Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

stalin-fe.jpg?resize=750,375

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி..?

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்திலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார்.  மேலும் அங்கு  கூகுள் நிறுவன அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருப்பினும் இது  குறித்த  உத்தியோக பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, வரும் 19ஆம்  திகதிக்கு மேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1395498

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆக.19-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பா? திமுகவில் என்ன நடக்கிறது?

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவாரா?

பட மூலாதாரம்,UDHAYANIDHI STALIN/FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் இதனை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, "நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்" என்று மட்டும் பதில் அளித்தார்.

"தமிழ்நாடு அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்" என, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ‘அதற்கான வாய்ப்பு பழுக்கவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டார். ஆனாலும், துணை முதல்வர் குறித்த விவாதங்கள் இன்னும் முழுமையாக ஓயவில்லை. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவாரா? திமுகவில் என்ன நடக்கிறது?

அமைச்சர் அன்பில் மகேஷ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

துணை முதல்வர் விவாதத்தை தொடங்கி வைத்த அன்பில் மகேஷ்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், உதயநிதியை முன்னிறுத்தி மீண்டும் துணை முதல்வர் விவாதம் கிளம்பியுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலினின் நீண்டநாள் நண்பரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்," என்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதன் பின்னர், துணை முதல்வர் பதவி குறித்த பேச்சுகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணத்தை ஒட்டி மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதால், அந்தக் காலகட்டத்தில் முதல்வரின் பொறுப்புகளைக் கவனிக்கும் வகையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா எதிர்பார்ப்பு திமுகவில் ஒரு தரப்பினரிடையே மீண்டும் எழுந்துள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பன்

பட மூலாதாரம்,RRAJAKANNAPPAN/X

படக்குறிப்பு,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆக.19-ம் தேதி உதயநிதி பதவியேற்பா?

இந்நிலையில், ராமநாதபுரத்தில் கடந்த 9ஆம் தேதி நடந்த 'தமிழ்ப் புதல்வன்' திட்ட தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், துணை முதல்வர் பதவி குறித்துப் பேசினார்.

“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் துறையின்கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டம் வருகிறது. அதனை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்" என்று கூறிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” என்றும் குறிப்பிட்டார். பின்னர் உடனே “வரும் 19ஆம் தேதிக்குப் பிறகு தான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் என்று கூற வேண்டும். அதற்கு முன்பு அவ்வாறு பேசக் கூடாது” என்று அவர் கூறினார்.

’உதயநிதி துணை முதல்வர் ஆவார்’ என்று பேசப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் ஒருவர் தேதியை குறிப்பிட்டுப் பேசியது விவாதப் பொருளாக மாறியது. அதேநாளில், இந்தக் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

"உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே?" என செய்தியாளர் கேட்டபோது, "கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, பழுக்கவில்லை" என்று அவர் பதிலளித்தார்.

உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

திமுக இளைஞரணி சார்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி பேசும்போது, "நான் ஏற்கெனவே சொன்னது போல, அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாக இருக்கிறோம். எங்கு சென்றாலும் இளைஞரணி செயலாளர் என்ற பதவி தான் எனக்கு நெருக்கமானது," என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYSTALIN/X

படக்குறிப்பு,உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்

’முதல்வரே முடிவு எடுப்பார்’

துணை முதல்வர் பதவி குறித்து எழும் சர்ச்சைகள் குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், "முதல்வருக்கு துணையாக ஒருவர் வேண்டும் என்பது கட்சியினர் மத்தியில் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, முதல்வர் வெளிநாடு பயணம் செல்லும் போது, அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதற்கு ஒருவர் வேண்டும் என பேசப்பட்டது.

அந்த அடிப்படையில், துணை முதல்வர் பதவி தொடர்பான பேச்சுகள் எழுகின்றன. இந்த தேதியில் பதவியேற்பார் என்பதெல்லாம் யூகங்களின் அடிப்படையில் பேசக் கூடியவை தான்.

ஒருவருக்கு பொறுப்புகளை வழங்குவது என்பது கட்சித் தலைமை எடுக்க வேண்டிய முடிவு. உதயநிதிக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பது கட்சியில் ஒருமித்த கருத்தாக உள்ளது. அவருக்குப் பொறுப்பைக் கொடுக்கலாமா என்பதை முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்," என்றார்.

"உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வாய்ப்புகள் குறைவு"

துணை முதல்வர் பதவி குறித்து முதலமைச்சர் விளக்கம் கொடுத்த பிறகும் அதுகுறித்த விவாதம் தொடர்வது ஏன் என, மூத்த பத்திரிகையாளர் கே.கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் வினவியது.

"அதற்கு சில காரணங்கள் உள்ளன. 2006-2011 தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது துணை முதல்வர் பொறுப்பில் ஸ்டாலின் அமர்த்தப்பட்டார். இன்று உதயநிதியை முன்மொழிந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன் ஆகியோர் எப்படி பேசுகிறோர்களோ, அதேபோல் அன்று பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகனே ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தார். அதன்பின்னரே, துணை முதல்வராகவும் கட்சியின் செயல் தலைவராகவும் மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். ” என்று அவர் கூறினார்.

"தற்போதைய நிலையில் 'இந்த விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம்' என தி.மு.க., தலைமை விரும்புகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 மாத அவகாசம் உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., ஆகிய கட்சிகள் தேர்தலில் ஒன்றாக கூட்டணி அமைத்தால், அது தி.மு.க.வுக்கு சவாலானதாக மாறலாம். அப்படியிருக்கும் போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அது வாரிசு அரசியல் என்ற பெயரில் பேசுபொருளாக மாறிவிடக் கூடாது என்பதில் தி.மு.க., தலைமை எச்சரிக்கையாக உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

“துணை முதல்வர் என்பது ஓர் அலங்கார பதவி. அரசியல் அமைப்பு ரீதியாக எந்த முக்கியத்துவமும் இல்லை. 'அரசியலில் அடுத்த தலைமை இவர் தான்' என அங்கீகரித்து வழிகாட்டுவதற்கான முறையாக இந்தப் பதவி பார்க்கப்படுகிறது" என்கிறார், கார்த்திகேயன்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
    • இவர்கள் ஊரில் இருந்தால் பியதாசவுக்கு போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
    • அது பகிடி. @vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? என்பதுதான். இது ஒரு எதிர்வுகூறல். உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா? என்பதல்ல கேள்வி. நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன். எனது விருப்பம்? அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி. இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு…. ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.  
    • ரணிலுக்கு சுமன்… அனுரவுக்கு சாத்ஸ் என்பது தெரிந்த விடயம்தானே. புஞ்சி அம்மே நவே, தங் புஞ்சி அங்கிள்🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.