Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

images-1-2.jpg?resize=300,168&ssl=1

வட கொரியாவில் 30 பேருக்கு மரண தண்டனை-கிம்ஜாங் உன் பிறப்பித்த உத்தரவு!

வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர்

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் கடமையை சரியாக செய்யாததால், பேரிழப்பு ஏற்பட்டு உள்ளதுடன் அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்னிலையில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி கிம்ஜாங் உன் உத்தரவிட்டதுடன் இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1398164

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிம் ஜான் உன் னுக்கு இது தெரியுமா? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் 30 பேர் சுட்டுக்கொலை - ஜனாதிபதி கிம் வழங்கிய தண்டனை

04 SEP, 2024 | 04:33 PM
image
 

வடகொரியாவில் 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதற்கு காரணமான மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளார் என நியுயோர்க் போஸ்ட்செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவில் கடந்த கோடைகாலத்தில் தீடிரென நிகழ்ந்த இயற்கை அனர்த்தம் காரணமாக 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

kim_flood.jpg

20 முதல் 30 பேருக்கு எதிராக ஊழல் மற்றும் வேலையில் அலட்சியம் குறித்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரியொருவர் அவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அரசதொலைக்காட்சியான சோசன் தெரிவித்துள்ளது.

மழைவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் 20 முதல் 30 ஊழியர்கள் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என அந்த அதிகாரி  தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதியே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.

எனினும் இந்த தகவலை சுயாதீன வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.

கொல்லப்பட்ட அதிகாரிகள் யார் என்பது குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை எனினும், வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து பதவி நீக்கப்பட்டவர்களில் முக்கிய அதிகாரிகள் சிலர் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் தலை எப்போது துண்டிக்கப்படும் என தெரியாத நிலையிலிருந்தனர் என முன்னாள் இராஜதந்திரியொருவர் தெரிவித்தள்ளார்.

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த மாதம் பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளகட்டியெழுப்ப பல மாதங்களாகும் என தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/192843

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க முடியுமா?!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.