும் - சில சமயங்களில், அது ஒட்டுமொத்த தேசத்தையே அசைத்துவிடக் கூடும்.

வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, ஆயுதம் ஏந்திய காவல்துறையை எதிர்கொள்ள கையில் சிறிய தடியுடன் கைகளை விரித்தபடி நின்ற பல்கலைக்கழக மாணவர் அபு சயீத் போராட்டத்தின் முகமாக மாறினார். ஆயுதம் ஏந்திய காவலர்களை அவர் எதிர்கொண்டு நின்ற புகைப்படம்

அரசாங்க வேலைகளில் ஒதுக்கீட்டிற்கு எதிராக அந்நாட்டில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின் திருப்புமுனையாக அது அமைந்தது.

வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, சில நொடிகளில் அபு சயீத் மீது ரப்பர் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது , அப்போதும் அவர் தொடர்ந்து அந்த இடத்திலேயே நின்றார். அதன் பிறகு பலமுறை அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சத்தங்கள் ஒலித்தாலும் அவர் எதிர்கொண்டு நின்றார். ஆனால் சில நிமிடங்களில் அவர் சரிந்து விழுந்தார்.

 

வங்கதேசத்தில் அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தினர். பொதுத்துறை அரசு வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971-இல் நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்குவது பாரபட்சமானது என்று மாணவர்கள் கூறி போராட்டத்தில் குதித்தனர்.

ஜூலை 16 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் வைரலாகி மேலும் பல மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்தது.

அதன் பிறகு வங்கதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வன்முறை, அமைதியின்மை நாட்கள் நீடித்தன. கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள், பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக வங்கதேச காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இறுதியாக அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வங்கதேசப் போராட்டத்தின் கொடூர தாக்குதல்களை பிரதிபலிக்கும் வீடியோக்கள்

பட மூலாதாரம்,SHARIER MIM

படக்குறிப்பு,வங்கதேச காவல்துறையை அபு சயீத் எதிர்கொண்ட காட்சி என்று இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது.

வெளிச்சத்துக்கு வந்த தாக்குதல்கள்

பெங்காலி நாளிதழ் `Prothom Alo’ மற்றும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் ஆகியவை இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. இதில் பல மாணவர்கள் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் அடக்கம். அந்நாட்டு உள்துறை அமைச்சரின் கூற்றுப்படி, அதிகாரப்பூர்வ அரசாங்க புள்ளிவிவரங்கள் 147 பேர் இறந்திருப்பதாக கூறுகிறது.

ஆனால் சரியான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. உண்மையில் போராட்டத்தின் போது சாலைகளில் என்ன நடந்தது என்பதைக் காட்டும் வீடியோக்கள், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த இணைய முடக்கம் காரணமாக வெளிவருவது தாமதமானது.

இருப்பினும், கடந்த வாரம் அங்கு இணையச் சேவை ஓரளவு மீண்டதால், போராட்டத்தின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அதிகமான காட்சிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தலைநகர் டாக்காவின் ஜத்ராபரி பகுதியில் காயமடைந்த தனது நண்பரை இளைஞர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து செல்ல முயலும் வீடியோ உண்மையானது என்று பிபிசி வெரிஃபை குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சில நிமிடங்களில், ஹெல்மெட்டுடன் சாதாரண உடையில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் அந்த இரண்டு இளைஞர்கள் இருக்கும் திசையில் சுடுவது போல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த இளைஞர் படுகாயமடைந்த தனது நண்பரை விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்தை தேடி ஓடுகிறார்.

இந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் சம்பவமும் அபு சயீத்தின் மரணமும் "சட்டவிரோதமான கொலைகள்" என்று கருத்து சுதந்திரத்தின் உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதற்கான சிறப்பு நிருபர் ஐரீன் கான், பிபிசியிடம் கூறினார்.

“அபு சயீத் காவல்துறைக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் காரணமேயில்லாமல் அவரை சுடுவது தெரிகிறது. இது நியாயமற்ற செயல். வன்முறையின் தெளிவான காட்சி” என்று கான் விளக்கினார்.

வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,போராட்டத்தில் காயமடைந்த மாணவி ஒருவரை சக மாணவர்கள் தூக்கிச் செல்லும் காட்சி.

போலீஸின் சட்ட விரோத செயல்களை ஒப்புக் கொண்ட அமைச்சர்

சயீத் மீது தாக்குதல் நடத்தியது "சட்டவிரோதமானது" என்று வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் இளநிலை அமைச்சர் முகமது அலி அராபத் ஒப்புக்கொண்டார்.

"இது தெளிவாக தெரிகிறது. இளைஞர் அவர்கள் முன் நின்று, கைகளை நீட்டி நிற்கிறார், மிகக் குறுகிய தூரத்தில் நிற்கும் அவரை காவல்துறை சுடுகிறது."

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை நடத்த ஒரு சுயாதீன நீதித்துறை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அராபத் கூறினார்.

பிபிசி வெரிஃபை குழுவால் சரிபார்க்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட மூன்றாவது வீடியோ, டாக்காவின் முகமதுபூர் பகுதியில் வெகு தொலைவில் போராட்டக்காரர்கள் குழுவை நோக்கி ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுடுவதைக் காட்டுகிறது.

ஆனால், டாக்கா பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஃபரூக் ஹொசைன், காவல்துறையின் செயல்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக மட்டுமே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார்.

“உயிரையும் உடமையையும் காப்பாற்ற போலீசார் தங்கள் பலத்தை பயன்படுத்துகின்றனர். எந்தவொரு காவல்துறை அதிகாரியும் தங்கள் சொந்த பாதுகாப்பு பற்றிய கவலைகள் எழும் சூழல்களில் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்துவார்”என்று ஹொசைன் ஒரு வாட்ஸ்அப் செய்தியில் கூறினார்.

மற்றொரு சம்பவத்தின் வீடியோக்களை அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். அதில் டாக்காவின் உத்தரா பகுதியில் ஒரு போலீஸ் வேனை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குவதை காட்டுகிறது. பின்னர் வாகனத்தில் இருந்த அதிகாரியை அவர்கள் தாக்குவதும் பதிவாகி உள்ளது.

“போராட்டக்காரர்கள் ஒரு போலீஸ் அதிகாரியைக் கொன்று, டாக்காவின் ஜத்ராபரி பகுதியில் தலைகீழாகத் தொங்கவிட்டனர்” என்று அராபத் குற்றம் சாட்டினார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

"வன்முறை ஒருதலைப்பட்சமாக மட்டும் நடக்கவில்லை. மக்கள் இரு தரப்பையும் பார்க்க வேண்டும், என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும்" என்று அராஃபத் கூறினார். துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதிக்கப்படாததால் பாதுகாப்புப் படையினர் பல இடங்களில் தாக்கப்பட்டனர்" என்றார் அவர்.

அரசாங்கத்தால் பகிரப்பட்ட இரண்டாவது காணொளி, காயமடைந்த ஒரு போலீஸ் அதிகாரியை சக காவலர்கள் தூக்கிச் செல்வதைக் காட்டியது.

பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் ஆதரவாளர்கள் மாணவர் போராட்டங்களில் ஊடுருவி, பாதுகாப்புப் படையினர் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தியதோடு, அரசு சொத்துகளுக்கும் தீ வைத்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.

 
வங்கதேசப் போராட்டத்தின் கொடூர தாக்குதல்களை பிரதிபலிக்கும் வீடியோக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றன.

`இது மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஆளும் அவாமி லீக் கட்சியின் முயற்சி’ என்று எதிர்க்கட்சிகள் இந்தக் கூற்றை நிராகரிக்கின்றனர்.

போராட்டங்கள் ஓய்ந்த பின்னர், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் உட்பட 9,000க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

மாணவர் போராட்டத் தலைவர்களும் சுற்றி வளைக்கப்பட்டனர். இது "தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக" எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அரசு தரப்புக் கூறியது.

போராட்டம் செய்தவர்கள் மீது அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்வதால் வங்கதேசத்தில் மேலும் அமைதியின்மை சூழல் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

“அரசுக்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கை உணர்வு இல்லை, இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் நம்பவில்லை. அது வெளிப்படையாக தெரிகிறது. அதனால்தான் இங்கு போராட்டமும் பயங்கரமான சூழ்நிலையையும் ஏற்பட்டது”என்று ஐ நா நிபுணர் (UN expert) கான் கூறினார்.

மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பின் யாமின் மொல்லா, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவாக உள்ளார்.

"அரசாங்கம் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்களாதேஷின் பிரதமருக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள்!

பங்களாதேஷின் பிரதமருக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள்!

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் மேலும் வலுப்பெற்று வருவதாக சா்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற போராட்ங்களில் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று நடத்தப்பட்ட குறித்த போராட்டங்களைக் கலைப்பதற்காக பங்களாதேஷ் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், பங்களாதேஷில் நேற்று காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை, முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று முதல்  3 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

குறித்தப் போராட்டம் அந்த நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து பங்களாதேஷ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது வீதிகளில் இறங்கிப் போராடுபவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல எனவும் அவர்கள் நாட்டை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள் எனவும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

https://athavannews.com/2024/1394805

  • கருத்துக்கள உறவுகள்
Posted

sheikh-hasina-si.jpg?resize=750,375&ssl=

நாட்டிலிருந்து வெளியேறினாா் பங்காளதேஷ் பிரதமா்!

பங்காளதேஷ் பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக சா்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அந்நாட்டு இராணுவம் கோாிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன், நாட்டிலிருந்து தனது சகோதாியுடன் வெளியேறியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1394826

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

image-2024-08-05-224512272.png

இவ்வளவு அமளி துமளி நடக்கு.. உள்ளூர் நாட்டமை..! ஏதாவது அமைதி காக்கும் படைய அனுப்ப வேண்டாமா..?

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவ்வளவு அமளி துமளி நடக்கு.. உள்ளூர் நாட்டமை..! ஏதாவது அமைதி காக்கும் படைய அனுப்ப வேண்டாமா..?

இலங்கையை போல உலக நாட்டாமை வேலை தான் இந்த கரவரங்களும் என்று குற்றசாட்டுக்கள் வர தொடங்கி விட்டன உள்ளூர் நாட்டாமை கையை பிசைத்து கொண்டு பார்க்க வேண்டியது தான்.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.