Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   02 SEP, 2024 | 05:27 PM

image
 

சென்னை - யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை  (01) காலை ஆரம்பமானது.

இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை  (01) மாலை  3.05 மணிக்கு சென்னையிலிருந்து 52 பயணிகளுடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இதன்போது இசை மற்றும் நடனத்துடன் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை குறித்த விமானம் ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.

பலாலியில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.

458163581_526225570076698_84599121197117

458086539_526225826743339_79159624703494

458221245_526226416743280_69832976167272

457807056_526246540074601_58382615703753

457406836_526247116741210_38947762153499

457519688_526247606741161_22685530083897

457407508_526246836741238_65888395138619

https://www.virakesari.lk/article/192646

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சென்னை - யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை  (01) காலை ஆரம்பமானது.

இவ்வளவு நாளும் எங்கேயிருந்து போனது?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு நாளும் எங்கேயிருந்து போனது?

ஒரே குழப்பம் ஆன செய்தி ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு நாளும் எங்கேயிருந்து போனது?

 

1 hour ago, பெருமாள் said:

ஒரே குழப்பம் ஆன செய்தி ?

“இன்டிகோ” என்ற நிறுவனம், தனது முதலாவது விமான சேவையை சென்னை - யாழ்ப்பாணத்துக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து இருந்தது.

முன்பு இயங்கிக் கொண்டு இருந்தது வேறு விமான சேவை என நினைக்கின்றேன்.

இப்போது… இரண்டு விமான சேவைகள் நடைபெறுகின்றன போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையது  Alliance.
Indigo & Alliance தினமும் இயக்கப் படுகின்றது என்று இணையம் வாயிலாக அறிய முடிகின்றது.

@ஈழப்பிரியன், @பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

மற்றையது  Alliance.
Indigo & Alliance தினமும் இயக்கப் படுகின்றது என்று இணையம் வாயிலாக அறிய முடிகின்றது.

@ஈழப்பிரியன், @பெருமாள்

புலனாய்வுப் பிரிவுகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளது போல.

  • கருத்துக்கள உறவுகள்

லட்சகணக்கிலை புலம்பெயர் தமிழர் களின் வயதுகள் கிழ வயதாகிறது நல்ல பென்சன் சேமிப்பு இவற்றை கறக்க இரண்டு அரசுகளும் பொறி வைக்கின்றனர் .போற போக்கிலை இரண்டென்ன ஒரு நாளைக்கு நான்கு விமானம் பறந்தாலும் ஆச்சரிய பட தேவையில்லை .

Edited by பெருமாள்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

லட்சகணக்கிலை புலம்பெயர் தமிழர் களின் வயதுகள் ஆகிக்கொண்டு இருக்கின்றது நல்ல பென்சன் சேமிப்பு இவற்றை கறக்க இரண்டு அரசுகளும் பொறி வைக்கின்றனர் .போற போக்கிலை இரண்டென்ன ஒரு நாளைக்கு நான்கு விமானம் பறந்தாலும் ஆச்சரிய பட தேவையில்லை .

பெருமாள் எனக்கும் இந்தியா போய்போக ஆசை தான்.

ஆனாலும் இரண்டு பிரச்சனை.

நேரடியாக விமானசீட்டு வாங்கணும்.

2 பொதிகளையும் கொண்டுபோக விடணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் எனக்கும் இந்தியா போய்போக ஆசை தான்.

ஆனாலும் இரண்டு பிரச்சனை.

நேரடியாக விமானசீட்டு வாங்கணும்.

2 பொதிகளையும் கொண்டுபோக விடணும்.

15kg, 7kg hand luggage  தான் கொண்டு போகலாமண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

15kg, 7kg hand luggage  தான் கொண்டு போகலாமண்ணை.

இங்கிருந்து

23 கிலோ (50 றாத்தல்) 2 பொதி.

ஒரு சிறியபொதி 15 றாத்தல்

புத்தகபை முதுகில் அளவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இங்கிருந்து

23 கிலோ (50 றாத்தல்) 2 பொதி.

ஒரு சிறியபொதி 15 றாத்தல்

புத்தகபை முதுகில் அளவில்லை.

அப்ப கொழும்பு தான் நீங்க வரவேணும் அண்ணை.
ஒரு காலத்தில ஓடுபாதையை நீட்டி விரிவாக்கி பெரிய விமானங்கள் வந்தால் தான் பொதிகளின் எடை கூடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.