Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   16 AUG, 2024 | 06:45 PM

image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்டில் நடைபெற்றுவரும் முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதை நெருங்கும் பருவமங்கை விஷ்மி குணரட்ன, கன்னிச் சதம் குவித்து வரலாறு படைத்தார்.

இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்தவுக்குப் பின்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரட்ன பெற்றுக்கொண்டார்.

எதிர்வரும் வியாழக்கிழமை 22ஆம் திகதி தனது 19ஆவது பிறந்த நாளைக்  கொண்டாடவுள்ள விஷ்மி குணரட்ன, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும் நேரஞ்செல்ல செல்ல திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதத்தைப் பெற்றார்.

வழமையான அணித் தலைவி சமரி அத்தபத்து தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தபோதிலும் மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன, 97 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனால், சதத்தைப் பூர்த்தி செய்த சூட்டோடு விஷ்மி குணரட்ன ஆட்டம் இழந்தார்.

ஹாசினி பெரேராவுடன் 3ஆவது விக்கெட்டில் விஷ்மி குணரட்ன 122 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து மாத்திரமே இதற்கு முன்னர் சதம் குவித்திருந்தார். அவர் இதுவரை 9 சதங்களைக் கவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை, சற்று நேரத்துக்கு முன்னர் 44 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

https://www.virakesari.lk/article/191259

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் ச‌த‌ம்

அணி அய‌ர்லாந்திட‌ம் தோல்வி.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஷ்மியின் சதத்தை வீணடித்தது ப்ரெண்டகாஸ்டின் சதம்; இலங்கையை வீழ்த்தியது அயர்லாந்து

Published By: VISHNU   16 AUG, 2024 | 11:11 PM

image

(நெவில் அன்தனி)

பெல்ஃபாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் அயர்லாந்து வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்தது.

ஓலா ப்ரெண்டகாஸ்ட் குவித்த ஆட்டம் இழக்காத கன்னிச் சதம் அயர்லாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது. இதன் காரணமாக விஷ்மி குணரட்னவின் கன்னிச் சதம் வீண் போனது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி சமரி அத்தபத்து தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து ஹர்ஷித்தா சமரவிக்ரம 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் விஷ்மி குணரட்னவும் ஹசினி பெரேராவும் 3ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தை நிதானத்துடன் ஆரம்பித்து பின்னர் வேகத்தை அதிகரித்த விஷ்மி குணரட்ன, 97 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித் தலைவி சமரி அத்தபத்தவுக்குப் பின்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை  வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரட்ன பெற்றுக்கொண்டார்.

இலங்கை சார்பாக மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து மாத்திரமே இதற்கு முன்னர் சதம் குவித்திருந்தார். அவர் இதுவரை 9 சதங்களைக் குவித்துள்ளார்.

விஷ்மி குணரட்னவுக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய ஹசினி பெரேரா 46 ஓட்டங்களைப் பெற்றதுடன் மத்திய வரிசையில் அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அணியின் மொத்த எண்ணிக்கையை 260 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் ஓலா ப்ரெண்டகாஸ்ட் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலனா ­­டல்ஸெல் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆலின் கெலி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

260 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 49.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஓலா ப்ரெண்டகாஸ்ட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 122 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அவரை விட அமி ஹன்டர் 42 ஓட்டங்களையும் சாரா ஃபோபஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகி: ஓலா ப்ரெண்டகாஸ்ட்.

அறிமுக வீராங்கனை

அயர்லாந்து சார்பாக இன்றைய போட்டியில் அலிஸ் டெக்டர் அறிமுகமானார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் இப் போட்டியைக் கண்டுகளித்ததுடன் அலிஸ் ஹெக்டர் தனது அறிமுகப் போட்டியில் விக்கெட் ஒன்றையும் கைப்பற்றினார்.

அவரது மூத்த சகோதரரான ஹெரி டெக்டர் ஆடவர் அணியில் இடம்பெறுவதுடன் மேலும் இரண்டு சகோதரர்கள் அயர்லாந்து கனிஷ்ட அணிகளில் இடம்பெற்றனர்.

https://www.virakesari.lk/article/191265

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

இல‌ங்கை ம‌க‌ளிர் வ‌டிவாய் வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு அய‌ர்லாந் ம‌க‌ளிர் வென்று விட்டின‌ம்

இன்னும் இர‌ண்டு விளையாட்டு இருக்கு இர‌ண்டையும் வென்றால் தான் தொட‌ரை வெல்ல‌ முடியும்...............................

  • கருத்துக்கள உறவுகள்

அனுப‌வ‌ம் இல்லா அய‌ர்லாந் ம‌க‌ளிர் அணியிட‌ம் இல‌ங்கை ம‌க‌ளிர் தோல்வி

ஆசியா கோப்பைக்கு தெரிவு செய்த‌ ம‌க‌ளிர‌ ஒரு நாள் தொட‌ருக்கும் தெரிவு செய்து இருக்க‌லாம்

ர‌ன் அவுட் அய‌ர்லாந் ம‌க‌ளிர் அணிக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹர்ஷித்தாவின் கன்னிச் சதம் வீண்போனது; இலங்கையை 15 ஓட்டங்களால் வென்ற அயர்லாந்து தொடரைக் கைப்பற்றியது

19 AUG, 2024 | 04:03 AM
image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பெல்பாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க, இப்போதைக்கு அயர்லாந்து 2 - 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

துடுப்பாட்டத்தில் அமி ஹன்டர், லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து அயர்லாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.  

இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி சார்பாக ஹர்ஷித்தா சமரவிக்ரம கன்னிச் சதம் குவித்தபோதிலும் இறுதியில் அது வீண்போனது.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக சமரி அத்தபத்து, விஷ்மி குணரட்ன ஆகியோரைத் தொடர்ந்து சதம் குவித்த 3ஆவது வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆவார்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.

31 ஓவர்கள் நிறைவில் அயர்லாந்து 4 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால் எஞ்சிய 19 ஓவர்களில் அயர்லாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மேலும் 121 ஓட்டங்களைக்  குவித்தது.

அதுவே அயர்லாந்து அணியின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது.

முன்வரிசையில் அமி ஹன்டர் 8 பவுண்டறிகளுடன் 66 ஒட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5 ஆவது விக்கெட்டில் 112 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

லீ போல் 6 பவுண்டறிகளுடன் 81 ஓட்டங்களையும் ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அச்சினி குலசூரிய 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கடினமான 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

விஷ்மி குணரட்ன (2), சமரி அத்தபத்து (22) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். (46 - 2 விக்.)

எனினும், ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் கவிஷா டில்ஹாரியும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

அப்போது இலங்கை 172 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது எஞ்சிய 98 பந்துகளில் இலங்கையின் வெற்றிக்கு 84 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் மோசமான அடி தெரிவுகள் மற்றும் கவனக்குறைவு காரணமாக 97 பந்துகளில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

ஒற்றைகள், இரட்டைகள் எடுக்க வேண்டிய வேளையில் அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க விளைந்ததால் இலங்கை துடுப்பாட்ட வீராங்கனைகள் விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹர்ஷித்தா சமரவிக்ரம 11 பவுண்டறிகளுடன் 105 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய கவிஷா டில்ஹாரி 53 ஓட்டங்களைப் பெற்றார்.

நிலக்ஷிகா சில்வா கடைசிக் கட்டத்தில் இலங்கையின் வெற்றிக்காக போராடிய போதிலும் அவரது முயற்சி பலனளிக்காமல் போனது. அவர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஆலீன் கெலி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேன் மெகயர் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: லீ போல்.

https://www.virakesari.lk/article/191397

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில வருடங்களாக  ஸிம்பாப்வே அணியின் ரேஞ்சுக்கு தரம் இறங்கிய இலங்கை அணிகள், 

ஆண்களுக்கான ஒருநாள் தொடரிலும், பெண்களுக்கான ஆசியகோப்பை போட்டியிலும் ஆனானப்பட்ட இந்திய அணியையே ஊதி தள்ளி படிப்படியாக பழைய பலமான நிலைக்கு திரும்பி வருவதுபோல் ஒரு உணர்வு.

அதுநிற்க, 

On 16/8/2024 at 10:50, ஏராளன் said:

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதை நெருங்கும் பருவமங்கை விஷ்மி குணரட்ன

பாரம்பரியமிக்க வீரகேசரி நாளிதழ் ஒரு கிரிக்கெட் வீராங்கனையை வர்ணிக்கும் விதம் வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும் எண்டால் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு .

ஒருவேளை இந்த எபெக்ட்டா இருக்கலாம் >>>

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை . .........கன்னிச்சதம் வீண்போனால் சம்பாதித்து கொள்ளலாம் ........கன்னி கவனமாய் இருந்தால் போதும் . ........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரியில் இந்திய தமிழ்படங்கள் பற்றி எழுதுபவரை விளையாட்டு பகுதியில் எழுதவிட்டுவிட்டனர்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

ஹர்ஷித்தாவின் கன்னிச் சதம் வீண்போனது; இலங்கையை 15 ஓட்டங்களால் வென்ற அயர்லாந்து தொடரைக் கைப்பற்றியது

19 AUG, 2024 | 04:03 AM
image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பெல்பாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க, இப்போதைக்கு அயர்லாந்து 2 - 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

துடுப்பாட்டத்தில் அமி ஹன்டர், லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து அயர்லாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.  

இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி சார்பாக ஹர்ஷித்தா சமரவிக்ரம கன்னிச் சதம் குவித்தபோதிலும் இறுதியில் அது வீண்போனது.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக சமரி அத்தபத்து, விஷ்மி குணரட்ன ஆகியோரைத் தொடர்ந்து சதம் குவித்த 3ஆவது வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆவார்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.

31 ஓவர்கள் நிறைவில் அயர்லாந்து 4 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால் எஞ்சிய 19 ஓவர்களில் அயர்லாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மேலும் 121 ஓட்டங்களைக்  குவித்தது.

அதுவே அயர்லாந்து அணியின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது.

முன்வரிசையில் அமி ஹன்டர் 8 பவுண்டறிகளுடன் 66 ஒட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5 ஆவது விக்கெட்டில் 112 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

லீ போல் 6 பவுண்டறிகளுடன் 81 ஓட்டங்களையும் ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அச்சினி குலசூரிய 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கடினமான 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

விஷ்மி குணரட்ன (2), சமரி அத்தபத்து (22) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். (46 - 2 விக்.)

எனினும், ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் கவிஷா டில்ஹாரியும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

அப்போது இலங்கை 172 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது எஞ்சிய 98 பந்துகளில் இலங்கையின் வெற்றிக்கு 84 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் மோசமான அடி தெரிவுகள் மற்றும் கவனக்குறைவு காரணமாக 97 பந்துகளில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

ஒற்றைகள், இரட்டைகள் எடுக்க வேண்டிய வேளையில் அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க விளைந்ததால் இலங்கை துடுப்பாட்ட வீராங்கனைகள் விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹர்ஷித்தா சமரவிக்ரம 11 பவுண்டறிகளுடன் 105 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய கவிஷா டில்ஹாரி 53 ஓட்டங்களைப் பெற்றார்.

நிலக்ஷிகா சில்வா கடைசிக் கட்டத்தில் இலங்கையின் வெற்றிக்காக போராடிய போதிலும் அவரது முயற்சி பலனளிக்காமல் போனது. அவர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஆலீன் கெலி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேன் மெகயர் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: லீ போல்.

https://www.virakesari.lk/article/191397

நேற்றையான் போட்டிய‌ கைபேசியில் இருந்து பார்த்தேன்

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி சிம்பிலா வெல்ல‌ வாய்ப்பு இருந்த‌து என்ன‌த்துக்கு தேவை இல்லாம‌ ர‌ன் அவுட் ஆகிச்சின‌ம் என்று என‌க்கு புரிய‌ வில்லை

க‌ட‌சி 10ஓவ‌ரில் 5 விக்கேட்டை ப‌றி கொடுத்த‌வை அது தான் தோல்விக்கு கார‌ண‌ம்

தொட‌ரை அய‌ர்லாந் ம‌க‌ளிர் அணி வென்று விட்ட‌து வாழ்த்துக்க‌ள்

இந்த‌ தொட‌ரில் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் அட்ட‌ப‌ட்டு சிற‌ப்பாக‌ விளையாட‌ வில்லை.....................அதிக‌ம் சாப்பிட்டு சாப்பிட்டு உட‌ம்பை  கூட்டுகிறா

ஆனால் கிரிக்கிட்டில் உட‌ம்மை எப்ப‌வும் க‌ட்டுப்பாட‌ வைச்சு இருக்க‌னும் அப்ப‌ தான் ப‌ந்தை தூக்கி அடிக்க‌ சுக‌மாய் இருக்கும்.............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வீரப் பையன்26 said:

அட்ட‌ப‌ட்டு சிற‌ப்பாக‌ விளையாட‌ வில்லை.....................அதிக‌ம் சாப்பிட்டு சாப்பிட்டு உட‌மை கூட்டுகிறா

பையன் சொல்றது உண்மைதான்,

சமாரி அட்டபட்டுவ பாத்தா நமக்கே நித்திரை வருது, ஓவரா சாப்பிட்டு வாத்துமாதிரி நடக்குது பொண்ணு., ஆனாலும் அதிரடியில்  பொம்பள ஷேவாக்.

ஆண்கள் அணியில் வெல்லாலகே இனிவரும் காலங்களில் இலங்கை அணியின் முதுகெலும்பாக இருக்கபோகிறார்.

பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும்  மிக சிறந்த ஒரு  ஆல்ரவுண்டர் . இலங்கை அணி இந்தியாவுடனான ஒருநாள் தொடரை வென்றதுக்கு காரணமே வெல்லாலகேதான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2024 at 12:51, valavan said:

உண்மை தான் அடிக்க‌ தொட‌ங்கினால் அதிர‌டியா அடிச்சு ஆட‌க் கூடிய‌ திற‌மை இவாவிட‌ம் இருக்கு......................முன்பை விட‌ இப்போது உள்ள‌ இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ப‌ர‌வாயில்லை ந‌ல்லா விளையாடுகின‌ம்.......................

ப‌ல‌ வாட்டி இங்லாந் ம‌க‌ளிர் அணிய‌ அவேன்ட‌ நாட்டில் வைச்சே வென்ற‌வை..................................

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவ‌து ம‌ச்சை இல‌ங்கை ம‌க‌ளிர் அணி சிம்பிலா வெல்ல‌ போகுது..........................

  • கருத்துக்கள உறவுகள்

அய‌ர்லாந் ம‌க‌ளிர் அணி தொட‌ரை 2-1 வென்று விட்டின‌ம்

வாழ்த்துக்க‌ள் அய‌ர்லாந் அணிக்கு................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.