Jump to content

கோட்’ விமர்சனம்.. காந்தியா? ஜீவனா? யார் ஹீரோ.. யார் வில்லன்?.. வெற்றி பெற்றாரா விஜய்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதையெல்லாம் கடந்து கோட் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.. கோட் படத்தின் கதை: SATS (Special Anti-Terrorist Squad) எனப்படும் ரகசிய படையின் தலைவராக காந்தி (விஜய்) இருந்து வந்த போது வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை விஜய் மற்றும் அவரது டீமில் உள்ள பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முறியடித்து வருகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது. அதன் பின்னர் நடக்கும் மோதல்களும், பாச போராட்டமும் தான் இந்த கோட் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஒட்டுமொத்த படத்தையும் டபுள் ஆக்‌ஷனில் விஜய் தனது தோளில் தாங்கி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என விஜய்யின் டீமில் உள்ளவர்களின் நடிப்பும் அவர்களுக்குள் நடக்கும் ட்விஸ்ட்டும் கலக்கல். இளம் விஜய்யாக வரும் டீ ஏஜிங் விஜய்க்கு ஜீவன் என பெயர் வைத்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் அவர் பண்ணும் சேட்டைகள் மற்றும் அலப்பறைகள் தான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. யோகி பாபு, பிரேம்ஜியின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. விஜய்யும் காமெடி காட்சிகளில் தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம் உள்ளிட்டோருக்கு சரியான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கேமியோக்கள் அதிரடி: விஜயகாந்தின் ஏஐ கேமியோவின் சீக்ரெட் ட்விஸ்ட் மூலமாகத்தான் படமே தொடங்குகிறது. ஏற்கனவே சோஷியல் மீடியாவில் லீக்கான பல பிரபலங்களும் கேமியோவாக நடித்து தூள் கிளப்பியுள்ளனர். அதிலும், கிளைமேக்ஸ் கேமியோ வேறலெவல். பிளஸ்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அந்த இறுதி கிளைமேக்ஸ் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் இளம் விஜய்யின் டீ ஏஜிங் அந்நியமாக தெரிந்தாலும், படம் போகிற போக்கில் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததே இந்த படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. வெங்கட் பிரபு விஜய் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான படம் பிடிக்கும் என்பதை பார்த்து ஸ்க்ரீன்பிளே செய்திருக்கும் விதம் சிறப்பு. தளபதி விஜய் இப்படியெல்லாம் நடித்து விட்டு தமிழ் சினிமாவை விட்டே செல்லப் போகிறேன் என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.

மைனஸ்: டீ ஏஜிங், சிஜி குறைகள் படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்தாலும், சில இடங்களில் அடிவாங்கத்தான் செய்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வேகத்தடையாக மாறியுள்ளது. தளபதிக்கும் இளைய தளபதிக்கும் இடையேயான மோதல்கள், வில்லன் போர்ஷன் உள்ளிட்ட இடங்களில் இன்னமும் ஸ்ட்ராங்கான விஷயங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சில இடங்களில் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட சினிமாட்டிக் லிபர்ட்டி மற்ற ஆடியன்ஸை கவருமா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. சில சில குறைகளை தவிர்த்து விட்டு ஒட்டுமொத்தமாக படமாக பார்த்தால் நிச்சயம் இந்த கோட் பிளாக்பஸ்டர் தான். சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதையெல்லாம் கடந்து கோட் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.. கோட் படத்தின் கதை: SATS (Special Anti-Terrorist Squad) எனப்படும் ரகசிய படையின் தலைவராக காந்தி (விஜய்) இருந்து வந்த போது வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை விஜய் மற்றும் அவரது டீமில் உள்ள பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முறியடித்து வருகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது. அதன் பின்னர் நடக்கும் மோதல்களும், பாச போராட்டமும் தான் இந்த கோட் படத்தின் கதை. படம் எப்படி இருக்கு?: ஒட்டுமொத்த படத்தையும் டபுள் ஆக்‌ஷனில் விஜய் தனது தோளில் தாங்கி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என விஜய்யின் டீமில் உள்ளவர்களின் நடிப்பும் அவர்களுக்குள் நடக்கும் ட்விஸ்ட்டும் கலக்கல். இளம் விஜய்யாக வரும் டீ ஏஜிங் விஜய்க்கு ஜீவன் என பெயர் வைத்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் அவர் பண்ணும் சேட்டைகள் மற்றும் அலப்பறைகள் தான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. யோகி பாபு, பிரேம்ஜியின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. விஜய்யும் காமெடி காட்சிகளில் தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம் உள்ளிட்டோருக்கு சரியான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கேமியோக்கள் அதிரடி: விஜயகாந்தின் ஏஐ கேமியோவின் சீக்ரெட் ட்விஸ்ட் மூலமாகத்தான் படமே தொடங்குகிறது. ஏற்கனவே சோஷியல் மீடியாவில் லீக்கான பல பிரபலங்களும் கேமியோவாக நடித்து தூள் கிளப்பியுள்ளனர். அதிலும், கிளைமேக்ஸ் கேமியோ வேறலெவல். பிளஸ்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அந்த இறுதி கிளைமேக்ஸ் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் இளம் விஜய்யின் டீ ஏஜிங் அந்நியமாக தெரிந்தாலும், படம் போகிற போக்கில் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததே இந்த படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. வெங்கட் பிரபு விஜய் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான படம் பிடிக்கும் என்பதை பார்த்து ஸ்க்ரீன்பிளே செய்திருக்கும் விதம் சிறப்பு. தளபதி விஜய் இப்படியெல்லாம் நடித்து விட்டு தமிழ் சினிமாவை விட்டே செல்லப் போகிறேன் என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். மைனஸ்: டீ ஏஜிங், சிஜி குறைகள் படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்தாலும், சில இடங்களில் அடிவாங்கத்தான் செய்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வேகத்தடையாக மாறியுள்ளது. தளபதிக்கும் இளைய தளபதிக்கும் இடையேயான மோதல்கள், வில்லன் போர்ஷன் உள்ளிட்ட இடங்களில் இன்னமும் ஸ்ட்ராங்கான விஷயங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சில இடங்களில் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட சினிமாட்டிக் லிபர்ட்டி மற்ற ஆடியன்ஸை கவருமா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. சில சில குறைகளை தவிர்த்து விட்டு ஒட்டுமொத்தமாக படமாக பார்த்தால் நிச்சயம் இந்த கோட் பிளாக்பஸ்டர் தான்.

https://tamil.filmibeat.com/reviews/goat-review-in-tamil-vijays-double-action-avatar-is-pakka-treat-to-thalapathy-fans-141135.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஜித்துக்கு மங்காத்தா போல, விஜய்-க்கு ‘தி கோட்’? ரசிகர்கள் சொல்வது என்ன?

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இன்று வெளியானது

பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT

படக்குறிப்பு, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இன்று வெளியானது
2 மணி நேரங்களுக்கு முன்னர்

நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘தி கோட்’ (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம், இன்று (வியாழன், செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

தமிழ்நாடு தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தவிர, நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி என ஏராளமானோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்குச் சிறப்பு காட்சிகள் துவங்கின. ஆனால் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காலை 4 மற்றும் 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டன.

படம் பார்த்த ரசிகர்கள், அது குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT

படக்குறிப்பு, இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

விஜய் நடிப்பு எப்படி?

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள திரையரங்கங்களில் காலை 4 மணிக்கு ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. முதல் காட்சியைக் காண கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் எல்லை கடந்து வந்திருந்தனர்.

முதல் காட்சி முடிந்த பிறகு பிபிசி தமிழிடம் பேசிய காஜா, விஜய் நடிப்பில் ‘தி கோட்’ திரைப்படம் சிறப்பாக உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

“சின்ன வயது விஜய் கதாபாத்திரம் சூப்பராக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியான நாளைய ‘தீர்ப்பு படத்தில்’ வரும் அவரது முகம் போல இந்தப் படத்தில் வரும் காட்சி நன்றாக உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு ‘நாளைய தீர்ப்பு’ படம் வந்த போது விஜய்யின் முகத்தை விமர்சனம் செய்தவர்களுக்கு ‘தி கோட்’ படம் அதே முகத்தை மீண்டும் திரையில் காட்டி பதிலடி கொடுத்துள்ளது,” என்று தெரிவித்தார்.

“வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘மங்காத்தா’ திரைப்படம் மாதிரி இருக்கும் என்று நான் நினைத்து படம் பார்க்க வந்தேன். விஜய் ரசிகரான எனக்கு இந்தப் படம் திருப்தி அளிக்கவில்லை. விஜய்யின் காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்,” என்றார் மற்றொரு ரசிகர்.

நடிகர் விஜய்யின் திரை அனுபவத்திற்காகப் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்கிறார் மற்றொரு ரசிகரான ஜீவா.

முதல்முறையாக ரசிகர்களின் சிறப்புக் காட்சியைக் காண வந்திருக்கிறேன். படம் நல்ல அனுபவமாக இருந்தது என்றார், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த அனுபமா.

சென்னையில் படம் பார்த்து விட்டு வந்து பிபிசியிடம் பேசிய ரசிகை ஒருவர், “விஜய் அழுகும் அந்த காட்சி எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. நானும் அந்த காட்சியில் அழுதுவிட்டேன். ஓவ்வொரு படத்திற்கு புதிய உயரங்களை விஜய் அடைகிறார்,” என்று தெரிவித்தார்.

கோவையைச் சேர்ந்த ரசிகரான இளையராஜா, படம் குறித்து பிபிசி-இடம் பேசும் போது, “விஜய்யின் இந்த ‘கெட்டப்’ வித்தியாசமாக இருந்தது. முந்தைய படங்களை விட தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கோட் படத்தின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

படம் வெளியாவதற்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்ட பாடலில் வரும் விஜய்யின் கெட்டப் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன என்றும், ஆனால் படத்தில் அந்தப் பாடலைப் பார்க்கும் போது அந்த ‘கெட்டப்’ ஏன் வருகிறது என்று புரிகிறது என்றும் கூறினார் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர் ஒருவர்.

“விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளிவரும் படம் என்பதால் அரசியல் கருத்துகள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அரசியல் கலவையின்றி ரசிகர்களுக்காக இந்த படம் உள்ளது,” என்கிறார் என்றார் ஆஷிக் என்ற ரசிகர்.

 
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளிவரும் படம்

பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT

படக்குறிப்பு, விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளிவரும் படம் இது.

பழைய கதை, ஆனால்…

படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்ததால், 3 மணி நேரம் படம் நீளமாகத் தெரியவில்லை என்கிறார், பாலக்காட்டில் படம் பார்த்து விட்டு வந்த ஜோவிஷ்.

பிபிசி-இடம் பேசிய மற்றொரு ரசிகர், படத்தின் முதல் பாதி தனக்கு பிடித்திருந்தாகவும், இரண்டாவது பாதியில் நிறைய குழப்பமான காட்சிகள் இருந்தன என்றார்.

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குப் படம் பார்க்கச் சென்ற ரசிகரான மணி, தி கோட் படத்தின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருப்பதாகக் கூறினார். “இரண்டாவது பாதியில் நிறைய கதபாத்திரங்கள் வருகின்றன. குறிப்பாக, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் வரும் காட்சி எனக்குப் பிடித்திருந்தது,” என்றார்.

பிபிசி-இடம் பேசிய சென்னையைச் சேர்ந்த கிஷோர், முதல் பாதி மெதுவாக நகர்ந்ததாகவும், . இரண்டாவது பாதி திருப்தியாக இருந்ததாகவும் தெரிவித்தார். “கதை எளிதில் கணிக்கும் வகையில் இருந்தது. நிறைய கதாபாத்திரங்கள் இருந்தது நினைவில் நிற்கவில்லை. எதிர்பார்த்து படத்துக்கு வந்த எனக்கு முழு திருப்தியில்லை,” என்றார்.

“ ‘தி கோட்’ படத்தில் பல்வேறு நடிகர், நடிகைகள் நடித்திருந்தாலும், விஜய் மட்டுமே கதை முழுக்க வருகிறார். அவரது கதாபாத்திரத்திற்கு நிறைய முக்கியத்துவம் அளித்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் நினைவில் நிற்கும்படி காட்சிகள் இல்லை,” என்கிறார் கோவையைச் சேர்ந்த விக்னேஷ்.

தென்காசியில் இருந்து பாலக்காட்டில் உள்ள திரையரங்குக்கு நண்பர்களுடன் படம் பார்க்க வந்திருந்த குமரன் பிபிசி-இடம் பேசுகையில், “படத்தின் கதை பழைய கதையாக இருந்தாலும், அதனை சுவாரசியமாகப் படமாக்கி உள்ளனர். விஜய்யின் வேறொரு பரிணாமத்தை இந்தப் படத்தில் பார்க்க முடியும். நிறைய ஆச்சரியங்கள் படம் முழுக்க உள்ளது,” என்றார்.

கதை, திரைக்கதை சரியில்லை என்று பலரும் சொல்வார்கள். அதையெல்லாம் தவிர்த்துவிட்டு லாஜிக் பார்க்காமல் படத்தை பார்த்தால் ரசிக்க முடியும், என்றார் ரசிகர் ஒருவர்.

விஜயகாந்த் ஒரு காட்சியில் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருவார். அந்தக் காட்சி நல்ல அனுபவத்தைக் கொடுத்தது என்றார் ஒரு ரசிகர். ஆனால், பிபிசி-இடம் பேசிய மற்றொரு ரசிகை, சில வினாடிகளே நீடிக்கும் அந்த விஜயகாந்த் காட்சி திரையில் எந்த தாக்கத்தையும் தனக்கு ஏற்படுத்தவில்லை, என்கிறார்.

 
பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்

பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT

படக்குறிப்பு, பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்

மாஸ் காட்சிகள் உண்டா?

படத்தில் வரும் இரண்டு விஜய் கதாபாத்திரங்களில், சின்ன வயது விஜய் கதாபாத்திரம் நன்றாக உள்ளது. அதே போல யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘ராப்’ பாடல் சிறப்பாக உள்ளது என்றார் கேரளாவைச் சேர்ந்த ரசிகர்.

“இயக்குநர் வெங்கட் பிரபு காட்சிகளை விட தொழிநுட்பத்தை நம்பியிருக்கிறார். செயற்கை நுண்ணறிவு (AI), டீ-ஏஜிங் எனப் பல இடங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் காட்சிகள் அவ்வளவு தாக்கத்தை தனக்கு ஏற்படுத்தவில்லை,” என்கிறார் கேரளாவைச் சேர்ந்த ரெஜிஷ்.

சென்னையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பு குறைவாக இருந்தது. ஆனால் இப்போது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது, என்றார்.

ஆனால் மற்றொரு ரசிகர், அந்தக் கருத்தை ஏற்கவில்லை. படத்திற்குப் பொருந்தாத வகையில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை இருந்ததாகவும், படத்தில் வரும் ஒரு ராப் பாடல் மட்டுமே ரசிக்கும்படி இருந்தது என்றும் தெரிவித்தார்.

“வெங்கட் பிரபு - விஜய் காம்போ முழுமையாக வொர்க் ஆகவில்லை. படத்தில் எந்த இடத்திலும் மாஸ் காட்சிகள் இல்லாமல் இருந்தது. அதை வெங்கட் பிரபு சரி செய்து இருக்கலாம்,” என்றார் சென்னையைச் சேர்ந்த கிஷோர்.

வெங்கட் பிரபு - விஜய் காம்போ மற்றொரு மங்காத்தா கேங் போல இருந்தது. படத்தில் சில இடங்களில் அஜித் படத்தின் சில குறியீடுகள் உள்ளன. அது நிச்சயம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் என்றார் பிபிசி-இடம் பேசிய ரகு.

டீ-ஏஜிங், செயற்கை நுண்ணறிவு என தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரைக்கதையில் சுவாரசியமான காட்சிகளை வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார், என்றார் ஒரு ரசிகர்.

“அடுத்த காட்சியில் என்ன டுவிஸ்ட் வரும் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகர்ந்தது. நிறைய நடிகர்கள் கௌரவ கதாபாத்திரத்தில் படத்தில் வந்துள்ளனர். அது செயற்கையாக திணிப்பது போல இல்லாமல், படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவுகிறது என்றார்,” ரோஷிணி என்ற ரசிகர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட் : விமர்சனம்!

Sep 05, 2024 18:15PM
goat review vijay

தமிழ் சினிமாவில் மசாலா படங்கள் எனும் ரகம் பரிணாமம் அடைந்து கொண்டே வருகிறது. கத்திச் சண்டை, அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட், பாட்டாளி வர்க்கத்தின் காவலன் போன்ற விஷயங்களை கொண்டது தான் எம்ஜிஆர் ஃபார்முலா. இதுதான் தமிழ் சினிமாவின் முதல் மசாலா ஃபார்முலா.

அதற்கு பிறகு, நாட்டுப்பற்று, அதே சென்டிமென்ட், காதல், பாசம் , இரண்டாம் பாதியில் ஒரு குத்துப் பாட்டு என அந்த ஃபார்முலாவில் அந்தந்த காலத்திற்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்களுடன் மசாலா படங்கள் வெளியாகின.

அதன்படி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள ‘ மாடர்ன் மசாலா ‘ திரைப்படம் தான் ‘ கோட் ‘

Vijay's GOAT Movie Review: Netizens Call Vijay Thalapathy's Goat Film A Certified Blockbuster; Check Twitter Review | Times Now

படத்தின் ஒன்லைன்

‘ சாட்ஸ் ‘ எனும் ரா ஏஜென்சியைச் சேர்ந்த விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மற்றும் அஜ்மல் பல்வேறு ஸ்பை ஆபரேஷன்களை பிசிறின்றி செய்து முடிப்பதில் வல்லவர்கள். இந்த நிலையில், ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக விஜய் பாங்காக் செல்ல நேர்கிறது.

தன் குடும்பத்துடன் பேங்காக் செல்லும் விஜய் சந்திக்கும் பிரச்சனை, அதனால் ஏற்படும் இழப்பு, அந்த இழப்பிற்கு பிறகு அவர் வாழ்க்கையில் நடக்கும் திருப்பம் இதுவே ‘ கோட் ‘ படத்தின் கதை.

GOAT: Tamil Nadu government grants permission for 1 special show for Vijay film - India Today

அனுபவ பகிர்தல்

நடிகர் விஜய்க்காகவே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் ‘கோட் ‘. ஆனால், டான்ஸ், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என்று அவரின் டிரேட் மார்க் காட்சிகள் நிறைந்திருந்தது. அது மட்டுமில்லாமல், ஒரு புத்தம் புதிய விஜய்யை பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்கு காரணம் மகன் விஜய் கதாபாத்திரத்தில் இருந்த விஜய்யின் நடிப்பு. ஏறத்தாழ எஸ். ஜே.சூர்யா மோடில் இருந்தது.

படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘டிஏஜிங்’ தொழில்நுட்பம் பல்வேறு விமர்சனங்களை ஆரம்பத்தில் சந்தித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் படக்குழுவினர் அதை மிகச் சிறப்பாக  படத்தில் சரி செய்துள்ளனர் . அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரங்களையும் வேறு படுத்தி பார்க்க முடிந்தது.

90′ ஸ் ஸ்டார்களான பிரசாந்த், பிரபு தேவா போன்றவர்களை விஜய்யின் நண்பர்களாக பார்ப்பது மிகப்  பொருத்தமாக இருந்தது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக தெரிந்தாலும், பல இடங்களில் கொஞ்சம் பழைய யுவனை பார்க்கமுடிந்தது.

அடுத்தடுத்து வரும் படத்தின் திருப்பங்கள், சர்ப்ரைஸ்கள் அழுத்தமாக இல்லாவிடினும் நம்மை ஆச்சரியப்படுத்த தவற வில்லை.

திரையில் ஆங்காங்கே உதிர்ந்த சில அரசியல் வசனங்கள், விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்த வசனங்கள் போன்றவை வெங்கட் பிரபு படங்களின் டிரேட் மார்க். குறிப்பாக விஜய் தன்னுடைய அடுத்த சினிமா வாரிசாக ஒருவரை பூடகமாக நியமிக்கிறார். அந்த காட்சி இன்னும் சில நாட்களுக்கு பேசு பொருள்.

மொத்தத்தில் ஒரு மாடர்ன் மசாலா திரைப்படம் பார்த்த அனுபவம் வெகு நாட்களுக்கு பிறகு பலருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு.

GOAT Movie Review: Venkat Prabhu film wonderfully champions Vijay, but misses on other fronts | Movie-review News - The Indian Express

விரிவான விமர்சனம்

தமிழ் சினிமாவில் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கதையை கமர்ஷியல் பேக்கேஜிங்கோடு, ஜனரஞ்சக தன்மை மாறாது படைப்பதே வெற்றிகரமான கமர்ஷியல் திரைப்படம் என்று கருதப் படுகிறது. மக்களுக்கு தெரிந்த ஒரு கதையை ஒவ்வொரு முறையும் புதுமையாக அவர்களுக்கு படைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் கமர்ஷியல் படங்களின் சொல்லப்படாத விதி. அந்த வகையில், அதை சரியாகவே செய்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அப்பா – மகன் கதாபாத்திரங்களில் விஜய் , அவரை பழிவாங்க துடிக்கும் வில்லன், வில்லனை விஜய் எப்படி வென்றார்  என்பதே சாராம்சம். ஆனால், அதற்குள் பல்வேறு மாடர்ன் யுக்திகள் கையாளப்பட்டுள்ளதே ‘ கோட்’ டின் சிறப்பு.

ஏனென்றால் , தற்போது சினிமா பார்க்கும் வெகுஜனத்தின் அதிகபட்ச எதிர்பார்ப்பு, ஒரு படம் அவர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். தியேட்டரில் ‘வைப் ‘ஆக வேண்டும். அதை ஓரளவு சரியாக செய்தாலே  அந்த படத்திற்கு வெற்றி நிச்சயம்.

ஆனால், அந்த யுக்தியை மட்டுமே முழுதாய் நம்பாமல் , புதிய கதாபாத்திர வடிவமைப்பில் விஜய், டீ ஏஜிங் போன்ற தொழில்நுட்ப முன்னெடுப்பு எனப் பல்வேறு வித்தியாச முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் வெங்கட் பிரபு. தொழில்நுட்ப ரீதியாக விஜய் காந்தின் ஏ.ஐ தோற்றம் கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தாலும், அது பயன்படுத்தப்பட்ட விதம் நல்ல ஐடியா.

டிஏஜிங்கில் மொத்த செலவை போட்டதாலோ என்னவோ, மற்ற சாதாரண காட்சிகளில் கிராபிக்ஸ் கொஞ்சம் சுமாராக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாடர்ன் மசாலா படத்திற்கான பிரம்மாண்ட கலர்ஃபுல் ஒளிப்பதிவை செய்துள்ளார் சித்தார்த் நுனி.

முதல் பாதியில் இடைவேளை காட்சி வருவது வரை திரைக்கதையில் சிறிய தொய்வு தெரிகிறது . முதல் பாதியின் நீளத்தை நிச்சயம் குறைத்திருக்கலாம். அல்லது, அந்தப் பாதியில் வரும் சென்டிமென்ட் காட்சிகளை இன்னும் அழுத்தமாக அமைத்திருந்தால் நம்மால் அந்த கதாபாத்திரங்களோடு ஒட்டியிருக்க முடியும்.

படத்தின் முக்கியமான ட்விஸ்டாக இவர்கள் நம்பியிருந்த இடைவேளை காட்சி ட்விஸ்ட் நாம் கணிக்கும் வகையிலே இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் சில சர்ப்ரைஸ், ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

கே. வி. ஆனந்த் ஸ்டைலில் முக்கிய கதாபாத்திரங்களின் மறைவிற்கு பின் வரும் ஒரு டூயட் பாடல் பெரிதாக படத்தோடு ஓட்டவில்லை. ஆனால், விசில் போடு , மட்ட போன்ற பாடல் தியேட்டரில் வருகிற இடம் மற்றும் அவைகள் காட்சியமைக்கப்பட்ட விதம் தியேட்டரை அலற வைத்தது.

படத்தில் ட்விஸ்ட்கள் எக்கச்சக்கமாக உள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வசனங்கள், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவைகளுக்கான காரணம் கதையில் உள்ளதா? அவை அழுத்தமாக சொல்லப்பட்டதா? நம் ரசனையை மேம்படுத்துகிறதா? போன்ற கேள்விகளை நீங்கள் கேட்பீர்கள் என்றால், இது உங்களுக்கான படம் அல்ல.

ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தரமான மசாலா படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ட்ரீட். அதிலும் மகன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நடிப்பு அவரின் இத்தனை கால அனுபவத்தை காட்டியது.

நிச்சயம் குடும்பத்தோடு தியேட்டரில் காணலாம். வித்தியாசமான பரிணாமத்தில் ஒரு வழக்கமான மசாலா படத்தை பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.

 

https://minnambalam.com/cinema/goat-review-vijay-venkat-prabhu-treat/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மோசமாக இருக்கும் (எனது தனிப்பட்ட அபிபிராயம்), இது விதி விலக்காக இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு படம் பிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

On 6/9/2024 at 07:36, கிருபன் said:

நிச்சயம் குடும்பத்தோடு தியேட்டரில் காணலாம். வித்தியாசமான பரிணாமத்தில் ஒரு வழக்கமான மசாலா படத்தை பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.

15 வயதுக்கு கீழ் அனுமதி இல்லை.
பொழுது போக்காக பார்க்க கூடிய படம். விஜய் நடிப்பு நன்றாக இருந்தது.

On 6/9/2024 at 07:36, கிருபன் said:

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக தெரிந்தாலும், பல இடங்களில் கொஞ்சம் பழைய யுவனை பார்க்கமுடிந்தது.

ஒரு பாட்டை தவிர.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.