Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வீரப் பையன்26 said:

இங்கை பார‌டா இவ‌ருக்கு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌ தெரியாது😁

ச‌சிக‌லா அன்ரின்ட‌ அழ‌கை ர‌சிக்க‌ தெரியுது😁

🤣...........

பையன் சார், நீங்க அந்த வீடியோவை வடிவாகப் பார்த்தனீங்கள் தானே....... சசிகலா ஆன்டி முன்னுக்கு நின்று பேசப் பேச, பின்னுக்கு நின்று ஒருவர் ( இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா?) அந்தப் பேச்சுக்கு எற்ற மாதிரி தலையை ஆட்டி ஆட்டி அபிநயங்கள் பிடிப்பார்.............. அது ஒரு கலைநயம்............🤣

  • Haha 1
  • Replies 70
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வீரப் பையன்26

அன்மைக் கால‌மாய் உட‌ல் நிலை ச‌ரி இல்லை ஓய்வு எடுக்கிறேன் கூட‌ தூக்க‌ம்  காலையில் எழுந்த‌தும் இஸ்கோர் பார்ப்பேன்  ஆம் நீங்க‌ள் சொல்லும் அணி நேற்று ப‌டு தோல்வி....................NFL ச‌ம‌ ப‌ல‌

ரசோதரன்

🤣............ பையன் சார், ஒன்றுக்கு இரண்டு தடவை மனசுக்ககுள் சொல்லிப் பார்த்துப் போட்டுத்தான், இதை எழுதுகின்றேன். 'இந்த வயசில என்னத்தையாம் ரசிக்கப் போகிறாய்............' என்று யாராவது வம்புக்கு வந

வீரப் பையன்26

இங்கை பார‌டா இவ‌ருக்கு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌ தெரியாது😁 ச‌சிக‌லா அன்ரின்ட‌ அழ‌கை ர‌சிக்க‌ தெரியுது😁   நான் அழ‌கை ர‌சித்தால் ந‌க்க‌ல் அடிக்கிறார் ளொள்😁😛..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸி.யிடமும் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன் வெளியேறும் நிலையில் இலங்கை

Published By: VISHNU   05 OCT, 2024 | 08:40 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்களால் தோல்வி அடைந்த இலங்கை, முதல் சுற்றுடன் வெளியேறும் நிலையை எதிர்கொண்டுள்ளது.

nilakshika_silva.png

நடப்பு உலக சம்பியன் இலகுவான வெற்றியுடன் ஒன்பதாவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாத்தை நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளது.

0510_megan_shutt_aus_vs_sl.png

ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை, இவ் வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அடைந்த 2ஆவது தொடர்ச்சியான தோல்வி இதுவாகும்.

0510_megan_shutt_player_of_the_match.jpg

பாகிஸ்தானுடனான முதலாவது போட்டியில் போன்றே அவுஸ்திரேலியாவுடனான போட்டியிலும் இலங்கையின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.

இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை 100 ஓட்டங்களை எட்டத்தவறியது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்ப வீராங்கனைகளான விஷ்மி குணரட்ன (0), அணித் தலைவி சமரி அத்தபத்து (3) ஆகிய இருவரும் முதல் 3 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததுடன் கவிஷா டில்ஹாரி (5) 7ஆவது ஓவரில் வெளியேறியமை இலங்கைக்கு பேரிடியைக் கொடுத்தது.

ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் நிலக்ஷிகா சில்வாவும் 4ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆட்டம் இழந்ததும் மேலும் 3 வீக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன.

துடுப்பாட்டத்தில் நிலக்ஷிகா சில்வா (29), ஹர்ஷிதா சமரவிக்ரம (23), அனுஷிக்கா சஞ்சீவனி (16) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மெகான் சூட் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொஃபி மொலினொக்ஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

94 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி எலிசா ஹீலி (4), ஜோர்ஜியா வெயாஹாம் (3), எலிஸ் பெரி (17) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க 6ஆவது ஓவரில் அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 35 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், பெத் மூனி, ஏஷ்லி கார்ட்னர் (12) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கினர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத் மூனி 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரை விட எலிஸ் பெரி 17 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சுகந்திகா குமாரி 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் உதேஷிகா ப்ரபோதனி 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இனோக்கா ரணவீர 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: மெகான் ஷூட்

https://www.virakesari.lk/article/195586

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்களாதேஷை 21 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

Published By: VISHNU   05 OCT, 2024 | 11:31 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷிடம் சிறு சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து இறுதியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்கு தன்னால் நிர்ணயிக்கப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையை தக்கவைத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.

சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் உயரிய தரத்தைக் கொண்ட பந்துவீச்சு, ஆட்டத்தின் பிடி  இங்கிலாந்திடமிருந்து   நழுவாமல் இருப்பதை உறுதிசெய்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.

இதுவரை நடைபெற்று முடிந்த 6 போட்டிகளில் நியூஸிலாந்தைத் தவிர முதலில் துடுப்பெடுத்தாடிய வேறு எந்த அணியும் 120 ஓட்டங்களை எட்டவில்லை.

மாயா பௌச்சர், டெனி வியட் ஹொஜ் ஆகிய இருவரும் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகம் சிறுக சிறுக குறைந்தது.. 12 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷின் சவால் மிக்க பந்துவீச்சுக்கு மத்தியில் கடைசி 8 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து இங்கிலாந்தினால் மேலதிகமாக 42 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

துடுப்பாட்டத்தில் டெனி வியட் ஹொஜ் 41 ஓட்டங்களையும் மாயா பௌச்சர் 23 ஓட்டங்களையும் அமி ஜோன்ஸ் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிட்டு மோனி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஹிதா அக்தர் 32  ஓட்டங்களுக்கு  2 விக்கெட்களையம் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

சோபனா மோஸ்தரி 44 ஓட்டங்களையும் அணித் தலைவி நிகார் சுல்தானா 15 ஓட்டங்களையும் பெற்றனர்

பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாலி டீன் 22  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: டெனி வியட் ஹொஜ்

https://www.virakesari.lk/article/195587

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா ம‌க‌ளிர் அணி பாக்கிஸ்தான் கூட‌ பெரிய‌ புள்ளி வித்தியாச‌த்தில் வெற்றி வெற‌னும்

 

அதோட‌ அவுஸ்ரேலியாவையும் வேண்டால் தான் சிமிபின‌லுக்கு போக‌ முடியும்🙏🥰...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா பாக்கிஸ்தான் கூட‌ 18ஓவ‌ர் வ‌ர‌ விளையாடி தான் வென்று இருக்கின‌ம்

 

அந்த‌ குருப்பில்

அவுஸ்ரேலியா நியுசிலாந் ம‌க‌ளிர் அணி தான் சிமிபின‌லுக்கு போக‌ கூடும்............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தானின் கடும் சவாலுக்கு மத்தியில் 6 விக்கெட்களால் இந்தியா வெற்றியீட்டியது

Published By: VISHNU   06 OCT, 2024 | 08:50 PM

image

(நெனில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் 7 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை இந்தியா ஈட்டியது.

0610_richa_gosh_taking_a_brilliat_catch_

இந்தக் குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்திடம் படு தோல்வி அடைந்த இந்தியாவுக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

0610_arundathi_reddy_ind_vs_pak_player_o

ஆனால், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றபோதிலும் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் நிகர ஓட்ட வேக அடிப்படையில் தொடர்ந்தும் நான்காம் இடத்திலே இருக்கிறது.

0610_ind_vs_pak.jpg

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

0610_indian_crowd_supporting_their_side.

106 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பnடுத்தாடிய இந்தியா கடும் சவாலுக்கு மத்தியில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 108 ஓட்;டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அதிரடிக்கு பெயர்பெற்ற ஸ்ம்ரித்தி மந்தனா நீண்;ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் மற்றைய ஆரம்ப வீராங்கனை ஷபாலி வர்மாவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரொட்றிகஸ் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தார்.

ஆனால், ஷபாலி வர்மா 32 ஓட்டங்களுடனும் ஜெமிமா ரொட்றிகஸ் 23 ஓட்டங்களுடனும் ரிச்சா கோஷ் ஓட்டம் பெறாமலும் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (80 - 4 விக்.)

அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 104 ஓட்டங்களாக உயர்த்தினர்.

அப்போது முன்னாள் பாய்ந்து பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த ஹார்மன் ப்ரீத் தரையில் வீழ்ந்ததால் அவரது கழுத்துப் பகுதியில் கடும் உபாதை ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் 29 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.

அடுத்து களம் நுழைந்த சஜீவன் சஜானா பவுண்டறி அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

தீப்தி ஷர்மா 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் பாத்திமா சானா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தியதால் பாகிஸ்தான் ஓட்டங்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டது.

ரேணுகா சிங் தனது முதலாவது ஓவரிலேயே குல் பெரோஸாவை (0)ஆட்டம் இழக்கச் செய்ததைத் தொடர்ந்து சித்ரா ஆமின் (8),  ஒமய்மா சொஹெய்ல் (3) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

முன்வரசையில் ஆரம்ப வீராங்கனை முனீபா அலி மாத்திரம் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 17 ஓட்டங்களைப் பெற்றார்.

15ஆவது ஓவரில் பாகிஸ்தானின் 7ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 71 ஓட்டங்களாக இருந்தது.

எனினும், நிதார் தார் 28 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 13 ஓட்டங்களையும் சயிடா ஆரூப் ஷா ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தானை கௌரவமான நிலையில் இட்டனர்.

பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷ்ரீயன்கா பட்டில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: அருந்ததி ரெட்டி.

https://www.virakesari.lk/article/195649

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்கொட்லாந்துக்கு எதிரான  மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மே.தீவுகள் 6 விக்கெட்களால் வெற்றி

Published By: VISHNU  06 OCT, 2024 | 11:29 PM

image

(நெவில் அன்தனி)

ஸ்கொட்லாந்துக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) இரவு நடைபெற்ற பி குழு ஐசிசி மகளிர்  ரி20   உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

0610_qiana_joseph_wi_vs_scot.png

தென் ஆபிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது.

0610_afy_fletcher_wi_vs_scot.png

ஸ்கொட்லாந்து சார்பாக ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்கள் அனைவரும் மந்த கதியிலேயே ஓட்டங்களைப் பெற்றனர்.

எய்ல்ஸா லிஸ்டர் (26), அணித் தலைவி கெத்ரின் ப்றைஸ் (25) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 46 ஓட்டங்களே ஸ்கொட்லாந்து இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

அவர்களைவிட டார்சி காட்டர் (14 ஆ.இ.), சஸ்கியா ஹோர்லி (11), லோர்னா ஜெக் ப்றவுண் (11) ஆகிய மூவர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அஃபி ப்ளெச்சர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 11.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி ஹேய்லி மெத்யூஸ் (8), ஸ்டெஃபானி டெய்லர் (4), ஷெமெய்ன் கெம்பெல் (2) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கியானா ஜோசப் 18 பந்துகளில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்று 4ஆவதாக ஆட்டம் இழந்தார்.

பின்னர் டியேந்த்ரா டொட்டின், சினெலி ஹென்றி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை 12ஆவது ஓவரில் உறுதிசெய்தனர்.

டியேந்த்ரா டொட்டின் 15 பந்துகளில் 28 ஓட்டங்களுடனும் சினெல் ஹென்றி 10 பந்துகளில் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆட்டநாயகி: சினெல் ஹென்றி

https://www.virakesari.lk/article/195651

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் நேற்று காய‌ம் கார‌ண‌மாய் வெளிய‌ போனா

அடுத்த‌ ம‌ச்சில் அவா விளையாடுவாவோ தெரியாது..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல‌ங்கை ம‌ற்றும் வ‌ங்கிளாதேஸ் . ஸ்கொட்லாந்

 

இந்த‌ மூன்று அணிக‌ளும் ப‌டு தோல்வி அடைந்து வெளி ஏறிட்டின‌ம்....................இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ந‌ல்லா விளையாடுவின‌ம் என்று பார்த்தால் சுத‌ப்ப‌ல் விளையாட்டு..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒவ்வொரு ம‌க‌ளிர் அணியின் விளையாட்டை பார்க்கும் போது அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி தான் கோப்பை வெல்ல‌ த‌குதியான‌ அணி.......................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூஸிலாந்தை 88 ஓட்டங்களுக்கு சுருட்டி 66 ஓட்டங்களால் வென்றது நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பலசாலிகளுக்கு இடையிலான போட்டி என வருணிக்கப்பட்ட ஏ குழு போட்டியில் நியூஸிலாந்தை 60 ஓட்டங்களால் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

0810_analia_kerr_nz_vs_aus.png

அப் போட்டியில் நியூஸிலாந்தை 88 ஒட்டங்களுக்கு கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா, இந்த வெற்றி மூலம் தானே பலசாலி என்பதை உறுதிப்படுத்தியது.

0810_beth_mooney_aus_vs_nz.png

பெத் மூனி, எலிஸ் பெரி ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களும் மெகான் ஷுட், அனாபெல் சதலண்ட், சொஃபி மொலினொக்ஸ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

இந்த வெற்றியுடன்  ஏ குழுவில் முதலாம் இடத்தை அடைந்துள்ள அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

இலங்கையை தனது முதல் போட்டியில் வெற்றிகொண்ட  அவுஸ்திரேலியா தனது எஞ்சிய இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளை சந்திக்கவுள்ளது.

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (08) இரவு நடைபெற்ற அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

நியூஸிலாந்து சார்பாக அமேலி கேர் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியபோதிலும் அவுஸ்திரேலியா ஒரளவு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

பெத் மூனி, எலிஸ் பெரி ஆகிய இருவரும் வேகமாக ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவைப் பலப்படுத்தினர்.

மூனி 32 பந்துகளில் 40 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 24 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர். அத்துடன் அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்கள் இருவரை விட அணித் தலைவி அலிசா ஹீலி 26 ஓட்டங்களையும் ஃபோப் லிச்பீல்ட் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அமேலிய கேரை விட ப்றூக் ஹாலிடே 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரோஸ்மேரி மாய்ர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

149 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீராங்கனை ஜோர்ஜியா ப்லிம்மர் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து சுஸி பேட்ஸ் (20), அமேலியா கேர் (29) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்க்க முயற்சித்தனர்.

பத்து ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றிருந்த நியூஸிலாந்து ஓரளவு பலமான நிலையில் இருந்தது.

ஆனால், அதன் பின்னர் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 9 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து படுதோல்வி அடைந்தது.

மத்திய வரிசையில் லீ தஹுஹு (11) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் மெகான் ஷுட் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அனாபெல் சதலண்ட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையம் சொஃபி மொலினொக்ஸ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: மெகான் ஷுட்

https://www.virakesari.lk/article/195808

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி நியுசிலாந்த‌ சிம்பிலா வென்று விட்டின‌ம்...................

 

தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணியும் ந‌ல்லாக‌ விளையாடுகின‌ம்..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல‌ங்கை ம‌க‌ளிர் விளையாடின‌ மூன்று விளையாட்டும் ப‌டு கேவ‌ல‌ம்😛.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/10/2024 at 11:39, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் தான் என் அர‌சிய‌ல் குரு👍.............

அப்படியே     இலங்கையின் தமிழ்   ஐனதிபதி யார்???    🤣😂

தத்தா சொல்லி தருவார்  ......கேட்டுப் பாருங்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kandiah57 said:

அப்படியே     இலங்கையின் தமிழ்   ஐனதிபதி யார்???    🤣😂

தத்தா சொல்லி தருவார்  ......கேட்டுப் பாருங்கள் 

 

ந‌க்க‌ல் நையாண்டி😁...................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவிடம் சரணடைந்த ஆசிய சம்பியன் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறுகிறது; இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடுகிறது

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (09) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் இந்தியாவிடம் சரணடைந்த ஆசிய சம்பியன் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாயிற்று.

0910_sri_lanka_upset.png

இந்தப் போட்டியில் இலங்கையை விஞ்சும் வகையில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா 82 ஓட்டங்களால் வெற்றியீட்டிய போதிலும் அதன் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடிய வண்ணம் இருக்கிறது.

0910_xmriti_mandhana.jpg

இந்தியாவின் கடைசிப் போட்டி, 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரானதாகும். அதேவேளை இலங்கையையும் பாகிஸ்தானையும் 2 புள்ளிகள் பெற்றுள்ள நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது. இன்றைய வெற்றியுடன் இந்தியா 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

0910_harmanpreet_kaur_player_of_the_matc

இலங்கையுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.

0910_india_win_points_table.jpg

இந்தியாவின் முன்வரிசை வீராங்கனைகள் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்கி மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

ஷபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 76 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.

ஸ்ம்ரித்தி மந்தனா 38 பந்துகளில் 50 ஓட்டங்களையும் ஷபாலி வர்மா 40 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரொட்றிக்ஸ் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாமன்ப்ரீத் கோர் 27 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களை விளாசினார். ரிச்சா கோஷ் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 20 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் அமா காஞ்சனா 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சமரி அத்தபத்து 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மிகவும் கடினமான 173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும்  இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த வருட ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் 100 ஓட்டங்களைப் பெறத் தவறியது.

இலங்கை துடுப்பெடுத்தாடியபோது இந்தியாவின் வழமையான அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. அவருக்கு பதிலாக உதவி அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா தலைவர் பதவியை பொறுப்பேற்று அணியை சிறப்பாக  வழிநடத்தினார்.

ஹாமன்ப்ரீத் கோருக்குப் பதிலாக ராதா யாதவ் களத்தடுப்பில் ஈடுபட்டார். அவர் மிகவும் சிரமமான பிடி ஒன்று உட்பட மூன்று பிடிகளை எடுத்தார்.

இந்தப் போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் மோசமாகவே இருந்தது.

விஷ்மி குணரட்ன (0) இரண்டாவது பந்திலும் சமரி அத்தபத்து (1) இரண்டாவது ஓவரிலும் ஹர்ஷித்தா சமரவிக்ரம (3) மூன்றவாது ஓவரிலும் ஆட்டம் இழக்க இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 6 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் துணிச்சலுடன் எதிர்த்தாடுவதே சிறந்தது என்ற கோட்பாட்டிற்கு அமைய கவிஷா டில்ஹாரியும் அனுஷ்கா சஞ்சீவனியும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர்.

அந்த சந்தர்ப்பத்தில் சற்று அவசரப்பட்ட அனுஷ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களுடன் ஸ்டம்ப் செய்யப்பட்டு விக்கெட்டை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து நிலக்ஷிகா சில்வா (8)  ஆட்டம் இழந்தார். (57 - 5 விக்.)

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த கவிஷா டில்ஹாரி 21 ஓட்டங்ளைப் பெற்ற நிலையில் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் சுகந்திகா குமாரி (1), இனோஷி ப்ரியதர்ஷனி (1) ஆகிய இருவரும் விரைவாக ஆட்டம் இழந்தனர். (65 - 5)

மறுமுனையில் ஓரளவு திறமையாக துடுப்பெடுத்தாடிய அமா காஞ்சனா 19 ஓட்டங்களைப் பெற்றார். உதேஷிக்கா ப்ரபோதனி 9 ஓட்டங்களுடன்  கடைசியாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆஷா சோபனா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரேணுகா சிங் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஹாமன்ப்ரீத் கோர்

https://www.virakesari.lk/article/195900

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்களாதேஷை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்களால் அமோக வெற்றி, ஆனால் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகவில்லை

image

(நெவில் அன்தனி)

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (10) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் பங்களாதேஷை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 43 பந்துகள் மீதம் இருக்க 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

கரிஷ்மா ராம்ஹராக் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல், ஹேலி மெத்யூஸின் திறமையான துடுப்பாட்டம் என்பன மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை இலகுவாக்கின.

இந்த வெற்றியுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இடத்தை அடைந்துள்ளபோதிலும் அதன் அரை இறுதி வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 104 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 12.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ், ஸ்டெபானி டெய்லர் ஆகிய இருவரும் 45 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மெத்யூஸ் 34 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் தசைப் பிடிப்புக்கு மத்தியில் சிரமத்துடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஸ்டெபானி டெய்லர் 27 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது உபாதையினால் ஓய்வுபெற்றார்.

தொடர்ந்து ஷேர்மெய்ன் கெம்பெல் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

டியேந்த்ரா டொட்டின் 19 ஓட்டங்களுடனும் சினெல் ஹென்றி 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மாறுபா அக்தர், நஹிதா அக்தர் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

13ஆவது ஓவரில் பங்களாதேஷ 2 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது.

ஆனால், அடுத்த 6 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

அணித் தலைவி நிகார் சுல்தானா திறமையாகத் துடுப்nடுத்தாடி 39 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட டிலாரா அக்தர் 19 ஓட்டங்களையும் சொஹான மோஸ்தரி 16 ஓட்டங்களையும் பெற்றார்.

பந்துவீச்சில் கரிஷ்மா ராம்ஹராக் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அஃபி ப்ளெச்சர் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: கரிஷ்மா ராம்ஹராக்.

https://www.virakesari.lk/article/195987

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா ம‌க‌ளிர் அணி அவுஸ்ரேலியாவை வென்றால் தான் சிமி பின‌லுக்கு போக‌ முடியும் தோத்தா வெளிய‌.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தானை 9 விக்கெட்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா அரை இறுதி வாயிலை நெருங்கியுள்ளது

image

(நெவில் அன்தனி)

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (11) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் பாகிஸ்தானை 9 விக்கெட்களால் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா மிக இலகுவாக வெற்றிபெற்றது.

1110_megan_schutt.png

இந்த வெற்றியுடன் மகளிர் உலகக் கிண்ண அரை இறுதி  வாயிலை நெருங்கியுள்ளது.

1110_ashley_garder_pom.jpg

ஏஷ்லி காட்னரின் 4 விக்கெட் குவியல் அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

1110_allysa_healey_retired_hurt.png

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 83 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில்  ஓவருக்கு 7.54 ஓட்டவேகத்தைக் கொண்டிருத அவுஸ்திரேலியாவின் நிகர ஓட்ட வேகம் நேர்மறை 2.786ஆக இருப்பதுடன் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கிறது. 4 புள்ளிகளுடன்இரண்டாம் இடத்திலுள்ள இந்தியாவைவிட 2.210 என்ற வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

அவுஸ்திரேலியா சார்பாக திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவி அலிசா ஹீலி 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தசை பிடிப்பு காரணமாக ஒய்வுபெற்றார்.

அவரைவிட எலிஸ் பெரி ஆட்டம் இழக்கமால் 22 ஓட்டங்களையும் பெத் மூனி 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏஷ்லி கார்ட்னர் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.

மத்திய வரிசை வீராங்கனை ஆலியா ரியாஸ் மாத்திரமே ஓரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடி 26 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.

அவரைவிட சித்ரா ஆமின், ஈராம் ஜாவிட் ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களையும் நிதா தார் 10 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக் எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்தவீச்சில் ஏஞ்ஷி கார்ட்னர் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அனாபெல் சதஃபீல்ட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜோஜியா வெயாஹாம் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் மெகான் சூட், மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனையானார்.

115 சர்வதேச மகளிர் ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள மெகான் சூட் 144 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் நிதார் தார் வசம் இருந்த 143 விக்கெட்கள் என்ற சாதனை மெகான் சூட்டினால் இன்று முறியடிக்கப்பட்டது.

 

எஞ்சிய போட்டிகள்

இக் குழுவில் மேலும் 3 போட்டிகள் இருக்கின்றன.

நாளைய தினம் இலங்கையை எதிர்த்தாடவுள்ள நியூஸிலாந்து, கடைசிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்வரும் திங்கட்கிழiமை சந்திக்கவுள்ளது.

இதனிடையே அவுஸ்திரேலியாவுக்கும்   இந்தியாவுக்கும் இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/196074

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை மகளிர் அணி மிக மோசமாக விளையாடியது - பயிற்றுநர் ருமேஷ் ரட்நாயக்க

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிக மோசமாக விளையாடியதே இலங்கையின் தோல்விகளுக்கு காரணம் என தலைமைப் பயிற்றநர் ருமேஷ் ரட்நாயக்க தெரிவித்தார்.

கடந்த 15 மாதங்களில் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடனும் ஆசிய கிண்ணத்தை வென்ற உத்வேகத்துட னும்   மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கை மகளிர் அணி களம் இறங்கியது.

ஆனால், தனது முதல் மூன்று போட்டிகளில் மிக மோசமாக விளையாடி தோல்விகளைத் தழுவிய இலங்கை 9ஆவது தடவையாக மகளிர் ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

'அதிர்ஷ்டம் இல்லை என்பதில் நாங்கள் நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் சுற்றுப்போட்டி முழுவதும் மிகவும் மோசமாக விளையாடியதே தோல்விகளுக்கு காரணம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றே நான் கூறுவேன். இது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம். மீண்டு எழுவதற்கு முயற்சி செய்தோம். பல்வேறு விடயங்களை முயற்சித்துப் பார்த்தோம். அஞ்சாமலும் சுதந்திரமாகவும் விளையாட முயற்சித்தோம். ஆனால், அவசியமான வேளைகளில் எமது ஆற்றல்கள் வெளிப்படவில்லை' என மூன்றாவது தோல்வியின் பின்னர் ருமேஷ் ரட்நாயக்க தெரிவித்தார்.

'சமரி மீது எல்லோரும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததால் நாங்கள் அவருடன்  பேசினோம். அவர் சற்று ஆசுவாசமடைய  வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு தருணமாக, ஒவ்வொரு பந்தாக எதிர்கொள்ளும்போது சகலமும் சரிவரும் என கருதுகிறேன். பல விடயங்ககளில் நாங்கள் தவறுகள் இழைத்தோம். இரண்டு மாதங்கள் அணியில் இருந்த ஆற்றல்களை இப்போது காணமுடியவில்லை. அதிலும் 3 தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு வந்தோம். எங்களுக்கு தேவைப்பட்டபோது எம்மிடம் ஆற்றல்கள் இருக்வில்லை' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

1110_sophie_devine_nz_capt.png

இந் நிலையில், இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்தை ஷார்ஜாவில் இன்று பிற்பகல் எதிர்த்தாடவுள்ளது.

மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இனியும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் கடைசிப் போட்டியில் எவ்வித அழுத்தங்களுமின்றி இலங்கை அணியினால் சுதந்திரமாக விளையாடக் கூடியதாக இருக்கும் என கருதப்படுகிறது.

மறுபக்கத்தில் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கு நியூஸிலாந்து தனது அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறது.

எனவே இலங்கையுடனான போட்டியில் வெற்றிபெறுவதற்கு நியூஸிலாந்து கடுமையாக முயற்சிக்கும். இதன் காரணமாக இலங்கைக்கு இந்தப் போட்டியும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கப்போகிறது.

மேலும், இலங்கையும் நியூஸிலாந்தும் இதுவரை விளையாடியுள்ள 13 சர்வதேச மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து முன்னிலையில் இருக்கிறது.

அணிகள்

இலங்கை: விஷ்மி குணரட்ன, சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷித்தா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷிகா சில்வா, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி, இனோஷி ப்ரியதர்ஷனி, உதேஷிகா ப்ரபோதனி, இனோக்கா ரணவீர.

நியூஸிலாந்து: சுசி பேட்ஸ், ஜோஜியா ப்ளிம்மர், அமேலியா கேர், சொஃபி டிவைன் (தலைவி), ப்றூக் ஹாலிடே, மெடி க்றீன், இசபெல்லா கேஸ், லீ த{ஹுஹ, ரோஸ்மேரி மாய்ர், ஈடன் காசன், ப்ரான் ஜோனாஸ்.

https://www.virakesari.lk/article/196107

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்களாதேஷுக்கு எதிரான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றி

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) இரவு நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது.

இக் குழுவில் 3 ஆவது வெற்றியை ஈட்டிய தென் ஆபிரிக்கா 6 புள்ளிகளைப் பெற்று பி குழுவில் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஆனால், அதன் அரை இறுதி வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை.

இங்கிலாந்து அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் தென் ஆபிரிக்கா அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். இங்கிலாந்தும் மேற்கிந்திய தீவுகளும் வெற்றிபெற்றால் 3 அணிகள் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருக்கும். அப்போது நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப்  பெற்ற  அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவி லோரா வுல்வார்ட் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தஸ்மின் ப்ரிட்ஸ் (42), ஆனெக் பொஷ் (25) ஆகிய இருவரும் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

என்றாலும் இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

ஆனால், மாரிஸ்ஆன் கெப் (13 ஆ.இ.), க்ளோ ட்ரையொன் (14 ஆ.இ.) ஆகிய இருவரும் தென் ஆபிரிக்காவுக்கு வெற்றி இலக்கை அடைய உதவினர்.

பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

ஆரம்ப வீராங்கனை டிலாரா அக்தர் ஓட்டம் பெறாமல் 2ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார்.

எனினும் ஷாதி ராணி (19), சோபனா மோஸ்தரி (38) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

தொடர்ந்து மோஸ்தரி, அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மோஸ்தரி ஆட்டம் இழந்த பின்னர் சுல்தானாவும் ஷொர்ணா அக்தரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 25 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 106 ஓட்டங்களாக உயர்த்தினர்.

சுல்தானா 32 ஓட்டங்களுடனும் ஷொர்ணா அக்தர் 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப், ஆனெரி டேர்க்சன், நொன்குலுலெக்கோ மிலாபா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: தஸ்மின் ப்றிட்ஸ்

https://www.virakesari.lk/article/196136

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகலதுறைகளிலும் கேர் பிரகாசிப்பு: இலங்கையுடனான போட்டியில் அவசியமான வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து

image

(நெவில் அன்தனி)

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) பிற்பகல் நடைபெற்ற இலங்கையுடனான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அமேலியா கேர் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்ளை வெளிப்படுத்தியதன் பலனாக நியூஸிலாந்து மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் உலகக் கிண்ண அரை இறுதி தகுதியைப் பெறுவதற்கான வாய்ப்பை நியூஸிலாந்து சற்று அதிகரித்துக்கொண்டது.

பந்துவீச்சில் 2 விக்கெட்களைக் கைப்பற்றிய அமேலியா கேர் துடுப்பாட்டத்திலும் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று நியூஸிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியிருந்தார்.

ஆனால், ஆட்டநாயகி விருதை அரைச் சதம் குவித்த ஜோர்ஜியா ப்ளிம்மருக்கு வழங்கப்பட்டது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 116 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சுசி பேட்ஸ் (17), ஜோர்ஜியா ப்ளிம்மர் ஆகிய இருவரும் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து ப்ளிம்ஃமர், அமேலியா கேர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

ஜோர்ஜியா ப்ளிம்மர் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (95 - 2 விக்.)

அதன் பின்னர் அமேலியா கேர் (34 ஆ.இ.), அணித் தலைவி சொஃபி டிவைன் (13 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர்.

பந்துவீச்சில் சமரி அத்தபத்து 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்கடையும் சச்சினி நிசன்சலா 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.

நடப்பு உலகக் கிண்ணத்தில் இந்தப் போட்டியிலேயே இலங்கை முதல் தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது.

அணித் தலைவி சமரி அத்தபத்து முதல் தடவையாக திறமையாகத் துடுப்பெடுத்தாடி 35 ஒட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட ஹர்ஷித்தா சமரவிக்ரம 18 ஓட்டங்களையும் நிலக்ஷிகா சில்வா ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் அமா காஞ்சனா ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களையும் கவிஷா டில்ஹாரி 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அமேலியா கேர் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லீ கஸ்பெரெக் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

நியூஸிலாந்திடம் அடைந்த தோல்வியுடன் 9ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தில் இலங்கை தனது நான்கு போட்டிகளிலும் தோல்வியுற்ற அணியாக வெறுங்கையுடன் நாடு திரும்பவுள்ளது.

அத்துடன் இதுவரை விளையாடிய 9 உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/196137

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட முதலாவது அணியாக அவுஸ்திரேலியா தகுதி; முக்கிய போட்டியில் இந்தியா 9 ஓட்டங்களால் தோல்வி

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு நடைபெற்ற  ஏ குழு போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியா முதலாவது அணியாக ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஏ குழுவில் தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா 9ஆவது நேரடித் தடவையாக மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு பாகிஸ்தானின் கைகளில் தங்கியிருக்கிறது.

பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் தலைகீழ் வெற்றியை ஈட்டினால் இந்தியா அரை இறுதியில் விளையாடத் தகுதிபெறும். பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் நியூஸிலாந்து அரை இறுதிக்கு முன்னேறும்.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைக் குவித்தது.

வழமையான அணித் தலைவி அலிசா ஹீலி உபாதை காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக தஹிலா மெக்ரா பதில் தலைவியாக செயற்பட்டார்.

அலிசா ஹீலிக்குப் பதிலாக ஆரம்ப வீராங்கனையாக விளையாடிய க்றேஸ் ஹெரிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடினார்.

மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தபோது பெத் மூனி (2), ஜோர்ஜியா வெயாஹாம் (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.

க்றேஸ் ஹெரிஸ், தஹிலா மெக்ரா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

தஹிலா மெக்ரா 32 ஓட்டங்களையும் க்றேஸ் ஹெரிஸ் 40 ஓட்டங்களைப் பெற்று சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து ஏஷ்லி கார்ட்னர் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எலிஸ் பெரி (32), ஃபோப் லிச்பீல்ட் (15 ஆ.இ.) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அனாபெல் சதஃபீல்ட் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரேனுகா சிங் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

152 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முன்வரிசை விராங்கனைகள் ஷபாலி வர்மா (20), ஸ்ம்ரித்தி மந்தனா (6), ஜெமிமா ரொட்றிக்ஸ் (16) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 6.5 ஓவர்களில் 47 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

1310_sophie_maulineux.jpg

ஆனால் தீப்தி ஷர்மா 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் அவரைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறியது இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

1310_aus_in_semis.jpg

18 ஓவர்கள் நிறைவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் கடைசி 2 ஓவர்களில் அதன் வெற்றிக்கு மேலும் 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19ஆவது ஓவரில் பூஜா வஸ்த்ராக்கரும் ஹாமன்ப்ரீத் கோரும் 14 ஓட்டங்களைப் பெற்றனர்.

கடைசி ஓவரில் மேலும் 14 ஓட்டங்கள் இந்தியாவின் வெற்றிக்கு தேவைப்பட்டது.

ஆனால், அனாபெல் சதர்லண்ட் வீசிய கடைசி ஓவரில் இந்தியாவின் 4 விக்கெட்கள் சரிய இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் 6 பவுண்டறிகள் உட்பட 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அனாபெல் சதர்லண்ட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சொஃபி மொலினெக்ஸ் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சொபி மொலினொக்ஸ்

https://www.virakesari.lk/article/196219

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா ம‌க‌ளிர் வெளிய‌ 

அந்த‌ குருப்பில்

 

அவுஸ்ரேலியா

நியுசிலாந் ம‌க‌ளிர் சிமி பின‌லுக்கு போய் விட்டின‌ம்................

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ப‌டு மோச‌மாய் விளையாடின‌ அணி என்றால் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி தான்.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ப‌டு மோச‌மாய் விளையாடின‌ அணி என்றால் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி தான்.................................

இலங்கை பெண்கள் அணியுமா......... இலங்கை ஆண்கள் அணி உலக கோப்பையில் விளையாடின போது, நாங்கள் தான் சூனியம் வைத்தோம், அப்படியே ஆண்கள் அணி மிக மோசமாய் விளையாடி தோற்றது.

வைத்ததை எடுக்க மறந்து போனோம்........😜

  • Haha 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.