Jump to content

குறுங்கதை 30 -- புதிதாக வந்தவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
புதிதாக வந்தவர்கள்
--------------------------------
அந்த வீட்டின் முன்னால் அவ்வளவு ஆட்கள் இதுவரை கூடினதே இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக இதே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த வீடும், அங்கு இருப்பவர்களும் அதைவிட இன்னும் அதிக காலமாக அங்கே இருக்கின்றார்கள். அங்கு இருப்பவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. நாங்கள் இங்கு குடிவரும் போதே அவர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். சில வருடங்களில், வருடம் முழுவதும் கூட, அவர்களின் வீட்டிற்கு எவரும் வருவதில்லை. ஆட்கள் வந்த வருடங்களில் கூட ஓரிருவரே இதுவரை வந்து போயிருக்கின்றனர். 
 
ஆரம்பத்தில் அவர் என்னுடன் அவ்வளவாகப் பழகவில்லை. பிள்ளைகளும், நானும் ஒருநாள் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். பந்து அவர்களின் வீட்டு யன்னலில் பட்டால் என்ன நடக்கும் என்று கேட்டார். யன்னல் உடைந்து போய்விடும் என்று சொன்னேன். போலீஸைக் கூப்பிடப் போகின்றேன் என்று போனார். ஆனால் போலீஸ் வரவில்லை. அவரின் மனைவி அவரை அன்று தடுத்திருக்கக்கூடும். ஆனாலும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தார். அவசரங்களுக்கு என்னை அழைப்பதை விட, அவருக்கு வேறு தெரிவுகளும் இருக்கவில்லை. வயதானால் பல அவசரங்கள் திடீர் திடீரென்று வந்து சேர்ந்தும் விடுகின்றன.
 
இரண்டு பிள்ளைகள் என்றார். இந்த ஊரில் இருக்கும் மிகவும் நல்ல பாடசாலை ஒன்றில் படித்து, மிகவும் சிறந்த பல்கலைகளுக்கு போய், இப்பொழுது மிகப்பெரிய உத்தியோகங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குடும்பங்களாக இருக்கின்றார்கள் என்றார். பல படங்களையும் காட்டினார். பிள்ளைகள் வாங்கிய விருதுகளையும் பார்க்கக் கொடுத்தார். என்னுடைய பிள்ளைகளையும் நான் அப்படியே ஆக்க வேண்டும் என்றும் சொன்னார். அவரின் வீட்டின் யன்னல் இன்னும் ஒரு தடவை கூட உடைக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
 
அவரின் வீட்டின் முன் கூட்டம் கூடிய நாளுக்கு முதல் நாள் எங்களிடம் சொல்லி விட்டே போயிருந்தார். சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு இடத்தில் ஒரு வாரம் தங்கப் போகின்றோம் என்று சொல்லியிருந்தார். தினமும் மருத்துவமனைக்கு போய் வருவதில் இருக்கும் சிரமங்களைச் சொன்னார். தாங்கள் திரும்பி வரும் வரை அவர்களின் வீட்டைக் கவனித்துக் கொள்ள சொல்லியிருந்தார்.
 
கூட்டத்தில் போய் என்னவென்று விசாரித்தேன். அந்த வீட்டை விற்கப் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். 
 
அவர்களை நான் அதன் பின்னர் காணவேயில்லை. மகன்களில் ஒருவர் அந்த வீட்டை விற்றார் என்றார்கள். தாயையும், தந்தையையும் மருத்துவமனையில் இருந்து தன்னுடனேயே கூட்டிச் சென்று விட்டதாகவும் சொன்னார்கள். வீட்டில் இருந்த பொருட்களை சிலர் வந்து தங்களிடையே பிரித்து எடுத்துக் கொண்டு போனார்கள்.
 
மூன்று நாட்களில் அந்த வீடு விற்கப்பட்டது என்றனர். பலத்த போட்டிகளுக்கு இடையில் ஒரு இளம் தம்பதிகள் வாங்கியிருந்தனர்.
 
என் பிள்ளைகள் இருவரும் பல்கலை, பின்னர் வேலை என்று வெளியில் போய்விட்டனர். நாங்கள் இருவர் ஆகினோம். புதிதாக வந்த முன் வீட்டில் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடகடவென்று வளர்ந்து, இரண்டு வயதிலேயே 'குட் மார்னிங்' என்று சொல்ல ஆரம்பித்தது அந்தக் குழந்தை. அப்படியே அந்த வருடமே ஒரு தம்பி பாப்பாவும் அங்கே புதிதாக வந்தார்.
 
ஒரு நாள் வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்த போது, அந்த இளம் தம்பதிகள் வந்தனர். இந்தப் பகுதியில் எந்த முன்பள்ளி நல்லது, என்னுடைய பிள்ளைகள் எந்த முன்பள்ளிக்கு போனார்கள் என்று விசாரித்தனர்.
 
அவ்வளவு தான் வாழ்க்கை. 
  • Like 6
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கும் வந்த புதிதில் பிள்ளைகளை எங்கே படிப்பிப்பது என்று பெரும் போராட்டமே.அந்த காலங்களில் திருமணமானவர்களே மிகவும் குறைவு.

திருமணமான ஓரிரு குடும்பத்துக்கும் எமது பிள்ளைகளை விட வயதில் குறைந்தவர்கள்.

உயர்தர படிப்புக்கு எங்கே விடுவது?நல்ல பாடசாலைகளை எப்படி தெரிவு செய்வது?பல்கலைக்கு விண்ணப்பிப்பது?பல்கலைக்கான பணம் திரட்டுவது என்று மிகவும் கஸ்டப்பட்டோம்.

பின்னாள்களில் எம்மை கேட்டுகேட்டு எத்தனையே பேர் வழிநடத்தினார்கள்.

நாங்களும் எமக்கு தெரிந்த தெரியாத எல்லாமே நேரகாலம் பார்க்காமல் சொல்லிக் கொடுத்தோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசோ சார்.. வெளிநட்டில் ..இது வீட்டுக்கு வீடுசார்...தொடர்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

ரசோ சார்.. வெளிநட்டில் ..இது வீட்டுக்கு வீடுசார்...தொடர்க..

ஒரு கல்யாணம் செய்து, வீடு வாங்கி, ஒன்றோ சிலவோ பிள்ளைகளும் பிறந்தால், அவ்வளவு தான் எவரினதும் வாழ்க்கை போல.... 
புதிது என்று எதுவும்  இல்லையோ...😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரசோதரன் said:

ஒரு கல்யாணம் செய்து, வீடு வாங்கி, ஒன்றோ சிலவோ பிள்ளைகளும் பிறந்தால், அவ்வளவு தான் எவரினதும் வாழ்க்கை போல.... 
புதிது என்று எதுவும்  இல்லையோ...😀
 

நம்மினத்தை பொறுத்தவரை...புதிதாக வராது...வாழையடி வாழையாக என்பதுபோல...எது ஊர்...எந்தப் பள்ளிக்கூடம்..எந்த யூனிவர்சிட்டி..  டாக்டரோ , எந்திரியோ...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

கூட்டத்தில் போய் என்னவென்று விசாரித்தேன். அந்த வீட்டை விற்கப் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். 

ஏறக்குறைய உங்கள் அனுபவம் போல் எனக்கும் கிடைத்திருக்கிறது.

எனது அயல் வீட்டீல் தனியாக வசித்து வந்த பேராசிரியர் ஸ்ராபிள் இறந்து போக அடுத்த நாளேவீடு என்ன விலைக்கு விற்கப் போகிறார்கள்?” என்ற கேள்வியுடன் பலர் வந்தார்கள்.

எனது மகனின் மனைவியின் தாயாருக்கு குடலில் கான்ஸர். இன்னும் சில மாதங்கள்தான் என காலத்தை குறித்துக் கொடுத்து விட்டார்கள். வீட்டில் வைத்து அவரைப் பராமரிப்பது என முடிவு செய்து கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்து அழைத்து வந்தால், ‘வீட்டை வாங்க நாங்கள் ரெடிஎன வாசலில் நாலைந்து பேர் நிற்கிறார்கள். ஆக பூமி விட்டுப் போகும் போது, நாம் இருந்த இடம் வேறு யாருக்கோ சொந்தமாகி விடுகிறது.

உங்களுக்கென்ன, இப்பொழுதுதானே பிள்ளைகள் பலகலைக் கழகம் போகிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. நான் எல்லாவற்றையும் முடித்து விட்டுவிசாவுக்காக காத்திருக்கிறேன்.

அறுபதுகளுக்குப் பிறகு, பொழுது விடிகிறது தெரிகிறது. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து விட்டுப் பார்ததால் மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. காலம் வேகமாகப் பறக்கிறது. இதற்குள் ரசோதரன் புளியைக் கரைத்து வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார்😄

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

அறுபதுகளுக்குப் பிறகு, பொழுது விடிகிறது தெரிகிறது. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து விட்டுப் பார்ததால் மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. காலம் வேகமாகப் பறக்கிறது

எனக்கு இப்பவே அப்படித்தான் இருக்கிறது கவி ஐயா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

நம்மினத்தை பொறுத்தவரை...புதிதாக வராது...வாழையடி வாழையாக என்பதுபோல...எது ஊர்...எந்தப் பள்ளிக்கூடம்..எந்த யூனிவர்சிட்டி..  டாக்டரோ , எந்திரியோ...

👍..........

நீங்கள் சொல்வது போலவே தான் பல சமயங்களில் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும், ஆரம்பத்தில், 'நாங்கள் உங்களைப் போல இல்லை.......... எங்கள் வாழ்க்கை வேறு மாதிரியானது........' என்றே இளையவர்களும், புதியவர்களும் தங்கள் வாழ்க்கைகளை ஆரம்பிக்கின்றனர்.

ஆனால் பின்னர் எல்லோரும் சுற்றுவது என்னவோ அதே பழைய செக்கைத் தான்............ எங்கள் ஊர் வேம்படியில் அந்த நாளைய பெரிய செக்கு உரல் ஒன்றை ஒரு ஓரத்தில் போட்டு வைத்திருக்கின்றார்கள். அது ஒரு குறியீடு போல...............🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

அறுபதுகளுக்குப் பிறகு, பொழுது விடிகிறது தெரிகிறது. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து விட்டுப் பார்ததால் மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. காலம் வேகமாகப் பறக்கிறது. இதற்குள் ரசோதரன் புளியைக் கரைத்து வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார்😄

🤣.................

வெறுமனே எந்த நேரமும் வீட்டிலிருக்கும் உப்பு, புளிப் பிரச்சனைகளை பற்றி எழுதினால், அது ஒரு உருப்படியான கதையாகாது என்று காலம் காலமாக சொல்கின்றார்கள். கதை என்றால் அதற்குள் ஒரு அகத்தேடல், ஆன்மீகத் தேடல் இருக்க வேண்டுமாம்..........🙃.

சரி, நாங்களும் கலந்து எழுதித்தான் பார்ப்பமே என்று பார்த்தால்........ அது வாசிப்பவர்களின் வயிறுகளை கலக்கி விடும் போல இருக்குதே..........🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சரி, நாங்களும் கலந்து எழுதித்தான் பார்ப்பமே என்று பார்த்தால்........ அது வாசிப்பவர்களின் வயிறுகளை கலக்கி விடும் போல இருக்குதே..........🤣

எழுபதுக்கு மேலே இருந்தால் கலக்கம் தெரியும்.

உப்பு, புளி இல்லாவிட்டால் ‘சப்’ என்று இருக்கும். தாராளமாகக் கலந்து தாருங்கள்.  என்ன, சில நேரங்களில் யதார்த்தமானவை கசக்கத்தான் செய்யும். அதற்காக உங்களை குறை சொல்ல முடியாது.

குறுங்கதைகள் நன்றாகவே இருக்கின்றன.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியப்  புலிப் பினாமிகள். அவர்களுக்குப் போட்டியாக நிலத்தில் தமிழ் தேசிய அ ரசியல்வியாதிகள்.  தமிழனின் நிலை  கல்லில் நாருரித்த மாதிரித்தான்.  😏
    • இந்த செய்தி ...தோழர் அணுராவுக்கு எதிராக இந்திய‌ அரசும் ,அவர்களுடன் சேர்ந்து  செயல் படும் புலம்பெயர்ஸும் செய்த திட்டமிட்ட சதி என நான் நினைக்கிறேன்  இலங்கையில் இருந்து இந்த காற்று வருகிறது நாங்கள் நெற் போட்டு தடுக்கிறோம் என இந்தியா பழைய சீலைகளை கொண்டு வந்து தடுத்து நிறுத்தும் முயற்சியில்iடுபட போயினமோ தெரியவில்லை
    • குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
    • ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.