Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

kkk.jpg?resize=511,276

இங்கிலாந்துக்கு தனியாக செல்லும் இலங்கை வீரர்கள்.

இலங்கை டெஸ்ட் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் jeffrey vandersay ஆகியோர் இன்றைய தினம் இங்கிலாந்து நோக்கி செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் குழாம் கடந்த 11ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், விசா கிடைக்காமை காரணமாக அன்றைய தினம் குறித்த இரண்டு வீரர்களும் செல்ல முடியாமல் போனது.

அதேநேரம், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1395815

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ப‌யிற்ச்சி விளையாட்டிலும் சுத‌ப்ப‌ல் 

 

முத‌லாவ‌து ரெஸ் விளையாட்டிலும் சுத‌ப்ப‌ல்

 

பின்ன‌னி வீர‌ர்க‌ள் வ‌ந்து நிதான‌மாய் விளையாடி ர‌ன்ஸ்ச‌ கூட்டினார்க‌ள்......................அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் ஆன‌ ச‌ன்டிமால் ம‌ற்றும் ஜ‌ஞ்ச‌லோ ம‌த்தியூஸ் இவ‌ர்க‌ளின் விளையாட்டு ச‌ரியே இல்லை சுத‌ப்ப‌ல்...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ப‌யிற்ச்சி விளையாட்டிலும் சுத‌ப்ப‌ல் 

 

முத‌லாவ‌து ரெஸ் விளையாட்டிலும் சுத‌ப்ப‌ல்

 

பின்ன‌னி வீர‌ர்க‌ள் வ‌ந்து நிதான‌மாய் விளையாடி ர‌ன்ஸ்ச‌ கூட்டினார்க‌ள்......................அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் ஆன‌ ச‌ன்டிமால் ம‌ற்றும் ஜ‌ஞ்ச‌லோ ம‌த்தியூஸ் இவ‌ர்க‌ளின் விளையாட்டு ச‌ரியே இல்லை சுத‌ப்ப‌ல்...........................

சரி… சரி… எத்தனை பேர் திரும்பி ஊருக்கு போறாங்கள் என்று பார்ப்போம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/8/2024 at 17:35, தமிழ் சிறி said:

சரி… சரி… எத்தனை பேர் திரும்பி ஊருக்கு போறாங்கள் என்று பார்ப்போம். 😂

அத்த‌னை பேரும் நாட்டுக்கு கில‌ம்புவின‌ம்.................இப்ப‌ கிரிக்கேட்டில் ப‌ண‌ ம‌ழை கொட்டுது..................ம‌ற்ற‌ நாடுக‌ளில் த‌ஞ்ச‌ம் புகுந்த‌ கால‌ம் இல்லை இப்ப‌ த‌மிழ் சிறி அண்ணா😁..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்துடனான 1ஆவது டெஸ்ட்: இலங்கையின் அறிமுக வீரர் மிலன் 41 வருட சாதனையை முறியடித்தார்

22 AUG, 2024 | 12:30 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க அரைச் சதம் குவித்து அசாத்திய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

அப் போட்டியில் கடுமையாக போராடிய இலங்கை சார்பாக 72 ஓட்டங்களைப் பெற்ற சகலதுறை வீரர் மிலான், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆம் இலக்கத்தில் அறிமுக வீரராக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனையை நிலைநாட்டினார்.

download.png

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத்தில் 1983இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பால்விந்தர் சாந்து 9ஆம் இலக்கத்தில் அறிமுக வீரராக பெற்ற முந்தைய அதிகூடிய 71 ஓட்டங்கள் என்ற  41 வருட   டெஸ்ட்   சாதனையை மிலன் முறியடித்தார்.

download__1_.png

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் இலங்கை 7 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப்  பெற்று மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது.

அப்போது களம் நுழைந்த பின்வரிசை வீரர் மிலன் ரத்நாயக்க, தனது அணித் தலைவருடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்ளையும் விஷ்வா பெர்னாண்டோவுடன் 9ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை மீட்டெடுத்து மொத்த எண்ணிக்கை 236 ஓட்டங்களாக உயர உதவினார்.

தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் விஷ்வா பெர்னாண்டோ 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.

https://www.virakesari.lk/article/191694

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, ஏராளன் said:

இங்கிலாந்துடனான 1ஆவது டெஸ்ட்: இலங்கையின் அறிமுக வீரர் மிலன் 41 வருட சாதனையை முறியடித்தார்

22 AUG, 2024 | 12:30 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க அரைச் சதம் குவித்து அசாத்திய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

அப் போட்டியில் கடுமையாக போராடிய இலங்கை சார்பாக 72 ஓட்டங்களைப் பெற்ற சகலதுறை வீரர் மிலான், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆம் இலக்கத்தில் அறிமுக வீரராக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனையை நிலைநாட்டினார்.

download.png

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத்தில் 1983இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பால்விந்தர் சாந்து 9ஆம் இலக்கத்தில் அறிமுக வீரராக பெற்ற முந்தைய அதிகூடிய 71 ஓட்டங்கள் என்ற  41 வருட   டெஸ்ட்   சாதனையை மிலன் முறியடித்தார்.

download__1_.png

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் இலங்கை 7 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப்  பெற்று மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது.

அப்போது களம் நுழைந்த பின்வரிசை வீரர் மிலன் ரத்நாயக்க, தனது அணித் தலைவருடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்ளையும் விஷ்வா பெர்னாண்டோவுடன் 9ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை மீட்டெடுத்து மொத்த எண்ணிக்கை 236 ஓட்டங்களாக உயர உதவினார்.

தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் விஷ்வா பெர்னாண்டோ 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.

https://www.virakesari.lk/article/191694

ம‌ட்டையால் ந‌ல்லா அடித்தார்

ஆனால் இவ‌ர் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்

 

முத‌ல் இனிங்சில் அதிக‌ ர‌ன்ஸ் விட்டு கொடுத்து விக்கேட் எதுவும் எடுக்க‌ வில்லை

 

இவ‌ர் அடிச்ச‌ 72ர‌ன்ஸ்சால் தான் இல‌ங்கை 236 ர‌ன்ஸ் அடிச்ச‌வை

 

72ர‌ன்ஸ்சுக்கு 5விக்கேட் ஆட்ட‌ம் இழ‌ப்பு இவ‌ர் வ‌ந்த‌தும் ர‌ன்ஸ் வேக‌மாக‌ கூடின‌து........................

 

ப‌ந்து வீச்சிலும் சாதிச்சால் தான் இல‌ங்கை அணியில் இட‌ம் பிடிக்க‌லாம் 

பாப்போம் இவ‌ரை தொட‌ர்ந்து அணியில் வைத்து இருக்கின‌மா என்று🙏.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரூட், புறூக், ஸ்மித் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பு; இலங்கையைவிட 23 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து

Published By: VISHNU

22 AUG, 2024 | 11:28 PM
image
 

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக மென்ச்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவின்போது இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதம் இருக்க 23 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது.

இலங்கை அதன் முதன் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கையைப் போன்றே இங்கிலாந்து துடுப்பாட்டத்திலும் மத்திய வரிசையில் ஹெரி புறூக், ஜெமி ஸ்மித் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து தமது அணியை பலப்படுத்தினர்.

இன்று காலை பெய்த மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் பிற்பகல் 1.15 மணிக்கே ஆரம்பமானது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்தது.

பென் டக்கெட் (18), டான் லோரன்ஸ் (30), ஒல்லி போப் (6) ஆகிய மூவரும் களம் விட்டகல இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 67 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் ஜோ ரூட், ஹெரி புறூக் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஜோ ரூட் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஜெமி ஸ்மித்துடன் 5ஆவது விக்கெட்டில் மேலும் 62 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹெரி புறூக் 56 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அதன் பின்னர் ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர்.

கிறிஸ் வோக்ஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜெமி ஸ்மித் 72 ஓட்டங்களுடன்   ஆட்டம் இழக்காதுள்ளார். 

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 58 ஓட்டங்களுக்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/191741

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஏராளன் said:

இங்கிலாந்துடனான 1ஆவது டெஸ்ட்: இலங்கையின் அறிமுக வீரர் மிலன் 41 வருட சாதனையை முறியடித்தார்

22 AUG, 2024 | 12:30 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க அரைச் சதம் குவித்து அசாத்திய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

அப் போட்டியில் கடுமையாக போராடிய இலங்கை சார்பாக 72 ஓட்டங்களைப் பெற்ற சகலதுறை வீரர் மிலான், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆம் இலக்கத்தில் அறிமுக வீரராக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனையை நிலைநாட்டினார்.

download.png

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத்தில் 1983இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பால்விந்தர் சாந்து 9ஆம் இலக்கத்தில் அறிமுக வீரராக பெற்ற முந்தைய அதிகூடிய 71 ஓட்டங்கள் என்ற  41 வருட   டெஸ்ட்   சாதனையை மிலன் முறியடித்தார்.

download__1_.png

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் இலங்கை 7 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப்  பெற்று மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது.

அப்போது களம் நுழைந்த பின்வரிசை வீரர் மிலன் ரத்நாயக்க, தனது அணித் தலைவருடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்ளையும் விஷ்வா பெர்னாண்டோவுடன் 9ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை மீட்டெடுத்து மொத்த எண்ணிக்கை 236 ஓட்டங்களாக உயர உதவினார்.

தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் விஷ்வா பெர்னாண்டோ 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.

https://www.virakesari.lk/article/191694

முத‌லாவ‌து விக்கேட்டை எடுத்து உள்ளார்.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொட‌ர்ந்து இல‌ங்கை வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்கின‌ம் இல்லை

 

இர‌ண்டாவ‌து இனிங்சில் 1ர‌ன்ஸ் 2விக்கேட்...................இங்லாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து சிர‌ம‌ம் ம‌ழை இடைக்கிட‌ வ‌ந்து விளையாட்டு த‌டை ப‌டுது

 

ச‌ம‌ நிலையில் முடிய‌ வேண்டிய‌ மைச் இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் இங்லாந் வெல்ல‌ போகுது...........................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்துடனான டெஸ்டில் இக்கட்டான நிலையில் இலங்கை; 4 விக்கெட்கள் மீதமிருக்க 82 ஓட்டங்களால் மாத்திரம் முன்னிலை

Published By: VISHNU   24 AUG, 2024 | 12:04 AM

image

(நெவில் அன்தனி)

மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இக்கட்டான நிலையை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 132 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இலங்கை மூன்றாம் நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது  இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

மேலும் 4 விக்கெட்கள் மீதம் இருக்கும் நிலையில் 82 ஓட்டங்களால்  மாத்திரம்  இலங்கை முன்னிலையில் இருக்கிறது. போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் அதிசயம் நிகழ்ந்தாலன்றி இலங்கையினால் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போகும்.

இரண்டாவது இன்னிங்ஸில் நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். (1 - 2 விக்.)

முன்னாள் அணித் தலைவர்களான திமுத் கருணாரட்னவும் ஏஞ்சலோ மெத்யூஸும் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர்.

திமுத் கருணாரட்ன 29 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களாக இருந்தபோது தினேஷ் சந்திமால் காயத்திற்குள்ளாகி தற்காலிக ஓய்வுபெற்றார். மார்க் வூட் வீசிய மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகப் பந்து. தினேஷ் சந்திமாலின் வலது பெரு விரலைத் தாக்கியதால் அவர் 12 ஓட்டங்களுடன் ஓய்வுபெற நேரிட்டது.

தொடர்ந்து தனஞ்சய டி சில்வா 11 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (95 - 4 விக்.)

இந் நிலையில் ஏஞ்சலோ மெத்யூஸும் கமிந்து மெண்டிஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

அதுவரை மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மெத்யூஸ் 145 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து மிலன் ரத்நாயக்கவும் பின்னர் கமிந்த மெண்டிஸும் எல் பி டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்ததாக கள மத்தியஸ்தர் கிறிஸ் கவனி தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், மிலன் ரத்நாயக்கவும் கமிந்து மெண்டிஸும் மீளாய்வுக்கு உட்படுத்தியபோது கிறிஸ் கவனியில் இரண்டு தீர்ப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்து துடுப்பை உராய்து சென்றமை சலன அசைவுகளில் தெளிவாகத் தெரிந்தது.

மறுபக்கத்தில் சிறு ஆக்ரோஷத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கமிந்து மெண்டிஸ் தனது 3ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

முதல் இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த மிலன் ரத்நாயக்க, இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான அடி தெரிவினால் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (190 - 6 விக்.)

மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களாக இருந்தபோது 18ஆவது ஓவரில் உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்றுவந்த தினேஷ் சந்திமால் 56ஆவது ஓவரில் 6ஆவது விக்கெட் வீழ்ந்ததும்  மீண்டும் துடுப்பெடுத்தாட களம் நுழைந்தார்.

போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது கமிந்து மெண்டிஸ் 56 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 109 பந்துகளை எதிர்கொண்ட கமிந்து மெண்டிஸின் ஆட்டம் இழக்காத இன்னிங்ஸில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கியிருந்தன.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து, சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது.

தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜெமி ஸ்மித் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது கன்னிச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

148 பந்துகளை எதிர்கொண்ட ஜெமி ஸ்மித் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 111 ஓட்டங்களைப் பெற்றார்.

அத்துடன் 7ஆவது விக்கெட்டில் கஸ் அட்கின்சனுடன் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மத்திய பின்வரிசையில் கஸ் அட்கின்சன் 20 ஓட்டங்களையும் மெத்யூ பொட்ஸ் 17 ஓட்டங்களையும் மார்க் வூட் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 103 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 85 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் வீழ்த்தினர்.

அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டாக கஸ் அட்கின்சனை ஆட்டம் இழக்கச் செய்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

https://www.virakesari.lk/article/191836

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல‌ங்கை அணி பின்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌ தெரியாது.................மெடின்ஸ் அவுட் ஆன‌ கையோட‌ 4ஓவ‌ருக்கை மூன்று விக்கேட்ட‌ ப‌றி கொடுத்த‌வை..................400 ர‌ன்ஸ் அடிக்கும் நிலையில் இருந்த‌ இல‌ங்கை அணி மெடின்ஸ் அவுட் ஆன‌ கையோட‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளும் வ‌ந்த‌ கையோட‌ மைதான‌த்தை விட்டு கில‌ம்பின‌வை ஹா ஹா......................2006க‌ளில் இருந்த‌ இல‌ங்கை அணி ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் நிதான‌மாய் நின்று அடிக்க‌ தெரியும் 

 

இப்ப‌ இருக்கும் வீர‌ர்க‌ளுக்கு ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் போல் விளையாட‌ தெரியாது

 

5நாள் விளையாட்டில் பின்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு குறைந்த‌து இர‌ண்டு பேருக்கு த‌ன்னும் ம‌ட்டையால் அடிக்க‌ தெரிந்து இருக்க‌னும் ஆனால் இவ‌ர்க‌ளால் அடிக்க‌ முடியாது..................................

  • nunavilan changed the title to இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமிந்து, சந்திமால் துடுப்பாட்டத்தில் அபாரம்; ஆனால் இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது

25 AUG, 2024 | 04:38 AM
image

(நெவில் அன்தனி)

மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (24)  நிறைவடைந்த இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இலங்கையின் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் இந்த டெஸ்ட் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் அசத்திய போதிலும் 205 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இரண்டாவது இன்னிங்ஸை  இங்கிலாந்து  சிறப்பாக ஆரம்பித்த   போதிலும்   சீரான இடைவெளியில் 4 விக்கெட்களை இழந்தது.

பென் டக்கட் (11), அணித் தலைவர் ஒல்லி போப் (6). டான் லோரன்ஸ் (34), ஹெரி  புறூக்   (32) ஆகிய நால்வரே சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

எனினும், முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட், முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த ஜெமி ஸ்மித் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு வெற்றியை அண்மிக்க உதவினர்.

ஜெமி ஸ்மித் 39 ஓட்டங்களைப் பெற்று ஐந்தாவதாக ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் திறமையாகவும் பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 128 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல்    62 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தார். கிறிஸ் வோக்ஸ் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 98 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நான்காம் நாளான  சனிக்கிழமை   காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றது.

கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றுக்கொடுத்தனர்.

ஆனால், இறுதியில் அது இங்கிலாந்தின் வெற்றியைத் தடுப்பதற்கு போதுமானதாக அமையவில்லை.

தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கமிந்து மெண்டிஸ் 3ஆவது சதத்தைக் குவித்து அசத்தினார். 183 பந்துகளை எதிர்கொண்ட அவர் 15 பவுண்டறிகள் ஒரு சிக்ஸுடன் 113 ஓட்டங்களைக் குவித்தார்.

அதேவேளை, 3ஆம் நாள் ஆட்டத்தின்போது உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்ற தினேஷ் சந்திமால், அன்றைய தினம் 6ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மிகவும் இக்கட்டான நிலையில் மீண்டும் களம் புகுந்து கடுமையாக போராடி சனிக்கிழமை கடைசியாக ஆட்டம் இழந்தார்.

கடைசிக் கட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வேகமாக ஓட்டங்களை எடுக்க முயற்சித்ததால் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார்.

119 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் சந்திமால் 7 பவுண்டறிகளுடன் 79 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது 27ஆவது டெஸ்ட் அரைச் சதமாகும்.

போட்டியின் 3ஆம் நாளன்று ஏஞ்சலோ மெத்யூஸ் 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் மெத்யூ பொட்ஸ் 47 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும்  கிறிஸ் வோக்ஸ் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

புதன்கிழமை (21) ஆரம்பமாகி நான்கு நாட்களில் நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை 236 ஓட்டங்களையும் இங்கிலாந்து 326 ஓட்டங்களையும் பெற்றன.

ஆட்டநாயகன்: ஜெமி ஸ்மித்

https://www.virakesari.lk/article/191897

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று அதிக‌ ம‌ழை பெய்ய‌ வாய்ப்பு அதிக‌ம்

நேற்று இல‌ங்கை வீர‌ர்க‌ள் கூட‌ நேர‌ம் நின்று விளையாடி இருந்தால் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்து இருக்கும்😉...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/8/2024 at 06:42, வீரப் பையன்26 said:

இல‌ங்கை அணி பின்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌ தெரியாது.................மெடின்ஸ் அவுட் ஆன‌ கையோட‌ 4ஓவ‌ருக்கை மூன்று விக்கேட்ட‌ ப‌றி கொடுத்த‌வை..................400 ர‌ன்ஸ் அடிக்கும் நிலையில் இருந்த‌ இல‌ங்கை அணி மெடின்ஸ் அவுட் ஆன‌ கையோட‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளும் வ‌ந்த‌ கையோட‌ மைதான‌த்தை விட்டு கில‌ம்பின‌வை ஹா ஹா......................2006க‌ளில் இருந்த‌ இல‌ங்கை அணி ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் நிதான‌மாய் நின்று அடிக்க‌ தெரியும் 

 

இப்ப‌ இருக்கும் வீர‌ர்க‌ளுக்கு ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் போல் விளையாட‌ தெரியாது

 

5நாள் விளையாட்டில் பின்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு குறைந்த‌து இர‌ண்டு பேருக்கு த‌ன்னும் ம‌ட்டையால் அடிக்க‌ தெரிந்து இருக்க‌னும் ஆனால் இவ‌ர்க‌ளால் அடிக்க‌ முடியாது..................................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் முதல் வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

29 AUG, 2024 | 11:58 AM
image

(நெவில் அன்தனி)

ங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (29) ஆரம்பமாகவுள்ளது.

மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் இங்கிலாந்திடம் 5 விக்கெட்களால் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்யும் குறிக்கோளுடனும் லோர்ட்ஸ் அரங்கில் முதலாவது வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடனும் இலங்கை அணி களம் இறங்கவுள்ளது.

இப்போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் குசல் மெண்டிஸ}க்குப் பதிலாக மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் பெத்தும் நிஸ்ஸன்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2021இல் நடைபெற்ற  போட்டியின்மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான பெத்தும் நிஸ்ஸன்க கடைசியாக 2022இல் விளையாடியிருந்தார். அதன் பின்னர் உபாதை காரணமாக டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் உட்பட 5 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டியில் காயத்திற்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்று மீண்டும் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரராக மட்டும் விளையாடவுள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் காப்பாளராக நிஷான் மதுஷ்க செயற்படவுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்திக்கொண்டே இந்த டெஸ்ட் போட்டியை இலங்கை எதர்கொள்ளவுள்ளது.

இது இவ்வாறிருக்க, பந்துவீச்சிலும் இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோவுக்குப் பதிலாக லஹிரு குமார அணியில் பெயிரிடப்பட்டுள்ளார்.

தற்போதைய இலங்கை அணியில் இடம்பெறும் ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய நால்வரே இதற்கு முன்னர் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் விளையாடியுள்ளனர். மற்றைய அனைவரும் இந்த மைதானத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளதுடன் லோர்ட்ஸ் அரங்கில் விளையாடும் அவர்களது கனவு நனவாகவுள்ளது.

அவர்களில் குசல் மெண்டிஸுக்கு இரண்டாவது தடவையாக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளது.

இந்த விளையாட்டரங்கில் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட 8 சந்தர்ப்பங்களில் இங்கிலாந்து 2 தடவைகள் வெற்றிபெற்றுள்ளது. மற்றைய ஆறு போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இந்த மைதானத்தில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தாராளமாக ஓட்டங்கள் குவித்துவந்துள்ளதை கடந்த கால போட்டிகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

எனவே இன்று ஆரம்பமாகவுள்ள போட்டியிலும் இலங்கை வீரர்கள் கணிசமான ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்துக்கு சவால் விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்கத் தவறியதாலும் பந்துவீச்சில் சரியான வியூகங்களை கடைப்பிடிக்காததாலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

ஜோ ரூட் எந்தளவு பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தாரோ அதேபோன்று பொறுமையை இலங்கை வீரர்கள் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக வெகுவாக முன்னேறிவரும் கமிந்து மெண்டிஸ் இந்தப் போட்டியிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அசத்துவார் என நம்பப்படுகிறது.

தனது முதல் 4 டெஸ்ட்களில் 3 சதங்களைக் குவித்துள்ள கமிந்து மெண்டிஸ், லோர்ட்ஸ் அரங்கில் சதம் குவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் இந்தப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளார்.

அனுபவசாலிகளான ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஆகியோரும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, நிஷான் மதுஷ்க ஆகியோரும் நெடு நேரம் துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியைப் பலப்படுத்துவார்கள் என கருதப்படுகிறது.

இதேவேளை வேகப்பந்துவீச்சாளர்களும் சுழல்பந்துவீச்சாளர்களும் மாறுபட்ட வியூகங்களைப் பிரயோகித்து எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். அல்லது லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து ஓட்ட மழை குவிப்பதை தடுக்க முடியாமல் போகும்.

மறுபக்கத்தில் முதலாவது டெஸ்டில் கடுமையாக போராடி வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்

இலங்கை: திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, பெத்தும் நிஸ்ஸன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ.

இங்கிலாந்து: பென் டக்கட், டான் லோரன்ஸ், ஒல்லி போப் (தலைவர்), ஜோ ரூட், ஹெரி புறூக், ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மெத்யூ பொட்ஸ், ஒல்லி ஸ்டோன், ஷொயெப் பஷிர்.

https://www.virakesari.lk/article/192282

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்துக்கான டெஸ்ட் சதங்கள் சாதனையை சமப்படுத்தினார் ஜோ ரூட்; கஸ் அட்கின்சனும் துடுப்பாட்டத்தில் அபாரம்

Published By: VISHNU     30 AUG, 2024 | 12:23 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் தலைவர் ஜோ ரூட் 33ஆவது சதத்தைக் குவித்து இங்கிலாந்துக்கான டெஸ்ட் சதங்கள் சாதனையை சமப்படுத்தியதுடன் அணியை பலமான நிலையில் இட்டார்.

2908_joe_root_eng_vs_sl...png

மத்திய வரிசையில் 8ஆம் இலக்க வீரர் கஸ் அட்கின்சனும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது ஐந்தாவது டெஸ்டில் கன்னி அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

2908_gus_atkinson_eng_vs_sl...png

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இப் போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்த இலங்கை, ஆரம்பத்தில் 2 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பான நிலையில் இருந்தது.

ஆனால், ஜோ ரூட் களம் புகுந்ததும் நிலைமை இங்கிலாந்துக்கு சாதகமாகத் திரும்பியது.

42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற இக்கட்டான நிலையில் களம் புகுந்த ஜோ ரூட், மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி மூன்று இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணியைப் பலப்படுத்தினார்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் தனது 145ஆவது டெஸ்ட் போட்டியில் 33ஆவது சதத்தைப் பெற்று, இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்த அலஸ்டெயார் குக்கின் சாதனையை சமப்படுத்தினார்.

சமகால டெஸ்ட் அரங்கில் அதிசிறந்த துடுப்பாட்ட வீரராக விளங்கும் ஜோ ரூட், அதிக சதங்கள் குவித்தவர்கள் வரிசையில் 10ஆவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அத்துடன் டெஸ்ட் போட்களில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் 12274 ஓட்டங்களுடன் 7ஆம் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து வீரர்களில் அலஸ்டெயார் குக்கைவிட 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இன்றைய போட்டியில் பென் டக்கெட்டுடன் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக்குடன் 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித்துடன் 6ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களையும் கஸ் அட்கின்ஸுடன் 7ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் ஜோ ரூட் பகிர்ந்தார்.  

ஜோ ரூட் 206 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 143 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டநேர முடிவில் கஸ் அட்கின்சன் 74 ஓட்டங்களுடனும் மெத்யூ பொட்ஸ் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அவர்களை விட பென் டக்கட் 40 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக் 33 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லஹிரு குமார 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 84 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/192348

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமிந்து மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிப்பு; ஆனால், பலமான நிலையில் இங்கிலாந்து

Published By: VISHNU   31 AUG, 2024 | 12:41 AM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் மிக மோசமான நிலையிலிருந்த இலங்கை, கமிந்த மெண்டிஸின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் மீண்டெழுந்தது.

இங்கிலாந்து முதலாவது இன்னிங்ஸில் குவித்த 427 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 231 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தபோதிலும் இலங்கைக்கு பலோ ஒன் கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்த 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க 256 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் சதங்கள் குவித்த ஜோ ரூட், கஸ் அட்கின்சன், 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த அசித்த பெர்னாண்டோ ஆகியோரின் பெயர்கள், வரலாற்று முக்கியம்வாய்ந்த லோர்ட்ஸ் கௌரவிப்பு (Lords Honounrs Board) பலகையில் பொறிக்கப்பட்டது.

இலங்கையின் முன்வரிசை வீரர்கள் கவனக்குறைவான அடி தெரிவுகளால் விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

ஆரம்ப வீரர்களான நிஷான் மதுஷ்க (7), திமுத் கருணாரட்ன (7), பெத்தும் நிஸ்ஸன்க (12) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (35 - 3 விக்.)

அனுபசாலிகளும் முன்னாள் தலைவர்களுமான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் அணியை மீட்டெக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தனர்.

அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் நுழைந்த அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுக்கு லோர்ட்ஸ் அரங்கு அதிர்ஷ்டம் கொடுக்கவில்லை. அவர் ஓட்டம் பெறாமலேயே ஆட்டம் இழந்தார். (83 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 87 ஓட்டங்களாக இருந்தபோது தினேஷ் சந்திமால் (23) களம் விட்டகன்றார்.

தொடர்ந்து பின்வரசை வீரர்களான மிலன் ரத்நாயக்க (19), ப்ரபாத் ஜயசூரிய (8), லஹிரு குமார (0) ஆகியோருடன் இணைந்து 7ஆம், 8ஆம், 9ஆம் விக்கெட்களில் முறையே 31 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களையும் 42 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.

கடைசியாக ஆட்டம் இழந்த கமிந்து மெண்டிஸ் 120 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைப் பெற்றார். தனது 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் பெற்ற 3ஆவது அரைச் சதம் இதுவாகும்..

இதுவரை அவர் 8 இன்னிங்ஸ்களில் 6 சந்தர்ப்பங்களில் 50 மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவற்றில் 3 சதங்கள் அடங்குகின்றன.

பந்துவீச்சில் மெத்யூ பொட்ஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஓல்லி ஸ்டோன் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 427 ஓட்டங்களைப் பெற்றது.

தனது இன்னிங்ஸை 81 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த கஸ் அட்கின்சன் தனது 5ஆவது டெஸ்டில் கன்னிச் சதத்தை லோர்ட்ஸ் அரங்கில் பூர்த்தி செய்து பெருமை பெற்றார்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கஸ் அட்கின்சன் 118 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர் 8ஆவது விக்கெட்டில் மெத்யூஸ் பொட்டுடன் பெறுமதிமிக்க 85 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மெத்யூ பொட்ஸ் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் முதல் நாளன்று ஜோ ரூட் 143 ஓட்டங்களையும் பென் டக்கட் 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 101 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/192437

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்து சாதனை படைத்தார் ஜோ ரூட்; இலங்கைக்கு வெற்றி இலக்கு 482

31 AUG, 2024 | 08:08 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்து அசத்திய ஜோ ரூட், இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.

போட்டியின் முதலாம் நாளான வியாழக்கிழமை 33ஆவது சதத்தைக் குவித்து இங்கிலாந்துக்காக அதிக சதங்கள் குவித்த அலஸ்டயார் குக்கின் சாதனையை சமப்படுத்திய ஜோ ரூட் இன்று 34ஆவது சதத்தைக் குவித்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜோ ரூட் குவித்த 7ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும். அத்துடன் ஒரே டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் முதல் தடவையாக சதங்கள் குவித்து வரலாறு ஏடுகளில் இணைந்துகொண்டார்.

அது மட்டுமல்லாமல் 111 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதிவேக சதத்தைப் பெற்றார்.

ஜோ ரூட்  103 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து மிகவும் கடினமான 482 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடுகிறது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 427 (ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118, பென் டக்கட் 40, அசித்த பெர்னாண்டோ 102 - 5 விக்.,)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (கமிந்து மெண்டிஸ் 74, தினேஷ் சந்திமால் 23, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெத்யூ பொட்ஸ் 19 - 2 விக்., கிறிஸ் வோக்ஸ் 21 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 251 (ஜோ ரூட் 103, ஹெரி புறூக் 37, ஜெமி ஸ்மித் 26, பென் டக்கட் 24, அசித்த பெர்னாண்டோ 52 - 3 விக்., லஹிரு குமார 53 - 3 விக்., மிலன் ரத்நாயக்க 38 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/192507

  • கருத்துக்கள உறவுகள்
Posted

483 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி கடைசி இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கைக்கு பெரும் நெருக்கடி

31 AUG, 2024 | 11:34 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் மிகவும் கடினமான 483 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கடைசி இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை, 3ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது 2 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் மேலும் 22 ஓவர்கள் வீசப்பட வேண்டியிருந்த நிலையிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வெளிச்சம் பிரகாசமடையாததால் மாலை 6.00 மணிக்கு 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

திமுத் கருணாரட்ன 23 ஓட்டங்களுடனும் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடனும்  ஆட்டம்  இழக்காமல் இருந்தனர்.

நிஷான் மதுஷன்க (13), பெத்தும் நிஸ்ஸன்க (14) ஆகிய இருவரே ஆட்டம் இழந்தவர்களாவர்.

போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதால் அதிசயம் நிகழ்ந்தாலன்றி இலங்கை தோல்வி அடைவது உறுதியாவதுடன் தொடர் இங்கிலாந்து வசமாகிவிடும்.

முன்னதாக போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதலாவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த மொத்த எண்ணிக்கையில் சாதனையாளர் ஜோ ரூட்டின் பங்களிப்பு 103 ஓட்டங்களாகும்.

இந்த டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்து அசத்திய ஜோ ரூட், இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.

போட்டியின் முதலாம் நாளான வியாழக்கிழமை 33ஆவது சதத்தைக் குவித்து இங்கிலாந்து சார்பாக அதிக சதங்கள் குவித்த அலஸ்டயார் குக்கின் சாதனையை சமப்படுத்திய ஜோ ரூட் இன்று 34ஆவது சதத்தைக் குவித்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜோ ரூட் குவித்த 7ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும். அத்துடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் 2 இன்னிங்ஸ்களிலும் முதல் தடவையாக சதங்கள் குவித்ததன் மூலம் வரலாற்று ஏடுகளில் ஜோ ரூட் இணைந்துகொண்டார்.

அது மட்டுமல்லாமல் 111 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதிவேக சதத்தைப் பெற்றார்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 103 ஓட்டங்களைப் பெற்றார்.

அவருக்கு அடுத்ததாக ஹெரி புறூக் பெற்ற 37 ஓட்டங்களே இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

 

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 427 (ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118, பென் டக்கட் 40, அசித்த பெர்னாண்டோ 102 - 5 விக்.,)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (கமிந்து மெண்டிஸ் 74, தினேஷ் சந்திமால் 23, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெத்யூ பொட்ஸ் 19 - 2 விக்., கிறிஸ் வோக்ஸ் 21 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 251 (ஜோ ரூட் 103, ஹெரி புறூக் 37, ஜெமி ஸ்மித் 26, பென் டக்கட் 24, அசித்த பெர்னாண்டோ 52 - 3 விக்., லஹிரு குமார 53 - 3 விக்., மிலன் ரத்நாயக்க 38 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முடிவுக்கு வந்தபோது 53 - 2 விக். (திமுத் கருணாரட்ன 23 ஆ.இ., பெத்தும் நிஸ்ஸன்க 14, நிஷான் மதுஷ்க 13, ஒல்லி ஸ்டோன் 1 - 1 விக்., கஸ் அட்கின்சன் 15 - 1 விக்.)

https://www.virakesari.lk/article/192509

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையை 2ஆவது டெஸ்டில் 190 ஓட்டங்களால் வெற்றி கொண்ட இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றியது

Published By: VISHNU   01 SEP, 2024 | 10:36 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) நிறைவு பெற்ற 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் 190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது.

0109_dananjaya_de_silva.png

ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் குவித்த சதங்கள், கஸ் அட்கின்சனின் அற்புதமான சகலதுறை ஆட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

0109_dimuth_karunaratne_sl_vs_eng_day_4.

மிகவும் கடினமான 483 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதலாவது டெஸ்டில் போன்றே இந்த டெஸ்டிலும் நான்கு நாட்களுக்குள் இலங்கை தோல்வி அடைந்தது.

போட்டியின் 4ஆம் நாள் காலை வெற்றிக்கு மேலும் 430 ஓட்டங்கள் தெவைப்பட்ட நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களிலிருந்து இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 41 பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி திமுத் கருணாரட்னவுடன் 4ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மொத்த எண்ணிக்கை 115 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன கவனக் குறைவான அடி தெரிவினால் ஆட்டம் இழந்தார்.

அவர் 129 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து மத்திய வரிசையில் ஏஞ்சலோ மெத்யூஸ் (36), தினேஷ் சந்திமால் (58), தனஞ்சய டி சில்வா (50), மிலன் ரத்நாயக்க (43) ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடியபோதிலும் அவர்களால் இலங்கையின் தோல்வியைத் தடுக்க முடியாமல் போனது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 427 (ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118, பென் டக்கட் 40, அசித்த பெர்னாண்டோ 102 - 5 விக்.,)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (கமிந்து மெண்டிஸ் 74, தினேஷ் சந்திமால் 23, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெத்யூ பொட்ஸ் 19 - 2 விக்., கிறிஸ் வோக்ஸ் 21 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 251 (ஜோ ரூட் 103, ஹெரி புறூக் 37, ஜெமி ஸ்மித் 26, பென் டக்கட் 24, அசித்த பெர்னாண்டோ 52 - 3 விக்., லஹிரு குமார 53 - 3 விக்., மிலன் ரத்நாயக்க 38 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 292 (தினேஷ் சந்திமால் 58, திமுத் கருணாரட்ன 55, தனஞ்சய டி சில்வா 50, மிலன் ரத்நாயக்க 43, ஏஞ்சலோ மெத்யூஸ் 36, கஸ் அட்கின்சன் 62 - 5 விக்., கிறிஸ் வோக்ஸ் 46 - 2 விக்., ஒல்லி ஸ்டோன் 56 - 2 விக்.)

ஆட்டநாயகன்: கஸ் அட்கின்சன்

https://www.virakesari.lk/article/192595

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கவுள்ள இலங்கை அணி

06 SEP, 2024 | 06:22 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ள மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது.

அத்துடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க, சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய ஆகிய இருவரும் நீக்கப்பட்டு மீண்டும் குசல் மெண்டிஸ், விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திமுத் கரணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ் ஆகிய 7 துடுப்பாட்ட வீரர்களும் மிலன் ரத்நாயக்க, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்களும் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

அணியில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாத குறையை தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் நிரப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை பறிகொடுத்த இலங்கை, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை ஈட்டவும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் புள்ளிகளைப் பெறவும் முயற்சிக்கும் என அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, போட்டிக்கு முன்னர் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

'முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விகளுக்கு துடுப்பாட்ட வீரர்கள் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடத் தவறியமையும் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறியமையுமே காரணம். நான் உட்பட துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் முழுத் திறமையுடன் துடுப்பெடுத்தாட வேண்டும்' என தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/192960

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒல்லி போப் ஆபார சதம், டக்கட் அரைச் சதம்; பலமான நிலையில் இங்கிலாந்து

Published By: VISHNU   06 SEP, 2024 | 11:50 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில அணித் தலைவர் ஒல்லி போப், பென் டக்கட் ஆகிய இருவரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் இங்கிலாந்து பலமான நிலையில் இருக்கிறது.

மேலும் ஏற்கனவே இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2 - 0 என தனதாக்கிக்கொண்டுள்ள இங்கிலாந்து தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் முன்னேற முயற்சிக்கவுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து போதிய வெளிச்சமின்மை காரணமாக மாலை 5.45 மணியளில் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர்முடிவுக்கு வந்தபோது அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவரும் ஒல்லி போப் 103 பந்துகளில் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 103 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

தனது 49ஆவது டெஸட் போட்டியில் விளையாடும் ஒல்லி போப் தனது 7ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

முன்னதாக ஆரம்ப வீரர் டான் லோரன்ஸ் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இங்கிலாந்து சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (45 - 1 விக்.)

ஆனால், மற்றைய ஆரம்ப வீரர் பென் டக்கட்டும் ஒல்லி போப்பும் 2ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

பென் டக்கெட் 79 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 86  ஓட்டங்களைப்  பெற்று ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஒல்லி போப்புடன் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜோ ரூட் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

முதல் நாள் ஆட்டம் தடைப்பட்டபோது ஒல்லி போப்புடன் ஹெரி புறூக் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் லஹிரு குமார 81 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/193037

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோசமான நிலையிலிருந்த இலங்கையை அரைச் சதங்களுடன் தனஞ்சய, கமிந்து மீட்டனர்

07 SEP, 2024 | 11:02 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவதும் கடைசியுமான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் மிகவும் மோசமான நிலையில் இருந்த இலங்கையை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் மீட்டெடுத்தனர்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்தின் முதலாவது இன்னிங்ஸில் கடைசி 7 விக்கெட்களை 64 ஓட்டங்களுக்கு வீழ்த்திய இலங்கை, ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க திறமையாக துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

ஏனைய முன்வரிசை வீரர்களான திமுத் கருணாரட்ன (9), குசல் மெண்டிஸ் (14), ஏஞ்சலோ மெத்யூஸ் (3), தினேஷ் சந்திமால் (0) ஆகியோர் பிராகாசிக்கத் தவறினர்.

இதன் காரணமாக இலங்கை அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

ஆனால், அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.

தனஞ்சய டி சில்வா 10 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 6 பவுண்டறிகள் உட்பட 54 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஒல்லி ஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையம் அறிமுக வீரர் ஜொஷ் ஹல் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கிறஸ் வோக்ஸ் 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக  3 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை   தொடர்ந்த இங்கிலாந்து  சகல விக்கெட்களையும்   இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருந்த இங்கிலாந்து, கடைசி 7 விக்கெட்களை  64  மேலதிக   ஓட்டங்களுக்கு   இழந்தது.

முதலாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் 3 விக்கெட்களை மாத்திரம் வீழ்த்திய தமது வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு ஓய்வெடுத்து 2ஆம் நாள் இதனைவிட சிறப்பாக பந்துவீசி போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்துவார்கள் என முதலாம் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர் இலங்கையின் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநர் ஆக்கிப் ஜாவேட் கூறியிருந்தார்.

அதனை நீரூபிக்கும் வகையில் இலங்கை பயன்படுத்திய நான்கு பந்துவீச்சாளர்களும் 8 விக்கெட்களைப் பகிர்ந்துகொண்டதுடன் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

தனது இன்னிங்ஸை 103 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அணித் தலைவர் ஒல்லி போப் 154 ஒட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். 151 பந்துகளை எதிர்கொண்ட அவர், 19 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார்.

அவரையும் ஆரம்ப வீரர் பென் டக்கெட்டையும் தவிர வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் தவறான, மோசமான அடி தெரிவுகளால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்களை இழந்தனர்.

இங்கிலாந்தின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

பந்துவீச்சில் மிலன் ரத்நாயக்க 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  லஹிரு குமார 97 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 88 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/193098

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவை

Published By: VISHNU   08 SEP, 2024 | 11:56 PM

image

(நெவில் அன்தனி)

லண்டன் கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றிபெறும் முனைப்புடன் 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, 3ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் நிறுத்தப்பட்டபோது ஒரு விக்கெட்டை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

0809_jamie_smith_one_man_show.png

இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதம் இருக்க அதன் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் இலங்கை அணி அவசரப்படாமல் ஆறஅமர துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.

0809_dinesh_chandimal_injured.png

திமுத் கருணாரட்ன (8) துரதிர்ஷ்டவமாக கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் பட் - பேட் (bat - pad) மூலம் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

0809_lahiru_kumara_superb_bowling_4_wkts

முதல் இன்னிங்ஸில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைச் சதம் குவித்து 53 ஓட்டங்களுடன் ஆட்டம்  இழக்காதுள்ளார். 44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டறிகளை அடித்துள்ளார். மறுபக்கத்தில் குசல் மெண்டிஸ் 6 பவுண்டறிகள் உட்பட 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

0809_dinesh_chandimal_hurt_his_left_back

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இன்று காலை விக்கெட் காப்பில் ஈடுபட்டிருந்த தினேஷ் சந்திமால், 18ஆவது ஓவரில் லஹிரு குமார வீசிய பந்து இடப்புறமாக எகிறிச்சென்றபோது உயரே தாவி தார். ஆனால் பந்தைப் பிடித்த பின்னர்  நிலத்தில் வீழ்ந்து அடிபட்டதால் தினேஷ் சந்திமால் கடும் வலியால் அவதியுற்றார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு பதில் வீரர்கள் அவரை தாங்கலாக மைதானத்தை விட்டு அழைத்துச் சென்றனர். வீரர்கள் தங்குமறைக்கு அவர் ஒவ்வொரு படியாக தட்டுத்தடுமாறி ஏறிச்சென்றார். 18ஆவது ஓவரிலிருந்து அவருக்குப் பதிலாக நிஷான் மதுஷ்க விக்கெட் காப்பாளராக செயற்பட்டார்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை எஞ்சிய 5 விக்கெட்களை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 265 ஓட்டங்களாக இருந்தது.

தனஞ்சய டி சில்வா 64 ஓட்டங்களிலிருந்தும் கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களிலிருந்தும் தங்களது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தனர்.

அவர்கள் இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை பலமான நிலையில் இடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கையின் கடைசி 5 விக்கெட்கள் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

மொத்த எண்ணிக்கை 220 ஓட்டங்களாக இருந்தபோது தனஞ்சய டி சில்வா 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் 64 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

பின்வரிசையில் அசித்த பெரனாண்டோ (11) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்;

பந்துவீச்சில் ஒல்லி ஸ்டோன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹல் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்திற்கு மத்தியில் சகல விக்கெட்களையும் இழந்து 156  ஓட்டங்களைப்  பெற்றது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் சரிவு கண்டது இதுவே முதல் தடவையாகும்.

டான் லொரன்ஸ் 35 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 67 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

அப்போது ஜெமி ஸ்மித் 31 பந்துகளில் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அடுத்த 6 பந்துகளில் 20 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் 43 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

இறுதியில் 50 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 67 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் கடைசி 19 பந்துகளில் 52 ஓட்டங்களைக் குவித்தமை இங்கிலாந்துக்கு சற்று தெம்பைக் கொடுப்பதாக அமைந்தது.

லோரன்ஸ், ஸ்மித் ஆகியோரைவிட ஜோ ரூட் (12), ஒல்லி ஸ்டோன் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் லஹிரு குமார 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களையும் இலங்கை 263 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

https://www.virakesari.lk/article/193183

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லஹிரு குமார, பெத்தும் நிஸ்ஸன்க அபாரம்; இலங்கைக்கு வரலாற்றுடன்கூடிய ஆறுதல் வெற்றி

Published By: VISHNU   09 SEP, 2024 | 06:03 PM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த இலங்கை 8 விக்கெட்களால் ஆறுதல் வெற்றியீட்டியது.

எவ்வாறாயினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில்  வெற்றிகளை ஈட்டிய இங்கிலாந்து 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை தனதாக்கிக்கொண்டது.

வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுக்கள், பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அரைச் சதம் மற்றும் சதம், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முதல் இனனிங்ஸில்  குவித்து அரைச் சதங்கள் என்பன இலங்கையின் ஆறுதல் வெற்றிக்கு வழிவகுத்தன.

இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டி ஒன்றில் 1998இல் வெற்றிகொண்ட இலங்கை, அதே மைதானத்தில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றியீட்டி வரலாறு படைத்துள்ளது.

இதன் மூலம் கியா ஓவல் விளையாட்டரங்கில் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்த்தாடிய 2 சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிபெறுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 10 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் வெற்றிபெற்றுள்ளதுடன் இங்கிலாந்து மண்ணில் இலங்கை ஈட்டிய 4ஆவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிராக 2014க்குப் பின்னர், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் விளையாடப்பட்ட 10 டெஸ்ட் போட்டிகளில் 9இல் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. இந்த 10 வருடங்களில் 11ஆவது போட்டியிலேயே இலங்கை முதலாவது வெற்றியை ஈட்டியது.

219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதத்தின் உதவியுடன் 2 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பெத்தும் நிஸ்ஸன்க 2ஆவது விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 69 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் 111 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

124 பந்துகளை எதிர்கொண்ட பெத்தும் நிஸ்ஸன்க 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 127 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பெத்தும் நிஸ்ஸன்க பெற்ற 2ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 32 ஓட்டங்களுடன்  ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 7 பவுண்டறிகளுடன் 37 ஓட்டங்களைப் பெற்றார்.

இப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நான்காம் நாளான இன்று திங்கட்கிழமை (09) பகல் போசன இடைவேளைக்கு முன்னர் நிறைவுக்கு வந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 325 (ஒல்லி போப் 154, பென் டக்கெட் 86, மிலன் ரத்நாயக்க 56 - 3 விக்., தனஞ்சய டி சில்வா 18 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 46 - 2 விக்., லஹிரு குமார 97 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 263 (தனஞ்சய டி சில்வா 69, பெத்தும் நிஸ்ஸன்க 64, கமிந்து மெண்டிஸ் 64, ஒல்லி ஸ்டோன் 35 - 3 விக்., ஜொஷ் ஹல் 53 - 3 விக்., கிறிஸ் வோக்ஸ் 42 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 156 (ஜெமி ஸ்மித் 67, டான் லோரன்ஸ் 35, லஹிரு குமார 21 - 4 விக்., விஷ்வா பெர்னாண்டோ 40 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 49 - 2 விக்.)

இலங்கை (வெற்றி இலக்கு 219 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 219 - 2 விக். (பெத்தும் நிஸ்ஸன்க 127 ஆ.இ., குசல் மெண்டிஸ் 39, ஏஞ்சலோ மெத்யூஸ் 32 ஆ.இ.)

ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க, தொடர் நாயகன்: ஜோ ரூட்

https://www.virakesari.lk/article/193265



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.