Jump to content

சௌதி இளவரசரின் எழுச்சி - அமெரிக்காவுக்கு இணங்காத, அச்சமற்ற செயல்களால் நாயகன் ஆனது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சௌதி இளவரசரின் எழுச்சி குறித்து உள்வட்டாரங்கள் சொல்வது என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் முதல் மன்னர் குறைந்தது 42 மகன்களுக்கு தந்தையாக இருந்தார். இளவரசர் முகமது பின் சல்மானின் தந்தை சல்மானும் அதில் ஒருவர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோனாதன் ரக்மேன்
  • பதவி, ஒளிபரப்பாளர், எழுத்தாளர்
  • 20 ஆகஸ்ட் 2024
    புதுப்பிக்கப்பட்டது 21 ஆகஸ்ட் 2024

ஜனவரி 2015, சௌதி அரேபியாவின் 90 வயதான மன்னர் அப்துல்லா மருத்துவமனையில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான், மன்னராகப் போகிறார். சல்மானுக்கு மிகவும் நெருக்கமான மகன், முகமது பின் சல்மான், அதிகாரத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

இளவரசர் முகமது பின் சல்மான் 'MBS’ என்ற அவரது முதலெழுத்துக்களால் அனைவராலும் அறியப்பட்டவர். 29 வயதான அவர் ராஜ்யத்திற்கான பெரிய திட்டங்களை வைத்திருந்தார். சௌதி வரலாற்றில் மிகப்பெரிய திட்டங்கள் அவை.

ஆனால் தனது சொந்த அரச குடும்பத்தில் உள்ள சதிகாரர்களால் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று அவர் அஞ்சினார். எனவே அந்த மாதத்தில் ஒரு நாள் நள்ளிரவு, அவர் விசுவாசத்தை வென்றெடுக்கும் உறுதியுடன் இருந்த ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரியை அரண்மனைக்கு அழைத்தார்.

அதிகாரி சாத் அல்-ஜாப்ரியை, அவரது மொபைல் போனை வெளியே ஒரு மேஜையில் வைக்கச் சொன்னார். எம்பிஎஸும் அதையே செய்தார். இரண்டு பேரும் இப்போது தனியாக இருந்தனர்.

 

இளவரசர் அரண்மனை உளவாளிகளுக்கு மிகவும் பயந்ததால், சுவரில் இருந்து சாக்கெட்டை இழுத்து, இருந்த ஒரே லேண்ட்லைன் தொலைப்பேசியை துண்டித்தார்.

ஜாப்ரியின் கூற்றுப்படி, எம்பிஎஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தனது ராஜ்யத்தை எவ்வாறு எழுப்புவது என்பது பற்றி பேசினார், அது உலக அரங்கில் அதன் சரியான இடத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார்.

உலகின் மிகவும் லாபகரமான அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோவின் (Aramco) பங்குகளை விற்பதன் மூலம், அவர் சௌதி பொருளாதாரம் எண்ணெயைச் சார்ந்திருப்பதை குறைப்பார்.

டாக்ஸி நிறுவனமான உபெர் உள்ளிட்ட சிலிக்கான் வேலி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களில் அவர் பில்லியன்களை முதலீடு செய்வார். பின்னர், சௌதி பெண்களுக்கு வேலையில் சேர சுதந்திரம் அளிப்பதன் மூலம், அவர் ஆறு மில்லியன் புதிய வேலைகளை உருவாக்குவார். இவைதான் இளவரசர் சொன்ன திட்டங்கள்.

ஆச்சரியமடைந்த ஜாப்ரி இளவரசரிடம் அவரின் லட்சியத்தின் அளவீடு பற்றிக் கேட்டார்.

"அலெக்சாண்டர் தி கிரேட் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று ஒரு எளிமையான பதிலை சொன்னார் எம்பிஎஸ்.

அவர் அதோடு உரையாடலை முடித்தார். அரை மணி நேரம் நடக்க இருந்த அந்த நள்ளிரவு சந்திப்பு மூன்று மணி நேரம் நடந்தது. ஜாப்ரி அறையை விட்டு வெளியேறினார். ஜாப்ரி நீண்ட நேரமாக காணாமல் போனதைப் பற்றி கவலைப்பட்ட அரசாங்க சகாக்களிடம் இருந்து அவரது மொபைலுக்கு பல மிஸ்டு கால்கள் வந்திருந்தன.

கடந்த ஒரு வருடமாக, எங்கள் ஆவணப்பட குழு சௌதி நண்பர்கள் மற்றும் எம்பிஎஸ்- இன் எதிர்ப்பாளர்கள், மூத்த மேற்கத்திய உளவாளிகள், தூதர்கள் ஆகியோரிடம் பேசி வருகிறது.

பிபிசியின் காணொளிகளிலும் இந்தக் கட்டுரையிலும் கூறப்பட்ட கூற்றுகளுக்கு விளக்கமளிக்க சௌதி அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் பேச முன்வரவில்லை.

சாத் அல்-ஜாப்ரி சௌதி பாதுகாப்பு அமைப்பில் மிகவும் உயர்மட்டத் தலைவர். அவர் சிஐஏ மற்றும் எம்.ஐ-6 தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார்.

சௌதி அரசாங்கம் ஜாப்ரியை மதிப்பிழந்த முன்னாள் அதிகாரி என்று அழைத்தாலும், பட்டத்து இளவரசர் சௌதி அரேபியாவை எப்படி ஆட்சி செய்கிறார் என்பதைப் பற்றி பேசத் துணிந்தார். மேலும் அவர் அளித்த அரிய பேட்டியில் பகிரப்பட்ட விவரங்கள் வியக்க வைக்கிறது.

இளவரசரை தனிப்பட்ட முறையில் அறிந்த பலரை அணுகியதன் மூலம், எம்பிஎஸ் மோசமான செயல்பாடுகளில் ஈடுபட காரணம் என்ன என்பது ஓரளவுக்கு புரிந்தது.

2018-ஆம் ஆண்டு சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை மற்றும் ஏமனில் பேரழிவு தரும் போரைத் தொடங்குதல் உட்பட்ட நிகழ்வுகளுக்கு காரணம் என்ன?

அவரது தந்தை உடல்நலக்குறைவு காரணமாக பலவீனமாக இருப்பதால், 38 வயதான எம்பிஎஸ் இப்போது இஸ்லாத்தின் பிறப்பிடமாகவும், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும் இருக்கும் தேசத்துக்கு பொறுப்பேற்றுள்ளார்.

அன்று நள்ளிரவு சாத் அல்-ஜாப்ரிக்கு விவரித்த பல அற்புதமான திட்டங்களை அவர் செயல்படுத்தத் தொடங்கினார் - அதே நேரத்தில் பேச்சு சுதந்திரத்தை தடுத்தல், மரண தண்டனையை பரவலாகப் பயன்படுத்துதல் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்களை சிறையில் அடைத்தல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

ஒரு மோசமான துவக்கம்

சௌதி அரேபியாவின் முதல் மன்னர் குறைந்தது 42 மகன்களுக்கு தந்தையாக இருந்தார். எம்பிஎஸ்-இன் தந்தை சல்மானும் அதில் ஒருவர். அரச கிரீடம் பாரம்பரியமாக இந்த மகன்களுக்கு இடையே வழங்கப்பட்டது. அவர்களில் இருவர் 2011 மற்றும் 2012 இல் திடீரென இறந்தபோதுதான் சல்மான் வாரிசு வரிசையில் உயர்த்தப்பட்டார்.

சௌதியின் அடுத்த மன்னர் யார் என்பதை யூகிக்க, மேற்கத்திய உளவு முகமைகள் பல ஆய்வுகளில் ஈடுபடுவதை தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர். இந்த கட்டத்தில், எம்பிஎஸ் மிகவும் இளமையாக இருந்தார். அடுத்த மன்னருக்கான போட்டியில் அவர் இருந்தாரா என்பது கூட தெரியவில்லை.

2014 வரை எம்.ஐ6-இன் தலைவராக இருந்த சர் ஜான் சாவர்ஸ் கூறுகையில், "அவர் ஒப்பீட்டளவில் தெளிவற்ற நிலையில் வளர்ந்தார். அவர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற போக்கில் வளர்க்கப்படவில்லை."

ஆனால் எம்பிஎஸ் அரண்மனையில்தான் வளர்ந்தார். அங்கு தவறான நடத்தைகள் மிக குறைவு, அப்படி ஏதேனும் தவறு நடந்தால் சில மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். விளைவுகளை முழுமையாகக் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுக்கும் அவரது மோசமான போக்கை அந்த நிகழ்வுகள் விளக்க உதவும்.

எம்பிஎஸ் முதன்முதலில் ரியாத்தில் தனது பதின்ம வயதின் பிற்பகுதியில் மோசமான ஒரு செயலின் காரணமாக பிரபலமடைந்தார், அப்போது அவர் "அபு ரசாசா" அல்லது "புல்லட்டின் தந்தை" என்று செல்லப் பெயரில் அழைக்கப்பட்டார்.

சொத்து தகராறில் அவருக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு ஒரு புல்லட்டை அனுப்பியதாக வெளியான தகவலால் அவரை அந்த பெயர்களில் அழைத்தனர்.

அவர் இரக்கமற்ற தன்மையைக் கொண்டிருந்தார் என்று சர் ஜான் சாவர்ஸ் விவரிக்கிறார். "அவர் தவறாக நடத்தப்படுவதை விரும்பவில்லை. இருப்பினும், வேறு எந்த சௌதி தலைவராலும் செய்ய முடியாத சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பதையும் இது குறிக்கிறது”

"மிகவும் வரவேற்கத்தக்க மாற்றங்களில் ஒன்று, இஸ்லாமிய ஜிஹாதிசத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு மசூதிகள் மற்றும் மத பள்ளிகளுக்கு சௌதி நிதியுதவியைக் குறைத்தது. இது மேற்கு நாடுகளின் பாதுகாப்பிற்கு நன்மையாக கருதப்பட்டது,” என்று அவர் விளக்கினார்.

எம்பிஎஸ்ஸின் தாயார் ஃபஹ்தா ஒரு பெடோயின் பழங்குடிப் பெண். எம்பிஎஸ் தந்தையின் நான்கு மனைவிகளில் அவருக்கு பிடித்தமானவர். வாஸ்குலர் டிமென்ஷியாவால் மன்னர் பல ஆண்டுகளாக அவதிப்பட்டதாக மேற்கத்திய இராஜதந்திரிகள் நம்புகிறார்கள். மன்னருக்கு தனக்கு உதவ தன் மகன் எம்பிஎஸ்-ஐ தான் தேர்ந்தெடுத்தார்.

பல இராஜதந்திரிகள் எம்பிஎஸ் மற்றும் அவரது தந்தையுடனான சந்திப்புகளை எங்களுக்காக நினைவு கூர்ந்தனர். இளவரசர் ஒரு ஐபாடில் குறிப்புகளை எழுதுவார், பின்னர் அவற்றை தனது தந்தையின் ஐபாடிற்கு அனுப்புவார்.

"தவிர்க்க முடியாமல் எம்பிஎஸ் தன் தந்தைக்காக தனது வரிகளைத் டைப் செய்கிறாரா என்று நான் ஆச்சரியப்பட்டேன்" என்று லார்ட் கிம் டாரோச் நினைவு கூர்ந்தார். இவர் டேவிட் கேமரூன் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர்.

இளவரசர் சல்மான் தனது தந்தை மன்னராக வர வேண்டும் என்பதற்காக ஆர்வமாக இருந்தார், 2014-இல், ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட விஷம் கலந்த மோதிரத்தைக் கொண்டு அப்போதைய மன்னர் அப்துல்லாவை அதாவது அவரது மாமாவைக் கொல்லுமாறு அவர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

"அவர் தற்பெருமை பேசுகிறாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டோம்" என்று ஜாப்ரி கூறுகிறார்.

முன்னாள் மூத்த பாதுகாப்பு அதிகாரியான ஜாப்ரி, எம்பிஎஸ் இந்த யோசனையைப் பற்றி பேசும் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு வீடியோவைதான் பார்த்ததாகக் கூறுகிறார்.

அதன் பின்னர் மன்னர் இயற்கையான காரணங்களால் இறந்தார், 2015 இல் அவரது சகோதரரான சல்மான் அரியணையை ஏற்றார். எம்பிஎஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனவே போர் அறிவிப்புக்கு நேரம் கடத்தவில்லை.

 
சௌதி இளவரசரின் எழுச்சி குறித்து உள்வட்டாரங்கள் சொல்வது என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட விஷம் கலந்த மோதிரத்தைக் கொண்டு அப்போதைய மன்னர் அப்துல்லாவை அதாவது அவரது மாமாவைக் கொல்லுமாறு இளவரசர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

ஏமனில் போர்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இளவரசர் எம்பிஎஸ் ஹூதி இயக்கத்திற்கு எதிரான போரில் வளைகுடா கூட்டணியை வழிநடத்தினார், இது மேற்கு ஏமனின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது. சௌதி அரேபியாவின் பிராந்திய போட்டியாளரான இரானின் ஆதரவு பெற்ற அமைப்பாக ஹூதி யை கருதினார்.

இது ஒரு மனிதாபிமான பேரழிவைத் தூண்டியது, மில்லியன் கணக்கானவர்கள் பஞ்சத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டனர்.

போர் தொடங்குவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் தூதராக இருந்த சர் ஜான் ஜென்கின்ஸ், "இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு அல்ல" என்றார்.

இந்த ராணுவ நடவடிக்கை அதிகம் அறியப்படாத இந்த இளவரசரை சௌதியின் தேசிய நாயகனாக மாற்ற உதவியது.

இருப்பினும், இந்த நடவடிக்கையில் பல பெரிய தவறுகள் இருப்பதாக அவரது நண்பர்கள் கூட நம்பினர். இப்படி நடப்பது இதுவே முதல்முறை.

அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான நடத்தை முறை வெளிப்பட்டது. சௌதி அரசாங்கத்தின் பாரம்பரியமாக கருதப்படும் சிந்தித்து முடிவெடுக்கும் செயல் முறையை அவர் தவிர்த்தார். எதிர்பாராத விதமாக அல்லது தூண்டுதலின் பேரில் செயல்பட விரும்பினார். அமெரிக்காவிற்கு இணங்க மறுத்தார்.

ஜாப்ரி மேலும் அதிர்ச்சியான விஷயங்கள் பகிர்ந்தார். எம்பிஎஸ் தனது தந்தையின் அரசாணைக்காக அரசரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்.

ஏமன் போர் தொடங்கும் முன் வெள்ளை மாளிகையில் அது பற்றி விவாதித்ததாக ஜாப்ரி கூறுகிறார்.

அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், அமெரிக்கா விமான தாக்குதலை மட்டுமே ஆதரிக்கும் என்று எச்சரித்தார்.

இருப்பினும், ஏமனில் முன்னேறி நடவடிக்கை எடுப்பதில் எம்பிஎஸ் மிகவும் உறுதியாக இருந்ததால், அவர் அமெரிக்கர்களைப் புறக்கணித்தார் என்று ஜாப்ரி கூறுகிறார்.

"போரில் தலையீடுகளை அனுமதிக்க அரச ஆணை இருந்ததால் நாங்கள் ஆச்சரியப்பட்டோம்" என்று ஜாப்ரி கூறுகிறார். "அந்த அரசாணைக்கு அவர் தனது அப்பாவின் கையெழுத்தை போலியாகப் போட்டார். அந்த சமயத்தில் மன்னரின் ஆரோக்கியம் மற்றும் மனநிலை மோசமடைந்து கொண்டிருந்தது.''என்கிறார்

இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் குறிப்பிடும் அவரது ஆதாரம் "நம்பகமானது,உண்மையானது" என்கிறார். அவர் தலைமை அதிகாரியாக இருந்த உள்துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய வட்டாரம் சொன்ன தகவல் என்று ஜாப்ரி கூறுகிறார்.

ரியாத்தில் உள்ள சிஐஏ நிலையத் தலைவர் தன்னிடம் எம்பிஎஸ் அமெரிக்கர்களைப் புறக்கணித்ததற்காக அவர் எவ்வளவு கோபமாக இருந்தார் என்று கூறிய நிகழ்வை ஜாப்ரி நினைவு கூர்ந்தார், மேலும் ஏமன் மீதான படையெடுப்பு ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்றும் கூறினார்.

முன்னாள் எம்ஐ6 தலைவர் சர் ஜான் சாவர்ஸ் கூறுகையில், ''எம்பிஎஸ் இந்த ஆவணங்களை போலியாக உருவாக்கினாரா என்பது தனக்குத் தெரியாது. ஏமனில் ராணுவ ரீதியாக தலையிட எம்பிஎஸ் தனித்து எடுத்த முடிவு இது என்பது தெளிவாகிறது. இது அவரது தந்தையின் முடிவு அல்ல, இருப்பினும் அவரது தந்தை பெயரும் இதில் இழுக்கப்படுகிறது.''என்கிறார்

எம்பிஎஸ் தன்னை ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய விதிகளைத் தவிர வேறு யாருடைய விதிகளையும் ஏற்க மறுப்பவராக இருந்ததை நாம் கண்டறிந்தோம்.

 
சௌதி இளவரசரின் எழுச்சி குறித்து உள்வட்டாரங்கள் சொல்வது என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எம்.பி.எஸ் 2017 ஆம் ஆண்டில் சல்வேட்டர் முண்டி ஓவியத்தை வாங்க $450 மில்லியன் செலவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன

சொந்த விதிகளை உருவாக்கும் போக்கு

2017-ஆம் ஆண்டில் ஒரு பிரபலமான ஓவியத்தை எம்பிஎஸ் வாங்கினார். அது அவரை பற்றிய பல விஷயங்களை நன்கு புரிய வைத்தது.

அவர் நினைக்கும் விதம், வாய்ப்புகளைப் பெறுவதற்கான அவரது தயார் நிலை மற்றும் அவர் ஆளும் மத மரபுவழி கலாசாரத்தை மீறுவதில் அவரது அச்சமின்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆதிக்கச் செயல்கள் மூலம் மேற்கத்திய நாடுகளை விஞ்சுவதில் அவரின் உறுதி ஆகியவை புலப்பட்டன.

எம்.பி.எஸ் 2017 ஆம் ஆண்டில் சல்வேட்டர் முண்டி ஓவியத்தை வாங்க $450 மில்லியன் செலவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. இது இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த கலைப்படைப்பாகும். லியோனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட இந்த ஓவியம், இயேசு கிறிஸ்துவை வானத்திற்கும் பூமிக்கும் எஜமானராகவும், உலகின் மீட்பராகவும் சித்தரிக்கிறது. ஏலத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக இது காணப்படவில்லை.

இளவரசரின் நண்பரும், பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தின் பேராசிரியருமான பெர்னார்ட் ஹெய்கல், இளவரசரின் படகு அல்லது அரண்மனையில் அது ஓவியம் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவினாலும், அந்த ஓவியம் உண்மையில் ஜெனீவாவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எம்பிஎஸ் அதை சௌதி அருங்காட்சியகத்தில் வைக்க விரும்புவதாகவும் கூறுகிறார். சௌதி தலைநகரில் அருங்காட்சியகம் இன்னும் கட்டப்படவில்லை.

"நான் ரியாத்தில் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை கட்ட விரும்புகிறேன்," என்று எம்பிஎஸ் கூறியதாக ஹைகல் மேற்கோள் காட்டுகிறார்.

இதேபோல், விளையாட்டுப் பிரிவிலும் அவரது நோக்கங்கள் மிகவும் லட்சியம் கொண்ட மற்றும் தற்போதைய நிலையை சீர்குலைக்க பயப்படாத ஒருவராக பிரதிபலிக்கின்றன.

விளையாட்டில் சௌதி அரேபியா நம்பமுடியாத அளவில் செலவு செய்கிறது . இது 2034 இல் ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்துவதற்கான ஏலத்தில் உள்ளது. மேலும் டென்னிஸ் மற்றும் கோல்ஃப் போட்டிகளை நடத்துவதில் பல மில்லியன் டாலர் முதலீடுகளை செய்துள்ளது

ஆனால், மேற்குலகம் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாத ஒரு தலைவர் என்று சொல்வதை விட, தன்னையும் சௌதி அரேபியாவையும் பெரியதாக மாற்ற வேண்டும் என்ற பெயரில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

அவரைச் சந்தித்த எம்ஐ6 இன் முன்னாள் தலைவரான சர் ஜான் சாவர்ஸ் கூறுகையில், "எம்பிஎஸ் ஒரு தலைவராக தனது சொந்த சக்தியைக் கட்டியெழுப்புவதில் ஆர்வம் காட்டுகிறார். அதை நிரூபிக்கக் கூடிய ஒரே வழி, தனது நாட்டின் சக்தியைக் கட்டியெழுப்புவதுதான். அதுதான் அவரை இயக்குகிறது."

40 ஆண்டுகளாக சௌதி அரேபிய அதிகாரியாக இருந்த ஜாப்ரியின் வாழ்க்கை எம்பிஎஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன் முடிந்தது. முன்னாள் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் நயீப்பின் தலைமை அதிகாரியான அவர், தனக்கு ஆபத்து இருப்பதாக வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும் எம்பிஎஸ் ஆட்சியை பிடித்ததால் நாட்டை விட்டு வெளியேறினார். இருப்பினும், ஜாப்ரி, எம்பிஎஸ் தனக்குத் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மீண்டும் தன்னை பணியில் அமர்த்த விரும்புவதாகவும் கூறுகிறார்.

"அது ஒரு தூண்டில். நான் சிக்கவில்லை” என்று ஜாப்ரி கூறுகிறார், அவர் திரும்பி வந்திருந்தால் அவர் சித்திரவதை செய்யப்பட்டிருப்பார், சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் அல்லது கொல்லப்பட்டிருப்பார். அது போலவே, அவரது பதின்வயது பிள்ளைகளான ஓமர் மற்றும் சாரா, பணமோசடி குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர்.

"என்னை கொல்ல அவர் திட்டமிட்டார்," என்று ஜாப்ரி கூறுகிறார். "நான் இறந்துவிட்டதைப் பார்க்கும் வரை அவர் ஓய்வெடுக்க மாட்டார், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை." என்கிறார்.

ஜாப்ரியை கனடாவில் இருந்து நாடு கடத்த சௌதி அதிகாரிகள் இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.

அவர் உள்துறை அமைச்சகத்தில் இருந்த காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் செய்ததற்காக தேடப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவருக்கு மேஜர்-ஜெனரல் பதவி வழங்கப்பட்டது மற்றும் அல்-கொய்தா பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க உதவியதற்காக சிஐஏ மற்றும் எம்.ஐ-6 ஆகியவற்றால் பாராட்டப்பட்டார்.

 
சௌதி இளவரசரின் எழுச்சி குறித்து உள்வட்டாரங்கள் சொல்வது என்ன

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,கஷோகியின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

கஷோகியின் கொலை

இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் 2018 இல் ஜமால் கஷோகி கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் எம்பிஎஸ் தலையீடு இருந்தது மறுக்க முடியாத ஒரு நிகழ்வு. கொலையில் ஈடுபட்ட 15 பேர் கொண்ட குழு, ராஜதந்திர கடவுச்சீட்டில் பயணித்தனர். அதில் எம்பிஎஸ்- இன் சொந்த மெய்க்காப்பாளர்கள் பலரும் இருந்தனர்.

கஷோகியின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது உடல் ரம்பம் மூலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

பேராசிரியர் ஹெய்கல் கொலை நடந்த சிறிது நேரத்திலேயே எம்பிஎஸ் உடன் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டார்.

"இது எப்படி நடந்தது?" என்று நான் கேட்டேன்," என்று ஹெய்கல் நினைவு கூர்ந்தார். "அவர் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தார் என்று நான் நினைக்கிறேன். இதற்கான எதிர்வினை ஆழமாக இருக்கும் என்பதை அவர் உணரவில்லை.'' என்கிறார்

டென்னிஸ் ரோஸ் சிறிது காலத்திற்குப் பிறகு எம்பிஎஸ் சந்தித்தார். "அவர் அதைச் செய்யவில்லை என்றும் அது ஒரு மிகப் பெரிய தவறு என்றும் கூறினார்" என்று ரோஸ் கூறுகிறார்.

"நான் நிச்சயமாக அவரை நம்ப விரும்பினேன், ஏனென்றால் அவர் அத்தகைய கொலையை அங்கீகரிக்க முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை."

எம்பிஎஸ் கொலை சம்பவத்தில் சதி திட்டம் தீட்டவில்லை என்பதை எப்போதும் மறுத்துள்ளார், இருப்பினும் 2019 ஆம் ஆண்டில் அவர் "பொறுப்பை" ஏற்றுக்கொண்டார், ஏனெனில் குற்றம் அவரது கண்காணிப்பில் நடந்தது. பிப்ரவரி 2021 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கஷோகியின் கொலைக்கு உடந்தையாக அவர் இருந்ததாக உறுதிப்படுத்தியது.

தனிப்பட்ட முறையில் எம்பிஎஸ்-ஐ தெரிந்தவர்களிடம் கேட்டேன், அவர் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டாரா என்று; அல்லது கஷோகி விவகாரத்தில் இருந்து தப்பியிருந்தாலும், அது உண்மையில் அவருக்கு தைரியத்தை அளித்ததா என்று கேட்டேன்.

"அவர் கடினமான வழியில் பாடங்களைக் கற்றுக் கொண்டார்," என்று பேராசிரியர் ஹெய்கல் கூறுகிறார்.

''எம்பிஎஸ் தனக்கும் அவரது நாட்டிற்கும் எதிரான வழக்கை வஞ்சகமாகப் பயன்படுத்துவதை எதிர்க்கிறார், ஆனால் கஷோகியை போன்ற ஒருவரின் கொலை மீண்டும் நடக்காது என்று கூறுகிறார்.''என்கிறார் ஹெய்கல்

சர் ஜான் சாவர்ஸ் இந்த கொலை ஒரு திருப்புமுனை என்று எச்சரிக்கையுடன் ஒப்புக்கொள்கிறார். "அவர் சில பாடங்களைக் கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன். இருப்பினும் அவரின் ஆளுமை அப்படியே உள்ளது."

அவரது தந்தை மன்னர் சல்மானுக்கு தற்போது வயது 88. அவர் இறக்கும் போது எம்பிஎஸ் அடுத்த 50 ஆண்டுகளுக்கு சௌதி அரேபியாவை ஆட்சி செய்யலாம்.

இருப்பினும், சௌதி-இஸ்ரேல் உறவுகளை சீராக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, படுகொலை செய்யப்படுவோம் என்று அஞ்சுவதாக அவர் சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.

"அவரைக் கொல்ல விரும்பும் பலர் இருப்பதாக நான் நினைக்கிறேன்," என்று பேராசிரியர் ஹெய்கல் கூறுகிறார். "அவருக்கும் அது தெரியும்."

அதீத விழிப்புணர்வுதான் எம்பிஎஸ் போன்ற மனிதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். இளவரசர் ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் சாத் அல்-ஜாப்ரி தனது அரண்மனையில் அவருடன் பேசுவதற்கு முன்பு சுவரில் இருந்து தொலைபேசி சாக்கெட்டை வெளியே எடுத்தபோது அதைக் கவனித்தார்.

எம்பிஎஸ் இன்னும் தனது நாட்டை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார், அவருடைய முன்னோர்கள் இப்படி செய்ய ஒருபோதும் துணிந்திருக்க மாட்டார்கள். எவ்வாறாயினும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவர் தொடர்ந்து தவறு செய்வதைத் தடுக்கத் துணியாத அளவுக்கு மோசமானவராக மாறுவதற்கான வாய்ப்பை எதிர்கொள்ளும் சர்வாதிகாரி அவர் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MBS க்கு ஆப்பு ஆயத்தம் செய்யப்படுகிறது. 

🤣

  • Like 1
Link to comment
Share on other sites

26 minutes ago, Kapithan said:

MBS க்கு ஆப்பு ஆயத்தம் செய்யப்படுகிறது. 

🤣

வழமை போல மேற்கின் சொல்லை கேட்காதது தான் முக்கிய காரணம். பங்களாதேசுக்கு நிகழ்ந்தது போல ஒரு நிகழ்வு நிகழலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லோரும் நாயகர்களாக இருந்தால், இஸ்ரேல் ஏன் இப்படி வீடு புகுந்து இவர்களை அடித்துக் கொண்டிருக்கின்றது............. இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையை போட்டு விட்டு, தப்பினோம் என்று இருக்கின்றனர் சவூதியும், எகிப்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

வழமை போல மேற்கின் சொல்லை கேட்காதது தான் முக்கிய காரணம். பங்களாதேசுக்கு நிகழ்ந்தது போல ஒரு நிகழ்வு நிகழலாம்.

சேறடிக்கத் தொடங்கிவிட்டார்கள். 

இனி  ஒரு படுகொலையோ அல்லது ஒரு ஆட்சிக்கவிழ்ப்பையோ எதிர்பார்க்கலாம். 

😁

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கருத்து தவறாக இருக்கலாம்.
    • என்ன செய்வது ... குறிப்பிட்ட காலம் வரை தமிழராக அறியப்பட்ட மிஸ்டர் சின்னமேளம் வசவுக்காக M.G.R ஐ மலையாளி என்று கூப்பிட, ஆரம்பித்தது 7 1/2. நதி மூலம் ரிசி மூலம் அலசி அவரது சின்னமேள வரலாறை கொண்டு வந்து மேசையில் போட்டது அதிமுக. அன்று முதல் M.G.R ஐ மலையாளி என்று அழைப்பதை விட்டாலும் சொந்த செலவில் அவர் வைத்த சூனியம் இன்றும் தொடர்கிறது
    • என்ன??   இப்படி சொல்லுகிறீர்கள்.??   தமிழ் சிறி. குமாரசாமி அணணை  சமாதனப்புறா பறக்கும் என்றார்கள்     🤣
    • ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.