Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

41289_2.jpg?resize=640,375

உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட  பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு.

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக் என்ற 36 வயதான சிறந்த பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட இவர் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் திகதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனமதித்த போது கோமா நிலைக்கு செல்லப்பட்டு நேற்று முன்தினம் உயிர் பிரிந்துள்ளது.

ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர் தினந்தோறும் 16,500 கலோரிகள் என்ற அளவிற்கு ஒரு நாளைக்கு ஏழு முறை சாப்பிடுவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 2.5 கிலோ இறைச்சி மற்றும் 108 சுஷி (ஜப்பான் உணவு வகை) சாப்பாட்டில் எடுத்துக் கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

6 அடி ஒரு இன்ச் உயரம் கொண்ட இவர் 154 கிலோ டை கொண்டவராவார். இவரது மார்பளவு 61 இன்ச் என கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1399309

 

1726211126-Ilya%20Yefimchik.jpg

2024_9image_10_35_518866188hhh.jpg

உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் 36 வயதில் மாரடைப்பால்  உயிரிழந்த சோகம்/ World's most monstrous bodybuilder' dies at 36, days after  suffering heart attack

4597464-illia002.webp

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மாமிசமலை போல் இருக்கிறார் . .......... ஆனால் என்னசெய்வது மாரடைப்பு முந்திவிட்டது ..........!  😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

மாமிசமலை போல் இருக்கிறார் . .......... ஆனால் என்னசெய்வது மாரடைப்பு முந்திவிட்டது ..........!  😢

ஒரு நாளைக்கு.. ஏழு முறை சாப்பிடுகின்றார்.

அத்துடன் 2.5 கிலோ இறைச்சியும், 108 சுஷியும் சாப்பிட்டால் மாரடைப்பு வராமல் என்ன செய்யும்.😂

கொஞ்சம் வாயை கட்டியிருந்தால்... நீண்ட நாள் வாழ்ந்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

6 அடி ஒரு இன்ச் உயரம் கொண்ட இவர்

இலியாயெஃபிம்சிக் அவர்கள் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா.” என்ற பாடலால் கூறப்பட்ட உண்மையைப் பொய்யாக்கி விட்டாரே!.🤔
 

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை நாட்களில் ஒன்றுமே செய்யாத சோம்பேறியாக, 70 கிலோ நிறையில் இருந்தாராம். பின்னர் ஆர்னோல்ட்டையும், சில்வெஸ்டரையும் போல வர வேண்டும் என்று இப்படி ஆகியிருக்கின்றார். எங்களைப் போலவே அப்பவும் சோம்பேறி, இப்பவும் சோம்பேறி, எப்பவும் சோம்பேறி என்று இருந்திருந்தால் , தப்பி இருந்திருப்பார் போல...........😌.

16,500 கலோரி உணவுகளை தினமும் சாப்பிடுவதற்கே எங்களால் முடியாதே....... கிட்டத்தட்ட எட்டு நாட்கள் சாப்பாட்டை ஒரே நாளில் சாப்பிடுவது போல.........🤨. ஆர்னோல்ட்டே தினமும் ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் கலோரி தான் எடுத்திருப்பார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2024 at 17:45, தமிழ் சிறி said:

ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவ்வளவு கஸ்ரப் பட்டு உடம்பை வளர்த்தவர், சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டிருந்தால்.... நிச்சயம் பரிசு வென்று அழியாப் புகழ் பெற்று இருப்பார்.

"ரிக் ரொக்கில்" மினைக்கெட்டு... காலத்தை வீணாக்கி விட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.