Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
லெபனானில் ஹெஸ்புலா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜரோஸ்லாவ் லூகீவ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது தங்கள் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

“இந்த அச்சுறுத்தல்களைக் களைவதற்கான தற்காப்பு நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக” இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

 

இரானால் ஆதரவளிக்கப்படும் ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்புலா இயங்கும் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு லெபனான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ராக்கெட்டுகள் குறித்து மக்களை எச்சரிக்கும் சைரன்கள் வடக்கு இஸ்ரேல் முழுவதும் கேட்கப்பட்டன.

இத்தாக்குதலில் யாரேனும் காயமடைந்தனரா, உயிரிழப்புகள் ஏதும் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை.

இந்நிலையில், அரசின் பாதுகாப்பு அமைச்சரவையின் அவசரக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸாவில் ஹமாஸ் உடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல், லெபனானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெஸ்புலாவுடன் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

- இந்தச் செய்தி மேலதிக தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

Posted

 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவிப்பு!

48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவிப்பு!

 

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது.

இதனை அடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 40,000 க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகி விட்டது.

இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இதற்கு ஈரான் பெருமளவில் உதவி வருகிறது.

ஹமாஸ் ஒரு பக்கம் தலைவலியை கொடுத்துவர, ஹிஸ்புல்லா அவ்வப்போது குறுக்கே சில தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராக நடத்தி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.

இந்த இரண்டு கொலைகளும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீது கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. அதற்கேற்றார் போல, ஹிஸ்புல்லாவும் அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை வீசியும், ட்ரோன்களை வீசியும் தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. பெய்ரூட் மீது தனது போர் விமானங்களை கொண்டு கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. அதேபோல் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்பதால், தனது நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

https://tamil.adaderana.lk/news.php?nid=191978

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, nunavilan said:

ப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்பதால், தனது நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

ஒருவேளை தற்போதைய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் அழிவோடுதான் மத்திய கிழக்குக்கு விடிவுபோலும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹெஸ்புலா பதில் தாக்குதல்

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் பிராந்தியத்தில் லெபனானில் இருந்து ஹெஸ்புலா சுமார் 150 எறிகணைகளை ஏவியுள்ளதாக” தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் விமானப்படையின் ஜெட் விமானங்கள் தற்போது தெற்கு லெபனானின் பல்வேறு இடங்களில் இலக்குகளைத் தாக்கி வருகின்றன” என்று டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

இதனிடையே, தாங்கள் ஏற்கெனவே 320-க்கும் மேற்பட்ட கத்யுஷா ரக ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாகவும், அவை 11 இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ராணுவ குடியிருப்புகளைத் தாக்கி வருவதாகவுவும் ஹெஸ்புலா தெரிவித்துள்ளது.

ஹெஸ்புலா மீது இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, லெபனானில் இருந்து ஏவப்பட்ட எறிகணையை இடைமறிக்கும் இஸ்ரேலிய விமானம்

டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் ராணுவ தளத்தில் இருந்து பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் இருவரும் “நிலைமையைக் கண்காணித்து வருவதாக” பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் மீதான தங்களின் தாக்குதல், “சியோனிச (இஸ்ரேலின் முதன்மைத்துவத்தை ஆதரிப்பது) தாக்குதல் காரணமாக ஃபவுத் ஷுக்கரின் உயிர்த் தியாகத்திற்குப் பதிலடி” என ஹெஸ்புலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹெஸ்புலாவின் மூத்த தளபதியான ஃபவுத் ஷுக்கர், கடந்த ஜூலை மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

காஸாவில் ஹமாஸ் உடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல், லெபனானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெஸ்புலாவுடன் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

- இந்தச் செய்தி மேலதிக தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

https://www.bbc.com/tamil/articles/c5y8pxx2ze9o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் மீதான பாரிய தாக்குதல் ஆரம்பம் - ஹெஸ்புல்லா

Published By: RAJEEBAN   25 AUG, 2024 | 10:51 AM

image

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ள தாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு 350 ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

GVzZf8CWQAAMCf_.jpg

இஸ்ரேலின் 11 இலக்குகளை இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம் ஆளில்லா விமானங்களையும் கட்டுசா ரொக்கட்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதலின் முதற்கட்டம் பூர்த்தியாகியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது இஸ்ரேலின் தளங்கள் முகாம்களை இலக்குவைக்கும் தாக்குதல் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/191909

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதிகரிக்கும் பதற்றம்; தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; ‘இதுதான் முதல் கட்டம்’ – எச்சரித்த Hezbollah

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் - தென் லெபனான் மீது தாக்குதல்

Published By: RAJEEBAN   25 AUG, 2024 | 11:01 AM

image

ஹெஸ்புல்லா அமைப்பு தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஹெஸ்புல்லா அமைப்பு தயாராக உள்ளதை நாங்கள் அவதானித்தோம் அதனால் எங்கள் பொதுமக்களிற்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள இஸ்ரேல் தென் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது தனது விமானங்கள் தாக்குதல்களை மேற்கொள்கின்றன என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேலில் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191911

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் மீதான தாக்குதல் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்காவிட்டால் மீண்டும் தாக்குவோம் - ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர்

Published By: RAJEEBAN   26 AUG, 2024 | 11:35 AM

image
 

இஸ்ரேல் மீது நாங்கள் மேற்கொண்ட தாக்குதல் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை என்றால் மீண்டுமொரு முறை தாக்குதலை மேற்கொள்வோம் என ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர்

தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் பாதிப்புகள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்வோம், எதிர்பார்த்த சேதங்கள் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றால் மீண்டுமொரு முறை தாக்குதலை மேற்கொள்வோம் என ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார்.

எங்கள்  அமைப்பின் இராணுவநடவடிக்கை திட்டமிட்டபடி துல்லியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலிற்குள் 110 கிலோமீற்றர் உள்ளே உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின்  உட்கட்டமைப்புகளை இலக்குவைத்தோம் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் அயர்ன் டொமை நோக்கி கெட்டுசா ரொக்கட்களை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சிரேஸ்ட தளபதியை இஸ்ரேல் கொலை செய்தமைக்கு பழிவாங்குவதற்காக பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்குவைக்க நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் இஸ்ரேலின் உட்கட்டமைப்பை இலக்குவைக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/191996



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.