Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

WhatsApp-Image-2024-09-07-at-8.36.01-PM-

மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள்!

உலக சுகாதார நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார, தரம் மற்றும் பாதுகாப்பு  பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (7) கொழும்பில் இடம் பெற்றுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இருநுாறுக்கும்  மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே குறித்த விருதை வென்றுள்ளமை குறிப்படத்தக்கது.

நிகழ்வில், இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் அலோகா சிங்கா, சுகாதார அமைச்சின் செயலாளர்  டாக்டர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1398631

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு விருதை, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொடுத்திருக்கலாம். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் தானே கர்பிணிபெண்ணை உரியமுறையில் கவனிக்காத தற்கு கண்டணங்கள் தெரிவிக்கப்படடன ...அதற்கிடையில்   விருதுவழங்கிக் கெளரவமா ?... பணம் ....பாதாளம் மட்டும்   பாயுமாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த வருட தரவுகளுக்கு அமைவாக விருது வழங்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.